Untitled Document
September 13, 2024 [GMT]
எண்ணெய் வடியும் சருமமா? கற்றாழையை இப்படி பயன்படுத்துங்க!
[Friday 2024-08-23 18:00]

நாம் சருமம் அழகாக இருப்பதற்கு பல முறைகளில் முயற்சி செய்கிறோம். இது உடல் ஆரோக்கியத்தில் பங்களிப்பு செய்வது குறைவு. இதனடிப்படையில் பலர் இயற்கையாக இருக்கும் அழகுசாதப்பொருட்களை தேடுவது குறைவது அப்படியான பொருட்களில் ஒன்று தான் கற்றாழை. இந்த ஜெல் வெயிலில் எரிந்த சருமத்தை குணப்படுத்தவும் உதவுகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது மற்றும் காயங்களை விரைவாக குணப்படுத்த உதவுகிறது. இதில் அழகிற்கு தேவையான அனைத்து சத்துக்களும் கிடைக்கிறது.

நாம் சருமம் அழகாக இருப்பதற்கு பல முறைகளில் முயற்சி செய்கிறோம். இது உடல் ஆரோக்கியத்தில் பங்களிப்பு செய்வது குறைவு. இதனடிப்படையில் பலர் இயற்கையாக இருக்கும் அழகுசாதப்பொருட்களை தேடுவது குறைவது அப்படியான பொருட்களில் ஒன்று தான் கற்றாழை. இந்த ஜெல் வெயிலில் எரிந்த சருமத்தை குணப்படுத்தவும் உதவுகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது மற்றும் காயங்களை விரைவாக குணப்படுத்த உதவுகிறது. இதில் அழகிற்கு தேவையான அனைத்து சத்துக்களும் கிடைக்கிறது.

  

இது சருமம் கூந்தல் என அனைத்திற்கும் நல்லதொரு ஆற்றலை வழங்கும். அந்த வகையில் எண்ணெய் சருமம் உள்ளவர்களுக்கு கற்றாழையை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

ஒவ்வொருவருக்கும் சருமம் ஒவ்வொரு விதமாக இருக்கும். சிலருக்கு சருமம் எண்ணெய் தன்மை வாய்ந்ததாக இருக்கும். இதற்கு கற்றாழை முழு தீர்வு தரும். இந்த கற்றாழையை வைத்து செய்யப்படும் ஃபேஸ் மாஸ்க், எண்ணெய் பசை சருமத்தில் சிறப்பாக வேலை செய்வதுடன், துளைகளை அடைத்து முகப்பருவை தடுக்கவும் உதவுகிறது.

தேவையான பொருட்கள்

கற்றாழை- 2 டீஸ்பூன்

எலுமிச்சை சாறு- 5, 6 சொட்டுகள்

முகத்தை நன்றாக கழுவிய பின்னர் ஒரு சுத்தமான துணி கொண்டு துடைத்து எடுக்க வேண்டும். ஒரு கிண்ணத்தில் கற்றாழை ஜெல், எலுமிச்சை சாற்றை நன்கு கலந்து சுத்தமான முகம் மற்றும் கழுத்தில் தாராளமாக தடவவும்.

தோல் இறுக்கமாக உணரத் தொடங்கும் வரை அதை முழுமையாக உலர விடவும். பின்னர் முகத்தை ஈரளிப்பாக வைத்து விட்டு கொஞ்சம் மசாஜ் செய்து சாதாரண தண்ணீரில் கழுவ வேண்டும்.

இப்படி வாரம் மூன்று முறை செய்தால் முகம் பளிச்சென்று வரும். எலுமிச்சை வைட்டமின் சி இன் இயற்கையான மூலமாகும் மற்றும் பருக்களை எதிர்த்துப் போராடுவதற்கும், பளபளப்பான சரும நிறத்தை அளிக்கும் அஸ்ட்ரிஜென்ட் பண்புகளைக் கொண்டுள்ளது.

கற்றாழை சருமத்திற்கு நன்மை செய்யும் பல பண்புகளைக் கொண்டுள்ளது, இது பாக்டீரியாவை எதிர்த்துப் போராடுகிறது மற்றும் ஆரோக்கியமான சருமத்தை பராமரிக்க உதவுகிறது. இதனால் சருமத்தில் எண்ணெய் வடியும் பிரச்சனை இல்லாமல் போவதுடன் சருமம் பளபளப்பாகவும் இருக்கும்.

  
   Bookmark and Share Seithy.com



பளபளக்கும் வெள்ளை பற்கள் வேண்டுமா? - எழிய வழிமுறைகள்!
[Wednesday 2024-09-11 18:00]

ஒருவரின் ஆளுமை அழகை வெளிக்காட்டுவது வெள்ளை மற்றும் பளபளப்பான பற்கள் ஆகும். முத்துக்களைப் போலப் பிரகாசிக்கும் பற்கள் இருந்தால் ஈர்க்க முடியும். அதே சமயம் மஞ்சள் மற்றும் அழுக்கு படிந்த பற்களால் பல சங்கடங்களைச் சந்திக்க நேரிடலாம். பற்கள் சுத்தமாக இல்லாவிட்டால், வெளிப்படையாக வாய்விட்டுச் சிரிக்க கூட முடியாது. இதற்கு காரணம் குட்கா மற்றும் வெற்றிலை உட்கொள்வது, புகைபிடித்தல், மோசமான வாய் பராமரிப்பு அல்லது தவறான உணவு முறை போன்ற பல காரணங்களாகும்.



கெட்ட கொலஸ்டராலை வெளியேற்ற உதவும் உணவுகள்!
[Tuesday 2024-09-10 18:00]

பொதுவாக மனித ஆரோக்கியத்தில் இதயம் முக்கிய இடம் பிடிக்கிறது. இதயம் சீராக இயங்க வேண்டுமெனின் உடலில் இருக்கும் கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்த வேண்டியது அவசியம். எல்.டி.எல் எனப்படும் உயர் கொழுப்பு அல்லது கெட்ட கொழுப்பு, மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்ற கடுமையான இதய நோய்களை ஏற்படுத்தும். இவற்றை தடுப்பதற்கு மருந்து வில்லைகளை எடுத்து கொள்வதை விட நல்ல கொலஸ்ரோல் அடங்கிய உணவுகளை கொண்டு கெட்ட கொலஸ்ரோலை இல்லாமாக்குவது சிறந்த அணுகுமுறையாகும்.



ரத்த புற்றுநோயை குணமாக்கும் அருகம் புல் ஜூஸ்!
[Monday 2024-09-09 17:00]

பொதுவாக நம் உடல் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவும் பழக்கங்களில் முறையான உணவு பழக்கங்களும் ஒன்று. உணவு பழக்கங்கள் சீராக இருக்கும் பட்சத்தில் நோயின் தாக்கம் குறைவாக இருக்கும். முந்தைய காலத்திலுள்ள மக்கள் ஏதாவது தீராத நோய்கள் வந்தால் மாத்திரமே மருத்துவமனைக்கு செல்வார்களாம். நமது சூழலில் இருக்கும் காய்கறிகள் மற்றும் மூலிகைகளை வைத்து சில நோய்களை முழுமையான குணப்படுத்தியுள்ளார்களாம்.



நாவூறும் சுவையில் தேங்காய் மசாலா மீன் குழம்பு!
[Sunday 2024-09-08 17:00]

எப்போதும் உணவென்றால் சுவை நிறைந்ததாகவும் சத்துள்ளதாகவும் செய்ய வேண்டும். இதில் பல நாட்டு உணவுகள் முக்கியத்துவம் பெறுகின்றன. இந்த உணவுகளை நாம் வீட்டில் செய்து சாப்பிடும் போது ஆரோக்கியம் அதிகமாகும். அந்த வகையில் எல்லோரது வீட்டிலும் மீன் குழம்பு என்பது இருக்கும். வாரத்தில் மூன்று நாட்களாவது மீன் குழம்பு வைப்பது ஒரு பழக்கமாக இருந்து வருகின்றது. மீன் குழம்கு என சொன்னால் அதில் பல வகையில் செய்வார்கள். மீன் குழம்பு பொதுவாக மசாலா அரைத்து வைக்கப்படும். இது ஒவ்வொரு இடத்திற்கு தகுந்ததை போல வைப்பார்கள். அந்த வகையில் கேரளா சுவையில் தேங்காய் மசாலா மீன்குழம்பு எப்படி செய்யலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.



சிறுநீரக நச்சுக்களை இல்லாமல் செய்யும் பழங்கள்!
[Saturday 2024-09-07 16:00]

சிறுநீரகத்தை சுத்தம் செய்ய நாம் சாப்பிடும் உணவுப்பொருட்களே முக்கியம் பெறுகின்றது. இதன் மூலம் இந்த சிறுநீரகத்தை நாம் சாப்பிடும் பழங்கழை வைத்தே சுத்தம் செய்யலாம். சிறுநீரகம் நமது உடலில் மிக முக்கியமான பகுதியாகும். ஏனெனில் சிறுநீரகம் நம் உடலில் நச்சுக்களை சுத்தம் செய்யும் வடிகட்டியாக செயல்படுகிறது. அப்படி கழிவு நீக்கம் செய்யும் நச்சுகளை சிறுநீர் மூலம் வெளியேற்றுகிறது.இதன் செயற்பாடு உடலில் சரிவர நடக்கவில்லை என்றால் உடல் பல பிரச்சனைகளுக்கு உள்ளாகும். அந்த வகையில் அது என்னென்ன பழங்கள் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.



விநாயகர் சதுர்த்துக்கு வித்தியாசமான பூரண் போலி எப்படி செய்யலாம்?
[Friday 2024-09-06 18:00]

விநாயகர் சதுர்த்தி இந்தாண்டு 2024 செப்டம்பர் 7ம் தேதி கொண்டாடப்படுகிறது. இது இந்து மக்களிடையே கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்று. இந்த பண்டிகை விநாயகருக்க்காக கொண்டாடப்படுகிறது. விநாயகர் வாழ்வில் தோன்றும் தடைகளை இல்லாமல் செய்பவராக கருதப்படுகிறார். இவர் செல்வம் மற்றும் ஞானத்தின் கடவுளாகவும் பார்க்கப்படுகிறார். எனவே தான் இந்த நாள் விநாயகரின் பிறந்த நாளாக குறிக்கப்படுகிறது. இது நாடு முழுவதும் வெகுவிமரிசையாகக் கொண்டாப்படும். இதற்காக தான் இங்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படும். விநாயகப் பெருமானுக்கு படைக்கப்படும் உணவுகளில் முக்கியமானது கொழுக்கட்டை.



கிராமத்து சுவையில் மணக்க மணக்க எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு!
[Thursday 2024-09-05 18:00]

நாம் வீட்டில் விழாக்களின் போது பல வகையான உணவுகளை செய்து உண்பது வழக்கம். ஒவ்வொரு நாளும் சமைப்பதை விட இந்த விழா காலங்களில் மட்டும் நாம் ஒரு விதவிதமாகவும் சுவையாகவும் சமைப்போம். கத்தரிக்காய் நம் அனைவருக்கும் பிடித்த ஒரு காய் கறியாகும். இதில் சாம்பார், கூட்டு, பொரியல், புளிக்குழம்பு, பிரியாணிக்கான தொக்கு என பல வகையாக செய்வார்கள். இதில் மெக்னீசியம், மேங்கனீஸ், பொட்டாசியம் மற்றும் காப்பர் சத்துக்கள் நிறைவாக உள்ளன. இவை அனைத்தும் நம் எலும்புகளை வலுப்படுத்தும் மற்றும் எலும்புகளில் உள்ள அடர்த்தியை மேம்படுத்தும்.



விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்: அரிசி பருப்பு மோதகத்தை இந்த பாணியில் செய்து அசத்துங்க!
[Wednesday 2024-09-04 19:00]

பொதுவாகவே விநாயகர் சதுர்த்தியானது விநாயகரின் பிறந்தநாளாக இந்துக்களால் வெகு விமர்சையாக கொண்டாடப்படுகின்றது. இந்த சிறப்பு மிக்க நாளில் விநாயகருக்கு விசேடமாக பிரசாதங்களை செய்து வீடுகளில் சிறப்பு பூஜை செய்து வழிப்பட்டால் சகல செல்வங்களுகம் ஐஸ்வர்யங்களும் நிறைவாக கிடைக்கும் என்று நம்பப்படுகின்றது. இந்த வகையில் விநாயகர் சதுர்த்தியை மேலும் சிறப்பாக்க பிள்ளையார்பட்டி ஸ்பெஷல் பாரம்பரிய அரிசி பருப்பு மோதகத்தை செய்து உங்க வீட்டு பூஜைக்கு வருபவர்களுக்கு கொடுத்து அசத்த்துங்கள். இந்த மோதகத்தை எவ்வாறு எளிமையான முறையில் அசத்தல் சுவையில் செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.



வெறும் வயிற்றில் வாழைப்பழம் சாப்பிடலாமா?
[Tuesday 2024-09-03 18:00]

வெறும் வயிற்றில் வாழைப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். வாழைப்பழத்தில் வைட்டமின் சி மற்றும் பி6, ஃபோலேட், மாங்கனீஸ் போன்ற சத்துக்கள் அதிகமாக உள்ள நிலையில், உடம்பிற்கு நன்மை பயக்கும் முக்கிய தாதுக்களும் இதில் அதிகமாக உள்ளது. காலையில் வாழைப்பழம் சாப்பிடுவது உங்களை நீண்ட நேரம் நிறைவாக வைத்திருப்பதுடன், நீண்ட கால ஆற்றல் ஊக்கத்தை உங்களுக்கு வழங்குகின்றது.



நிறைய சாப்பிட்டாலும் உடல் எடையை அதிகரிக்க கூடாதா? இதை செய்தால் போதும்!
[Monday 2024-09-02 19:00]

கடினமாக கஷ்டபட்டு உடல் எடை குறைப்பதற்காக பாடுபடுபவர்களுக்கு உடல் எடை குறையவே குறையாது. அவர்கள் உடற்பயிற்சி செய்வார்கள், டயட்டில் இருப்பார்கள், ஆனால் எடையை குறைப்பது அவ்வளவு சுலபம் இல்லை. ஆனால் சிலருக்கு காரணம் எதுவும் இல்லாமல் உடல் எடை தானாக குறைவடையும், ஆனால் இதற்கான காரணம் யாருக்கும் தெரிவதில்லை. ஆரோக்கியமான முறையில் உடல் எடை குறைப்பது நல்லது, ஆனால் எந்த காரணமும் இல்லாமல் ஆரோக்கியமற்ற எடை இழப்பு ஏன் ஏற்படுகிறது.



மலச்சிக்கலுக்கு தீர்வு கொடுக்கும் முள்ளங்கி குழம்பு!
[Sunday 2024-09-01 18:00]

பல்வேறு வைட்டமின்களும், தாதுக்களும் நிறைந்துள்ள முள்ளங்கி ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் காய்கறிகளுள் முக்கிய இடம் வகிக்கின்றது. முள்ளங்கியில் அதிகளவு உள்ள நார்ச்த்து மற்றும் நீர்ச்சத்து காணப்படுவதால் மலச்சிக்கலுக்கு சிறந்த தெரிவாக காணப்படுகின்றது. செரிமான உறுப்புகளில் உள்ள நச்சுப் பொருட்களை இக்காய் நீக்குவதால் மூலநோய், வாயு தொந்தரவு, மலச்சிக்கல் ஆகியவற்றிற்கு இது சிறந்த தீர்வாக உள்ளது. முள்ளங்கியானது சிறுநீரை நன்கு பெருகச் செய்கிறது. அதனால் சீறுநீரக கல் ஏற்படுவதையும் சிறுநீரக பிரச்சினைகளையும் தடுக்க பெரிதும் உதவுகின்றது. இத்தனை மருத்துவ குணங்கள் கொண்ட முள்ளங்கியை வைத்து அசத்தல் சுவையில் அனைவரும் விரும்பும் வகையில் எவ்வாறு குழம்பு செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.



நாள்பட்ட நோய்களுக்கு மருந்தாகும் கறிவேப்பிலை!
[Saturday 2024-08-31 16:00]

பொதுவாக கறிவேப்பிலை தென்னிந்திய உணவுகளில் முக்கிய பொருளாக சேர்க்கப்படுகின்றது. கறிவேப்பிலையின் மருத்துவ குணங்கள் அறிந்த மக்கள் இதனை தினமும் உணவுடன் சேர்த்து கொள்வார்கள். இதனால் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் நிறைந்துள்ளன. அத்துடன் ஆன்டி இன்ஃபிளமேட்டரி, ஆன்டி மைக்ரோபியல் மற்றும் புற்றுநோய் எதிர்ப்பு போன்ற பண்புகளைக் கொண்டுள்ளது.



இந்த தலைமுறை குழந்தைகள் இளம் வயதிலேயே பருவமடைய என்ன காரணம்?
[Friday 2024-08-30 18:00]

தற்போது இருக்கும் பெண் குழந்தைகள் ஒரு வயதிற்கு வர முன்னரே பருவமடைந்து விடுகிறார்கள். இது தொடர்பான ஆய்வுகளில் தவறான வாழ்க்கை மற்றும் முறையற்ற உணவு பழக்கங்கள் தான் இதற்கு காரணம் கூறப்படுகின்றது. தற்போது உள்ள இளம் தலைமுறையினருக்கு குறைந்த வயதிலேயே மாதவிடாய் வந்து விடுகிறது. 100 -ல் 70 சதவீதமான பெண் பிள்ளைகள் சிறுவயதிலேயே பருவமடைந்து விடுகிறார்கள்.



உடல் எடையைக் குறைக்க உதவும் ஓட்ஸ் இட்லி!
[Thursday 2024-08-29 19:00]

நாம் எல்லோரும் காலை உணவு உண்பது வழக்கம். இதை தவிர்த்தால் உடலில் பல விளைவுகள் உண்டாகும். இதை ஆரோக்கியமாக செய்து சாப்பிட்டால் அது உடலுக்கு இன்னும் பலனை தருகிறது. இதற்காக தான் ஓட் இட்லி பற்றி இந்த பதிவில் பார்க்க போகிறோம்.ஓட்ஸ் என்ற முழுதானிய உணவுகள், சர்வதேச அளவில் பெரும்பாலானோரால், விரும்பி சாப்பிடப்படும் உணவாக உள்ளது. இது கோதுமை போன்றதொரு முழு தானியம் ஆகும்.



தண்ணீர் குடிக்கும் போது செய்யக்கூடாத தவறுகள்!
[Wednesday 2024-08-28 18:00]

தண்ணீர் குடிக்கும் போது நாம் செய்யக்கூடாத சில தவறுகளைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். பொதுவாக மனிதர்களின் ஆரோக்கியத்திற்கு நீர்ச்சத்து மிகவும் அவசியமாகும். நாள் முழுவதும் நீரேற்றத்துடன் இருக்கவும், பல ஆரோக்கிய நன்மைகளை பெறவும், ஒருவர் போதுமான அளவு தண்ணீர் பருக வேண்டும். போதுமான அளவு தண்ணீரை பருகுவது மட்டுமின்றி அதனை சரியான முறையில் குடிப்பது என்பது மிகவும் முக்கியமாகும்.



வெறும் 21 நாட்களில் கருமையான அடர்த்தியான முடிக்கு இந்த இரண்டு இலை போதும்!
[Tuesday 2024-08-27 18:00]

முடி உதிர்வுப்பிரச்சனை என்பது தற்போது வயது வித்தியாசம் இன்றி அனைவருக்கும் இந்த பிரச்சனை இருக்கிறது. இந்த பிரச்சனை வருவதற்கான னாரணம் நமது பழக்க வழக்கம் தான். தொடர்ந்து முடி உதிர்வதால் பெண்கள் மற்றும் ஆண்களின் தலையில் வழுக்கை, சொட்டை விழ ஆரம்பித்துவிடும். வீட்டு வேலை, அலுவலக வேலைகளில் தனக்கென நேரம் கிடைக்காமல் இருக்கும் பெண்கள் மற்றும் ஆண்களுக்கு பல அசௌகரியங்ளை நேர்கொள்ள வேண்டி இருக்கும்.



கிராமத்து பாணியில் அசத்தல் தக்காளி பச்சடி எப்படி செய்வது?
[Monday 2024-08-26 17:00]

பொதுவாகவே இட்லி தேசைக்கு தொட்டுக்கொள்ள அனைவரினதும் முதல் தெரிவு தக்காளி சட்னி தான். தக்காளியில் செய்யப்படும் அனைத்து உணவுகளுமே தனித்துவமான சுவையை பெற்றுவிடும். ஆனால் எப்போதும் தக்காளியை வைத்து சட்னி மற்றும் குழப்பு செய்வது தான் வழக்கம். ஒரு முறை சற்று வித்தியாசமாக குழந்தைகள் முதல் பெரியர்கள் வரையில் அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய தக்காளி பச்சடியை கிராமத்து பாணியில் மிகவும் எளிமையாக எப்படி செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.



சக்கரை நோயாளிகள் பால் குடிக்கலாமா?
[Sunday 2024-08-25 18:00]

பால் நல்ல ஒரு நிறையுணவாகும். இதை பசுமாட்டில் இருந்து எடுப்பார்கள். பாலில் அதிகளவான கால்சியம் நிறைந்துள்ளது. இரத்தத்தில் சர்க்கரை அதிகரிப்பதைத் தடுக்க மருத்துவர்கள் எப்போதும் குறைந்த கொழுப்பு மற்றும் அதிக நார்ச்சத்து போன்ற சமச்சீரான உணவைப் பரிந்துரைக்கிறார்கள். அதிகப்படியான கொழுப்பு தீங்கு விளைவிக்கும் மற்றும் சர்க்கரை நோயாளிகளுக்கு பிரச்சினைகளை ஏற்படுத்தும். பல சர்க்கரை நோயாளிகளுக்கு எலும்பு முறிவு போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது. இதற்கான காரணத்தை மருத்துவர்கள்விளக்குகின்றனர்.



அடிக்கடி கை, கால் மரத்துபோவதற்கு என்ன காரணம்?
[Saturday 2024-08-24 18:00]

நாம் ஒவ்வொரு வேலையையும் செய்வதற்கு நமது உடல் எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பது அவசியம். இப்படி இருப்பதற்கு நாம் சரியான முறையில் உணவு எடுத்துக்கொள்வது முக்கியம். இதை தவிர உடற்பயிற்ச்சிகளில் ஈடுபடுவது அவசியம். ரத்தம் மூலமாகவே உறுப்புகளுக்கு ஆக்சிஜன் மற்றும் தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கிறது. சீரான ரத்த ஓட்டம் கிடைக்காத போது இதயம், சிறுநீரகங்கள் மற்றும் நுரையீரல்கள் போன்றவை பாதிப்புக்கு உள்ளாகிறது. அந்த வகையில் சிலருக்கு அடிக்கடி கால் கை மரத்து போவதற்கு என்ன காரணம் என்பதை பார்க்கலாம்.



வாகைப்பூவின் மருத்துவ குணங்கள் என்னவென்று தெரியுமா?
[Thursday 2024-08-22 16:00]

நமது முன்னோர்கள் பயன்படுத்திய ஒரு வெற்றி மலர் என்றால் அது வாகை மலர் தான். இதை வெற்றியின் சின்னமாக பயன்படுத்தினார்கள். ஆனால் இதில் பல மருத்துவ குணங்களும் நிறைந்துள்ளது. வாகை மரத்தின் அனைத்து பாகங்களும் மூலிகை பயன் கொண்டது. இதில் பூவில் அதிக நன்மை காணப்படுகின்றது. இந்த பூ இளஞ்சிவப்பு நிறத்தில் காணப்படுகின்றது. இந்தியாவில் இரு பரவலாக காணப்படுகின்றது.


Vaheesan-Remax-2016
Karan Remax-2010
Mahesan-Remax-169515-Seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Airlinktravel-2020-01-01
 gloriousprinters.com 2021
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Rajeef sebarasha 2023/04/19
NKS-Ketha-04-11-2021
Kugeenthiran-200-2022-seithy
Asayan-Salon-2022-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா