கனடாவின் புதிய பிரதமர் Mark Carney. | Seithy.com - 24 Hours Tamil News Service, World's largest daily tamil news,tamil breaking news,tamilclassifieds,tamil entertainment, srilanka, tamilnadu, tamileelam | www.seithy.com
 Untitled Document
March 31, 2025 [GMT]

கனடாவின் புதிய பிரதமர் Mark Carney.
[Monday 2025-03-10 22:00]

இன்று நடைபெற்ற Liberal கட்சியின் தலைமைக்கான தேர்தலில் வெற்றி பெற்று Liberal கட்சித் தலைவராக தெரிவான Mark Carney கனடாவின் புதிய பிரதமராகவும் நியமிக்கப்படுகின்றார். கனேடிய பிரதமர் Justin Trudeau வின் பதவி விலகலுக்கும் இவருக்கும் இடையில் நெருக்கமான தொடர்புகள் இருக்கின்றன. சரிவடைந்துள்ள கனேடிய பெருளாதாரத்தை துக்கி நிறுத்துவார் என்ற நம்பிக்கையுடன் கனேடிய அரசியலுக்குள் வலிந்து அழைத்துவரப்பட்டவர் Mark Carney.


  

அவரை அழைத்து வந்ததில் மிக முக்கியமானவர் கனேடியப் பிரதமர் Justin Trudeau.

முன்னதாக இவரை நிதியமைச்சராக நியமிப்பதற்கு் முன்னாள் பிரதமர் Stephan Harper அவர்களும் தனது ஆட்சிக்காலத்தில் முயற்சித்திருந்தார். எனினும் Carney அதனை நிராகரித்துவிட்டார்.

தற்போதைய Liberal அரசின் நிதி அமைச்சராகவும் துணைப் பிரதமராகவும் விளங்கிய Chrystia Freelandஅவர்களுக்கு பதிலாக Mark Carney யை நிதி அமைச்சராக நியமிக்கும் பிரதமர் Justin Trudeau வின் தீர்மானமே Chrystia Freelandபதவி விலகுவதற்கு காரணமாக அமைந்திருந்து.

அதன் தொடர்சியாக லிபரல் கட்சிக்குள் எழுந்த எதிர்பினால் கட்சி தலைமையில் இருந்து விலகுவதான ஒரு முடிவினை எடுக்கும் நிலைக்குள் Justin Trudeau தள்ளப்பட்டார்.

Justin Trudeau வின் பதவி விலகல் அறிவிப்பு லிபரல் கட்சியை மேலும் நலிவடையச் செய்திருக்கின்றது.

எனினும் Mark Carney இன் தெரிவு Liberal களுக்கு நம்பிக்கையறிக்கும்.

Conservative மற்றும் Liberal அரசுகளால் நிதி அமைச்சராகுமாறு கோரப்பட்டவர் இப்போது பிரதமராகின்றார்.

கனடாவின் புதிய பிரதமர் Mark Carney குறித்த சில குறிப்புகள். கனேடிய பொருளாதாரம் சரிவினை சந்தித்த 2008ம் ஆண்டு முதல் 2013ம் ஆண்டு வரை கனேடிய மத்திய வங்கி ஆளுனராகவும் அதனை தொடர்ந்து 2013ம் ஆண்டு முதல் 2020ம் ஆண்டு வரை இங்கிலாந்து மத்திய வங்கியின் ஆளுநராகவும் Mark Carney செயல்பட்டிருந்தார்.

இரண்டு நாடுகளின் கடுமையான பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்ட அனுபவம் கனடாவை தற்போதைய நெருக்கடி நிலையிலட் இருந்து மீட்பதற்கு உதவும் என Mark Carney கூறியுள்ளார்.

அரசியல் அனுபவம் இல்லாத ஒருவர் பொருளாதார அறிவு மற்றும் அனுபவத்துடன் நெருக்கடியான நிலையில் உள்ள நாட்டை வழிநடத்த முடியுமா என்ற கேள்வி பலராலும் எழுப்பப்படுனின்றது.

கனடாவின் Northwest இல் 1965 ஆண்டு மார்ச் மாதம் 16ம் திகதி Mark Carney பிறந்தார்.

அவருடைய தந்தை உயர் நிலைப் பாடாசலையின் அதிபர் தாயரார் ஒரு குடும்பத் தலைவி. 1980ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் லிபரல் கட்சியின் சார்பில் Mark Carneyஇன் தந்தையார் Robert James Martin Carney போட்டியிட்ட போதிலும் அவர் அதில் வெற்றிபெறவில்லை.

6 வயதில் Alberta மாகணத்தின் Edmonton நகருக்கு அவருடைய குடும்பம் குடிபெயர்ந்தது.

அங்கு தனது கல்வியை தொடர்ந்த Mark Carney தனது சிறப்பான அறிவாற்றலால்உலகின் முதல்நிலை பல்கலைக்கழகங்களில் ஒன்றாக கருதப்படும் Harvard பல்கலைக்கழகத்தில் தனது கல்வியை தொடர்வதற்கான புலமைப்பரிசீலனை பெற்று அங்கு பொருளாதாரத் துறையில் தனது பட்டப் படிப்பினை அதி விசேட சித்தியுடன் நிறைவு செய்தார்.

அதன் பின்னர் இங்கிலாந்தின் மிக முக்கிய பல்கலைக்கழகமான Oxford பல்கலைக்கழகத்தின் பட்ட மேற்படிப்பனை அவர் பூர்த்தி செய்தார்.

அமெரிக்காவின் பல்தேசிய முதலீட்டு வங்கியான The Goldman Sach ற்காக Boston, London, New York City, Tokyo, Toronto ஆகிய நகரங்களில் 13 ஆண்டுகள் பணியாற்றினார்.

2003ம் ஆண்டு கனேடிய மத்திய வங்கயின் துணை ஆளுனராக அவர் நியமிக்கப்பட்டார்.

2004ம் ஆண்டு முல் 2007ம் ஆண்டு வரை கனடாவின் நிதி அமைச்சின் முக்கியமான பதவிகளின் ஒன்றாக கருதப்படும் சிரேஸ்ட்ட இணை அமைச்சர் பதவியினை Mark Carney வகித்தார். இரண்டு அரசாங்கங்களின் நிதி அமைச்சர்களோடு பணியாற்றி சிறப்பு அனுபவம் Mark Carney அவர்களுக்கு இந்த காலப்பகுதியில் கிடைத்திருந்தது.

Liberal,அரசாங்கத்தின் நிதி அமைச்சராக விளங்கிய Ralph Goodale, அவர்களுடனும் அதனை தொடர்ந்து உருவான Conservative அரசாங்கத்தின் நிதி அமைச்சரான Jim Flaherty அவர்களுடனும் Mark Carney பணியாற்றியுள்ளார்.

2007 ம் ஆண்டு கனேடிய மத்திய வங்கியின் ஆளுனராக Mark Carney நியமிக்கப்பட்டார்.

உலகம் மிக மோசமான பொருளாதார நெருக்கடியினை சந்தித்துக் கொண்டிருந்த 2007ம் ஆண்டு காலப் பகுதியில் கனேடிய மத்திய வங்கியின் ஆளுனராக பதவி ஏற்ற Mark Carney உலகின் முன்னணிப் பொளுராதாரமாக விளங்கிய G8 மற்றம் G20 நாடுகளின் மத்திய வங்கி ஆளுனர்களின் மகிவும் வயது குறைந்த ஆளுனர் என்ற பெருமையினையும் தனதாக்கினார்.

அவருடை தீர்க்கமான பொருளாதார கொள்கைகள் மற்றும் பொருளாதார அறிவினால் உலகிழன் மிக முக்கிய பொருளாதார நிபுணராக அவர் கருதப்பட்டார்.

பல முக்கிய பதவிகளையும் அவர் அலங்கரித்தார்.

2012ம் ஆண்டு இங்கலாந்து மத்திய வங்கியின் ஆளுனராக பெயரிடப்பட்ட Mark Carney 2013அண்டு தனது கடமைகளை பொறுப்பேற்றார்.

இங்கிலாந்து பொருளாதாரத்திலும் வங்கித்துறையில் கணிசமான மாற்றங்களை Mark Carneyஅறிமுகப்படுத்தினார். இதன் மூலம் இங்கிலாந்தின் பொருளாதாரத்தை மீளுக் கட்டியெழுப்பினார்.

ஐரோப்பிய ஒன்றியித்தில் இருந்து வெளியேறும் இங்கிலாந்தின் தீர்மான்தை கடுமையாக விமர்சித்த Mark Carneyஇது இங்கிலாந்தின் பொருளாதாரத்தில் பாதகமான விளைவுகளை எநற்படுத்தும் என்றும் எச்சரித்திருந்தார்.

2020ம் ஆண்டு இங்கிலாந்து மத்திய வங்கி ஆளுனர் பதவியில் இருந்து அவர் வெளியேறினார்.

2020ம் ஆண்டு Brookfield Asset Management நிறுவனத்தின் துணைத் தலவைராக அவர் அறிவிக்கப்பட்டார். உலகின் முன்னணி பங்கு பரிவர்தனை நிறுவனமான Brookfield Asset Management சுமார் ஒரு ட்ரில்லியன்(One Trillion) மதிப்பு மிக்க நிறுவனமாக கணிப்பிடப்பட்டுள்ளது.

கனேடிய அரசாங்கத்தின் கார்பன் வரி மற்றும் சுற்றுச் கூழல் பாதுகாப்பு நடவடிக்கைகளின் பின்னணியில் Mark Carney இன் பங்களிப்பு அதிகம் என்றும் எதிர்க்கட்சிகளால் கருத்து வெளியிடப்பட்டிருந்தது.

20024ம் ஆண்டு கனேடிய பிரதமரின் நிதி ஆலோசகராக Mark Carney அறிவிக்கப்பட்டார்.

ஒரு பெரு நிறுவனத்தின் பணிப்பாளர் சபைத் தலைவராக உள்ள ஒருவர் பிரதமரின் நிதி ஆலோசகராக நியமிக்கப்படுவது வரைமுறை நியதிகளுக்கு எதிரானது என எதிர்கட்சியினால் விமர்சனம் முன்வைக்கப்பட்டது.

அவரது நிறுவனத்தை நோக்கி ஆரசாங்கத்தின் நிதி முதலீட்டை அவர் ஊக்குவிப்பதான குற்றச்சாட்டும் அவர் மீது சுமத்தப்பட்டிருந்தது.

அவரை நிதி அமைச்சராக நியமிப்பதற்கு பிரதமர் மேற்கொண்ட முயற்சியினால் அதிருப்தி அடைந்த Chrystia Freelandஅமைச்சு பதவிகளில் இருந்து விலகும் தீர்மானத்தை அறிவித்தார்.

லிபரல் கட்சி தலைமைக்கான போட்டியில் கலந்து கொள்வதற்கான அந்த நிறுவனத்தில் இருந்துMark Carney விலகுவதாக அறிவித்தார். இன்று Liberal கட்சியின் தலைமையை வெற்றி கொண்டது போல் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலை Mark Carney வெற்றி கொள்வாரா என்பதே தற்போதுள்ள மிகப் பெரிய கேள்வி.

பலவீனமான நிலையில் இருந்த Liberal கட்சிக்கு இவரின் வருகை நம்பிக்கையளித்தாலும் சாதாரண மக்கள் மனங்களை வெல்வதற்கு இவர் என்ன செய்யப் போகின்றார் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

நன்றி-Ramanan Santhirasegaramoorthy,Toronto-

  
   Bookmark and Share Seithy.com


இமாலயப் பிரகடனம் யாருக்குச் சேவகம் செய்யும்....? Top News
[Friday 2023-12-29 01:00]

இமாலயப் பிரகடனத்தைச் செய்ததன் மூலம், உலகத் தமிழர் பேரவை புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புகள் மத்தியில் பெருமளவுக்குத் தனிமைப்படுத்தப்பட்டு விட்டது. அந்த அமைப்புடன் இணைந்து மகிந்தவைச் சந்தித்த கனேடியத் தமிழ்க் காங்கிரஸின் சில உறுப்பினர்கள் கனடாவில் கடுமையாக விமர்சிக்கப்படுகின்றார்கள்.


ஏழ்மையைக் கண்டு ஒதுங்குவதும் துன்பத்தைக் கண்டு விலகுவதும் மனித பண்பல்ல என்றனர் ஆன்றோர். Top News
[Friday 2023-09-29 20:00]

எமது தாயகத்திலே அரவணைப்போர் என்று எவரும் இன்றி அனாதரவாகவும் நிற்கதியாகவும் போரின் வடுக்களுக்களைச் சுமந்தவாறும் பொருளாதார வெறுமையில் சிக்கித் தவித்த வாறும் உடலியல் உழவியல் என்ற வகையிலும் சொல்லொணா உபாதைகளுக்கு உள்ளாகி எவரேனும் மனமிரங்கி கை தூக்க வாராரோ எனும் அங்கலாய்ப்புடனும் ஏக்கங்களுடனும் அன்றாடம் துயருற்றிருக்கும் எம் பிறந்த மண் உடன் பிறப்புக்களோ எண்ணற்றவை.


இலங்கையில் சர்வாதிகார சனாதிபதிக்குப் பதிலாக ஒரு கொடுங்கோலன் நியமனம்!
[Saturday 2022-08-27 08:00]

பல ஆண்டுகளாக எண்பித்துக் காட்டியது போல், தற்போதைய அரசியல்வாதிகளுக்கு, வாக்காளர்கள் மற்றும் நாட்டின் நலனில் அக்கறை இல்லை. எவரும் நாட்டை முதன்மைப் படுத்துவதாகத் தெரியவில்லை. சரியான திட்டமிடல் மற்றும் நாட்டை அபிவிருத்தி செய்வதற்கும், அதற்கு ஆதரவான சட்டத்தைக் கொண்டு வருவதற்கும் பதிலாக, இளைஞர்கள் மற்றும் வயதான அரசியல்வாதிகள் திட்டமிட்ட முறையில் இன மற்றும் மதப் பிளவுகளையும் குழுக்களுக்குள் விரோதங்களையும் சுயலாபத்திற்காக திசைதிருப்பும் தந்திரோபாயங்களாக ஊக்குவித்தார்கள்.


அரசியலில் நிரந்தர நண்பர்களும் இல்லை- நிரந்தர எதிரிகளும் இல்லை! - கனடா நக்கீரன்
[Friday 2022-07-22 22:00]

கொடுக்கிற தெய்வம் கூரையைப் பிச்சுக் கொண்டு கொடுக்குமாம். புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் சனாதிபதி இரணில் விக்கிரமசிங்க அவர்களைப் பொறுத்தளவில் வியாழன் பட்டையிலும் வெள்ளி துலாவிலும் இருக்கின்றன.


13வது திருத்த சட்டம் யாருக்கு தேவை? ச. வி. கிருபாகரன், பிரான்ஸ்
[Saturday 2022-01-29 18:00]

மிக அண்மையில் ஓர் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற காணோளியை பார்வையிட்டடேன். அதில் ஓரு பேச்சாளர், ‘யார் மக்களின் சமூக பொருளதார நலன்களில் அக்கறை கொண்டவர்களென்ற’வினாவை முன்வைத்து உரையாற்றினார். இவரின் உரையின் பிரகாரம், அரசியல்வாதிகள் என்பவர்கள் தினமும் தமது அடுத்த தேர்தலை பற்றிய சிந்தனை கொண்டவர்ளே தவிர, மக்களின் நலன்களிலோ எதிர்காலத்திலோ அக்கறை கொண்டவர்கள் அல்ல என்ற விடயத்தை முன்வைத்தார்.


‘ரொறோண்டோ சமர்’ | பின்னடி விமர்சனம்!
[Tuesday 2021-11-23 13:00]

கடந்த சனியன்று (நவம்பர் 20) ரொறோண்டோவில் நடைபெற்ற சுமந்திரனெதிர்ப்புப் போராட்டம் இப்போது ஒரு உலக சமாச்சாரம். விடுதலைப் புலி ஆதரவாளர்களையும், பொதுவாக ஈழத்தமிழர் சமூகத்தையும் நகைப்பிற்கிடமாக்கிய இச் சம்பவம் ஒருவகையில் இலங்கையில் அரசியல் தீர்வொன்றுக்காகப் போராடிவரும் சக்திகளுக்கு வெற்றியைத் தேடித் தந்திருக்கிறது.


யாழ்-உதயன் பத்திரிகையின் ஞாயிறு பதிப்பில் வெளிவந்த பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களது செவ்வி.
[Wednesday 2021-09-22 18:00]

"ஐ.நா மனித உரிமைச்சபை ஆணையாளரின் அறிக்கை ஏமாற்றத்தை தந்துள்ளது." எம்மைப் பொறுத்தவரை விடுதலைப்புலிகள் போர்குற்றம் புரியவில்லை என்பதனை நிருபிக்க நாங்கள் தயாராக இருப்பதோடு, சிறிலங்கா இனப்படுகொலையினை புரிந்த அரசு என்பதனையும் நிருபிக்க தயாராகவுள்ளோம்.”— பிரதமர் வி.உருத்திரகுமாரன்JAFFNA,


இலங்கை தமிழ் வானொலிகளின் இன்றையபோக்கு: -சிறிமதன்
[Thursday 2021-03-18 19:00]

தெற்காசியாவிலேயே மிகவும் புகழ்பெற்ற வானொலி சேவை இலங்கையில் தான் அன்று இருந்தது. தொலைக்காட்சி ஊடகம் தொடங்கப்படாத காலம் அது. வேறு எந்த கேளிக்கை மாசும் மனதில் படியாத வசந்த காலம் அது. அப்போது தமிழ் ரசிகர்கள் மனங்களில் முழுக்க முழுக்க ஆக்கிரமித்திருந்தது இலங்கை வானொலி ஒன்றுதான்.


இன அழிப்பின் உயிர்வாழும் ஆதாரங்கள்
[Monday 2020-10-19 21:00]

வைத்தியர் சி. யமுனானந்தா

செம்மொழி எனப் போற்றப்படும் தமிழ் மொழியின் சொந்தக்காரர்கள் வரலாற்றுக்காலம் முழுவதும் அந்நியரால்அழிக்கப்பட்டு வந்தனர். ஆனால், தமிழ் மொழியின் செழுமையோ அதன் பண்பாட்டுப் பரிமானமோ மாறாது இயற்கை உற்பவம் காத்து வந்தது. அவ்வாறே 2009இல் ஏற்பட்ட அழிவுகளையும் தமிழ் மக்கள் எதிர்கொள்ளத் தலைப்பட்டனர்.


முத்தையா முரளிதரனை நாம் அவரது வர்க்க குணாம்சத்தை வைத்தே அளவிட வேண்டும்:
[Sunday 2020-10-18 14:00]

முத்தையா முரளிதரனுடைய வாழ்க்கை வரலாற்றை படமாக்கப்படுவது தொடர்பாகவும் அதில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பது தொடர்பாகவும் கடந்த சில நாட்களாக இடம்பெற்றுவரும் வாதப் பிரதிவாதங்களை அவதானித்த பின்னர் சில குறிப்புகளை எழுதலாம் என்று எனக்குத் தோன்றுகிறது.


Airlinktravel-2020-01-01
Latika-Gold-House-2025
 gloriousprinters.com 2021
Rajeef sebarasha 2023/04/19
Asayan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா