Untitled Document
December 23, 2024 [GMT]
2000 கோடி வசூல் செய்யுமா புஷ்பா 2?
[Monday 2024-12-23 17:00]

தெலுங்கு திரையுலகில் ஹீரோவாக பிரபலமாகி, இன்று உலகளவில் தனக்கென்று தனி ரசிகர்களை உருவாக்கியுள்ளார் நடிகர் அல்லு அர்ஜுன். இவருடைய நடிப்பில் சமீபத்தில் வெளிவந்து மாபெரும் அளவில் வெற்றியடைந்துள்ள திரைப்படம் புஷ்பா 2. உலகளவில் 6 நாட்களில் ரூ. 1000 கோடிக்கும் மேல் வசூல் செய்து இமாலய வசூல் சாதனையை படைத்தது.

தெலுங்கு திரையுலகில் ஹீரோவாக பிரபலமாகி, இன்று உலகளவில் தனக்கென்று தனி ரசிகர்களை உருவாக்கியுள்ளார் நடிகர் அல்லு அர்ஜுன். இவருடைய நடிப்பில் சமீபத்தில் வெளிவந்து மாபெரும் அளவில் வெற்றியடைந்துள்ள திரைப்படம் புஷ்பா 2. உலகளவில் 6 நாட்களில் ரூ. 1000 கோடிக்கும் மேல் வசூல் செய்து இமாலய வசூல் சாதனையை படைத்தது.

  

இந்திய சினிமாவில் குறுகிய நாட்களில் ரூ. 1000 கோடி வசூல் செய்த படம் என்கிற சாதனையையும் படைத்துள்ளது.

இந்த நிலையிலும், புஷ்பா 2 திரைப்படம் உலகளவில் ரூ. 1590 கோடி வசூல் செய்துள்ளது. விரைவில் இப்படம் ரூ. 2000 கோடி வசூல் செய்யும் என்றும் ரசிகர்கள் கூறிவருகிறார்கள். அது நடக்கிறதா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

  
   Bookmark and Share Seithy.com



முஃபாசா: தி லயன் கிங் படத்திற்காக அர்ஜுன் தான் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?
[Monday 2024-12-23 17:00]

கைதி படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து தமிழக மக்களின் மனதில் இடம்பிடித்தவர் அர்ஜுன் தாஸ். பின் அந்தகாரம், அநீதி, போர், ரசாவதி ஆகிய படங்களில் ஹீரோவாக நடிக்க துவங்கினார். கோலிவுட் திரையுலகில் தனக்கென்று தனி இடத்தை பிடித்துள்ள அர்ஜுன் தாஸ், சமீபத்தில் வெளிவந்த முஃபாசா: தி லயன் கிங் படத்திற்காக தமிழில் டப்பிங் பேசியிருந்தார். ஆம், இந்த படத்தில் வரும் கதாநாயகன் சிங்கம் முஃபாசாவின் குரலாக அர்ஜுன் தாஸ் இருந்தார்.



2024ல் ஆண்டில் தமிழ் சினிமாவில் வெற்றிப்பெற்ற படங்களின் பட்டியல்!
[Monday 2024-12-23 17:00]

ஒவ்வொரு வருடமும் நிறைய படங்களை கண்டு வருகிறது. இந்த 2024ம் வருடத்திலும் மிகவும் வித்தியாசமான கதைக்களத்தை கொண்ட படங்களை பெற்றிருக்கிறது. காதல், சென்டிமென்ட், வாழ்க்கை வரலாறு என நிறைய ஜானரில் படங்கள் வந்துள்ளன. இப்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் படம் என்றால் அது விடுதலை 2 படம் தான். சரி நாம் இப்போது 2024ம் வருடத்தில் தமிழ் சினிமாவில் வெளியாகி மாபெரும் ஹிட்டை கண்ட படங்களின் விவரத்தை காண்போம்.



தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகப்போகும் தளபதி விஜய்யின் கோட்!
[Monday 2024-12-23 07:00]

2024ஆம் ஆண்டில் அதிக வசூல் செய்த தமிழ் திரைப்படம் தளபதி விஜய்யின் கோட். வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்த முதல் படமும் இதுவே ஆகும். ஹீரோவாகவும், வில்லனாகவும் இப்படத்தில் கலக்கியிருந்தார் விஜய். மேலும் இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து பிரபு தேவா, மோகன், ஜெயராம், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி ஆகியோர் நடித்திருந்தனர்.



அல்லு அர்ஜுன் வீட்டின் மீது தாக்குதல்: சர்ச்சைக்கு நடுவில் பரபரப்பு!
[Monday 2024-12-23 07:00]

அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா 2 படத்தின் பிரிமியர் ஷோ திரையிடப்பட்ட தியேட்டருக்கு அல்லு அர்ஜுன் வந்தபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் அந்த பெண்ணின் மகன் படுகாயம் அடைந்து தற்போது மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கிறார். சிறுவனுக்கு மூளைச்சாவு ஏற்ப்பட்டு இருப்பதாகவும் சமீபத்தில் அதிர்ச்சி தகவல் வந்தது.



மாயாவுக்கு அர்ச்சனா பதிலடி!
[Monday 2024-12-23 07:00]

பிக் பாஸ் 8ம் சீசனில் போட்டியாளராக இருக்கும் அருண் பிரசாத்துக்கு அவரது காதலியான நடிகை அர்ச்சனை ஆதரவாக தொடர்ந்து பேசி வருகிறார். முந்தைய சீசன் டைட்டில் வின்னர் ஆன அர்ச்சனா இதற்காக சில விமர்சனங்களையும் சந்தித்து வருகிறார். தனக்கு மோசமான மிரட்டல்கள் வருவதாகவும் அர்ச்சனா சில வாரங்கள் முன்பு பதிவிட்டு இருந்தார்.



விடுதலை 2 படத்திற்காக மஞ்சு வாரியர் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?
[Sunday 2024-12-22 07:00]

ஜெயமோகன் எழுதிய துணைவன் என்ற சிறுகதையை மையமாக வைத்து வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த 2023ம் ஆண்டு வெளியான படம் விடுதலை. இந்த படத்தில் நடிகர் சூரியின் நடிப்பு ரசிகர்களால் வெகுவாக பாராட்டப்பட்டது. டிசம்பர் 20, விடுதலை படத்தின் 2ம் பாகம் வெளியாகியுள்ளது. படத்தை பார்த்த பலரும் அதில் இருந்து வெளியே வர முடியவில்லை, சூப்பர் படம் என பாசிட்டீவ் விமர்சனம் கொடுத்து வருகிறார்கள்.



ஜெயம் ரவி-ஆர்த்தி விவாகரத்து வழக்கில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
[Sunday 2024-12-22 07:00]

கோலிவுட் திரையுலகில் இப்போதெல்லாம் அதிகம் பிரபலங்களின் விவாகரத்து செய்திகள் அதிகம் வருகின்றன. அப்படி வந்த செய்திகளில் ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்தது ஜெயம் ரவி-ஆர்த்தி விவாகரத்து செய்தி. நடிகர் இந்த செய்தியை அறிவித்ததும் நிறைய சர்ச்சைகள் எல்லாம் எழுந்தன, ஆனால் உடனே அதனை தெளிவுப்படுத்தி இருந்தார் ஜெயம் ரவி.



உலகளவில் புஷ்பா 2 இதுவரை செய்துள்ள வசூல்!
[Saturday 2024-12-21 17:00]

2024ஆம் ஆண்டில் அதிகம் வசூல் செய்த இந்திய திரைப்படமாக புஷ்பா 2 பார்க்கப்படுகிறது. இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடித்து வெளிவந்த இப்படத்தை மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரித்தனர். ராஷ்மிகா மந்தனா, பகத் பாஸில் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்க தேவி ஸ்ரீ பிரசாத் பாடல்களுக்கு இசையமைத்திருந்தார்.



அனைவரும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் சார்பட்டா 2 படப்பிடிப்பு எப்போது?
[Saturday 2024-12-21 17:00]

கடந்த 2022ஆம் ஆண்டு நேரடியாக ஓடிடி-யில் வெளிவந்து மாபெரும் அளவில் வெற்றியடைந்த திரைப்படம் சார்பட்டா. இப்படத்தை முன்னணி இயக்குனர்களில் ஒருவரான பா. ரஞ்சித் இயக்கியிருந்தார். இப்படத்தில் ஆர்யா, ஜான் கோக்கன், துஷாரா விஜயன், பசுபதி உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இப்படம் திரையரங்கில் வெளிவந்திருக்கலாம் என்பதே ரசிகர்களின் வருத்தமாக இருந்தது. அதனை சரி செய்யும் வகையில் சார்பட்டா 2 திரைப்படத்திற்கான அறிவிப்பை வெளியிட்டனர்.



35 வயதில் கோடிகளில் புறளும் தமன்னா!
[Saturday 2024-12-21 17:00]

நடிகை தமன்னாவின் 35 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அவரது சொத்து மதிப்பு பற்றிய தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. கேடி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமாகி முதல் படத்திலேயே தனது மொத்த நடிப்பு திறமையையும் வெளிக்காட்டி சினிமா துறையில் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கிக்கொண்டவர் தான் தமன்னா.



விடாமுயற்சி படத்தில் இணைந்த புது நடிகை!
[Saturday 2024-12-21 07:00]

நடிகர் அஜித்தின் விடாமுயற்சி படம் வரும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆக இருக்கிறது. ரிலீசுக்கு இன்னும் சில வாரங்கள் மட்டுமே இருக்கும் நிலையில் தற்போது இறுதிக்கட்ட ஷூட்டிங் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் அஜித் மற்றும் திரிஷா இருவரும் ஷூட்டிங்கில் ஜோடியாக இருக்கும் சில புகைப்படங்கள் வெளியாகி வைரல் ஆனது.



கமல் ஹாசனின் முக்கிய படத்தில் நடிக்கும் வாய்ப்பை தவறவிட்ட அரவிந்த் சாமி!
[Saturday 2024-12-21 07:00]

உலகநாயகன் கமல் ஹாசன் நடிப்பில் தற்போது தக் லைஃப் திரைப்படம் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. அடுத்த ஆண்டு இந்தியன் 3 மற்றும் தக் லைஃப் என இரண்டு திரைப்படங்கள் வெளிவரவுள்ளது. இதனை எதிர்பார்த்து ரசிகர்களும் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறார்கள்.



பாலிவுட்டில் நுழையும் அமரன் இயக்குனர்!
[Friday 2024-12-20 16:00]

சிவகார்த்திகேயனின் அமரன் படம் 300 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்த நிலையில், இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமிக்கு தொடர்ந்து பாராட்டுகள் குவிந்து வருகிறது. அடுத்து தனுஷை வைத்து அவர் படம் இயக்க இருக்கிறார். இந்நிலையில் தற்போது அவர் பாலிவுட்டில் நுழைய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.



விடுதலை 2 படம் முதல் நாளில் எவ்வளவு வசூலிக்கும்? - கணிக்கப்பட்ட விவரம்!
[Friday 2024-12-20 16:00]

விடுதலை, கடந்த ஆண்டு வெளியாகி ஹிட்டடித்த படங்களில் ஒன்று. வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி என பலர் நடிக்க வெளியான இப்படத்தின் 2ம் பாகம் இன்று மாஸாக வெளியாகியுள்ளது. இந்த படத்தில் கனிமவளம் திருடும் அரசுக்கு எதிராக விஜய் சேதுபதி மலைவாழ் மக்களை ஒன்று திரட்டி இயக்கத்தை அமைத்து செயல்பட்டு வருகிறார். அந்த மக்களை ஒடுக்க போலீஸ் உதவியோடு அரசு முயற்சி செய்ய அந்த குழுவில் சூரி இருக்கிறார்.



சர்வதேச திரைப்பட விழாவில் விருதுகளை தட்டிதூக்கிய அமரன், மகாராஜா படங்கள்!
[Friday 2024-12-20 16:00]

தமிழ் சினிமாவில் இந்த வருடம் ரசிகர்கள் கொண்டாடும் நிறைய வெற்றிப் படங்கள் வெளியாகின. மகாராஜா, அமரன், லப்பர் பந்து என ரசிகர்களால் நிறைய படங்கள் கொண்டாடப்பட்டு வருகிறது. வெற்றிப் படங்களை கொடுக்கும் கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் நிறைய விருது விழாக்கும் நடைபெறுகின்றன.



அஜித்தை இயக்கும் முயற்சியில் சூப்பர்ஹிட் இயக்குனர்!
[Friday 2024-12-20 07:00]

நடிகர் அஜித் தற்போது விடாமுயற்சி, குட் பேட் அக்லீ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். அந்த இரண்டு படங்களுக்கே இறுதிக்கட்டத்தில் இருக்கிறது. சமீபத்தில் விடாமுயற்சி பட ஷூட்டிங்கில் இருக்கும் அஜித்தின் சில புகைப்படங்கள் வெளியாகி வைரல் ஆகி இருந்தது. மேலும் விடாமுயற்சி அடுத்த வருட பொங்கலுக்கு வெளியாவதும் உறுதியாகி இருக்கிறது.



சம்பளத்தை இரண்டு மடங்காக உயர்த்திய சிவகார்த்திகேயன்!
[Friday 2024-12-20 07:00]

நடிகர் சிவகார்த்திகேயன் அமரன் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு தமிழ் சினிமாவில் அடுத்த லெவலுக்கு சென்று இருக்கிறார். விஜய் அரசியலுக்கு சென்றுவிட்ட நிலையில், அந்த இடத்தை சிவகார்த்திகேயன் பிடிப்பாரா என ரசிகர்கள் எதிர்பார்க்கும் அளவுக்கு அமரன் வெற்றி அமைந்திருக்கிறது. 300 கோடிக்கும் அதிகமாக அமரன் வசூலித்தது குறிப்பிடத்தக்கது.



விடுதலை 2 கடைசி நேரத்தில் 8 நிமிட காட்சிகள் நீக்கம்!
[Thursday 2024-12-19 16:00]

வெற்றிமாறனின் விடுதலை 2 படம் நாளை ரிலீஸ் ஆக இருக்கிறது. விஜய் சேதுபதி, மஞ்சு வாரியர், சூரி என பலர் நடித்து இருக்கும் இந்த படத்தின் மீது ரசிகர்களுக்கு பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. விடுதலை முதல் பாகத்தில் விஜய் சேதுபதியின் காட்சிகள் மிக குறைவாக இருக்கும், அதனால் இரண்டாம் பாகத்தில் வாத்தியார் பற்றிய காட்சிகள் பார்க்க ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.



வசூல் சாதனை படைத்த மகாராஜா!
[Thursday 2024-12-19 16:00]

நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் 2024ஆம் ஆண்டில் வெளிவந்த வெற்றியடைந்த திரைப்படம் மகாராஜா. இப்படத்தின் திரைக்கதை என்றும் நின்று பேசும். அடுத்தென்ன அடுத்தென்ன என்று நம்மை தொடர்ந்து யோசிக்க வைத்து, இறுதியில் ட்விஸ்ட் வைத்து ஆச்சரியப்படுத்தினார் இயக்குனர் நித்திலன் சுவாமிநாதன். இப்படத்தில் விஜய் சேதுபதியின் மகளாக நடித்து பிரபலமான சாச்சனா, பிக் பாஸ் 8-லும் போட்டியாளராக பங்கேற்றார்.



கலகலப்பு பட நடிகர் மரணம்: அதிர்ச்சியில் திரையுலகம்!
[Thursday 2024-12-19 16:00]

சுந்தர் சி இயக்கத்தில் விமல், சிவா, சந்தானம், ஓவியா, அஞ்சலி நடித்து வெளிவந்த படம் கலகலப்பு. இப்படத்தில் சந்தானத்தின் கேங்கில் முக்கிய நபராக நடித்து நகைச்சுவையில் பட்டையை கிளப்பி இருப்பார் நடிகர் கோதண்டராமன். சந்தானத்துடன் இவர் இணைந்து செய்யும் லூட்டி, நம்மை வயிறு குலுங்க சிரிக்க வைத்தது. இவர் கடந்த 25 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றி வந்துள்ளார்.


Logan-Kumaresh-Homelife-02-02-2021
 gloriousprinters.com 2021
Airlinktravel-2020-01-01
Rajeef sebarasha 2023/04/19
Karan Remax-2010
Ambikajewellers-01-08-2021-seithy
NKS-Ketha-04-11-2021
Vaheesan-Remax-2016
Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Remax-169515-Seithy
Asayan-Salon-2022-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா