Untitled Document
September 13, 2024 [GMT]
'மீறிய நிர்வாகிகள்' - விஜய் எச்சரிக்கை!
[Sunday 2024-08-25 18:00]

தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி மற்றும் பாடலை நடிகர் விஜய் கடந்த 22 ஆம் தேதி பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் அறிமுகப்படுத்தி இருந்தார். வாகை மலர் நடுவே அமைந்திருக்க இருபுறமும் யானைகள் சீறிப்பாயும் வகையில் கொடி அமைக்கப்பட்டு இருந்தது. கொடிக்கான விளக்கம் குறித்து நடக்கவிருக்கும் மாநாட்டில் தெளிவுபடுத்த இருப்பதாகவும் அதுவரை தன்னுடைய கட்சியினர் கொடியை ஏற்றி வைத்து கொண்டாடுமாறு தெரிவித்திருந்தார். அதேநேரம் கொடியை ஏற்றுவதற்கான முறையான அனுமதி மற்றும் நெறிமுறைகளைக் கையாள வேண்டும் என தனது கட்சி நிர்வாகிகளிடம் கோரிக்கை வைத்திருந்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி மற்றும் பாடலை நடிகர் விஜய் கடந்த 22 ஆம் தேதி பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் அறிமுகப்படுத்தி இருந்தார். வாகை மலர் நடுவே அமைந்திருக்க இருபுறமும் யானைகள் சீறிப்பாயும் வகையில் கொடி அமைக்கப்பட்டு இருந்தது. கொடிக்கான விளக்கம் குறித்து நடக்கவிருக்கும் மாநாட்டில் தெளிவுபடுத்த இருப்பதாகவும் அதுவரை தன்னுடைய கட்சியினர் கொடியை ஏற்றி வைத்து கொண்டாடுமாறு தெரிவித்திருந்தார். அதேநேரம் கொடியை ஏற்றுவதற்கான முறையான அனுமதி மற்றும் நெறிமுறைகளைக் கையாள வேண்டும் என தனது கட்சி நிர்வாகிகளிடம் கோரிக்கை வைத்திருந்தார்.

  

இந்நிலையில் 234 தொகுதிகளிலும் இன்று கட்சிக் கொடியை தமிழக வெற்றிக் கழகத்தினர் ஏற்றி வருகின்றனர். சில இடங்களில் கட்சியினர் அனுமதி இல்லாமல் கொடியேற்றியதாக போலீசாருக்கும் கட்சியினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. குறிப்பாக சென்னை புதுப்பேட்டை பகுதியில் தடையை மீறி கொடி ஏற்றியதாக புகார் எழுத நிலையில் அங்கு வந்த போலீசாரிடம் அக்கட்சியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இந்த புகாரைத் தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை சார்பாக எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில் 'அனுமதி இன்றி எங்கும் கொடி கம்பங்கள் வைக்கக்கூடாது. முறையான அனுமதி பெற்றே கொடியை ஏற்ற வேண்டும்' என தொண்டர்களுக்கு தலைமை எச்சரிக்கையுடன் அறிவுறுத்தல் கொடுத்துள்ளது.

  
   Bookmark and Share Seithy.com



‘சடலமாக தாய்; பள்ளியில் இருந்து காணாமல் போன குழந்தை’ - வழக்கில் திடீர் திருப்பம்!
[Friday 2024-09-13 06:00]

நாகை மாவட்டம் கரியாப்படினத்தைச் சேர்ந்த விஜயகுமாரின் மனைவி நீலாவதி. இவர் கணவரைவிட்டுப் பிரிந்து வந்து திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஜாம்புவானோடை கிராமத்தைச் சேர்ந்த ஜெயராமன் மகன் சந்திரசேகரனுடன் சென்று விட்டார். இந்த நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி ராஜாதோப்பு பகுதியில் கடந்த 2 ஆண்டுகளாக ஒரு வாடகை வீட்டில் 7 வயது பெண் குழந்தையுடன் தங்கி இருந்த நீலாவதி (வயது 28) தங்கி இருந்தார். மணமேல்குடியில் தங்கியிருந்த நீலாவதி வீட்டிற்கு சந்திரசேகரும், கோட்டைப்பட்டனத்தைச் சேர்ந்த அருண்பாண்டியன் என்ற நபரும் அடிக்கடி வந்து சென்றுள்ளனர்.



மீண்டும் அதிமுகவில் இணைந்தார் மைத்ரேயன்!
[Friday 2024-09-13 06:00]

பாஜகவின் செயற்குழு உறுப்பினராக இருந்தவரும், முன்னாள் எம்.பி.யுமான மைத்ரேயன் அக்கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் மீண்டும் இணைந்தார். எடப்பாடி பழனிசாமி முன்னிலையில், மைத்ரேயன் அதிமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார்.



“பதவி விலகத் தயார்” - மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி அறிவிப்பு!
[Friday 2024-09-13 06:00]

மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் உள்ள ஆர்ஜி கர் அரசு மருத்துவமனையில் முதுகலை இரண்டாம் ஆண்டு பயிலும் பெண் பயிற்சி மருத்துவர் ஒருவர் கடந்த 8ஆம் தேதி (08.08.2024) பணியில் இருந்த போது பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையின் அடிப்படையில் சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது சிபிஐ தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.



மனைவியை வைத்து சூதாடிய கணவன்: 7 ஏக்கர் நிலம், நகைகள் பறிப்போன அவலம்!
[Thursday 2024-09-12 06:00]

இந்தியாவில் மனைவியை வைத்து சூதாடிய கணவன் மீது வழக்கு பதிவு செய்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம் ராம்பூரை சேர்ந்த கணவர் ஒருவர் சூதாட்டத்திற்கு அடிமையான நிலையில், இறுதியில் தன்னுடைய மனைவியை வைத்தே சூதாடியுள்ளார். மனைவியை வைத்து சூதாடியதோடு தன்னுடைய மனைவியை நண்பர்கள் பாலியல் ரீதியான துஷ்பிரயோகம் செய்யவும் அனுமதித்துள்ளார்.



உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி இல்லத்தில் பிரதமர் மோடி!
[Thursday 2024-09-12 06:00]

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி பண்டிகை கடந்த 7ஆம் தேதி கொண்டாடப்பட்டது. இந்நிலையில் டெல்லியில் உள்ள உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் இல்லத்தில் நேற்று (11.09.2024) நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி பூஜையில் பிரதமர் மோடி பங்கேற்றார். இது தொடர்பான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதே சமயம் பலரும் பல்வேறு விமர்சனங்களை முன் வைத்து வருகின்றனர்.



“வெட்கப்பட வேண்டும்” - பாஜகவை கடுமையாக சாடிய மல்லிகார்ஜுன கார்கே!
[Thursday 2024-09-12 06:00]

ஜம்மு காஷ்மீரில் மொத்தம் உள்ள 90 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு மூன்று கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் முதல் கட்ட வாக்குப்பதிவு செப்டம்பர் 18ஆம் தேதி நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு செப்டம்பர் 25ஆம் தேதியும், மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு அக்டோபர் 1ஆம் தேதியும் நடைபெற உள்ளது. இதில் பதிவான வாக்குகள் அக்டோபர் 8ஆம் தேதி எண்ணப்படுகின்றன. இத்தகைய பரபரப்பான சூழலில் பாஜகவின் தேர்தல் அறிக்கையை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கடந்த 6 ஆம் தேதி (06.09.2024)வெளியிட்டார்.



மகாவிஷ்ணுவுக்கு போலீஸ் காவல் விதிப்பு!
[Wednesday 2024-09-11 18:00]

சென்னையில் உள்ள இரு அரசுப் பள்ளிகளில் அண்மையில் ஆன்மீக சொற்பொழிவு நடத்தப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் இந்த சொற்பொழிவை நடத்திய மகாவிஷ்ணு கைது செய்யப்பட்டார். மாற்றுத்திறனாளிகளை சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாகக் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டு அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. மொத்தம் 5 பிரிவுகளின் கீழ் மகாவிஷ்ணு மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர் கடந்த 7ஆம் தேதி (07.09.2024) போலீசார் கைது செய்தனர். அதனைத் தொடர்ந்து நீதிமன்ற காவலில் வைக்கப்பட்ட மகாவிஷ்ணு இன்று (11.09.2024) சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.



மகள்களை தூக்கில் தொங்கவிட்ட தந்தை: போராடி மீட்ட தாய்!
[Wednesday 2024-09-11 18:00]

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டைக்கு அருகே அமைந்துள்ளது கீழ்வேலம் கிராமம். இங்குள்ள மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் ராஜு. 45 வயதான இவர் ஆட்டோ டிரைவராக வேலை செய்து வந்தார். இவரது மனைவி இந்திரா. இவருக்கு வயது 41. ராணிப்பேட்டையில் உள்ள ஷூ கடையில் வேலை செய்து வந்தார். இந்த தம்பதிக்கு 22 மற்றும் 17 வயதில் இரண்டு மகள்கள் உள்ளனர். இதனிடையே, ராஜு குடும்பம் கடந்த சில ஆண்டுகளாக வறுமையில் வாடியிருக்கிறது. அதனை சரி செய்வதற்காக ராஜு பல்வேறு தனியார் நிதி நிறுவனங்களில் கடன் வாங்கியுள்ளார்.



சாப்பிட்ட உணவுக்கு பணம் கேட்ட ஊழியரை 1 கி.மீ தூரம் காரில் இழுத்துச் சென்ற கும்பல்!
[Wednesday 2024-09-11 18:00]

உணவகத்தில் சாப்பிட்ட உணவுக்கு பணம் கேட்ட வெயிட்டரை 1 கி.மீ தூரம் காரில் இழுத்துச் சென்ற நபர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்திய மாநிலமான மஹாராஷ்டிரா, பீட் மாவட்டத்தில் மெஹ்கர் பந்த்ராபூர் பால்கி நெடுஞ்சாலையில் உணவகம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த உணவகத்திற்கு காரில் வந்து 3 பேர் சாப்பிட்டுள்ளனர். பின்பு, வெயிட்டரை அழைத்து பணம் கொடுப்பதற்காக UPI QR code ஸ்கேனரை கொண்டு வருமாறு கூறினர்.



விஜயை வம்புக்கு இழுக்கும் பாஜக!
[Wednesday 2024-09-11 18:00]

விநாயகர் சதுர்த்தியையொட்டி திரைப்படத்தை வெளியிட்டு சம்பாதிக்கும் விஜய்க்கு வாழ்த்து கூற மனமில்லையா என்று பாஜக மாநிலச் செயலாளர் கேள்வி எழுப்பியுள்ளார். பழநியில் நேற்று பாஜக மாநிலச் செயலாளர் வினோஜ் பி.செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், "பழநி அடிவாரப் பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டதால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.



“நீர்நிலைகளைப் புனரமைக்க ரூ.500 கோடி ஒதுக்கீடு” - முதல்வர் ஸ்டாலின் உத்தரவு!
[Wednesday 2024-09-11 06:00]

ஊரகப்பகுதிகளில் 5 ஆயிரம் நீர்நிலைகளைப் புனரமைக்க ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதாகத் தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி அறிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், “தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சி, நீர் நிலைகளைத் தூர்வாரி, மழைநீரைச் சேகரித்து நீர் மேலாண்மை செய்வதற்கு முன்னுரிமை அளித்து பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.



அரசு உதவி பெறும் பள்ளிகளில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு!
[Wednesday 2024-09-11 06:00]

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வத்தலக்குண்டில் அரசு உதவி பெறும் திருச்சிலுவை பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் புனித தோமையார் தொடக்கப் பள்ளிகளில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு மேற்கொண்டார். அப்போது மாணவிகளின் வாசிப்புத் திறன் குறித்துக் கேட்டறிந்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பாடங்களை வாசிக்கும் போது சரியான உச்சரிப்புடன் சத்தமாக வாசிக்க வேண்டும் என மாணவிகளிடம் கேட்டுக்கொண்டார்.



அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு எதிரொலி: 4 பேர் பணியிட மாற்றம்!
[Wednesday 2024-09-11 06:00]

மதுரை மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் (09.09.2024) ஆய்வு மேற்கொண்டார். அப்போது அரசு அதிகாரிகளின் செயல்பாடுகளில் தொய்வு காணப்பட்டதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்திருந்ததாகத் தகவல் வெளியாகியிருந்தது. இந்நிலையில் வருவாய் வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர், சுகாதார ஆய்வாளர், சமையலர் என 3 அலுவலர்கள் உள்பட 4 பேரை பணியிட மாற்றம் செய்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.



காணாமல் போன சிறுவன் சாக்கு மூட்டையில் சடலமாக மீட்பு: விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் உண்மை!
[Tuesday 2024-09-10 18:00]

முன்பகையின் காரணமாக பக்கத்து வீட்டில் உள்ள 3 வயது சிறுவனை கொலை செய்து சாக்கு மூட்டையில் வைத்துள்ள அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது. தமிழக மாவட்டமான திருநெல்வேலி, ராதாபுரம் அருகே ஆத்துகுறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஷ். கூலி தொழிலாளியான இவருக்கு 3 வயதில் மகன் ஒருவர் இருந்தார். இந்நிலையில், நேற்று காலை 9 மணிக்கு விளையாடிக் கொண்டிருந்த இவருடைய மகனை காணவில்லை என்று தேடியுள்ளனர். தொடர்ந்து ஒரு மணி நேரமாக தேடியும் குழந்தையை கண்டுபிடிக்க முடியவில்லை.



கள்ளிப்பால் குடித்த பள்ளி மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!
[Tuesday 2024-09-10 18:00]

அரியலூர் மாவட்டம் குனமங்கலத்தில் அரசு தொடக்கப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் அப்பகுதியைச் சேர்ந்த 84 மாணவர்கள் படித்து வருகின்றனர். இத்தகைய சூழலில் தான் இந்த பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவர் நேற்று (09.09.2024) பள்ளிக்கு அருகில் உள்ள கள்ளிச்செடியில் இருந்த கள்ளிப்பாலைச் சுவைத்துள்ளார்.



யூடியூப் பார்த்து அறுவை சிகிச்சை செய்த போலி மருத்துவர்: சிறுவன் மரணம்!
[Tuesday 2024-09-10 18:00]

யூடியூப் பார்த்து அறுவை சிகிச்சை செய்த போலி மருத்துவரால் 15 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய மாநிலமான பீகார், சரன் மாவட்டத்தை சேர்ந்த சிறுவன் கிருஷ்ண குமார் (15). இந்த சிறுவனுக்கு பலமுறை வாந்தி வந்து உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால், சிறுவனின் பெற்றோர் சரன் நகரில்உள்ள கணபதி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு, அஜித் குமார் புரி என்ற மருத்துவர் சிறுவனுக்கு சிகிச்சை அளித்துள்ளார்.



தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை!
[Tuesday 2024-09-10 18:00]

தமிழகத்தின் 15 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் அடுத்த 7 நாட்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வுமையம் தெரிவித்து இருந்தது.



“ஸ்ரீபெரும்புதூரில் ஹெச்.பி. லேப்டாப் தொழிற்சாலை’ - மத்திய அமைச்சர் தகவல்!
[Tuesday 2024-09-10 06:00]

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் கணினி உற்பத்தித் துறையில் முன்னணி நிறுவனமாக விளங்கும் ஹெச்.பி. நிறுவனத்தின் லேப்டாப் தொழிற்சாலை அமைகிறது என ரயில்வே, தகவல் மற்றும் ஒலிபரப்பு, மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். 3 ஆயிரத்து 380 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்த லேப்டாப் தொழிற்சாலை அமைய உள்ளது.



ஆன்லைன் பரிவர்த்தனைகளுக்கு ஜி.எஸ்.டி. வரி விதிப்பு தொடர்பான முடிவு ஒத்திவைப்பு!
[Tuesday 2024-09-10 06:00]

இந்தியாவில் 2 ஆயிரம் ரூபாய்க்குக் குறைவாகப் பணப்பரிவர்த்தனை செய்யப்படும் யுபிஐ ஆன்லைன் பரிவர்த்தனைகளுக்கு 18% ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட உள்ளதாக மக்கள் மத்தியில் தகவல்கள் பரவின. இந்நிலையில் ஜிஎஸ்டி கவுன்சிலின் 54வது கூட்டம் நேற்று (09.09.2024) டெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு வரி விதிப்பது தொடர்பாக அறிவிப்பு வெளியாகலாம் என மக்கள் மத்தியில் தகவல் வெளியாகி இருந்தது.



இந்தியா-அமீரகம் இடையே 5 ஒப்பந்தங்கள் கையெழுத்து!
[Tuesday 2024-09-10 06:00]

அபுதாபி பட்டத்து இளவரசர் ஷேக் காலித் பின் முகமது பின் சயீத் அல் நஹ்யான் (Sheikh Khaled bin Mohamed bin Zayed Al Nahyan) இந்திய பிரதமர் நரேந்திர மோடியை இன்று (திங்கள்கிழமை) சந்தித்தார். இதன்போது இரு தலைவர்களும் அணுசக்தி, எண்ணெய் மற்றும் உணவுப் பூங்காக்கள் தொடர்பான ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டனர். ஐக்கிய அரபு அமீரகத்துடன் இந்தியா அதிகாரப்பூர்வமாக உறவை ஏற்படுத்துவது இதுவே முதல் முறையாகும்.


Kugeenthiran-200-2022-seithy
Karan Remax-2010
Mahesan-Remax-169515-Seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Airlinktravel-2020-01-01
 gloriousprinters.com 2021
NKS-Ketha-04-11-2021
Asayan-Salon-2022-seithy
Rajeef sebarasha 2023/04/19
Vaheesan-Remax-2016
Logan-Kumaresh-Homelife-02-02-2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா