Untitled Document
April 1, 2025 [GMT]
காய்ந்த நெஞ்சு சளியை அடியோடு வெளியேற்றும் தக்காளி மிளகு ரசம்!
[Sunday 2025-03-09 17:00]

பருவ நிலையில் மாற்றம் வரும் போது தான் நாம் எல்லோரும் பாரம்பரிய உணவின் பக்கம் செல்வோம். இந்த பாரம்பரிய உணவுகளால் மட்டும் தான் உடலில் உள்ள நோய்களை அப்படியே விரட்ட முடியும். பொதுவாக ரசம் என்றால் அதில் பல மூலிகை பொருட்கள் சேர்த்து செய்வார்கள். இதை சாப்பிடவோ அல்லது குடித்தாலோ உடலில் இருக்கும் சளியை அப்படியே வெளியேற்றும். இந்த பதிவில் நாம் இலங்கையின் பாரம்பரியத்தில் செய்யப்படும் காரசாரமான தக்காளி மிளகு  ரசத்தின் செய்முறையை பார்க்கலாம்.

பருவ நிலையில் மாற்றம் வரும் போது தான் நாம் எல்லோரும் பாரம்பரிய உணவின் பக்கம் செல்வோம். இந்த பாரம்பரிய உணவுகளால் மட்டும் தான் உடலில் உள்ள நோய்களை அப்படியே விரட்ட முடியும். பொதுவாக ரசம் என்றால் அதில் பல மூலிகை பொருட்கள் சேர்த்து செய்வார்கள். இதை சாப்பிடவோ அல்லது குடித்தாலோ உடலில் இருக்கும் சளியை அப்படியே வெளியேற்றும். இந்த பதிவில் நாம் இலங்கையின் பாரம்பரியத்தில் செய்யப்படும் காரசாரமான தக்காளி மிளகு ரசத்தின் செய்முறையை பார்க்கலாம்.

  

தேவையான பொருட்கள்

மல்லி விதை 2 டீஸ்பூன்

மிளகு 3 டீஸ்பூன்

சிறிய சீரகம் அரை டீஸ்பூன்

பூண்டு 6 பல்

சின்ன வெங்காயம் 10

தக்காளி 02

தாளிக்க

எண்ணெய் 1 டீஸ்பூன்

கடுகு

பெரிய சீரகம்

சின்ன வெங்காயம் 5

கறிவேப்பிலை

வர மிளகாய் 3

பெருங்காய பொடி அரை டீஸ்பூன்

தண்ணீர் 5 கப்

புளித்தண்ணீர்

உப்பு தேவையான அளவு

செய்யும் முறை

இந்த ரசத்தை செய்வதற்கு முதலில் ஒரு உரல் எடுத்து அதில் மல்லி மிளகு சின்ன வெங்காயம் பூண்டு போட்டு கொர கொரப்பாக அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் அதில் தக்காளியையும் சேர்த்து இடித்துக்கொள்ள வேண்டும்.

இந்த கலவையை உரலில் இருந்து எடுத்து தனியே வைக்க வேண்டும். பின்னர் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் எண்ணை ஊற்றி அது சூடானதும் கடுகு, பெரிய சீரகம், சின்ன வெங்காயம் 5 சிறிதாக வெட்டியது, கறிவேப்பிலை, வர மிளகாய் துணடுகளாக வெட்டியதை போட்டு தாளிக்க வேண்டும்.

பின்னர் பெருங்காயப்பொடி சேர்த்து தாளிக்க வேண்டும். பின்னர் இதில் இடித்து வைத்துள்ள கலவையை சேர்க்க வேண்டும். இதை இரண்டு தடவை கிண்டி விட்டு தண்ணீர் சேர்த்து கலந்து விட வேண்டும்.

பின்னர் தண்ணருக்கு தேவையான அளவில் உப்பு சேர்க்க வேண்டும். இறுதியாக புளித்தண்ணீர் சேர்த்து 10 நிமிடங்கள் கொதிக்கவிட்டு இறக்கி 1 மணிநேரம் அப்படியே விட வேண்டும்.

பின்னர் இதை எடுத்து வடிகட்டி குடித்தால் சுவையான தக்காளி மிளகு ரசம் தயார். இதை நாள்தோறும் குடித்து வந்தால் நெஞ்சு சளி விலகி ஆரோக்கியமாக இருக்கலாம்.

  
   Bookmark and Share Seithy.com



இளநீர் குடித்தால் இந்த 2 நன்மைகள் கிடைத்தே தீரும்!
[Tuesday 2025-04-01 19:00]

இன்றைய பரபரப்பான வாழ்க்கையில், தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை நாம் பெரும்பாலும் புறக்கணிக்கிறோம், இதனால் உடல் நீரிழப்புக்கு ஆளாகிறது. ஆனால் இளநீர் உடலை நீரேற்றம் செய்வது மட்டுமல்லாமல் ஆற்றலையும் தருகிறது. இதில் உள்ள எலக்ட்ரோலைட்டுகள், பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் உடலை புத்துணர்ச்சியுடன் உணர வைக்கிறது. குறிப்பாக கோடையில், அத்தியாவசிய தாதுக்கள் உடலில் இருந்து வியர்வை வடிவில் அகற்றப்படும் போது, ​​தேங்காய் நீர் இந்தக் குறைபாட்டை ஈடுசெய்ய உதவுகிறது. இந்த பதிவில் இளநீரால் முக்கியமான என்ன நன்மை கிடைக்கும் என்பதை பார்க்கலாம்.



கோடையில் தினம் ஒரு கொய்யா!
[Monday 2025-03-31 18:00]

தனித்துவமான சுவையும் வாசனையும் கொண்ட கொய்யா பல ஆரோக்கியமான நன்மைகளைக் கொண்ட பழங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. கொய்யாப் பழமானது மிகவும் ஊட்டச்சத்து நிறைந்த பழமாக காணப்படுகின்றது. இதில் வைட்டமின் சி, லைக்கோபீனே மற்றும் தோலிற்கு நன்மை பயக்கும் ஆண்டிஆக்ஸிடண்ட் அதிக அளவில் கொண்டுள்ளது.நாம் உண்ணும் உணவில் உள்ள சத்துக்களை உறிஞ்சுவதற்கும் பயன்படும் மெக்னீசியமும் கொய்யாவில் நிறைந்துள்ளது.



ஆரோக்கியத்தை அள்ளிக் கொடுக்கும் ப்ராக்கோலி மிளகு வறுவல்!
[Sunday 2025-03-30 17:00]

பச்சைப் பூக்கோசு என்று அழைக்கப்படும் ப்ராக்கோலி, முட்டைக்கோஸ் வகையைச் சேர்ந்த ஒரு காய்கறியாகும். உலகிலேயே அதிகமான சத்துள்ள காய்கறிகளில் ஒன்றாக ப்ராக்கோலி அறியப்படுகின்றது. இதில் ஆக்ஸிஜனேற்றிகள், கால்சியம் சத்து, இரும்பு சத்து, வைட்டமின் ஏ, வைட்டமின் கே ஆகியவை நிறைந்துள்ளது. எனவே ஆரோக்கியமான உணவுகள் பட்டியலில், சிறந்த இடத்தை பிடித்து வைத்திருக்கும் ப்ரோக்கோலியில் எவ்வாறு அசத்தல் சுவையில் ப்ராக்கோலி மிளகு வறுவல் செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.



நாள்பட்ட நோய்களுக்கு மருந்தாகும் முலாம்பழ விதைகள்!
[Saturday 2025-03-29 18:00]

பொதுவாக தற்போது இருக்கும் மோசமான பழக்கங்கள் காரணமாக நாளுக்கு நாள் நோய்களின் தாக்கம் அதிகரித்து வருகின்றது. நோய்களுக்கு மருந்துவில்லைகள் சாப்பிடுவதிலும் பார்க்க, ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்வது சிறந்தது. அப்படியானவர்கள், தினமும் முலாம்பழ விதைகள் சாப்பிடலாம். நாள்ப்பட்ட நோய்களுக்கு மருந்தாகும் முலாம்பழ விதைகளை சாப்பிடும் பொட்டாசியம், மெக்னீசியம், பாஸ்பரஸ் உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும்.



கோடை வெயிலுக்கு ஏற்ற கம்பங்கூழ்!
[Friday 2025-03-28 18:00]

கோடை காலத்தின் கொடூர வெப்பத்திலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்வதற்கு கம்பங்கூழ் சிறந்த பானமாக கருதப்படுகின்றது. நமது முன்னோர்கள் கம்பு, கேப்பை போன்ற தானியங்களை கஞ்சி வடிவில் தயாரித்து, தினசரி உணவாக உட்கொண்டு வந்தனர். கோடையில் அதிகம் காணப்படும் உடல் சூடு, நீரிழிவு, செரிமான கோளாறுகள் போன்றவற்றுக்கு தீர்வாக, இயற்கையான கம்பங்கூழை குடிப்பது சிறந்தது.



முடி வளர்ச்சியை வேகமாக்க வேண்டுமா?
[Thursday 2025-03-27 19:00]

இப்போதெல்லாம் முடி உதிர்தல் மற்றும் பலவீனமடைதல் ஒரு பொதுவான பிரச்சனையாகிவிட்டது. அதிகரித்து வரும் மாசுபாடு, மோசமான உணவுப் பழக்கம் மற்றும் மன அழுத்தம் காரணமாக, முடியின் இயற்கையான வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. இப்படியான சூழ்நிலையில் நாம் இயற்கை பொருட்கள் மீது கவனம் தேடுவது அவசியம். குறிப்பிட்ட மூலகைகள் முடியின் வேர்களை ஊட்டமளிப்பதன் மூலம் முடியை அடர்த்தியாகவும், வலுவாகவும், நீளமாகவும் மாற்ற உதவுகின்றன.



டீ, காபி அதிகமாக குடிப்பவரா நீங்கள்? - ஆய்வில் அதிர்ச்சி தகவல்!
[Wednesday 2025-03-26 18:00]

டீ மற்றும் காபி அதிகமாக குடிப்பதால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். இன்றைய காலத்தில் பெரும்பாலான நபருக்கு புதிய நாளின் ஆரம்பம் காபி, டீ இல்லாமல் ஆரம்பமாவது இல்லை. அந்த அளவிற்கு காபி, டீ அனைவருக்கும் பிடித்தமான பானமாக மாறியுள்ளது. சில நபர்கள் மணிக்கு ஒருமுறை இந்த பானத்தை அருந்தும் பழக்கத்தை வைத்திருப்பார்கள். இவ்வாறு அடிக்கடி அருந்துவதால், சுறுசுறுப்பாக இருப்பதாக நினைத்துக் கொள்கின்றனர்.



நள்ளிரவில் விழிப்பு வருகிறதா?
[Tuesday 2025-03-25 19:00]

நள்ளிரவில் திடீரென கண்விழிப்பு ஏற்பட்டு தூக்கத்தை கெடுத்துவிடும். அவ்வாறான சூழலில் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். பொதுவாக இரவில் 8 மணி நேரம் கட்டாயமாக தூங்க வேண்டும். இவ்வாறு தூங்குவதை தான் மருத்துவர்களும் அறிவுறுத்தி வருகின்றனர்.



விளக்கெண்ணெய்யை சுடு நீரில் கலந்து குடித்தால் மாதவிடாய் கோளாறுகள் சரியாகுமா?
[Monday 2025-03-24 18:00]

பொதுவாக நாம் அன்றாட வாழ்க்கையில் பல தரப்பட்ட எண்ணெய் வகைகளை பயன்படுத்துவோம். அப்படி பயன்படுத்தும் எண்ணெய் வகைகளில் விளக்கெண்ணெய் முக்கியம் பெறுகிறது. ஏனெனின் விளக்கெண்ணெய்யில் ஏகப்பட்ட சத்துக்கள் உள்ளன. நல்லெண்ணெய் மற்றும் கடலை எண்ணெயை உபயோகிக்கும் அளவுக்கு மக்கள் விளக்கெண்ணெயை பரவலாகப் பயன்படுத்துவது குறைவு. வெளியில் தடவிக் கொள்ளும் போதே எண்ணற்ற நன்மைகளை பெற்றுக் கொள்ளலாம் என நிபுணர் ஒருவர் கூறியுள்ளார்.



கரு உருவாக அவசியமான உணவுகள்!
[Friday 2025-03-21 18:00]

எளிமையான முறையில் தாய்மையடைய ஆரோக்கியமான உணவு பழக்கமும் தாக்கம் செலுத்துவதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள். திருமணமான தம்பதிகள் சிலர் தற்போது இருக்கும் மோசமான உணவு பழக்கங்களினாலும், தவறான வாழ்க்கை முறையினாலும் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாமல் அவஸ்தைப்படுகிறார்கள். அதற்கு முதலில் சரியான உணவு பழக்கம் அவசியம் என மருத்துவர் ஒருவர் பேசியிருக்கிறார்.



நறுக்கிய ஆப்பிள்களுக்கு மேல் எலுமிச்சை சாறு தடவினால் என்ன நடக்கும்?
[Wednesday 2025-03-19 18:00]

ஆரோக்கியமான உணவுகளில் பழங்கள் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. சிறிய துண்டு பழங்கள் இருந்தாலும், அதில் ஏகப்பட்ட மினரல்கள் மற்றும் வைட்டமின்கள் உள்ளன. அந்த வகையில் குழந்தைகள் பாடசாலை மற்றும் வெளி இடங்களுக்கு செல்லும் பொழுது ஆப்பிள், ஆரஞ்சு, கொய்யா போன்ற பழங்கள் துண்டுகளாக்கி ஸ்நாக்ஸ் பாக்ஸில் கொண்டு செல்வது வழக்கம். சில பழங்கள் சிறிது நேரம் வெட்டி வைத்தால் கூட நிறமாற்றம் ஏற்படும். அதிலும் ஆப்பிள்கள் முக்கியம் பெறுகின்றன.



வேர்க்கடலை சாப்பிட்ட பின்பு தண்ணீர் குடிக்கக்கூடாது: ஏன்?
[Tuesday 2025-03-18 19:00]

வேர்க்கடலை சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடித்தால் ஏற்படும் உடல் தொந்தரவுகளைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். வேர்க்கடலையில் புரதங்கள், எண்ணெய் மற்றும் நார்ச்சத்துகள் மிகுந்த அளவில் இருக்கிறது. நமது தோலை மென்மையாக வைத்திருப்பதுடன் காயங்களை குணப்படுத்தவும் உதவுகின்றது. ஏழைகளின் பாதாம் என்று அழைக்கப்படும் வேர்க்கடலை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதுடன், முதுமையை தடுக்கவும் செய்கின்றது.



உங்கள் சிறுநீரக ஆரோக்கியத்தை வீட்டிலேயே எப்படி கண்காணிப்பது?
[Monday 2025-03-17 18:00]

உடலில் மிகவும் முக்கியமான பாகங்களில் இந்த சிறுநீரகமும் ஒன்று. தற்போது மோசமான வாழ்க்கை முறையும் சிறுநீரகங்களைப் பாதிக்கிறது. உங்கள் சில தவறான பழக்கவழக்கங்களால், சிறுநீரகம் தொடர்பான நோய்கள் ஏற்படலாம். உடலில் உள்ள இரத்தத்தை வடிகட்டி, தீங்கு விளைவிக்கும் பொருட்களை அகற்ற சிறுநீரகங்கள் செயல்படுகின்றன. சிறுநீரகத்தில் ஒரு சிறிய பிரச்சனை இருந்தாலும், சில அறிகுறிகள் உடலில் தெளிவாகத் தெரியும். அவற்றை அடையாளம் காண்பதன் மூலம், சிறுநீரக ஆரோக்கியத்தை அறிந்து கொள்ளலாம்.



யாருக்கும் தெரிந்திடாத கிராமத்து சமையல் குறிப்புகள்!
[Sunday 2025-03-16 16:00]

பொதுவாக பெண்கள் வீட்டு வேலைகளுடன் சமையலிலும் அதிகமாக ஆர்வம் காட்டுவார்கள். குடும்பத்தினர் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என ஒவ்வொரு பெண்களும் பார்த்து பார்த்து சமைப்பார்கள். ஆனால் சில நேரங்களில் சமையலில் ஏதாவது தவறுகள் நடந்து விடும். அப்படி சமையலில் அடிக்கடி தவறுகள் நடந்தால் உங்களின் சமையல் வீட்டிலுள்ளவர்களுக்கு அழுப்பை உண்டாக்கி விடும்.



இட்லி சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா?
[Saturday 2025-03-15 16:00]

இட்லி நமது காலை உணவில் மிகவும் முக்கியமாக இடம்பெறும் ஒரு உணவாகும். இதற்கு கட்டாயமாக அரிசி உளுந்து தேவைப்படும். இந்த இட்லி உணவை சட்னி, சாம்பாருடன் சேர்த்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக உணவாக இருக்கும். ஆனால் இந்த இட்லியை பசியை போக்கும் உணவாகவே அனைவரும் பார்க்கின்றனர். ஆனால் இட்லியை சாப்பிட்டால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கின்றன. இது பற்றி யாருக்கும் தெரிவதில்லை. அது என்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.



நீரின் மூலம் பரவும் நோய்கள்!
[Friday 2025-03-14 17:00]

பொதுவாக இந்த உலகம் நீர் இன்று அமையாது என்று தான் கூற வேண்டும். நீர் இல்லாமல் எந்தவொரு உயிரினமும் வாழமுடியாத ஒன்றாகும். அன்றாட வாழ்வில் ஒரு முக்கிய உந்து சக்தியாக இருக்கும் தண்ணீரை சுகாதாரமாக வைத்திருப்பது மிகவும் முக்கியமாகும். அசுத்தமான தண்ணீரை நாம் பருகுவதால் பல நோய்கள் மிகவும் எளிதாக தாக்குகின்றது. டைபாய்டு, காலரா, மஞ்சள் காமாலை போன்ற நோய்கள் நீரின் மூலம் மிகவும் எளிதாக பரவுகின்றது.



காலை உணவிற்கு வரகு அரிசி கீரை அடை!
[Thursday 2025-03-13 19:00]

கால்சியம் மற்றும் நார்ச்சத்து அடங்கிய வரகு அரிசி கீரை அடை எவ்வாறு செய்வது என்பதை தெரிந்து கொள்வோம். பொதுவாக காலை உணவு என்பது ஆரோக்கியமாக இருப்பது மிகவும் அவசியமாகும். அன்றைய நாளின் வேலைகள் அனைத்தையும் சிறப்பாக செய்து முடிப்பதற்கான ஆற்றலை காலை உணவே அளிக்கின்றது. அவ்வாறு நாம் காலையில் எடுத்துக் கொள்ளும் உணவானது மிகவும் ஆரோக்கியம் நிறைந்ததாகவே இருக்க வேண்டும். அந்த வகையில் வரகு அரிசி கீரை அடை எவ்வாறு செய்யலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.



எங்கும் கிடைக்காத சுவையில் இலங்கையில் செய்யப்படும் கோழி கறி!
[Tuesday 2025-03-11 19:00]

பொதுவாக உலகில் எங்கும் கோழியை வைத்து பல ரெசிபிகளை செய்வார்கள். ஆனால் ஒரு சில நாடுகளில் சுவை வித்தியாசமாக செய்யப்படும். அதை அந்த இடத்திற்கு சென்று ருசிப்பதை விட இருக்கும் இடத்தில் இருந்து ரெசிபி தெரிந்துகொண்டு செய்யலாம். இந்த பதிவில் இலங்கையில் செய்யப்படும் பாரம்பரிய கோறிகறியின் செய்முறையை பார்க்கலாம்.



ஆளி விதைகளின் அதிசய ஆரோக்கியம்!
[Friday 2025-03-07 18:00]

ஆளி விதைகள் நார்ச்சத்து, ஒமேகா-3 மற்றும் ஒமேகா-6 கொழுப்பு அமிலங்கள், வைட்டமின்கள், இரும்புச்சத்து மற்றும் செலினியம் போன்ற ஊட்டச்சத்துக்களின் நல்ல மூலமாகும். இதை உணவாக சேர்த்துக்கொள்வதன் மூலம் உடலில் பல பிரச்சனைகளுக்கு இது மருந்தாகும். இந்த ஆளிவிதைகளை உணவில் எப்படி சேர்த்துக்கொள்ள வேண்டும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.



என்றும் இளமையாகவே இருக்க வேண்டுமா?
[Thursday 2025-03-06 19:00]

பொதுவாகவே எல்லா பெண்களும் முகத்தை எப்போதும் அழகாக வைத்துக்கொள்ள வேண்டும் என நினைப்பார்கள். ஆனால் அதனை சீர்குலைக்கும் வகையில் சில பெண்களுக்கு முகத்தில் எண்ணெய் தன்மை அதிகமாக இருக்கும். இதனால் என்னதான் நல்ல மேக்கப் பொருட்களை பயன்படுத்தினாலும் குறுகிய நேரத்திலேயே முகம் சோர்வாகவும் பொலிவிழந்தும் காணப்படும். இந்த பிரச்சினைக்கு பணத்தை அதிகமாக செலவு செய்யாமல் வீட்டில் இருக்கும் ஒரு எளிமையான பொருளை கொண்டு எவ்வாறு சிறந்த தீர்வை பெறலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.


Kugeenthiran-200-2022-seithy
Karan Remax-2010
Rajeef sebarasha 2023/04/19
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Asayan-Salon-2022-seithy
 gloriousprinters.com 2021
Vaheesan-Remax-2016
Latika-Gold-House-2025
Airlinktravel-2020-01-01
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா