அரசுகளும் எல்லைகளும்: - ஈழத்து நிலவன் - | Seithy.com - 24 Hours Tamil News Service, World's largest daily tamil news,tamil breaking news,tamilclassifieds,tamil entertainment, srilanka, tamilnadu, tamileelam | www.seithy.com
 Untitled Document
November 23, 2024 [GMT]

அரசுகளும் எல்லைகளும்: - ஈழத்து நிலவன் -
[Monday 2016-03-21 07:00]

உலகில் அரசு என்ற நிறுவனம் தோன்றிய காலத்தில் இருந்தே நிலவியல் எல்லைகள் தோன்றி விடுகின்றன. நிலங்களை மனிதர்கள் உரிமை கொண்டாட தொடங்கிய காலத்தில் நிலங்களுக்கான பரஸ்பர மோதலும் தொடங்கின. இதன் தொடர்ச்சியில் உலகம் எப்போதுமே நிலங்களுக்கான அதன் எல்லைகளுக்கான போராட்டத்தில் தன்னை கடத்திக்கொண்டே வந்திருக்கிறது. நாடோடி தன்மையிலிருந்து மனிதர்கள் நிலங்களை தங்களின் நிரந்தர வசிப்பிடமாக மாற்றிக்கொள்ளத்தொடங்கிய நிலையில் உலகின் எல்லாவித இயக்கங்களும் தொடங்கி விடுகின்றன.


  

இருபதாம் நூற்றாண்டில் நடந்த மாபெரும் இரு உலகப்போர்கள் புவி அரசியல் பற்றிய கருத்தாக்கத்தை முதன் முதலாக உயிர்பெறச் செய்தன. உலக கண்டங்களின் எல்லைகளும் மறு அர்த்தம் பெற்றன. புவிஅரசியல் என்ற சொல்லாடல் முதன் முதலாக ஸ்வீடன் நாட்டு அறிஞரான ருடால்ப் கெஜ்லன் என்பவரால் உருவாக்கப்பட்டது. இதன் தொடக்க கால அர்த்தம் என்பது குறிப்பிட்ட புவியியல் சூழலில் இருக்கும் அரசியல் அரசை குறிப்பதாகும். பிந்தைய கட்டத்தில் அரசுக்கும், பூமிக்கும் இடையேயான உறவை குறித்தது.

ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதியை ஆளும் அரசு எவ்வாறு அதனோடு இயைந்த நலன்களை வெளிப்படுத்துகிறது என்பதும் புவி அரசியலின் முக்கிய கூறாக இருந்தது. மேலும் அரசியல் வெளியின் அதிகாரம் குறித்தும் புவி அரசியல் குறிப்பிடுகிறது. மேலும் ஒரு நிலப்பகுதியின் எதார்த்தம் சார்ந்த எல்லா சுதந்திர அரசியல் வளர்ச்சியையும் குறிப்பிடுகிறது. புவி அரசியல் மண் சார்ந்த அரசின் முழு அதிகாரத்தை பிரதிபலிக்கிறது.

மேலும் வெளிக்கும் அதன் கட்டமைப்புக்குமான அரசியல் அங்கதத்தைப்பற்றிய அறிவியல். அரசு என்ற அங்கத்தின் வாழ்வு மற்றும் மரணம் ஆகியவற்றின் அரசியல் செயல்பாடு இப்படியான பல வியாக்கினங்கள் புவி அரசியலுக்கு அளிக்கப்படுகின்றன. மேற்கண்ட எல்லா வியாக்யானங்களும் இரு நூற்றாண்டுகளின் வரலாற்று இயக்கத்தை அடிப்படையாகக்கொண்டவை. விரிவான அர்த்தத்தில் புவி அரசியல் என்பது ஓர் அரசின் வெளியுறவுக்கொள்கை அடிப்படையிலான புவியியல் ஆய்வு முறை. இந்த அர்த்தத்தில் தான் உலக நாடுகளின் அரசுகள் புவி அரசியலை அணுகுகின்றன.

புவி அரசியல் 18 ஆம் நூற்றாண்டின் பிரிட்டன் மற்றும் பிரான்சின் காலனியாதிக்க நடவடிக்கைகளோடு தொடங்குகிறது எனலாம். காலனியாதிக்கம் தன் எல்லையை விரிவாக்கம் செய்து கொள்ள மற்ற நாடுகளை ஆக்கிரமிக்கத்தொடங்கியது. இது காலனிய அரசிற்கும், ஆக்கிரமிக்கப்பட்ட நாடுகளின் நிலப்பரப்பிற்கும் இடையே நேரடி உறவை ஏற்படுத்தியது. பிரிட்டன் காலனியம் இந்தியா போன்ற நாடுகளில் உற்பத்திப்பொருட்களை கபளீகரம் செய்தது, ஏற்கனவே நடைமுறையில் இருந்த விவசாயத்தை மாற்றி தங்களின் விவசாய முறையை அறிமுகப்படுத்தியது போன்றவற்றை குறிப்பிடலாம். மேலும் தேயிலை, காப்பி போன்ற பயிர்களும் இதில் அடங்கும். காலனிய அரசிற்கு புவியின் எல்லையை விரிவுபடுத்துவது அதன் பரந்துபட்ட நலன்களுக்கு உகந்ததாகும். புவி அரசியலை உள்வாங்கிய காலனிய சிந்தனை ஐரோப்பிய மறுமலர்ச்சி கால சிந்தனை முறையில் இருந்தே தொடக்கம் பெற்று விட்டது.

இம்மானுவேல் கான்டின் உள் அவதானம் மற்றும் தன்னிறைவு கோட்பாடு, ஹெகலின் ஜெர்மானிய சேவை மற்றும் வெளிப்புற விரிவாக்கம் ஆகியவை ஐரோப்பிய காலனிய முறைகளுக்கு பெரும் தூண்டலாக இருந்தன. மேலும் ஐரோப்பிய நாகரீகம் குறித்த மேன்மையும் இந்த காலனிய ஆட்சியாளர்களின் உட்கிடங்காக இருந்தன. இதன் தொடர்ச்சியில் பிஸ்மார்க் முன்னெடுத்த ஜெர்மானிய முழுமை கோட்பாடு அன்றைய அரசியல் தத்துவத்தின் இயங்கியலாக இருந்தது. மேலும் ரிட்டல், ஹும்போல்ட மற்றும் பிரடரிக் ரட்ஸல் போன்றோர் புவி அரசியலுக்கான குறிப்பிட்ட சில அம்சங்களை உருவாக்கினர்.

அதன் படி வெளியும், நிலைமையும் புவியின் மதிப்பையும் மக்களின் முடிவான விதியையும் நிர்ணயம் செய்கின்றன. இது அறிவியல் நிர்ணயவாத விதிகளின் அடிப்படையிலானது. நிலைமையை பொறுத்தவரை குறிப்பிட்ட பகுதியில் அதன் இடம் மாறாத நிலையில் அது எப்போதும் அரசுகளுக்கும், தேசத்திற்கும் அதே மாதிரியான உந்துவிசையை அளித்துக்கொண்டே இருக்கிறது. வெளியை பொறுத்தவரை மக்களின் லட்சியத்தை அடைவதற்கான முக்கிய கூறு. எல்லா போர்களும் இந்த வெளியை வெற்றிக்கொள்வதற்கான போர்களே. இன்றைய நவீன காலகட்டத்தில் பிரதேசங்களை வெற்றிக்கொள்ளுவதே சிறந்த அரசியல் நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.

18 ஆம் நூற்றாண்டில் காலனியம் உலகின் மூன்றில் இரண்டு பகுதியை தன் வயப்படுத்திக்கொண்டது. பெரும்பாலும் கீழைநாடுகள் தான் அதன் காலனிகளாக இருந்தன. ஆசியா மற்றும் ஆப்ரிக்காவின் பெரும்பாலான நாடுகள் பிரிட்டன் மற்றும் பிரான்சின் கட்டுப்பாட்டிற்குள் வந்தன. இந்த நாடுபிடிக்கும் கொள்கை என்பது முந்தைய நிலபிரபுத்துவ அரசுகளின் எச்ச மனோபாவம். மேலும் 19 ஆம் நூற்றாண்டு காலகட்டத்தில் அமெரிக்காவிலிருந்து பல்வேறு விதமான மூலப்பொருட்களை பிரிட்டனுக்கு இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டதால் பிரிட்டனுக்கு புதிய காலனிகளை கண்டுபிடிக்கும் நிர்ப்பந்தம் ஏற்பட்டது.

புவி அரசியலின் நீட்சி இங்கிருந்து தொடங்கியது. விவசாய நிலங்களை ஆக்கிரமிக்கும் மனோபாவத்தோடு இந்த காலனிய அரசுகளின் நடவடிக்கைகளும் ஒத்துபோயின. தன் நிலத்தோடு தொடர்பில்லாத, அந்த பிரதேச பண்பாட்டோடு சம்பந்தமே இல்லாத ஒன்றின் கட்டுப்பாட்டிற்குள் பெரும்பாலான ஆசிய ஆப்ரிக்க நாடுகள் வந்த போது அங்குள்ள மக்கள் தாங்கள் ஒரு நவீன ஏமாற்றத்திற்கு உள்ளாகி இருக்கிறோம் என்பதாக உணர்ந்தனர். அதுவரையிலும் தாங்கள் கட்டுண்டிருந்த நிலபிரபுத்துவ அரசுகளின் அமைப்பிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஓர் அரச கட்டமைப்பை ஏற்றுக்கொள்ளும் கட்டாய நிலைக்கு தள்ளப்பட்டனர்.

ஆசிய கண்டத்தை பொறுத்தவரை மத்திய கிழக்கு முழுவதும் துருக்கிய உதுமானிய பேரரசும், ஈரான் மற்றும் மத்திய ஆசியாவின் பெரும்பகுதியை ஸபாவித் பேரரசும், தெற்காசியாவை முகலாய பேரரசும் ஆட்சியமைத்துக்கொண்டிருந்தன. இந்த மூன்றுவகை பேரரசுகளையும் வென்றெடுத்து தன் புவி அரசியலை பிரிட்டன் வலுவாக நிறுவிக்கொண்டது.

காலனிய அரசுகள் வரலாற்று அரசுகளாக இப்போது தான் மாற்றம் பெற்றன. புவி அரசியல் தேசங்களை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் பெரும் நிலப்பரப்பு பற்றியும் வெளிப்படுத்துகிறது. அந்த அடிப்படையில் ஆசியா, ஆப்ரிக்கா மற்றும் ஐரோப்பா கண்டங்களின் பெரும் நிலப்பரப்புகள் உலக தீவுகள் (World Island)என்றழைக்கப்படுகின்றன. மற்றவை துணை தீவுகள். வல்லரசு உருவாக்கத்தின் முக்கிய அடிப்படையே இது தான். முந்தைய இரு நூற்றாண்டுகளில் ஆசியாவில் இரஷ்யாவும், ஐரோப்பாவில் ஜெர்மனியும் இந்த தீவுகளின் மைய நிலப்பரப்பாக இருந்தன. அதாவது இதயப்பகுதி என்றழைக்கப்பட்டன. ஸ்டாலினும், ஹிட்லரும் இரண்டாம் உலகப்போரில் நடத்திய போர் நடவடிக்கைகள் மற்றும் ஒப்பந்தங்கள் ஆகியவை இந்த மைய நிலப்பரப்பு சார்ந்த அரசியல் தான்.

இரஷ்யாவை கைப்பற்றினால் ஜெர்மன் உலகின் மிகப்பெரும் வல்லரசு ஆகிவிடும் என்ற கனவில் ஹிட்லர் மிதந்து கொண்டிருந்தார். காரணம் ஆசியா மற்றும் ஐரோப்பா கண்டங்கள் ஒன்றிணையும் எல்லையாக இரஷ்ய நிலப்பரப்பு இருந்தது. மையப்பகுதிகளை கைப்பற்றுவது என்பது உலக அதிகாரத்தின் முக்கிய கூறாக இருந்தது. இன்றைய போர் முறை ஒரு நாட்டின் தலைநகர் கைப்பற்றப்பட்டால் அந்நாட்டை பிடித்து விட்டதாக பொருள் கொள்கிறது. அதன் மூலம் அது தன்னை பேரரசாக காட்டிக்கொள்கிறது. மேலும் மேற்கத்திய புவி அரசியல் சிந்தனையாளரான மெகிந்தர் இவ்வாறு குறிப்பிட்டார்.

  
   Bookmark and Share Seithy.com


இமாலயப் பிரகடனம் யாருக்குச் சேவகம் செய்யும்....? Top News
[Friday 2023-12-29 01:00]

இமாலயப் பிரகடனத்தைச் செய்ததன் மூலம், உலகத் தமிழர் பேரவை புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புகள் மத்தியில் பெருமளவுக்குத் தனிமைப்படுத்தப்பட்டு விட்டது. அந்த அமைப்புடன் இணைந்து மகிந்தவைச் சந்தித்த கனேடியத் தமிழ்க் காங்கிரஸின் சில உறுப்பினர்கள் கனடாவில் கடுமையாக விமர்சிக்கப்படுகின்றார்கள்.


ஏழ்மையைக் கண்டு ஒதுங்குவதும் துன்பத்தைக் கண்டு விலகுவதும் மனித பண்பல்ல என்றனர் ஆன்றோர். Top News
[Friday 2023-09-29 20:00]

எமது தாயகத்திலே அரவணைப்போர் என்று எவரும் இன்றி அனாதரவாகவும் நிற்கதியாகவும் போரின் வடுக்களுக்களைச் சுமந்தவாறும் பொருளாதார வெறுமையில் சிக்கித் தவித்த வாறும் உடலியல் உழவியல் என்ற வகையிலும் சொல்லொணா உபாதைகளுக்கு உள்ளாகி எவரேனும் மனமிரங்கி கை தூக்க வாராரோ எனும் அங்கலாய்ப்புடனும் ஏக்கங்களுடனும் அன்றாடம் துயருற்றிருக்கும் எம் பிறந்த மண் உடன் பிறப்புக்களோ எண்ணற்றவை.


இலங்கையில் சர்வாதிகார சனாதிபதிக்குப் பதிலாக ஒரு கொடுங்கோலன் நியமனம்!
[Saturday 2022-08-27 08:00]

பல ஆண்டுகளாக எண்பித்துக் காட்டியது போல், தற்போதைய அரசியல்வாதிகளுக்கு, வாக்காளர்கள் மற்றும் நாட்டின் நலனில் அக்கறை இல்லை. எவரும் நாட்டை முதன்மைப் படுத்துவதாகத் தெரியவில்லை. சரியான திட்டமிடல் மற்றும் நாட்டை அபிவிருத்தி செய்வதற்கும், அதற்கு ஆதரவான சட்டத்தைக் கொண்டு வருவதற்கும் பதிலாக, இளைஞர்கள் மற்றும் வயதான அரசியல்வாதிகள் திட்டமிட்ட முறையில் இன மற்றும் மதப் பிளவுகளையும் குழுக்களுக்குள் விரோதங்களையும் சுயலாபத்திற்காக திசைதிருப்பும் தந்திரோபாயங்களாக ஊக்குவித்தார்கள்.


அரசியலில் நிரந்தர நண்பர்களும் இல்லை- நிரந்தர எதிரிகளும் இல்லை! - கனடா நக்கீரன்
[Friday 2022-07-22 22:00]

கொடுக்கிற தெய்வம் கூரையைப் பிச்சுக் கொண்டு கொடுக்குமாம். புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் சனாதிபதி இரணில் விக்கிரமசிங்க அவர்களைப் பொறுத்தளவில் வியாழன் பட்டையிலும் வெள்ளி துலாவிலும் இருக்கின்றன.


13வது திருத்த சட்டம் யாருக்கு தேவை? ச. வி. கிருபாகரன், பிரான்ஸ்
[Saturday 2022-01-29 18:00]

மிக அண்மையில் ஓர் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற காணோளியை பார்வையிட்டடேன். அதில் ஓரு பேச்சாளர், ‘யார் மக்களின் சமூக பொருளதார நலன்களில் அக்கறை கொண்டவர்களென்ற’வினாவை முன்வைத்து உரையாற்றினார். இவரின் உரையின் பிரகாரம், அரசியல்வாதிகள் என்பவர்கள் தினமும் தமது அடுத்த தேர்தலை பற்றிய சிந்தனை கொண்டவர்ளே தவிர, மக்களின் நலன்களிலோ எதிர்காலத்திலோ அக்கறை கொண்டவர்கள் அல்ல என்ற விடயத்தை முன்வைத்தார்.


‘ரொறோண்டோ சமர்’ | பின்னடி விமர்சனம்!
[Tuesday 2021-11-23 13:00]

கடந்த சனியன்று (நவம்பர் 20) ரொறோண்டோவில் நடைபெற்ற சுமந்திரனெதிர்ப்புப் போராட்டம் இப்போது ஒரு உலக சமாச்சாரம். விடுதலைப் புலி ஆதரவாளர்களையும், பொதுவாக ஈழத்தமிழர் சமூகத்தையும் நகைப்பிற்கிடமாக்கிய இச் சம்பவம் ஒருவகையில் இலங்கையில் அரசியல் தீர்வொன்றுக்காகப் போராடிவரும் சக்திகளுக்கு வெற்றியைத் தேடித் தந்திருக்கிறது.


யாழ்-உதயன் பத்திரிகையின் ஞாயிறு பதிப்பில் வெளிவந்த பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களது செவ்வி.
[Wednesday 2021-09-22 18:00]

"ஐ.நா மனித உரிமைச்சபை ஆணையாளரின் அறிக்கை ஏமாற்றத்தை தந்துள்ளது." எம்மைப் பொறுத்தவரை விடுதலைப்புலிகள் போர்குற்றம் புரியவில்லை என்பதனை நிருபிக்க நாங்கள் தயாராக இருப்பதோடு, சிறிலங்கா இனப்படுகொலையினை புரிந்த அரசு என்பதனையும் நிருபிக்க தயாராகவுள்ளோம்.”— பிரதமர் வி.உருத்திரகுமாரன்JAFFNA,


இலங்கை தமிழ் வானொலிகளின் இன்றையபோக்கு: -சிறிமதன்
[Thursday 2021-03-18 19:00]

தெற்காசியாவிலேயே மிகவும் புகழ்பெற்ற வானொலி சேவை இலங்கையில் தான் அன்று இருந்தது. தொலைக்காட்சி ஊடகம் தொடங்கப்படாத காலம் அது. வேறு எந்த கேளிக்கை மாசும் மனதில் படியாத வசந்த காலம் அது. அப்போது தமிழ் ரசிகர்கள் மனங்களில் முழுக்க முழுக்க ஆக்கிரமித்திருந்தது இலங்கை வானொலி ஒன்றுதான்.


இன அழிப்பின் உயிர்வாழும் ஆதாரங்கள்
[Monday 2020-10-19 21:00]

வைத்தியர் சி. யமுனானந்தா

செம்மொழி எனப் போற்றப்படும் தமிழ் மொழியின் சொந்தக்காரர்கள் வரலாற்றுக்காலம் முழுவதும் அந்நியரால்அழிக்கப்பட்டு வந்தனர். ஆனால், தமிழ் மொழியின் செழுமையோ அதன் பண்பாட்டுப் பரிமானமோ மாறாது இயற்கை உற்பவம் காத்து வந்தது. அவ்வாறே 2009இல் ஏற்பட்ட அழிவுகளையும் தமிழ் மக்கள் எதிர்கொள்ளத் தலைப்பட்டனர்.


முத்தையா முரளிதரனை நாம் அவரது வர்க்க குணாம்சத்தை வைத்தே அளவிட வேண்டும்:
[Sunday 2020-10-18 14:00]

முத்தையா முரளிதரனுடைய வாழ்க்கை வரலாற்றை படமாக்கப்படுவது தொடர்பாகவும் அதில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பது தொடர்பாகவும் கடந்த சில நாட்களாக இடம்பெற்றுவரும் வாதப் பிரதிவாதங்களை அவதானித்த பின்னர் சில குறிப்புகளை எழுதலாம் என்று எனக்குத் தோன்றுகிறது.


Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
Asayan-Salon-2022-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Ambikajewellers-01-08-2021-seithy
NKS-Ketha-04-11-2021
Karan Remax-2010
Mahesan-Remax-169515-Seithy
Kugeenthiran-200-2022-seithy
Rajeef sebarasha 2023/04/19
Airlinktravel-2020-01-01
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா