Untitled Document
November 9, 2024 [GMT]
"கள்ளத்தோணியில் இலங்கை பயணம் முதல் மனைவியின் மரணம் வரை" - ஆ.ராசா பகிர்ந்த குடும்ப ரகசியம்!
[Friday 2024-09-13 16:00]

தன்னுடைய மனைவி புற்றுநோயால் இறந்தது தொடர்பாகவும், குடும்ப விடயங்கள் தொடர்பாகவும் ஆ.ராசா எம்பி உணர்ச்சி பூர்வமாக பேசியுள்ளார். திமுக எம்பி ஆ.ராசா பேட்டி ஒன்றில் உணர்ச்சி பூர்வமான தகவல்களை பகிர்ந்து கொண்டார். அவர் பேசுகையில்,

தன்னுடைய மனைவி புற்றுநோயால் இறந்தது தொடர்பாகவும், குடும்ப விடயங்கள் தொடர்பாகவும் ஆ.ராசா எம்பி உணர்ச்சி பூர்வமாக பேசியுள்ளார். திமுக எம்பி ஆ.ராசா பேட்டி ஒன்றில் உணர்ச்சி பூர்வமான தகவல்களை பகிர்ந்து கொண்டார். அவர் பேசுகையில், "வீட்டில் என்னை எல்லோரும் ராஜா என்று தான் அழைப்பார்கள். கலைஞர் கருணாநிதியும் என்னை ராஜா என்று தான் அழைப்பார். ஆனால், தமிழ் மீது கொண்ட பற்று காரணாமாக ராசா என்றே நான் கையெழுத்து போடுவேன். அதுவே எனக்கு அரசியலிலும் நிலைத்தது.

  

என்னுடைய குடும்பத்தில் நான் 8 -வது பையன். 4 அக்காக்கள், மூன்று அண்ணன்கள் இருக்கிறார்கள்.

கடந்த 1910 -ம் ஆண்டில் என்னுடைய தாத்தா குடும்பத்தை வறுமையில் இருந்து காப்பாற்ற கள்ளத்தோணியில் இலங்கைக்கு சென்றார்.

அங்கு வெள்ளக்கார அகதியிடம் வேலை பார்த்து சம்பாதித்தார். பின்னர் 10 பசு மாடுகள் வாங்கினார்.

அடுத்து ஜவுளிக்கடை வைத்து டெய்லராக மாறினார். அங்குள்ள தோட்டத் தொழிலாளர்கள் அனைவருக்கும் இவர் தான் தையல்காரர்கள். அவருக்கு இஸ்லாமியர் ஒருவர் தான் உதவி செய்தார்.

என்னுடன் பிறந்த 7 பேரும் இலங்கையில் பிறந்தவர்கள்தான். நான் மட்டும்தான் இந்தியாவில் பிறந்தவன். என்னுடைய அப்பா 1962 -ல் தமிழ்நாட்டிற்கு திரும்பினார். நான் 1964 -ம் ஆண்டில் பிறந்தேன்.

என்னுடன் பிறந்தவர்கள் அனைவரும் அரசு அதிகாரிகள். நான் சட்டம் படித்து மத்திய அமைச்சர் அளவுக்கு உயர்ந்தேன். என் மகளும் தற்போது லண்டனில் சட்டம் படிக்கிறார். எங்கள் குடும்பத்தை இந்தளவுக்கு உயர்ந்தியது திராவிட அரசியல்தான்.

எனக்கு கடவுள் பக்தி இல்லை. என் மனைவி பக்திமான். அவருக்கு புற்றுநோய் வந்து இறந்தார். எனக்கு அப்போது உணர்ச்சிகளை கட்டுப்படுத்த தெரியவில்லை. எனது மகள் தான் என்னை சமாதப்படுத்தினார்.

எம்பி சம்பளம் ஒன்றரை லட்சம் கிடைத்ததை வைத்து தான் 2ஜி வழக்கில் இருந்து வாதாடி வெளியில் வந்தேன்" என்றார்.

  
   Bookmark and Share Seithy.com



ட்ரம்பிற்காக கட்டப்பட்ட கோயிலில் வழிபாடு செய்த இந்திய கிராம மக்கள்!
[Saturday 2024-11-09 18:00]

அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் பதவியேற்கவுள்ள நிலையில் இந்திய கிராமம் ஒன்றில் அவரது சிலைக்கு வழிபாடு செய்துள்ளனர். அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த டொனால்டு ட்ரம்பும், ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த கமலா ஹாரிஸும் போட்டியிட்டனர். இதில், டொனால்டு ட்ரம்ப் வெற்றி பெற்றார்.



இந்தியாவின் முடிவால் உலக நாடுகளுக்கு பலன்: இந்திய அமைச்சர் கருத்து!
[Saturday 2024-11-09 18:00]

ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதால் உலக நாடுகளுக்கு பலன் என்று இந்திய அமைச்சர் கருத்து தெரிவித்துள்ளார். கடந்த 2022 -ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடங்க ஆரம்பித்தது. இதனை கண்டிக்கும் விதமாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள், ரஷ்யா மீது பொருளாதார தடைகள் விதித்தன.



காருக்கு ரூ.4 லட்சம் செலவு செய்து நல்லடக்கம் செய்த உரிமையாளர்!
[Saturday 2024-11-09 18:00]

ரூ.4 லட்சம் செலவு செய்து காருக்கு நல்லடக்கம் செய்த நிகழ்வில் சுமார் 1500 -க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்திய மாநிலமான குஜராத், அம்ரேலி மாவட்டத்தைச் சேந்தவர் சஞ்சய் பொலாரா. இவர் 12 ஆண்டுகளுக்கு முன்பாக வேகன் ஆர் காரை வாங்கியுள்ளார். இந்த காரை வாங்கிய பின்னர் தனக்கு அதிர்ஷ்டம் ஏற்பட்டதாகவும், சமுதாயத்தில் தனக்கு மதிப்பு ஏற்பட்டதாகவும் பொலாரா கூறுகிறார். இந்த காரால் நல்ல தொழில் வளர்ச்சி ஏற்பட்டு குடும்பமும் வளர்ச்சி அடைந்துள்ளது.



மண்ணுக்குள் புதைக்கப்பட்ட பின் உயிருடன் எழுந்த பெண்!
[Saturday 2024-11-09 18:00]

இந்திய மாநிலம் கர்நாடகாவில் யோகா ஆசிரியை ஒருவர், மண்ணுக்குள் புதைக்கப்பட்ட பின்னர் மூச்சுப் பயிற்சி மூலம் உயிருடன் எழுந்து வந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. கர்நாடக மாநிலம் சிக்கபல்லாபூர் மாவட்டத்தில் உள்ள வனப்பகுதிக்கு, யோகா ஆசிரியை அர்ச்சனா என்பவரை காரில் கும்பல் ஒன்று அழைத்துச் சென்றுள்ளது. அங்கு அவரை கடுமையாக தாக்கிய அந்த கும்பல் குழி தோண்டி, சேறு மற்றும் கிளைகளால் மூடி அர்ச்சனாவை புதைத்துவிட்டு, அவரது பொருட்களை திருடி தப்பிச்சென்றுவிட்டது.



தமிழகத்தில் இன்று 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!
[Friday 2024-11-08 18:00]

தமிழகத்தில் இன்று 3 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்டை சென்னை வானிலை விடுத்துள்ளது. வானிலை மையம் கூறுகையில்.., தமிழகத்தில் இன்று 3 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கான வாய்ப்பு உள்ளது.



இனி பெண்களுக்கு ஆண் டெய்லர் அளவு எடுக்க கூடாது: இந்திய மாநிலம் ஒன்றில் முடிவு!
[Friday 2024-11-08 18:00]

பெண்களுக்கு ஆண் டெய்லர் அளவு எடுக்கக் கூடாது என்று உத்தர பிரதேச மாநில மகளிர் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. பெண்களுடைய பாதுகாப்பிற்காக தற்போது நடைமுறையில் உள்ள வழிகாட்டு நெறிமுறைகளுடன் கூடுதலாக என்னென்ன சேர்க்கலாம் என்று உத்தர பிரதேச மாநில மகளிர் ஆணையம் உறுப்பினர்கள் விவாதம் செய்துள்ளனர்.



ஒரே பள்ளியில் படிக்கும் 120 இரட்டையர்கள்!
[Friday 2024-11-08 18:00]

ஒரு பள்ளியில் மொத்தம் 120 இரட்டையர்கள் படித்து வருவதால் ஆசிரியர்களுக்கு பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்திய மாநிலமான பஞ்சாப், ஜலந்தர் மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில் 60 இரட்டை குழந்தைகள் என்று மொத்தமாக 120 இரட்டையர் மாணவர்கள் படித்து வருகின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இரட்டையர்களின் எண்ணிக்கை 47 ஆக இருந்த நிலையில் தற்போது உயர்ந்துள்ளது.



கடுமையாக விமர்சித்த நிலையில் சீமானுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய விஜய்!
[Friday 2024-11-08 18:00]

தமிழக வெற்றி கழகத்தின் மாநாடு குறித்து சீமான் கடுமையாக விமர்சனம் செய்த நிலையில் கட்சியின் தலைவர் விஜய் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தனது எக்ஸ் தளத்தில், “நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சகோதரர் சீமானுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.



சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு!...
[Friday 2024-11-08 06:00]

தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் சபரிமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என மேலாண் இயக்குநர் இரா. மோகன் தகவல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “கேரள மாநிலத்தில் மிகவும் பிரசித்திபெற்ற சபரிமலையில் உள்ள ஐயப்பன் ஆலயத்தில், ஒவ்வொரு ஆண்டும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு நிகழ்ச்சி நடைபெறும். இந்த திருவிழாக்களின் போது, தமிழகத்திலிருந்து ஐயப்ப பக்தர்கள் சென்று வர ஏதுவாக, தமிழகத்தின் முக்கிய நகரங்களிலிருந்து அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் ஆண்டுதோறும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.



‘பாமகவினர் திட்டமிட்டே பதற்றத்தை உருவாக்குகின்றனர்’ - திருமா ஆவேசம்!
[Friday 2024-11-08 06:00]

சமூக நல்லிணக்கத்தைச் சிதைக்கும் நோக்கில் செயல்படுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வி.சி.க.வின் நிறுவனத் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினருமான திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடலூர் மாவட்டம், புவனகிரி அருகேயுள்ள மஞ்சக்கொல்லையில் கடந்த சில மாதங்களாகவே விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கொடிக் கம்பத்தைச் சேதப்படுத்திய பிரச்சினை தொடர்கிறது. கடந்த 23.08.2024 அன்று சிறுத்தைகளின் கொடியை அறுத்தெறிந்தனர். அது தொடர்பாக புகார் அளிக்கப்பட்டது. யாரும் கைது செய்யப்படவில்லை.



அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் மீது எஸ்.பி. அலுவலகத்தில் புகார்!
[Friday 2024-11-08 06:00]

வேலூர் புதிய பேருந்து நிலையம் அருகில் அமைந்திருக்கும் சேகர் ரெட்டி மற்றும் பிரமானந்தாதண்டா ஆகிய இருவருக்கும் சொந்தமான ரூ. 300 கோடி மதிப்புடைய 7 ஏக்கர் நிலத்தில் 'ஜோதிர் மை பார்க்கிங்க்' என்ற பெயரில் சேகர் ரெட்டியின் பி.ஏ. ரிஷிகுமார் என்பவர் பார்க்கிங் நடத்தி வருகிறார்.



‘தெருக்களில் மாடுகளை விடக்கூடாது’ - உரிமையாளர்களுக்கு பேரூராட்சி எச்சரிக்கை!
[Thursday 2024-11-07 18:00]

சிதம்பரம் அருகே உள்ள அண்ணாமலை நகர் பேரூராட்சி அலுவலகத்தில் பேரூராட்சி நிர்வாகம் மற்றும் அண்ணாமலை நகர் காவல்துறை சார்பில் மாடு வளர்ப்போர் மற்றும் உரிமையாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு அண்ணாமலை நகர் பேரூராட்சி மன்ற தலைவர் பழனி தலைமை தாங்கினார். செயல் அலுவலர் பாலமுருகன் முன்னிலை வகித்தார்.



‘அரோகரா’ முழக்கத்துடன் திருச்செந்தூரில் சூரசம்ஹார நிகழ்வு!
[Thursday 2024-11-07 18:00]

முருகப்பெருமானிற்கு உகந்த திருவிழாவாகக் கந்த சஷ்டி திருவிழா ஆண்டுதோறும் முருகப்பெருமானின் திருத்தலங்களில் விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் அறுபடை வீடுகளில் 2ஆம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இந்த ஆண்டுக்கான கந்த சஷ்டி விழா கடந்த 2ஆம் தேதி (02.11.2024) தொடங்கி வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது.



பிரிந்து சென்ற மனைவி: ஆணுறுப்பை அறுத்துக் கொண்ட கணவர்!
[Thursday 2024-11-07 18:00]

சேலம் மாவட்டம் குள்ளகவுண்டனூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் முருகன். இவருக்கு திருமணமாகி இரண்டு மகன்கள் உள்ளனர். முருகன் மூட்டை தூக்கும் வேலை செய்து வந்துள்ளார். இதனிடையே முருகனுக்கும் அவரது மனைவிக்கும் அடிக்கடி குடும்ப பிரச்சனை தொடர்பாக தகராறு ஏற்படும் எனக் கூறப்படுகிறது. இதன் காரணமாக கடந்த சில ஆண்டுகளாக முருகனை பிரிந்து அவரது மனைவி சூரமங்கலத்தில் உள்ள தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். கூடவே இரு மகன்களையும் அவருடன் வைத்துள்ளார்.



உடல் வெப்பத்தை கண்டறியும் மேலாடை: சீனாவிற்கு அடுத்தபடியாக தமிழர் முயற்சி!
[Thursday 2024-11-07 18:00]

உடல் வெப்பத்தைக் கண்டறியும் புதிய ரக டி-சர்ட்டை தமிழகத்தைச் சேர்ந்த ஆடை வடிவமைப்பாளர் தயாரித்துள்ளார். தமிழக மாவட்டமான திருப்பூர், அம்மாபாளையத்தைச் சேர்ந்த ஆடை வடிவமைப்பாளர் சொக்கலிங்கம். இவர், பல ஆண்டுகளாக பின்னலாடை துறையில் அனுபவம் பெற்றுள்ளார். இவர், தற்போது உணர்திறன் மை பதிக்கப்பட்ட டி-சர்ட் தயாரிக்கும் சோதனை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.



சுபமுகூர்த்த தினங்கள்: பதிவுத்துறைத் தலைவர் அதிரடி உத்தரவு!
[Thursday 2024-11-07 06:00]

பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஐப்பசி மாத முகூர்த்த தினங்களில் சார்பதிவாளர் அலுவலகங்களில் பத்திரப் பதிவுக்குக் கூடுதல் டோக்கன்கள் ஒதுக்கீடு செய்து பதிவுத்துறைத் தலைவர் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், “பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஐப்பசி மாதத்தின் சுபமுகூர்த்த தினங்களில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் கூடுதல் முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.



வி.சி.க.வை கண்டித்து பா.ம.க.வினர் போராட்டம்!
[Thursday 2024-11-07 06:00]

கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே பி.உடையூரில் இரு சமுக இளைஞர்கள் மது போதையில் தாக்கிக் கொண்டதில் மஞ்சக்கொல்லை கிராமத்தைச் சேர்ந்த செல்லதுரை என்பவர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவத்தைக் கண்டித்து பாமகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மஞ்சக்கொல்லை கிராமத்தில் இருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொடிக் கம்பத்தைப் பெண்மணி ஒருவர் கடப்பாரையால் சேதப்படுத்தினர்.



திருமணம் செய்து கொண்ட சூரியனார் கோயில் ஆதீனம்: பக்தர்கள் அதிர்ச்சி!
[Thursday 2024-11-07 06:00]

சூரியனார் கோயில் ஆதீன மடாதிபதி மகாலிங்க சுவாமி திருமணம் செய்து கொண்ட சம்பவம் பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் பிரசித்திபெற்ற சூரியனார் கோயில் ஆதீனம் அமைந்துள்ளது. இந்த ஆதீனத்தின் 28வது தலைமை மாடதிபதியாக மகாலிங்க சுவாமி (வயது 54) என்பவர் இருந்து வருகிறார்.



முதலமைச்சர் நிகழ்ச்சி வரை ஒலித்த 'கடவுளே அஜித்தே' கோஷம்!
[Wednesday 2024-11-06 19:00]

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றில் 'கடவுளே அஜித்தே' என்ற கோஷத்தை எழுப்பியுள்ளனர். சமுக வலைதளங்களில் நடிகர் அஜித்துக்காக எழுப்பப்பட்ட 'கடவுளே அஜித்தே' என்ற கோஷம் வைரலாகி வருகிறது. தியேட்டர்களிலும் அஜித் ரசிகர்கள் இந்த கோஷத்தை பரப்பி வருகின்றனர். சேப்பாக்கத்தில் இந்தியாவும் வங்கதேசமும் மோதிய டெஸ்ட் போட்டியில் கூட 'கடவுளே அஜித்தே' என்று ரசிகர்கள் ஜாலியாக கோஷம் எழுப்பியுள்ளனர்.



சிறிய பொருளுக்காக பாகிஸ்தானை நம்பியிருக்கும் இந்தியா!
[Wednesday 2024-11-06 19:00]

ஒரே ஒரு பொருளுக்காக பாகிஸ்தான் நாட்டை இந்தியா நம்பியிருக்கிறது. அது என்ன பொருள் என்பதை பார்க்கலாம். இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான வர்த்தக உறவுகள் 2019 முதல் கணிசமாக குறைந்துள்ளது. இதனால், பாகிஸ்தானுடன் உறவு நன்றாக இல்லை என்றாலும் வர்த்தக ரீதியாக உறவுகள் இரு நாடுகளுக்கும் இடையே உள்ளது. பாகிஸ்தானில் இருந்து இந்தியாவிற்கு பல பொருட்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன. இந்த பொருட்கள் இந்திய மக்களின் அத்தியாவசிய பொருட்களாக உள்ளது.


Karan Remax-2010
Vaheesan-Remax-2016
Kugeenthiran-200-2022-seithy
Asayan-Salon-2022-seithy
Mahesan-Remax-169515-Seithy
 gloriousprinters.com 2021
Airlinktravel-2020-01-01
Rajeef sebarasha 2023/04/19
NKS-Ketha-04-11-2021
Ambikajewellers-01-08-2021-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா