Untitled Document
September 18, 2024 [GMT]
அரசு உதவி பெறும் பள்ளிகளில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு!
[Wednesday 2024-09-11 06:00]

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வத்தலக்குண்டில் அரசு உதவி பெறும் திருச்சிலுவை பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் புனித தோமையார் தொடக்கப் பள்ளிகளில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு மேற்கொண்டார். அப்போது மாணவிகளின் வாசிப்புத் திறன் குறித்துக் கேட்டறிந்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பாடங்களை வாசிக்கும் போது சரியான உச்சரிப்புடன் சத்தமாக வாசிக்க வேண்டும் என மாணவிகளிடம் கேட்டுக்கொண்டார்.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வத்தலக்குண்டில் அரசு உதவி பெறும் திருச்சிலுவை பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் புனித தோமையார் தொடக்கப் பள்ளிகளில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு மேற்கொண்டார். அப்போது மாணவிகளின் வாசிப்புத் திறன் குறித்துக் கேட்டறிந்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பாடங்களை வாசிக்கும் போது சரியான உச்சரிப்புடன் சத்தமாக வாசிக்க வேண்டும் என மாணவிகளிடம் கேட்டுக்கொண்டார்.

  

பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவிகளிடையே உரையாடிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அரசு பொதுத்தேர்வுகளை தைரியத்துடன் எதிர் கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார் பின்னர் பள்ளியின் ஆய்வகம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் அமைச்சர் ஆய்வுகளை மேற்கொண்டார்.

சீருடை அணியாத மாணவி ஒருவர் தனக்குப் பிறந்தநாள் என்று கூற அந்த மாணவிக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பிறந்தநாள் வாழ்த்துக்களைக் கூறி மகிழ்ச்சியை ஏற்படுத்தினார். தொடக்கப்பள்ளியில் குழந்தைகள் வருகை மற்றும் அவர்களின் பாதுகாப்பு குறித்து ஆசிரியர்களுக்கு அவர் ஆலோசனை வழங்கினார். இந்த ஆய்வின் போது பள்ளி தலைமை ஆசிரியர் மனோகரி, அருட்தந்தை பால்ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

  
   Bookmark and Share Seithy.com



ஜம்மு காஷ்மீர் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது!
[Wednesday 2024-09-18 07:00]

ஜம்மு காஷ்மீரில் மொத்தம் உள்ள 90 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு மூன்று கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் முதல் கட்ட வாக்குப்பதிவு செப்டம்பர் 18ஆம் தேதியும், அதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு செப்டம்பர் 25ஆம் தேதியும், மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு அக்டோபர் 1ஆம் தேதியும் நடைபெற உள்ளது எனத் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இதில் பதிவான வாக்குகள் அக்டோபர் 8ஆம் தேதி எண்ணப்படுகின்றன.



பள்ளி மாணவிக்கு ஆண் குழந்தை: வாலிபருக்கு வலைவீச்சு!
[Wednesday 2024-09-18 07:00]

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பகுதியில் உள்ள ஒரு அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில், அருகில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த ஒரு மாணவி ஒருவர் 12 ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 15ஆம் தேதி மாலை வீட்டில் இருந்த போது மாணவிக்கு திடீர் வயிற்றுவலி எனத் துடித்துள்ளார். அப்போது மாணவியின் பெற்றோர் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்துள்ளனர். இதனையடுத்து 108 ஆம்புலன்ஸில் மாணவியை ஏற்றிக் கொண்டு அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு விரைந்தனர்.



“2026ஆம் ஆண்டு தேர்தல் தான் நம்முடைய இலக்கு” - முதல்வர் மு.க. ஸ்டாலின்!
[Wednesday 2024-09-18 07:00]

திமுக தொடங்கி 75 ஆண்டுகள் நிறைவு பெற்றதையொட்டி பவள விழாவும், ஆண்டுதோறும் கொண்டாடப்படும் முப்பெரும் விழாவும் சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் (17.09.2024) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திமுக முப்பெரும் விழாவில் ஏ.ஐ. தொழில்நுட்பத்தின் மூலம் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கலைஞர் உரையாற்றினார். இதனையடுத்து தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின், பெரியார் விருது பாப்பம்மாளுக்கும், அண்ணா விருது அறந்தாங்கி 'மிசா' இராமநாதனுக்கும், பாவேந்தர் விருது கவிஞர் தமிழ் தாசனுக்கும், பேராசிரியர் விருது வி.பி. ராசனுக்கும், கலைஞர் விருது எஸ். ஜெகத்ரட்சகனுக்கும், மு.க. ஸ்டாலின் விருது எஸ்.எஸ். பழனிமாணிக்கத்திற்கும் வழங்கினார்.



டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா!
[Tuesday 2024-09-17 18:00]

டெல்லி மதுபானக் கொள்கை தொடர்பாகப் பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறையாலும், சி.பி.ஐ.யாலும் கைது செய்யப்பட்ட டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. அதன் பேரில், கடந்த 13ஆம் தேதி திகார் சிறையில் இருந்து கெஜ்ரிவால் வெளியே வந்தார். இதையடுத்து ஆம் ஆத்மி கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் பேசிய கெஜ்ரிவால் இரண்டு நாட்களில் தன்னுடைய முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாகவும், நவம்பர் மாதம் நடைபெறும் மகாராஷ்டிரா தேர்தலுடன் டெல்லி தேர்தலும் நடக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார். அரவிந்த் கெஜ்ரிவாலின் இந்த திடீர் அறிவிப்பு, ஆம் ஆத்மி கட்சியினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.



திமுக முப்பெரும் விழா தொடங்கியது!
[Tuesday 2024-09-17 18:00]

தி.மு.க. தொடங்கி 75 ஆண்டுகள் நிறைவு பெற்றதையொட்டி பவள விழாவும், ஆண்டுதோறும் கொண்டாடப்படும் முப்பெரும் விழாவும் சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் இன்று (17.09.2024) மாலை முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பெரியார் விருது பாப்பம்மாளுக்கும், அண்ணா விருது அறந்தாங்கி 'மிசா' இராமநாதனுக்கும், பாவேந்தர் விருது கவிஞர் தமிழ் தாசனுக்கும் வழங்க உள்ளார்.



ஆசிய சாம்பியன்ஷிப் ஹாக்கி தொடர்: இந்திய அணி சாம்பியன்!
[Tuesday 2024-09-17 18:00]

ஆசிய சாம்பியன்ஷிப் ஹாக்கி தொடரின் இறுதிப்போட்டியில் சீனாவை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. சீனாவில் ஆசிய சாம்பியன் ஷிப் ஹாக்கி தொடர் நடைபெற்று வந்தது. இந்த தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா - சீனா அணிகள் மோதின. அதன்படி நடைபெற்ற இறுதிப்போட்டியில் சீனாவை 1க்கு 0 என்ற கணக்கில் வீழ்த்தி, இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. இந்த போட்டியின் போது வெற்றிக்கான கோலை இந்தியாவின் ஹாக்கி வீரர் ஜுக்ராஜ் சிங் அடித்து அசத்தினார்.



வெளிப்புற நோயாளிகள் சிகிச்சை பிரிவில் ஒரே ஒரு மருத்துவர்? - நோயாளிகள் அவதி!
[Tuesday 2024-09-17 18:00]

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான உள் மற்றும் வெளி நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் வெளி நோயாளிகள் பிரிவில் நேற்று(16.09.2024) ஒரே ஒரு மருத்துவர் இருந்ததாகவும், அதனால் சிகிச்சைக்காக வந்த வெளிப்புற நோயாளிகள் (பொதுமக்கள்) நீண்ட வரிசையில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.



“சாதிப் பெயர்கள் வேண்டாம்” - கனிமொழி எம்.பி. வலியுறுத்தல்!
[Tuesday 2024-09-17 06:00]

சென்னை எழும்பூரில், நெல்லை - தூத்துக்குடி நாடார் மகிமை பரிபாலன சங்கத்தின் சார்பில் வியாபாரிகளுக்கான கட்டட திறப்பு விழா விடுதிக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு மற்றும் பெருந்தலைவர் காமராஜர் சிலை திறப்பு நிகழ்ச்சி ஆகியவை இன்று (16.09.2024) நடைபெற்றது. இதில் திமுக துணைப் பொதுச் செயலாளரும், தூத்துக்குடி திமுக எம்.பி.யுமான கனிமொழி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.



முதல்வர் ஸ்டாலினுக்கு ஆ. ராசா எம்.பி. கடிதம்!
[Tuesday 2024-09-17 06:00]

அருந்ததியர் மக்களுக்குப் பட்டா வழங்கிட வருவாய் அலுவலக நிர்வாக அலகு அமைக்கத் தனி மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் போதுமான வட்டாட்சியர்கள் உள்ளடக்கிய குழு அமைத்து பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனத் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு நீலகிரி திமுக எம்.பி. ஆ.ராசா கோரிக்கை விடுத்துள்ளார்.



‘கலைஞர் பூங்கா’ கட்டண வசூல் விவகாரம் குறித்து மாநகராட்சி ஆணையர் விளக்கம்!
[Tuesday 2024-09-17 06:00]

புதுக்கோட்டை நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள கலைஞர் பூங்காவில் நுழைவுக் கட்டணம் குறித்து "நுகர்வோர் நலன் மக்கள் விழிப்புணர்ச்சி மற்றும் ஊழல் தடுப்பு இயக்கம் தமிழ்நாடு" புதுக்கோட்டைக் கிளை சார்பில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு மாநகராட்சி பொது தகவல் அலுவலர் 11 ந் தேதி கொடுத்துள்ள பதில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.



ராகுல் காந்தியின் நாக்கை அறுப்பவருக்கு ரூ.11 லட்சம் பரிசு: பிரபலத்தின் அறிவிப்பால் சர்ச்சை!
[Monday 2024-09-16 18:00]

மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியின் நாக்கை அறுப்பவருக்கு ரூ.11 லட்சம் பரிசு என்று எம்.எல்.ஏ ஒருவர் அறிவித்துள்ளார். சமீபத்தில் ராகுல் காந்தி அமெரிக்க பயணம் மேற்கொண்டிருந்தார். அங்கு அவர் பேசுகையில், "இந்திய நாடானது அனைவருக்கும் வாய்ப்பு வழங்கும் நாடாக இருக்குமானால் இட ஒதுக்கீட்டை நிறுத்துவது குறித்து காங்கிரஸ் கட்சி யோசிக்கும்.



சாலையை சீரமைப்பதற்காக சேற்றில் படுத்து கோரிக்கை வைத்த பெண்!
[Monday 2024-09-16 18:00]

சாலையை சீரமைப்பதற்காக சேறு நிறைந்த சாலையில் படுத்துக்கொண்டும், கும்பிட்டும் பெண் ஒருவர் கோரிக்கை வைத்துள்ளார். இந்திய மாநிலமான மத்திய பிரதேசம், ஷியோபூர் மாவட்டத்தில் ஒரு பழங்குயின பெண் சேறு நிறைந்த சாலையில் படுத்து கும்பிட்டு செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.



அரசு அதிகாரியின் வேலைக்கு வினையான ரீல்ஸ் வீடியோக்கள்!
[Monday 2024-09-16 18:00]

வேலையில் கவனம் செலுத்தாமல் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்த அரசு அதிகாரியின் வேலைக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்திய மாநிலமான ஹிமாச்சல பிரதேசம், காங்க்ரா மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஓஷின் ஷர்மா. இவர் தனது பள்ளிப்படிப்பை சிம்லாவில் முடித்தார். இவரது பெற்றோர் இருவருமே அரசு பணியில் இருந்தவர்கள். ஓஷின் ஷர்மாவுக்கு மருத்துவராக வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால், அவர் பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் வேதியியலில் முதுகலைப் பட்டம் பெற்றார்.



நிபா தொற்றுக்கு ஒருவர் மரணம்!
[Monday 2024-09-16 18:00]

தென்னிந்தியாவின் கேரளா மாநிலத்தில் நிபா வைரஸால் 24 வயது மாணவர் ஒருவர் மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த மாணவருடன் தொடர்புடைய 151 பேர்கள் தற்போது தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் மருத்துவ அதிகாரிகள் தரிவித்துள்ளனர். ஜூலை மாதத்திற்கு பின்னர் நிபா பாதிப்பு காரணமாக கேரளாவில் இது இரண்டாவது மரணம் என்றே கூறப்படுகிறது.



‘விநாயகர் சிலைகள் அமைதியான முறையில் கரைக்கப்பட்டன’ - சென்னை காவல்துறை!
[Monday 2024-09-16 06:00]

சென்னையில் விநாயகர் சிலைகள் அமைதியான முறையில் கரைக்கப்பட்டதாகச் சென்னை மாநகர காவல் ஆணையர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாகச் சென்னை மாநகர காவல் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், “கடந்த 07.09.2024 அன்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, பல்வேறு இந்து அமைப்புகள் மற்றும் பொதுமக்கள், காவல்துறை அனுமதி பெற்று, சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பொது இடங்களில் 1,524 விநாயகர் சிலைகளை நிறுவி உரிய வழிகாட்டுதல் நெறிமுறைகளை கடைப்பிடித்து வழிபாடு செய்து வந்தனர்.



முதல்வர் ஸ்டாலினை சந்திக்கிறார் தொல். திருமாவளவன் எம்.பி.!
[Monday 2024-09-16 06:00]

தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காகத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆகஸ்ட் 27ஆம் தேதி அமெரிக்கா சென்றடைந்தார். இந்த பயணத்தின் போது பல்வேறு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அதோடு முதல்வர் மு.க. ஸ்டாலின் அமெரிக்காவில் உள்ள புலம்பெயர் தமிழர்கள், தமிழ்ச் சங்கத்தைச் சேர்ந்தவர்களுடன் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு கலந்துரையாடலிலும் ஈடுபட்டார். அதே சமயம் முதல்வரின் இந்த அமெரிக்கப் பயணத்தில் மொத்தமாகத் தமிழகத்திற்கு 7,616 கோடி ரூபாய் தொழில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி இருந்தது.



‘சமூகநீதி நாள் உறுதிமொழி’ ஏற்பு நிகழ்ச்சி - திமுக அறிவிப்பு!
[Monday 2024-09-16 06:00]

தந்தை பெரியார் பிறந்தநாளை (செப்டம்பர் 17) முன்னிட்டு திமுக சார்பில் அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தலைமையில் ‘சமூகநீதி நாள் உறுதிமொழி’ நாளை மறுநாள் (17.09.2024) ஏற்கப்பட உள்ளதாக திமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது. இது குறித்து திமுக தலைமைக் கழகத்தின் சார்பில் இன்று (15.09.2024) வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “தந்தை பெரியாரின் ஒவ்வொரு பிறந்த நாளும் ‘சமூகநீதி நாளாக’ கடைப்பிடிக்கப்படும் என்றும்; அப்பிறந்தநாள் அன்று ‘சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்க வேண்டும்’ எனத் தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கடந்த 6.9.2021 அன்று சட்டப்பேரவையில் அறிவித்தார்.



“உத்தரகாண்ட் நிலச்சரிவில் சிக்கியவர்கள் தமிழகம் திரும்புவது எப்போது?” - தமிழக அரசு தகவல்!
[Sunday 2024-09-15 18:00]

உத்தரகாண்ட் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாகக் கனமழை பெய்து வருகிறது. இத்தகைய சூழலில் தான், அம்மாநிலத்தின் ஆதி கைலாஷ் பகுதிக்குத் தமிழகத்தில் இருந்து சிலர் புனித பயணம் மேற்கொண்டனர். இதற்கிடையில், தவாகாட் - தானாக்பூர் தேசிய நெடுஞ்சாலையில் திடீரென்று நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால், புனித பயணம் மேற்கொண்ட தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் மலைப்பகுதியில் இருந்து கீழே வரமுடியாமல் தவித்து வந்தனர்.



“திமுகவுடன் கூட்டணி தொடருமா?” - தொல். திருமா பேட்டி!
[Sunday 2024-09-15 18:00]

திருச்சி விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் நிருபர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது, “மது ஒழிப்பில் மத்திய, மாநில அரசுகளுக்குத் தான் பொறுப்பு உள்ளது என்பது போல ஒரு பார்வை இருக்கிறது. இந்திய அரசமைப்புச் சட்டப்பிரிவு 47 அதற்கான ஒரு வாய்ப்பை உருவாக்கித் தருகிறது. இது தொடர்பாக இரண்டாவது ஐந்தாண்டுக் காலத்திலும், மூன்றாவது ஐந்தாண்டுக் காலத்திலும் விரிவாகக் காங்கிரஸ் ஆட்சிக் காலத்திலே பேசப்பட்டிருக்கிறது.



உத்தரகாண்ட் நிலச்சரிவு: 30 தமிழர்கள் மீட்பு!
[Sunday 2024-09-15 18:00]

உத்தரகாண்ட் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாகக் கனமழை பெய்து வருகிறது. இத்தகைய சூழலில் தான், அம்மாநிலத்தின் ஆதி கைலாஷ் பகுதிக்குத் தமிழகத்தில் இருந்து சிலர் புனித பயணம் மேற்கொண்டனர். இதற்கிடையில், தவாகாட் - தானாக்பூர் தேசிய நெடுஞ்சாலையில் திடீரென்று நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால், புனித பயணம் மேற்கொண்ட தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் மலைப்பகுதியில் இருந்து கீழே வரமுடியாமல் தவித்து வந்தனர்.


Karan Remax-2010
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Vaheesan-Remax-2016
Rajeef sebarasha 2023/04/19
Asayan-Salon-2022-seithy
NKS-Ketha-04-11-2021
Kugeenthiran-200-2022-seithy
 gloriousprinters.com 2021
Airlinktravel-2020-01-01
Ambikajewellers-01-08-2021-seithy
Mahesan-Remax-169515-Seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா