கனடிய தமிழர் பேரவை மேல் பாலியல் குற்றச்ச்சாட்டு! பதிலளிக்க மறுப்பது ஏன்? | Seithy.com - 24 Hours Tamil News Service, World's largest daily tamil news,tamil breaking news,tamilclassifieds,tamil entertainment, srilanka, tamilnadu, tamileelam | www.seithy.com
 Untitled Document
November 21, 2024 [GMT]

கனடிய தமிழர் பேரவை மேல் பாலியல் குற்றச்ச்சாட்டு! பதிலளிக்க மறுப்பது ஏன்?
[Tuesday 2018-11-06 08:00]

என்னதான் நடக்கிறது கனடிய தமிழர் பேரவையில்? கனடாவில் 2001 இறுதியில் மக்களுக்காக வன்னியில் இருந்த தமிழ் ஈழ தலைமையின் அனுசரணையில் ஆரம்பிக்கப்பட்டு பல ஆண்டு காலங்களாக தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக கனடிய பொது வெளியில் தம்மை அடையாளப்படுத்திக்கொண்டிருக்கும் ஒரு அமைப்பே கனடிய தமிழர் பேரவை
  

இது பற்றி பல்வேறு விமர்சனங்கள் இருந்தபொழுதிலும் மக்களுக்கான அமைப்பாகவே மக்கள் இதற்கான ஆதரவை தொடர்ந்து வழங்கிவந்தனர். படிப்படியாக வெளிப்படை தன்மை அற்ற அமைப்பாக மாறி இறுதியில் அது ஒரு மக்களுக்கு முரணான அமைப்பாகவே மாற்றம் கண்டு நிற்கின்றது என்ற விமர்சனத்தில் வந்து நிற்கின்றது.

இதன் தலைவர்களாக 2 ஆண்டுக்கு ஒருமுறை அடையாளப்படுத்தப்படுபவர்கள் ஒரு பினாமிகள் போன்ற ஒரு தோற்றத்தையே மக்கள் மனதில் ஏற்படுத்தி நிற்கின்றனர் என்பதே இன்றைய யதார்த்தம். கனடிய தமிழ் காங்கிரஸ் என்றால் அங்கு சம்பளத்துக்கு வேலை செய்பவர்கள் மட்டுமே தெரிகின்றார்களே தவிர, தலைவர்களை முன்வரிசைகளில் காணமுடிவதில்லை. பல்வேறு விமர்சனத்துக்கு மத்தியில் பயணிக்கும் இந்த அமைப்பு பொது வெளியில் மக்கள் சம்மதமின்றியே தம்மை மக்கள் பிரதிநிதிகளாக பிரகடனப்படுத்தி நிற்கின்றார்கள் என்பதே இன்றுள்ள விசனம்.

வெளிப்படைத்தன்மை இல்லாத, மக்கள் கேள்விகளுக்கும், முறைப்பாடுகளுக்கும் முறையான பதிலளிக்காமல், மக்கள் விரோத போக்காக பொதுவெளியில் கேள்விகேட்பவர்களுக்கு மக்கள் பணத்தில், மக்களுக்காக இயங்கும் ஒரு அமைப்பு அந்த மக்கள் பணத்திலேயே கேள்விகேட்பவருக்கு எதிராக எவ்வித சமரசமுமின்றி வழக்கு தொடர்கின்றது.

பேரவை பற்றிய அடுக்கடுக்கான புகார்களும் குற்றச்சாட்டுகளும் கடந்த சில நாட்களாக, மாதங்களாக வெளியில் வருகின்றது. சிலவற்றுக்கு மாத்திரம் மின்னஞ்சலில் மறுப்பறிக்கை மட்டும் விடுவதோடு கனடிய தமிழர் பேரவை அடங்கிவிடுகின்றது. பொது வெளியில் இருக்கும் பல கேள்விகளுக்கு மக்களை சந்திக்க ஏன் ஒரு பொது (CTC) அமைப்பு பின்னிக்கிறது என்கின்ற கேவிகள் பொதுமக்கள் மத்தியில் தொடுக்கப்படுகிறது.

கனடிய தமிழர் பேரவை - இயக்குநர்கள் குழு:

  
   Bookmark and Share Seithy.com


இமாலயப் பிரகடனம் யாருக்குச் சேவகம் செய்யும்....? Top News
[Friday 2023-12-29 01:00]

இமாலயப் பிரகடனத்தைச் செய்ததன் மூலம், உலகத் தமிழர் பேரவை புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புகள் மத்தியில் பெருமளவுக்குத் தனிமைப்படுத்தப்பட்டு விட்டது. அந்த அமைப்புடன் இணைந்து மகிந்தவைச் சந்தித்த கனேடியத் தமிழ்க் காங்கிரஸின் சில உறுப்பினர்கள் கனடாவில் கடுமையாக விமர்சிக்கப்படுகின்றார்கள்.


ஏழ்மையைக் கண்டு ஒதுங்குவதும் துன்பத்தைக் கண்டு விலகுவதும் மனித பண்பல்ல என்றனர் ஆன்றோர். Top News
[Friday 2023-09-29 20:00]

எமது தாயகத்திலே அரவணைப்போர் என்று எவரும் இன்றி அனாதரவாகவும் நிற்கதியாகவும் போரின் வடுக்களுக்களைச் சுமந்தவாறும் பொருளாதார வெறுமையில் சிக்கித் தவித்த வாறும் உடலியல் உழவியல் என்ற வகையிலும் சொல்லொணா உபாதைகளுக்கு உள்ளாகி எவரேனும் மனமிரங்கி கை தூக்க வாராரோ எனும் அங்கலாய்ப்புடனும் ஏக்கங்களுடனும் அன்றாடம் துயருற்றிருக்கும் எம் பிறந்த மண் உடன் பிறப்புக்களோ எண்ணற்றவை.


இலங்கையில் சர்வாதிகார சனாதிபதிக்குப் பதிலாக ஒரு கொடுங்கோலன் நியமனம்!
[Saturday 2022-08-27 08:00]

பல ஆண்டுகளாக எண்பித்துக் காட்டியது போல், தற்போதைய அரசியல்வாதிகளுக்கு, வாக்காளர்கள் மற்றும் நாட்டின் நலனில் அக்கறை இல்லை. எவரும் நாட்டை முதன்மைப் படுத்துவதாகத் தெரியவில்லை. சரியான திட்டமிடல் மற்றும் நாட்டை அபிவிருத்தி செய்வதற்கும், அதற்கு ஆதரவான சட்டத்தைக் கொண்டு வருவதற்கும் பதிலாக, இளைஞர்கள் மற்றும் வயதான அரசியல்வாதிகள் திட்டமிட்ட முறையில் இன மற்றும் மதப் பிளவுகளையும் குழுக்களுக்குள் விரோதங்களையும் சுயலாபத்திற்காக திசைதிருப்பும் தந்திரோபாயங்களாக ஊக்குவித்தார்கள்.


அரசியலில் நிரந்தர நண்பர்களும் இல்லை- நிரந்தர எதிரிகளும் இல்லை! - கனடா நக்கீரன்
[Friday 2022-07-22 22:00]

கொடுக்கிற தெய்வம் கூரையைப் பிச்சுக் கொண்டு கொடுக்குமாம். புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் சனாதிபதி இரணில் விக்கிரமசிங்க அவர்களைப் பொறுத்தளவில் வியாழன் பட்டையிலும் வெள்ளி துலாவிலும் இருக்கின்றன.


13வது திருத்த சட்டம் யாருக்கு தேவை? ச. வி. கிருபாகரன், பிரான்ஸ்
[Saturday 2022-01-29 18:00]

மிக அண்மையில் ஓர் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற காணோளியை பார்வையிட்டடேன். அதில் ஓரு பேச்சாளர், ‘யார் மக்களின் சமூக பொருளதார நலன்களில் அக்கறை கொண்டவர்களென்ற’வினாவை முன்வைத்து உரையாற்றினார். இவரின் உரையின் பிரகாரம், அரசியல்வாதிகள் என்பவர்கள் தினமும் தமது அடுத்த தேர்தலை பற்றிய சிந்தனை கொண்டவர்ளே தவிர, மக்களின் நலன்களிலோ எதிர்காலத்திலோ அக்கறை கொண்டவர்கள் அல்ல என்ற விடயத்தை முன்வைத்தார்.


‘ரொறோண்டோ சமர்’ | பின்னடி விமர்சனம்!
[Tuesday 2021-11-23 13:00]

கடந்த சனியன்று (நவம்பர் 20) ரொறோண்டோவில் நடைபெற்ற சுமந்திரனெதிர்ப்புப் போராட்டம் இப்போது ஒரு உலக சமாச்சாரம். விடுதலைப் புலி ஆதரவாளர்களையும், பொதுவாக ஈழத்தமிழர் சமூகத்தையும் நகைப்பிற்கிடமாக்கிய இச் சம்பவம் ஒருவகையில் இலங்கையில் அரசியல் தீர்வொன்றுக்காகப் போராடிவரும் சக்திகளுக்கு வெற்றியைத் தேடித் தந்திருக்கிறது.


யாழ்-உதயன் பத்திரிகையின் ஞாயிறு பதிப்பில் வெளிவந்த பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களது செவ்வி.
[Wednesday 2021-09-22 18:00]

"ஐ.நா மனித உரிமைச்சபை ஆணையாளரின் அறிக்கை ஏமாற்றத்தை தந்துள்ளது." எம்மைப் பொறுத்தவரை விடுதலைப்புலிகள் போர்குற்றம் புரியவில்லை என்பதனை நிருபிக்க நாங்கள் தயாராக இருப்பதோடு, சிறிலங்கா இனப்படுகொலையினை புரிந்த அரசு என்பதனையும் நிருபிக்க தயாராகவுள்ளோம்.”— பிரதமர் வி.உருத்திரகுமாரன்JAFFNA,


இலங்கை தமிழ் வானொலிகளின் இன்றையபோக்கு: -சிறிமதன்
[Thursday 2021-03-18 19:00]

தெற்காசியாவிலேயே மிகவும் புகழ்பெற்ற வானொலி சேவை இலங்கையில் தான் அன்று இருந்தது. தொலைக்காட்சி ஊடகம் தொடங்கப்படாத காலம் அது. வேறு எந்த கேளிக்கை மாசும் மனதில் படியாத வசந்த காலம் அது. அப்போது தமிழ் ரசிகர்கள் மனங்களில் முழுக்க முழுக்க ஆக்கிரமித்திருந்தது இலங்கை வானொலி ஒன்றுதான்.


இன அழிப்பின் உயிர்வாழும் ஆதாரங்கள்
[Monday 2020-10-19 21:00]

வைத்தியர் சி. யமுனானந்தா

செம்மொழி எனப் போற்றப்படும் தமிழ் மொழியின் சொந்தக்காரர்கள் வரலாற்றுக்காலம் முழுவதும் அந்நியரால்அழிக்கப்பட்டு வந்தனர். ஆனால், தமிழ் மொழியின் செழுமையோ அதன் பண்பாட்டுப் பரிமானமோ மாறாது இயற்கை உற்பவம் காத்து வந்தது. அவ்வாறே 2009இல் ஏற்பட்ட அழிவுகளையும் தமிழ் மக்கள் எதிர்கொள்ளத் தலைப்பட்டனர்.


முத்தையா முரளிதரனை நாம் அவரது வர்க்க குணாம்சத்தை வைத்தே அளவிட வேண்டும்:
[Sunday 2020-10-18 14:00]

முத்தையா முரளிதரனுடைய வாழ்க்கை வரலாற்றை படமாக்கப்படுவது தொடர்பாகவும் அதில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பது தொடர்பாகவும் கடந்த சில நாட்களாக இடம்பெற்றுவரும் வாதப் பிரதிவாதங்களை அவதானித்த பின்னர் சில குறிப்புகளை எழுதலாம் என்று எனக்குத் தோன்றுகிறது.


Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Remax-169515-Seithy
Karan Remax-2010
Airlinktravel-2020-01-01
 gloriousprinters.com 2021
Asayan-Salon-2022-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
NKS-Ketha-04-11-2021
Vaheesan-Remax-2016
Rajeef sebarasha 2023/04/19
Ambikajewellers-01-08-2021-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா