தமிழர்களை மீண்டும் கையறு நிலைக்குள் தள்ளிய ஜெனீவா: | Seithy.com - 24 Hours Tamil News Service, World's largest daily tamil news,tamil breaking news,tamilclassifieds,tamil entertainment, srilanka, tamilnadu, tamileelam | www.seithy.com
 Untitled Document
November 23, 2024 [GMT]

தமிழர்களை மீண்டும் கையறு நிலைக்குள் தள்ளிய ஜெனீவா:
[Friday 2019-03-29 18:00]

இந்­த­முறை நிலைமை முற்றாகவே மாறி­யி­ருக்­கி­றது. அதற்குக் காரணம் ஜனா­திபதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் தலை­யீடு தான். வெளி­வி­வ­கார அமைச்சர் திலக் மாரப்­ப­னவின் உரையில், தாம் திருத்­தங்­களைச் செய்­த­தாக ஜனா­தி­ப­தியே கூறியிருக்­கிறார். அவ்­வாறு ஜனா­தி­ப­தி­யினால் செய்­யப்­பட்ட திருத்­தங்களில் முக்­கி­ய­மா­ன­தாக, படையினர் மீதான போர்க்­குற்­றச்­சாட்டு நிரா­கரிப்பும், கலப்பு விசா­ரணைப் பொறி­மு­றைக்­கான எதிர்ப்பும் அமைந்­தி­ருக்­கி­றது


  

இந்­த­முறை நிலைமை முற்றாகவே மாறி­யி­ருக்­கி­றது. அதற்குக் காரணம் ஜனா­திபதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் தலை­யீடு தான். வெளி­வி­வ­கார அமைச்சர் திலக் மாரப்­ப­னவின் உரையில், தாம் திருத்­தங்­களைச் செய்­த­தாக ஜனா­தி­ப­தியே கூறியிருக்­கிறார். அவ்­வாறு ஜனா­தி­ப­தி­யினால் செய்­யப்­பட்ட திருத்­தங்களில் முக்­கி­ய­மா­ன­தாக, படையினர் மீதான போர்க்­குற்­றச்­சாட்டு நிரா­கரிப்பும், கலப்பு விசா­ரணைப் பொறி­மு­றைக்­கான எதிர்ப்பும் அமைந்­தி­ருக்­கி­றது.

ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் பேர­வையின் 40 ஆவது கூட்­டத்­தொ­டரில், இலங்கை தொடர்­பான புதி­ய­தொரு தீர்­மானம் நிறை­வேற்­றப்­பட்­டி­ருக்­கி­றது.

2015ஆம் ஆண்டு ஆட்சி மாற்­றத்­துக்குப் பின்னர், ஐ.நாவு­டனும், சர்­வ­தேச சமூ­கத்­து­டனும் இணங்கிச் செயற்­படும் போக்கை இலங்கை அர­சாங்கம் கடைப்­பி­டிக்கத் தொடங்­கிய பின்னர், ஜெனீ­வாவில் கொண்டு வரப்­பட்­டுள்ள மூன்­றாவது தீர்­மானம் இது.

2015 செப்­டெம்­பரில் நிறை­வேற்­றப்­பட்ட 30/1 தீர்­மானம் மற்றும் 2017 மார்ச்சில் நிறை­வேற்­றப்­பட்ட 34/1 தீர்­மானம் ஆகி­ய­வற்றின் தொடர்ச்­சி­யா­கவே, இந்த முறையும் 40/1 என்ற புதிய தீர்­மானம் கொண்டு வரப்­பட்­டி­ருக்­கி­றது.

இந்த தீர்­மா­னத்தின் உள்­ள­டக்கம் ஒன்றும் புதிய விட­யங்­களைக் கொண்­ட­தல்ல. அதனால் தான், இலங்கை அர­சாங்­கத்தின் இணை அனு­ச­ர­ணையை மீண்டும், பெறக் கூடிய சூழ்­நிலை பிரித்­தா­னியா உள்­ளிட்ட இணை அனு­ச­ரணை நாடு­க­ளுக்கு ஏற்­பட்­டி­ருக்­கி­றது.

2015ஆம் ஆண்டு, கொண்டு வரப்­பட்ட தீர்­மா­னத்தில், வெளி­நாட்டு நீதி­ப­தி­களை உள்­ள­டக்­கிய கலப்பு விசா­ரணைப் பொறி­மு­றையை உரு­வாக்க வேண்டும் என்று வலி­யு­றுத்­தப்­பட்­டி­ருந்­தது. அதனை அப்­போது, இலங்கை அர­சாங்­கமும் ஏற்­றுக் ­கொண்­டி­ருந்­தது,

ஆனால், நான்கு ஆண்­டு­க­ளா­கியும் அந்த வாக்­கு­றுதி நிறை­வேற்­றப்­ப­ட­வில்லை என்­பதை, ஐ.நா மனித உரி­மைகள் ஆணை­யாளர் மிச்சேல் பசெலெட் அம்­மையார் தமது அறிக்­கையில் சுட்டிக்­காட்­டி­யி­ருந்தார். 2015ஆம் ஆண்டு கொடுக்­கப்­பட்ட வாக்­கு­றுதி நிறை­வேற்­றப்­ப­டாத நிலையில், 2017ஆம் ஆண்டு அந்த தீர்­மா­னத்தை நீடிப்புச் செய்யும் வகையில் இன்­னொரு தீர்­மானம் நிறை­வேற்­றப்­பட்­டது.

அது முடி­வுக்கு வந்த பின்னர், வாக்­கு­று­திகள் நிறை­வேற்­றப்­ப­டாத நிலையில் மீண்டும் இப்­போது 40/1 என்ற புதிய தீர்­மா­னத்தின் மூலம் கால­நீ­டிப்புச் செய்­யப்­பட்­டி­ருக்­கி­றது.

2015ஆம் ஆண்டு நிறை­வேற்­றப்­பட்ட 30/1 தீர்­மா­னத்­துக்கு இணங்­கி­யி­ருந்த இலங்கை அர­சாங்கம் கலப்பு விசா­ரணைப் பொறி­மு­றையை ஏற்­ப­டுத்த இணங்­கி­யது.

ஆனால் , அந்த வாக்­கு­றுதி நிறை­வேற்­றப்­ப­ட­வில்லை என்­பதை ஐ.நா மனித உரிமை ஆணை­யாளர் சுட்­டிக்­காட்­டி­ய­தற்குப் பதி­ல­ளித்துப் பேசிய வெளி­வி­வ­கார அமைச்சர் திலக் மாரப்­பன, கலப்பு விசா­ரணைப் பொறி­மு­றையை அமைக்க முடி­யாது, அர­சி­ய­ல­மைப்­புப்­படி வெளி­நாட்டு நீதி­ப­தி­களை விசா­ர­ணை­களில் உள்­ள­டக்க முடி­யாது என்று கையை விரித்­தி­ருக்­கிறார்.

2015ஆம் ஆண்டு இதே அர­சாங்கம் இந்த வாக்கு­று­தியைக் கொடுத்த போதும், இதே அர­சி­ய­ல­மைப்பு தான் நடை­மு­றையில் இருந்­தது. எனவே அப்­போது அர­சாங்கம் அந்த வாக்­கு­று­தியைக் கொடுத்த போது, அர­சி­ய­ல­மைப்பு ரீதி­யான தடை இருக்­க­வில்­லையா? அல்­லது அந்த தடையை அகற்றும் பலம் தமக்கு இருக்­கி­றது என்று நம்­பி­யதா?இல்லை, வெறும் வாக்­கு­று­தியைக் கொடுத்து விட்டு, ஏமாற்றி விடலாம் என்று கரு­தி­யதா? என்று தெரி­ய­வில்லை.

எது எவ்­வா­றா­யினும், இலங்கை அர­சாங்கம் இப்­போது வெளி­நாட்டு நீதி­ப­தி­களை உள்­ள­டக்­கிய கலப்பு விசா­ரணைப் பொறி­முறை அமைக்­கப்­ப­டாது என்று திட்­ட­வட்­ட­மாக கூறி விட்­டது.

இலங்கை அர­சாங்கம் ஐ.நா மனித உரி­மைகள் பேர­வையில் இந்த மறுப்பை முதல் முறை­யாக வெளி­யிட்­டி­ருக்­கி­றது.

கடந்த 2015ஆம் ஆண்டு ஐ..நா. மனித உரி­மைகள் பேர­வையில் நிறை­வேற்­றப்­பட்ட 30/1 தீர்­மா­னத்தின் கால­அ­வ­காசம் முடி­வ­டைந்த பின்னர், 2017ஆம் ஆண்டு மார்ச் மாதம் 22ஆம் திகதி, ஐ.நா மனித உரிமை ஆணை­யா­ள­ராக இருந்த செயிட் ராட் அல்­ஹுசேன், தீர்­மானம் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளதா என்ற விப­ரங்­களை உள்­ள­டக்­கிய அறிக்கை ஒன்றை சமர்ப்­பித்­தி­ருந்தார்.

அதில் அவர், ” மோச­மான குற்­றங்கள் தொடர்­பாக விசா­ரணை நடத்தி தண்­டனை வழங்­கு­வதில் இலங்கை தோல்­வி­ய­டைந்­துள்­ள­தா­னது, ஒரு பரந்­து ­பட்ட தயக்­கத்தை பிர­தி­ப­லிப்­ப­தாக அல்­லது, பாது­காப்புப் படைகள் மீது நட­வ­டிக்கை எடுக்க அஞ்­சு­வ­தாக தோன்­று­கி­றது.

கடந்­த­கால மீறல்கள் தொடர்­பாக நீதி முறை­மையின் நம்­ப­கத்­தன்மை குறை­பாடு மற்றும் தண்ட­னையில் இருந்து தப்­பிக்கும் நிலைக்கு முடி­வு­கட்ட விரும்­ப­மின்மை அல்­லது இய­லாமை கார­ண­மாக, நீதிப் பொறி­மு­றையில் சர்­வ­தேச பங்­க­ளிப்பு தேவைப்­ப­டு­கி­றது.

இது நம்­ப­க­மா­ன­தாக இருப்­ப­தற்கு, வெளி­நாட்டு நீதி­ப­திகள் மற்றும் வழக்குத் தொடு­நர்கள், அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட சட்­ட­வா­ளர்கள், விசா­ர­ணை­யா­ளர்­களை உள்­ள­டக்­கி­ய­தாக ஒரு சிறப்பு நீதி­மன்றம், அமைக்­கப்­பட வேண்டும்” என்று கூறி­யி­ருந்தார்.

அந்த அறிக்கை மீது விவாதம் இடம்­பெற்ற போது, அப்­போது பிரதி வெளி­வி­வ­கார அமைச்­ச­ராக இருந்த ஹர்ஷ டி சில்வா இலங்­கையின் சார்பில் பதி­ல­ளித்து உரை­யாற்­றினார். அவர், வெளி­நாட்டு நீதி­ப­திகள் என்ற ஐ.நா மனித உரிமை ஆணை­யா­ளரின் பரிந்­துரை பற்றி எந்தக் கருத்­தை­யுமே கூற­வில்லை.

எமது சமூ­கத்தின் எல்லாத் தரப்­பி­ன­ரு­டனும் தொடர்ந்து ஆலோ­சனை நடத்தி புதிய பொறி­மு­றைகள் உரு­வாக்­கப்­படும். சர்­வ­தேச நிபு­ணத்­து­வத்­தையும், உத­வி­யையும் நாம் கோருவோம். அந்தப் பொறுப்பை எல்லா நாடு­களும் நிறை­வேற்ற முடியும் ” என்று மாத்­திரம் அவர் குறிப்­பிட்­டி­ருந்தார்.

வெளி­நாட்டு நீதி­ப­திகள் பற்­றிய பரிந்­து­ரையை பகி­ரங்­க­மாக நிரா­க­ரிக்­காமல், வெளி­நாட்டு நிபு­ணத்­து­வமும், உத­வியும் கோரப்­படும் என்று மாத்­திரம் அப்­போது கூறி­யி­ருந்­தது அர­சாங்கம்.

இந்­த­முறை நிலைமை முற்­றா­கவே மாறி­யி­ருக்­கி­றது. அதற்குக் காரணம் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் தலை­யீடு தான்.

வெளி­வி­வ­கார அமைச்சர் திலக் மாரப்­ப­னவின் உரையில், தாம் திருத்­தங்­களைச் செய்­த­தாக ஜனா­தி­ப­தியே கூறி­யி­ருக்­கிறார்.

அவ்­வாறு ஜனா­தி­ப­தி­யினால் செய்­யப்­பட்ட திருத்­தங்­களில் முக்­கி­ய­மா­ன­தாக, படை­யினர் மீதான போர்க்­குற்­றச்­சாட்டு நிரா­க­ரிப்பும், கலப்பு விசா­ரணைப் பொறி­மு­றைக்­கான எதிர்ப்பும் அமைந்­தி­ருக்­கி­றது.

இறு­திக்­கட்டப் போரில் படை­யினர் போர்க்­குற்­றங்­களை இழைக்­க­வில்லை என்றும், சர்­வ­தேச அளவில் பயங்­க­ர­வாத அமைப்­பாக பிர­க­டனம் செய்­யப்­பட்ட அமைப்­புடன் தான் படை­யினர் போரிட்­ட­னரே தவிர, எந்­த­வொரு இனத்­து­டனும் அல்ல என்றும் திலக் மாரப்­பன கூறி­யி­ருந்தார்.

அதை­விட, போர்க்­குற்­றங்கள் தொடர்­பான நம்­ப­க­மான – நிரூ­பிக்­கத்­தக்க குற்­றச்­சாட்­டுகள் இல்லை என்­ப­தையும் அவர் வலி­யு­றுத்­தி­யி­ருக்­கிறார்.

ஐ.தே.க. அர­சாங்­கத்­துக்கும் கலப்பு விசா­ரணைப் பொறி­முறை அமைக்­கப்­ப­டாது என்­பது நன்­றா­கவே தெரியும். ஆனால் அதனை வெளிப்­ப­டை­யாக கூறத் தயங்கி வந்­தது. ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன அதனை ஐ.தே.க. அர­சாங்­கத்தைக் கொண்டே ஜெனீ­வாவில் கூற வைத்­தி­ருக்­கிறார்.

2015 தீர்­மா­னத்தை முழு­மை­யாக நடை­மு­றைப்­ப­டுத்த வேண்டும் என்று ஐரோப்­பிய ஒன்­றியம், பிரித்­தா­னிய உள்­ளிட்ட நாடுகள் வலி­யு­றுத்திக் கூறு­கின்ற நிலையில், அந்த தீர்­மா­னத்தின் முக்­கி­ய­மான உள்­ள­டக்­கத்தை இலங்கை அர­சாங்கம் நிரா­க­ரித்த போது, எந்த நாடும் அதனை எதிர்க்­க­வில்லை. அதனைக் கேட்டுக் கொண்டு அமை­தி­யாகத் தான் இருந்­தன.

2021ஆம் ஆண்டு வரை இலங்கை அர­சாங்­கத்­துக்கு கால­அ­வ­காசம் அளிக்­கப்­பட்­டுள்ள போதும் கூட, கலப்பு விசா­ரணைப் பொறி­முறை உரு­வாக்­கப்­ப­டாது. 2015 வாக்­கு­று­திகள் முழு­மை­யாக நிறை­வேற்­றப்­ப­டு­வ­தற்கு வாய்ப்­பில்லை என்­பதைத் தான் இது காட்­டி­யி­ருக்­கி­றது.

அதே­வேளை, இம்­முறை தீர்­மானம் இலங்கை அர­சாங்­கத்­துக்கு கடி­வாளம் போடத் தக்­க­தாக இருக்க வேண்டும் என்றும், இலங்­கையைக் கண்­கா­ணிக்கும் வகையில் ஒரு செய­ல­கத்தை, ஐ.நா மனித உரி­மைகள் ஆணை­யாளர் பணி­யகம் அமைக்க வேண்டும் என்றும், கால­வ­ரம்பு ஒன்றை நிர்­ண­யித்து, வாக்­கு­று­திகள் நிறை­வேற்­று­வதை உறுதி செய்ய வேண்டும் என்றும் பர­வ­லான கோரிக்­கைகள் முன்­வைக்­கப்­பட்­டி­ருந்­தன.

ஐ.நா மனித உரி­மைகள் ஆணை­யாளர் கூட தனது அறிக்­கையில் இத்­த­கைய பரிந்­து­ரை­களை முன்­வைத்­தி­ருந்தார்.

ஆனால் ,இலங்கை அர­சாங்கம், ஐ.நாவின் கண்­கா­ணிப்புச் செய­ல­கத்தை இலங்­கையில் அமைப்­ப­தற்கு இணங்க மறுத்­தி­ருக்­கி­றது. கால­வ­ரம்பு நிர்­ண­யித்து வாக்­கு­று­தி­களை நிறை­வேற்­று­வ­தற்கு எதிர்ப்புத் தெரி­வித்­தி­ருக்­கி­றது,

இந்த இரண்டு விட­யங்­க­ளையும், ஜெனீவா தீர்­மா­னத்தில் உள்­ள­டக்க வேண்டும் என்ற கோரிக்­கை­களை தமிழர் தரப்பில் சிலர் முன்­வைக்க முயன்ற போதும், கடைசி வரையில் அது சாத்­தி­யப்­ப­ட­வில்லை.

ஜெனீவா தீர்­மான வரைவில் திருத்­தங்­களைச் செய்ய முயன்றால், இலங்கை அரசும் திருத்­தங்­களை செய்து விடும் என்­பதால், இணை அனு­ச­ரணை நாடுகள் அதில் திருத்­தங்­களை செய்ய விரும்­ப­வில்லை என்றும், அதனால் அந்த நாடு­க­ளுக்கு தாமும் அழுத்­தங்­களைக் கொடுக்­க­வில்லை என்றும் நழு­வ­லான பதிலை அளித்­தி­ருந்தார் கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எம்.ஏ.சுமந்­திரன்.

2015ஆம் ஆண்டு தீர்­மா­னத்தில், கலப்பு விசா­ரணை என்று நேர­டி­யாக குறிப்­பி­டப்­ப­டா­வி­டினும், வெளி­நாட்டு மற்றும் கொமன்வெல்த் நீதி­ப­தி­களை உள்ளடக்கிய விசாரணைப் பொறிமுறை என்று கூறப்பட்டுள்ளது கலப்பு விசாரணை தான் என்றும், அதில் விட்டுக்கொடுப்பு செய்யக்கூடாது என்று அமெரிக்காவிடம் வாதிட்டு நிறைவேற்றியதாகவும், சுமந்திரன் அப்போது கூறியிருந்தார்.

ஆனால் ,கலப்பு விசாரணை மாத்திரமன்றி, உள்நாட்டு விசாரணையோ கூட முன்னெடுக்கப்படாத நிலையில், ஒரு காலவரம்பை தீர்மானிக்கும் திருத்தத்தைக் கூட முன்வைக்க முடியாத நிலைக்கு தமிழர் தரப்பு இப்போது தள்ளப்பட்டிருக்கிறது.

தமிழர்களைப் பொறுத்தவரை ஜெனீவா ஒரு பலவீனமான களம் தான். இருந்தும், அங்கு ஏற்கனவே இருந்த பலத்தைக் கூட தமிழர் தரப்பு இப்போது இழந்து வருகிறது. இலங்கை பலமடைந்து கொண்டு வருகிறது என்பதையே, கலப்பு விசாரணையை இலங்கை அரசு துணிச்சலுடன் நிராகரித்ததில் இருந்து உணர முடிகிறது.

தீர்மான வரைவில் திருத்தங்களை செய்ய முடியாத அளவுக்கு தமிழர் தரப்பு கையறு நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது என்பதை ஜெனீவா மீண்டும் உறுதிப்படுத்தியிருக்கிறது.

(கட்டுரை - சுபத்திரா)

  
   Bookmark and Share Seithy.com


இமாலயப் பிரகடனம் யாருக்குச் சேவகம் செய்யும்....? Top News
[Friday 2023-12-29 01:00]

இமாலயப் பிரகடனத்தைச் செய்ததன் மூலம், உலகத் தமிழர் பேரவை புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புகள் மத்தியில் பெருமளவுக்குத் தனிமைப்படுத்தப்பட்டு விட்டது. அந்த அமைப்புடன் இணைந்து மகிந்தவைச் சந்தித்த கனேடியத் தமிழ்க் காங்கிரஸின் சில உறுப்பினர்கள் கனடாவில் கடுமையாக விமர்சிக்கப்படுகின்றார்கள்.


ஏழ்மையைக் கண்டு ஒதுங்குவதும் துன்பத்தைக் கண்டு விலகுவதும் மனித பண்பல்ல என்றனர் ஆன்றோர். Top News
[Friday 2023-09-29 20:00]

எமது தாயகத்திலே அரவணைப்போர் என்று எவரும் இன்றி அனாதரவாகவும் நிற்கதியாகவும் போரின் வடுக்களுக்களைச் சுமந்தவாறும் பொருளாதார வெறுமையில் சிக்கித் தவித்த வாறும் உடலியல் உழவியல் என்ற வகையிலும் சொல்லொணா உபாதைகளுக்கு உள்ளாகி எவரேனும் மனமிரங்கி கை தூக்க வாராரோ எனும் அங்கலாய்ப்புடனும் ஏக்கங்களுடனும் அன்றாடம் துயருற்றிருக்கும் எம் பிறந்த மண் உடன் பிறப்புக்களோ எண்ணற்றவை.


இலங்கையில் சர்வாதிகார சனாதிபதிக்குப் பதிலாக ஒரு கொடுங்கோலன் நியமனம்!
[Saturday 2022-08-27 08:00]

பல ஆண்டுகளாக எண்பித்துக் காட்டியது போல், தற்போதைய அரசியல்வாதிகளுக்கு, வாக்காளர்கள் மற்றும் நாட்டின் நலனில் அக்கறை இல்லை. எவரும் நாட்டை முதன்மைப் படுத்துவதாகத் தெரியவில்லை. சரியான திட்டமிடல் மற்றும் நாட்டை அபிவிருத்தி செய்வதற்கும், அதற்கு ஆதரவான சட்டத்தைக் கொண்டு வருவதற்கும் பதிலாக, இளைஞர்கள் மற்றும் வயதான அரசியல்வாதிகள் திட்டமிட்ட முறையில் இன மற்றும் மதப் பிளவுகளையும் குழுக்களுக்குள் விரோதங்களையும் சுயலாபத்திற்காக திசைதிருப்பும் தந்திரோபாயங்களாக ஊக்குவித்தார்கள்.


அரசியலில் நிரந்தர நண்பர்களும் இல்லை- நிரந்தர எதிரிகளும் இல்லை! - கனடா நக்கீரன்
[Friday 2022-07-22 22:00]

கொடுக்கிற தெய்வம் கூரையைப் பிச்சுக் கொண்டு கொடுக்குமாம். புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் சனாதிபதி இரணில் விக்கிரமசிங்க அவர்களைப் பொறுத்தளவில் வியாழன் பட்டையிலும் வெள்ளி துலாவிலும் இருக்கின்றன.


13வது திருத்த சட்டம் யாருக்கு தேவை? ச. வி. கிருபாகரன், பிரான்ஸ்
[Saturday 2022-01-29 18:00]

மிக அண்மையில் ஓர் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற காணோளியை பார்வையிட்டடேன். அதில் ஓரு பேச்சாளர், ‘யார் மக்களின் சமூக பொருளதார நலன்களில் அக்கறை கொண்டவர்களென்ற’வினாவை முன்வைத்து உரையாற்றினார். இவரின் உரையின் பிரகாரம், அரசியல்வாதிகள் என்பவர்கள் தினமும் தமது அடுத்த தேர்தலை பற்றிய சிந்தனை கொண்டவர்ளே தவிர, மக்களின் நலன்களிலோ எதிர்காலத்திலோ அக்கறை கொண்டவர்கள் அல்ல என்ற விடயத்தை முன்வைத்தார்.


‘ரொறோண்டோ சமர்’ | பின்னடி விமர்சனம்!
[Tuesday 2021-11-23 13:00]

கடந்த சனியன்று (நவம்பர் 20) ரொறோண்டோவில் நடைபெற்ற சுமந்திரனெதிர்ப்புப் போராட்டம் இப்போது ஒரு உலக சமாச்சாரம். விடுதலைப் புலி ஆதரவாளர்களையும், பொதுவாக ஈழத்தமிழர் சமூகத்தையும் நகைப்பிற்கிடமாக்கிய இச் சம்பவம் ஒருவகையில் இலங்கையில் அரசியல் தீர்வொன்றுக்காகப் போராடிவரும் சக்திகளுக்கு வெற்றியைத் தேடித் தந்திருக்கிறது.


யாழ்-உதயன் பத்திரிகையின் ஞாயிறு பதிப்பில் வெளிவந்த பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களது செவ்வி.
[Wednesday 2021-09-22 18:00]

"ஐ.நா மனித உரிமைச்சபை ஆணையாளரின் அறிக்கை ஏமாற்றத்தை தந்துள்ளது." எம்மைப் பொறுத்தவரை விடுதலைப்புலிகள் போர்குற்றம் புரியவில்லை என்பதனை நிருபிக்க நாங்கள் தயாராக இருப்பதோடு, சிறிலங்கா இனப்படுகொலையினை புரிந்த அரசு என்பதனையும் நிருபிக்க தயாராகவுள்ளோம்.”— பிரதமர் வி.உருத்திரகுமாரன்JAFFNA,


இலங்கை தமிழ் வானொலிகளின் இன்றையபோக்கு: -சிறிமதன்
[Thursday 2021-03-18 19:00]

தெற்காசியாவிலேயே மிகவும் புகழ்பெற்ற வானொலி சேவை இலங்கையில் தான் அன்று இருந்தது. தொலைக்காட்சி ஊடகம் தொடங்கப்படாத காலம் அது. வேறு எந்த கேளிக்கை மாசும் மனதில் படியாத வசந்த காலம் அது. அப்போது தமிழ் ரசிகர்கள் மனங்களில் முழுக்க முழுக்க ஆக்கிரமித்திருந்தது இலங்கை வானொலி ஒன்றுதான்.


இன அழிப்பின் உயிர்வாழும் ஆதாரங்கள்
[Monday 2020-10-19 21:00]

வைத்தியர் சி. யமுனானந்தா

செம்மொழி எனப் போற்றப்படும் தமிழ் மொழியின் சொந்தக்காரர்கள் வரலாற்றுக்காலம் முழுவதும் அந்நியரால்அழிக்கப்பட்டு வந்தனர். ஆனால், தமிழ் மொழியின் செழுமையோ அதன் பண்பாட்டுப் பரிமானமோ மாறாது இயற்கை உற்பவம் காத்து வந்தது. அவ்வாறே 2009இல் ஏற்பட்ட அழிவுகளையும் தமிழ் மக்கள் எதிர்கொள்ளத் தலைப்பட்டனர்.


முத்தையா முரளிதரனை நாம் அவரது வர்க்க குணாம்சத்தை வைத்தே அளவிட வேண்டும்:
[Sunday 2020-10-18 14:00]

முத்தையா முரளிதரனுடைய வாழ்க்கை வரலாற்றை படமாக்கப்படுவது தொடர்பாகவும் அதில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பது தொடர்பாகவும் கடந்த சில நாட்களாக இடம்பெற்றுவரும் வாதப் பிரதிவாதங்களை அவதானித்த பின்னர் சில குறிப்புகளை எழுதலாம் என்று எனக்குத் தோன்றுகிறது.


Logan-Kumaresh-Homelife-02-02-2021
Ambikajewellers-01-08-2021-seithy
Airlinktravel-2020-01-01
Kugeenthiran-200-2022-seithy
Karan Remax-2010
NKS-Ketha-04-11-2021
Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
Asayan-Salon-2022-seithy
Mahesan-Remax-169515-Seithy
Rajeef sebarasha 2023/04/19
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா