Untitled Document
May 19, 2026 [GMT]
CM விஜய்யை சந்தித்து வெங்கட் பிரபு கொடுத்த கிப்ட்!
[Monday 2026-05-18 18:00]

நடிகர் விஜய் தவெக கட்சியை தொடங்கி சந்தித்த முதல் தேர்தலிலேயே ஜெயித்து முதலமைச்சராக பதவியேற்று இருக்கிறார். அவரை சினிமா துறையினர் பலரும் நேரில் சந்தித்து வாழ்த்து கூறுவதோடு பல கோரிக்கைகளையும் வைத்து வருகின்றனர். இந்நிலையில் இயக்குனர் வெங்கட் பிரபு விஜய்யை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து இருக்கிறார்.

நடிகர் விஜய் தவெக கட்சியை தொடங்கி சந்தித்த முதல் தேர்தலிலேயே ஜெயித்து முதலமைச்சராக பதவியேற்று இருக்கிறார். அவரை சினிமா துறையினர் பலரும் நேரில் சந்தித்து வாழ்த்து கூறுவதோடு பல கோரிக்கைகளையும் வைத்து வருகின்றனர். இந்நிலையில் இயக்குனர் வெங்கட் பிரபு விஜய்யை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து இருக்கிறார்.

  

GOAT படத்தில் விஜய் பயன்படுத்தும் கார் நம்பரில் CM 2026 என குறிப்பிடப்பட்டு இருக்கும். அதை தற்போது கிப்ட் ஆக கொடுத்து இருக்கிறார் வெங்கட் பிரபு. அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது.

  
   Bookmark and Share Seithy.com



ரோஜாவுக்கு என்ன தகுதி இருக்கு? - வம்பிழுக்கும் வனிதா விஜயகுமார்!
[Tuesday 2026-05-19 07:00]

குக் வித் கோமாளி 7ம் சீசன் கடந்த ஏப்ரல் 4ம் தேதி தொடங்கியது. தற்போது ஏழு வாரங்கள் நிறைவு பெற்று இருக்கிறது. இந்த முறை போட்டியாளர்கள் கணவன் மனைவியாக தான் கலந்துகொள்கிறார்கள். இதுவரை இரண்டு ஜோடி எலிமினேட் ஆகியுள்ள நிலையில் இன்னும் 7 ஜோடிகள் ஷோவில் இருக்கிறார்கள். CWC 7 ஷோவின் நடுவராக நடிகை ரோஜாவை கொண்டு வந்திருக்கின்றனர். அதை தற்போது வனிதா விஜயகுமார் விமர்சித்து இருக்கிறார்.



நடிகர் கஞ்சா கருப்பு வீட்டில் நடந்த துயரம்: முதல்வர் விஜய்க்கு அவர் வைத்த வேண்டுகோள்!
[Tuesday 2026-05-19 07:00]

காமெடியனாக தமிழ் சினிமாவில் ஏராளமான படங்கள் நடித்து இருப்பவர் கஞ்சா கருப்பு. அவர் சொந்தமாக படம் தயாரித்து எல்லா சொத்துக்களையும் இழந்த நிலையில், பிக் பாஸ் ஷோவில் போட்டியாளராக வந்திருந்தார். தற்போது சின்ன சின்ன படங்களில் நடித்து வருகிறார் அவர். மேலும் கடந்த தேர்தலில் கஞ்சா கருப்பு அதிமுகவுக்கு ஆதரவாக தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.



தனிமை பற்றி உருக்கமான பதிவு: 60 வயதாகியும் திருமணம் செய்யாத சல்மான் கான்!
[Monday 2026-05-18 18:00]

நடிகர் சல்மான் கான் ஹிந்தி சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவர். சினிமா மட்டுமின்றி டிவி நிகழ்ச்சிகளின் மூலமாகவும் அவர் மிகப்பெரிய அளவில் சம்பாதிக்கிறார். பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க சல்மான் கான் 150 - 200 கோடி ரூபாயை வருடம்தோறும் சம்பளமாக பெறுகிறார்.



கருப்பு திரைப்படத்தின் 3 நாட்கள் வசூல் விவரம்!
[Monday 2026-05-18 18:00]

ஒரு திரைப்படத்தின் வெற்றி என்பது அதனுடைய வசூலை வைத்து தான் முடிவு செய்யப்படுகிறது. அதுவும் இப்போதெல்லாம் ஒரு திரைப்படத்தின் வசூல் பற்றிய விவரங்களை ரசிகர்களே சமூக வலைத்தளத்தில் பேசுகின்றனர். மேலும், தயாரிப்பு நிறுவனங்களும் அதிகாரப்பூர்வமாக திரைப்படங்களின் வசூலை அறிவித்துவிடுகிறார்கள்.



நடிகர் முத்துக்காளையின் மனைவி சிகிச்சை பலன் இன்றி உயிரிழப்பு!
[Monday 2026-05-18 18:00]

தனது வாழ்க்கையில் 18 வயதில் கராத்தேவில் பிளாக் பெல்ட் வாங்கி அப்படியே சினிமாவில் ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றத் தொடங்கியவர் தான் நடிகர் முத்துக்காளை. இடையில் கல்வியை தொடர முடியாமல் போனது. பின்னர் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து வந்தவர் அவர் மட்டுமே இடம்பெறும் சில காமெடி காட்சிகள் மக்களிடம் ஹிட்டாகி வந்தது.



இசைஞானி இளையராஜாவுடன் கைகோர்த்த கார்த்திக் சுப்பராஜ்!
[Monday 2026-05-18 18:00]

பிட்சா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ். இதன்பின், ஜிகர்தண்டா படத்தின் மூலம் மாபெரும் வெற்றியை தன்வசப்படுத்தினார். இதனை தொடர்ந்து இறைவி, மெர்குரி, பேட்ட, ஜகமே தந்திரம், மகான், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், ரெட்ரோ என இதுவரை 9 படங்களை இயக்கியுள்ளார். இயக்குநராக மட்டுமின்றி பல நல்ல திரைப்படங்களை இவர் தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



"நான் தவறு செய்யவில்லை, அழ மாட்டேன்" - ஆர்த்தியின் அம்மா சுஜாதா!
[Sunday 2026-05-17 07:00]

ரசிகர்கள் மனதில் பெரிய இடம் பிடித்திருந்தவர் தான் நடிகர் ரவி மோகன். சினிமாவில் நுழைந்த நாள் முதல் எந்த ஒரு பிரச்சனையிலும் சிக்காமல், கிசுகிசுவில் மாட்டிக்கொள்ளாமல் நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி தனது சினிமா பயணத்தை அழகாக கொண்டு சென்றார். ஆனால் கடந்த வருடம் முதல் ரவி மோகன் சொந்த வாழ்க்கையால் பெரிய கஷ்டத்தில் உள்ளார், அதனால் நிறைய விமர்சனங்களுக்கு ஆளாகி வருகிறார்.



முதலமைச்சர் விஜய்யிடம் நடிகர் முத்துக்காளை வைத்த வேண்டுகோள்!
[Sunday 2026-05-17 07:00]

தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகராக மக்களால் கொண்டாடப்பட்டவர் தான் முத்துக்காளை. இவர் சமீபத்தில் ஒரு வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார். அதாவது தன்னுடைய குடும்பம் மிகப்பெரிய மன அழுத்தத்தில் இருப்பதாகவும், மனைவிக்கு அவசர சிகிச்சை தேவைப்படுவதாகவும் கூறியிருந்தார்.



செம மாஸ் வரவேற்பு பெற்றுள்ள கருப்பு திரைப்படம்!
[Sunday 2026-05-17 07:00]

கருப்பு என்றால் முதலில் நிறம் மக்களுக்கு நியாபகம். அடுத்து கருப்பசாமி, இப்போது அவரை தாண்டி சூர்யா நடித்துள்ள கருப்பு திரைப்படம் தான் இனி அனைவருக்குமே நியாபகம் வரும். ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா, த்ரிஷா என பலர் நடிக்க நேற்று (மே 15) வெளியாகி இருந்தது. மாஸ் மற்றும் செம மெசேஜ் கலந்த கதையுடன் படம் தயாராகி இருந்தது.



கையை அறுத்துக்கொண்டேன் என ரவி மோகன் பரபரப்பு பேட்டி: ஆர்த்தி செய்த காரியம்!
[Saturday 2026-05-16 18:00]

தமிழ் சினிமாவில் மக்களால் கொண்டாடப்படும் ஒரு டாப் நாயகன். பல வருடங்களாக சினிமாவில் பயணிக்கும் இவர் எந்த ஒரு கிசுகிசுவிலும் சர்ச்சையிலும் சிக்காமல் இருந்தார். ரவி மோகன் பற்றி ஏதாவது செய்தி வருகிறது என்றால் படத்தை பற்றியதாக மட்டுமே இருக்கும். ஆனால் கடந்த வருடம் முதல் ரவி மோகன் படத்தை தாண்டி அவரது சொந்த வாழ்க்கை குறித்த பிரச்சனைகள் தான் அதிகம் வலம் வருகின்றன. ரவிமோகன் அவரது மனைவி ஆர்த்தியை பிரிவதாக கூறியதில் இருந்து சமூக வலைதளங்களில் பரபரப்பாக இருவரும் மாறி மாறி குற்றம் சாட்டி வந்தனர்.



தமிழ்நாட்டில் கருப்பு திரைப்படம் முதல் நாள் செய்துள்ள வசூல்!
[Saturday 2026-05-16 18:00]

புதிதாக வெளிவந்து ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றுள்ள திரைப்படம் கருப்பு. பிரம்மாண்ட பொருட்செலவில் எடுக்கப்பட்ட இப்படம் பைனான்ஸ் பிரச்சனை காரணமாக ரிலீஸ் ஆக முடியாமல் இருந்தது. ஆனால், அந்த பிரச்சனைகளை எல்லாம் சரி செய்து நேற்று திரையரங்குகளில் சூர்யாவின் கருப்பு திரைப்படம் ரிலீஸ் ஆனது. ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் உருவான இப்படம் திரையரங்குகளை திருவிழா கோலமாக மாற்றியது.



"மூன்றெழுத்து இட்லி நடிகை வாழ்க்கையே கெடுத்துவிட்டார்" - ஆவேசமாக கத்திய ரவி மோகன்!
[Saturday 2026-05-16 18:00]

பத்திரிக்கையாளர்களை சந்தித்த ரவி மோகன் தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையின் பல உண்மைகளை கூறியதோடு மூன்றெழுத்து இட்லி நடிகை வாழ்கையை கெடுத்துவிட்டார் என கூறி உள்ளார். நேற்று ரவிமோகனின் தோழி கெனிஷா காணொளி ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் அவர் சென்னையை விட்டு வெளியேறப்போவதாகவும் சமூக வலைத்தளங்களில் இருந்து விலகப்போவதாகவும் மிகவும் எமோஷனலாக ஒரு காணொளி ஒன்றை பதிவிட்டு இருந்தார்.



ஜனநாயகன் லீக் வழக்கு: 3 பேர் மீது குண்டர் சட்டம்!
[Saturday 2026-05-16 07:00]

விஜய்யின் கடைசி திரைப்படம் என்று கூறப்பட்ட ஜனநாயகன் படத்தை இணையதளத்தில் லீக் செய்த விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பியது. இந்த விவகாரத்தில் 9 பேர் கைதாகியுள்ளனர். அவர்களில் 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. தேர்தல் நேரத்தில் விஜய்க்கு அரசியல் நெருக்கடி கொடுப்பதற்காகவே படத்தை இணையதளத்தில் லீக் செய்ததாக விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது. முதலமைச்சர் விஜய் தீவிர அரசியலுக்கு வந்து 2 வருடங்கள் ஆகின்றன.



சினிமா துறையில் மாற்றம் தேவை: கமல் வைத்த கோரிக்கை!
[Saturday 2026-05-16 07:00]

நடிகர் கமல்ஹாசன் தற்போது சினிமா துறையினருக்கு கோரிக்கை ஒன்றை வைத்து அறிக்கை வெளியிட்டு இருக்கிறார். அமெரிக்கா - ஈரான் போர் காரணமாக பொருளாதார சிக்கல்களை இந்தியா சந்தித்து வருகிறது. எரிபொருள் விலை உயர்வு ஒரு பக்கம் இருக்க, மக்கள் அதிகம் தங்கம் வாங்குவதால் வெளிநாட்டு செலாவணி கையிருப்பு குறைவதாக பிரதமர் மோடி தெரிவித்து இருந்தார். மேலும் வெளிநாட்டு பயணங்களையும் தவிர்க்கும்படி கேட்டிருந்தார்.



கருப்பு பட ரெஸ்பான்ஸ்: தியேட்டரிலேயே கத்தி கொண்டாடிய இயக்குனர் RJ பாலாஜி!
[Friday 2026-05-15 17:00]

பைனான்ஸ் பிரச்சனை காரணமாக கருப்பு படம் நேற்று ரிலீஸ் ஆகவில்லை. நீண்ட இழுபறிக்கு பிறகு இன்று காலையில் தான் படம் திரைக்கு வந்தது. படம் ரிலீஸ் ஆகாதது பற்றி நேற்று RJ பாலாஜி கண்ணீர் விட்டு அழுது வீடியோ வெளியிட்டு இருந்தார். அவருக்கு பல முன்னணி நடிகர்கள் பலரும் ஆதரவாக பேசினார்கள்.



கருப்பு திரை விமர்சனம்!
[Friday 2026-05-15 17:00]

ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி பெரிய எதிர்பார்ப்புடன் இன்று வெளிவந்துள்ள திரைப்படம் கருப்பு. பல தடைகளை தாண்டி வெளியாகியிருக்கும் இப்படம் எப்படி உள்ளது என்று விமர்சனத்தில் பார்க்கலாம் வாங்க. கேரளாவில் இருந்து தனது மகளின் ஆபரேஷனுக்காக தமிழ்நாடு வருகிறார் இந்திரன்ஸ். வந்த இடத்தில் அவர்களுடைய நகையை திருடர்கள் கொள்ளையடித்து விட்டு செல்ல, பின் அதனை போலீஸ் கண்டுபிடித்து கொடுக்கிறார்கள். ஆனால், 60 பவுன் தங்க நகைக்கு பதிலாக 45 பவுன் மட்டுமே திரும்ப தரப்படுகிறது. மேலும், இந்த நகையை இப்போது தரமுடியாது, நீதிமன்றத்தின் மூலமாகதான் உங்களால் பெற்றுக்கொள்ள முடியும் என அங்கிருக்கும் கான்ஸ்டேபிள் கூறுகிறார்.



"சினிமா இல்லையென்றால் இதைத்தான் செய்திருப்பேன்" - நடிகை மிர்னாலினி ரவி!
[Friday 2026-05-15 17:00]

டிக் டாக், டப் ஸ்மாஷ் மூலம் ரசிகர்களை கவர்ந்து அதன்பின் சினிமாவில் என்ட்ரி கொடுத்தவர் நடிகை மிர்னாலினி ரவி. இவர் சூப்பர் டீலக்ஸ், கோப்ரா, ரோமியோ, எனிமி போன்ற படங்களில் நடித்துள்ளார். தமிழில் மட்டுமின்றி தெலுங்கிலும் இவர் படங்கள் நடித்து வருகிறார். இந்த நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது திரை பயணம் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார். இதில், "விளையாட்டாக ஈடுபட்ட டப்ஸ்மாஷ் வீடியோக்கள், இன்ஸ்டாகிராமில் ரசிகர்களை ஈர்த்து, சினிமாவில் எனக்கான வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுத்தது.



முடிவுக்கு வந்த பிரச்சனை: கருப்பு காலையில் ரிலீஸ்!
[Friday 2026-05-15 08:00]

சூர்யாவின் கருப்பு படம் மே 14ம் தேதி, நேற்று, ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் பைனான்ஸ் பிரச்சனை காரணமாக தடங்கல் ஏற்பட்டது. தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தர வேண்டிய கடனை செட்டில் செய்ய வேண்டும் என பைனான்சியர்கள் கேட்டதால் ரிலீசுக்கு தடங்கல் ஏற்பட்டது.



ஜெயிலர் 2 ஷூட்டிங் ஸ்பாட்டில் விபத்து: ஒருவர் பலி!
[Friday 2026-05-15 08:00]

நடிகர் ரஜினிகாந்தின் அடுத்த படமான ஜெயிலர் 2ன் ஷூட்டிங் சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நெல்சன் திலீப்குமார் இந்த படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் ரிலீஸ் செப்டம்பருக்கு தள்ளிப்போய்விட்டதாக சில தினங்களுக்கு முன்பு செய்தி வெளியானது. சில காட்சிகளை மீண்டும் படமாக்க வேண்டும் நெல்சன் விரும்பிய நிலையில் அதற்காக 15 நாட்கள் சென்னையில் ஷூட்டிங் நடக்கிறது.



முதல்வர் விஜய் பயன்படுத்தும் Convoy கார்கள் விலை எவ்வளவு தெரியுமா?
[Thursday 2026-05-14 17:00]

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வந்த விஜய் இன்று தமிழ்நாட்டின் முதலமைச்சராக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். முதல்வராக பதவியேற்ற விஜய் அவர்கள், 200 யூனிட்கள் இலவசம் என்கிற திட்டத்திற்கு தன்னுடைய முதல் கையெழுத்தைப் போட்டுள்ளார். இரு மாதங்களுக்கு 500 யூனிட்கள் வரை மின்சாரம் பயன்படுத்துபவர்களுக்கு 200 யூனிட்கள் இலவசம் என தனது முதல் கோப்பில் கையெழுத்திட்டார் முதலமைச்சர் விஜய்.


Kugeenthiran-200-2022-seithy
Karan Remax-2010
Asiaan-Salon-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
 gloriousprinters.com 2021
Vaheesan-Remax-2016
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா