Untitled Document
November 1, 2024 [GMT]
"2026-ல் இலக்கை அடைவோம்" - தவெக தலைவர் விஜய் உறுதி!
[Tuesday 2024-10-29 18:00]

2026-ல் நம் இலக்கை அடைவோம், வெற்றி நிச்சயம் என்று தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார். இது தொடர்பாக விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வணக்கம். மாநாடு குறித்து உங்களுடன் பேச, இது நான்காவது கடிதம். வாஞ்சையில் நனைந்த வார்த்தைகளில் ஒரு நன்றிக் கடிதம். அரசியலில், கடித முறை என்பது ஆகப்பெரும் ஆயுதம். பேரறிஞர் அண்ணா தந்த ஆயுதம். தமிழக மக்கள், நம் அனைவருக்கும் சொந்தமானது. அந்த உணர்வின் அடிப்படையில்தான் நாமும் அதைக் கையில் எடுத்தோம். இந்தக் கடிதம் எழுதும்போது, என்னென்னவோ எண்ண அலைகள் இதயத்தில் அலைமோதுகின்றன.

2026-ல் நம் இலக்கை அடைவோம், வெற்றி நிச்சயம் என்று தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார். இது தொடர்பாக விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வணக்கம். மாநாடு குறித்து உங்களுடன் பேச, இது நான்காவது கடிதம். வாஞ்சையில் நனைந்த வார்த்தைகளில் ஒரு நன்றிக் கடிதம். அரசியலில், கடித முறை என்பது ஆகப்பெரும் ஆயுதம். பேரறிஞர் அண்ணா தந்த ஆயுதம். தமிழக மக்கள், நம் அனைவருக்கும் சொந்தமானது. அந்த உணர்வின் அடிப்படையில்தான் நாமும் அதைக் கையில் எடுத்தோம். இந்தக் கடிதம் எழுதும்போது, என்னென்னவோ எண்ண அலைகள் இதயத்தில் அலைமோதுகின்றன.

  

என் நெஞ்சம் நிறைந்ததில் எதைச் சொல்வது? எதை விடுப்பது? மாநாடு நடத்த, பல்வேறு காரணங்களால், நமக்குக் கிடைத்தது மிகக் குறைந்த கால இடைவெளிதான். அதிலும் அடைமழை வேறு குறுக்கிட்டது. இருந்தும், எல்லாவற்றையும் சமாளித்து, சூறாவளியாகச் சுழன்று நம் கட்சியின் முதல் மாநில மாநாட்டை வெற்றிபெறச் செய்த உங்கள் அனைவருக்கும் என் மனம் நிறைந்த நன்றி.

குறிப்பாக, மாநாட்டுப் பணிகளுக்காக, இடம் தேர்வில் இருந்து திடல் பணிகள் வரை மட்டுமல்லாது, மாநாடு வெற்றிகரமாக நிறைவுறும் வரையிலும், கழகத்தின் நிர்வாகிகள் அனைவரையும் ஒருங்கிணைத்தவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தலைமை நிலையச் செயலகத்தின் வழிகாட்டுதலைப் பின்பற்றி, திடல் வடிவமைப்புப் பணிகளால், வெற்றிக் கொள்கைத் திருவிழாவிற்கான இடமாகத் திடலை மாற்றிக் காட்டிய பந்தல் வடிவமைப்பாளர் ஜே.பி.விஸ்வநாதனுக்கும் நன்றி. மாநாட்டில். நாம் அனைவரும், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் ஆற்றிய பணியை மறக்கவே இயலாது. அவசர கால உதவியில் அசத்திய இவர்கள் அனைவருக்கும் அளப்பரிய நன்றி.

கட்டுப்பாட்டு அறை சார்ந்த கண்காணிப்புப் பணிகளைச் செய்தவர்கள் அனைவருக்கும் சிறப்பு நன்றி. எப்போதும் விவசாயப் பெருமக்களை வணங்கிப் போற்றும் இயக்கமாக இருக்கும் நம் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு நடத்த இடம் வழங்கிய விவசாயிகளை நேரில் சந்தித்து, அவர்கள் கரம் பற்றி நன்றி சொல்லவே எனக்கு விருப்பம். இருந்தும், இப்போது நெஞ்சம் நெகிழ அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் அதே வேளையில், வி.சாலை. விக்கிரவாண்டி, விழுப்புரம் மாவட்ட மக்களுக்கும் நன்றி சொல்லத் தோன்றுகிறது. அவர்கள் அனைவருக்கும் நன்றி.

மாநாட்டிற்கான நெறிமுறைகளை செவ்வனே செயல்படுத்திட அனுமதி மற்றும் ஒத்துழைப்பு நல்கிய, சம்பந்தப்பட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த அனைவருக்கும் நன்றி. கடிதங்கள் வாயிலாக வெளியிட்ட என் வேண்டுகோள்களை ஏற்று, தங்கள் வீடுகளில் இருந்தே வெற்றிக் கொள்கைத் திருவிழாவைக் கண்டு களித்த அனைத்துத் தாய்மார்களுக்கும், முதியோர்களுக்கும் என் மனப்பூர்வமான நன்றி.

இதனிடையே, மாநாட்டில் கலந்து கொள்வதற்காக, நீங்கள் ஒவ்வொருவரும் எவ்வளவு தூரம் பயணம் மேற்கொண்டீர்கள் என்பதும் எனக்குத் தெரியும். இரவெல்லாம் கண்விழித்து, தூக்கமின்றி, அயற்சியைப் பொருட்படுத்தாமல், மதியம் வரை சுட்டெரித்த வெயிலையும் தாங்கிக்கொண்டீர்கள்.

சிலர் உடல் உபாதைகளைக்கூட பொறுத்துக்கொண்டு கலந்துகொண்டீர்கள். இதயங்கள் இடையேயான அன்பின் முன், இன்னல்கள் பெரிதில்லை என்பதை உணரச் செய்தீர்கள். உங்களை எப்படி ஏற்றிப் போற்றுவதென்றே எனக்குத் தெரியவில்லை. இப்படித் தன்னெழுச்சியாக, பொங்குமாங்கடலென மாநாட்டிற்குத் திரண்டு வந்த கட்சி தோழர்கள் என் மீது கொண்டுள்ள பாசத்திற்கு ஈடாக, இந்த உலகத்தில் வேறு எதுவும் இருப்பதாகவே தெரியவில்லை.

அதேபோல, தமிழக அரசியல் களத்தில் நமக்காக நம் தோளோடு தோள் சேர்ந்து நிற்பதை உறுதி செய்வதுபோல, தங்களின் பேரன்பையும் பேராதரவையும் தெரிவிக்கும் வகையில், நமது மாநாட்டிற்குப் பேரலைகளாக எழுந்து வந்த பொதுமக்களுக்கு நன்றி சொல்ல, வார்த்தைகளைத் தேடித் தேடி, கண்டுபிடிக்க இயலாமல் மவுனமொழி பேசி. கண்கள் கலங்க நிற்கிறேன்.

எதைப் பற்றியும் யோசிக்காமல், இந்த மண்ணைச் சேர்ந்த ஒற்றை மகனுக்காக, இத்தனை லட்சம் மனங்கள் திரண்டு நின்றது என் மனதை நெகிழச் செய்துவிட்டது. உங்களை உறவுகளாகப் பெற்றது என் பாக்கியமன்றி வேறென்ன? நாடே வியக்கும் வகையில் நம் மாநாட்டை மாபெரும் வெற்றிபெறச் செய்த உங்கள் ஒவ்வொருவரின் மனதையும் கோடிப்பூக்களைத் தூவி, போற்றி மனம் நிறைகிறேன்.

உங்கள் ஒவ்வொருவரின் அன்பிலும் மனம் நெகிழ்ந்து, கண்களில் ஆனந்தக் கண்ணீர் தேங்க, அரசியல் வெற்றிப் பயணத்தைத் தொடங்கி இருக்கிறோம். இப்பயணத்தின் இலக்கை, நம் தமிழ்நாட்டு மண் இனிவரும் நாள்களில் பார்க்கும். அது உறுதி. நம் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டில் கண்ட காட்சிகள் எல்லாம், கண்களிலும் மனதிலும் கல்வெட்டுகளாகவே பதிந்துவிட்டன. தமிழக அரசியல் வரலாற்றில், காலாகாலத்திற்கும் அழிக்கவே இயலாத பதிவுகள் அவை.

ஆம். நமது மாநாட்டில், அலைகள் கை தட்டும் ஆர்ப்பரிக்கும் கடலைக் கண்டேன். கதிர்கள் வெடித்துவிழும் ஒளிப்பிழம்புகளைக் கண்டேன். தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றியோடு. தமிழகத்தின் வெற்றிக்கான வெள்ளோட்டத்தையும் கண்டேன். தீர்க்கமான அரசியல் வெற்றிக்கான திசைகள் திறக்கக் கண்டேன். இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம். ஆனாலும், மனம் திளைத்ததை. மகிழ்ச்சியில் தித்தித்ததை இதற்குமேல் எப்படிச் சொல்ல? இவை எல்லாவற்றையும்.

அப்படியே வார்த்தைகளில் வடித்தெடுக்க நானொன்றும் கவிஞன் இல்லை. உணர்வுகளை இயல்பாக வெளிப்படுத்த மட்டுமே தெரிந்த சாதாரண மனிதன். இருந்தும் நினைவுகளைப் பகிர்வதும்கூட ஓர் அழகிய கவிதைதானே. அதனால்தான், மனதிலும் நினைவிலும் சேகரமானதில் சிலவற்றை மட்டுமே பகிர்ந்தேன். இந்த வேளையில், உங்கள் ஒவ்வொருவரையும் எண்ணி மனம் நெகிழ்கிறேன்.

உங்களை என் தோழர்களாக, தூய குடும்ப உறவுகளாகப் பெற்றது என் வாழ்நாள் வரம். வழியெங்கும் வசந்தத்தை விதைக்கிற வைரநெஞ்சங்கள் நீங்கள். நம் மக்களோடு சேர்த்து, உங்களையும் உயரத்தில் வைத்து அழகு பார்க்கவே இந்த அரசியல் பயணம். என் எல்லா வார்த்தைகளுக்கும் நீங்கள் உயிர் கொடுத்தீர்கள். அதனால்தான், நமது மாநாட்டின் வாயிலாக, பொறுப்புணர்வுடன் கூடிய கடமையுடன், கட்டுப்பாடான. கண்ணியமான, ஆரோக்கியமான உத்வேகமான, உரிமைகளை மீட்டெடுக்கும் அரசியலை இந்த மண்ணிலே விதைத்திருக்கிறோம்.

மாநாட்டில் நம்மைக் கண்ட நம் தமிழக மக்களும் அதை உணர்ந்திருப்பர். நம்முடைய அரசியல் பயணத்தை, நாம் தொடங்கும் முன்னரே நம்மை விமர்சித்தவர்கள். இனி இன்னும் கடுமையாக விமர்சிப்பார்கள். அத்தகைய விமர்சனங்களில் ஏதேனும் ஆக்கபூர்வமான ஆலோசனைகள் தெரிந்தால், அவற்றை மட்டுமே கருத்தில் கொள்வோம். மற்றவற்றை மறந்தும்கூட மனதில் ஏற்றிவிடாமல் கடந்து செல்லப் பழகிக் கொள்வோம்.

அனைத்து மக்களின் அத்தியாவசியத் தேவைகளை நோக்கிய உழைப்பு மட்டுமே இனி நம் அரசியல். அதைச் சாத்தியப்படுத்துதல் மட்டுமே நம் 'தீவிர அரசியல் செய்தலாக இருக்கும். நம்மைத் தாயுள்ளத்தோடு வரவேற்கும் நம் தமிழ்நாட்டு மக்களுக்காக, இன்னும் அதி தீவிரமாக, தீர்க்கமாக, தீர்மானமாக உழைப்போம். தங்கள் மண்ணைச் சேர்ந்த மகன்களான, மகள்களான நம்மைத் தக்க இடம் நோக்கி, தகுதியான அங்கீகாரம் நோக்கி மக்களே அழைத்துச் செல்வர். ஆகவே, அவர்களின் மனதில் நிறையும் அளவிற்கு, அதிக நம்பிக்கையுடனும் நன்றியுடனும் ரெட்டைப் போர்யானைகளின் பலத்துடன் உழைப்போம்.

வாகைப் பூக்கள் நமக்காகவே நாடெங்கும் பூத்துக் குலுங்கப் போகின்றன. நமது மாநாட்டின் மூலம், வி.சாலை நமது வியூகச் சாலையாகவும், விவேக சாலையாகவும் மற்றும் வெற்றிச் சாலையாகவும் ஆனது போலவே, நம்மை யாராலும் வெல்ல இயலாத வித்தியாசமான, யதார்த்த அரசியல் சாலைக்கும் நம்மை அழைத்துச் செல்லும். எப்போதும் ஆக்கபூர்வமான அரசியலையே கையிலெடுப்போம். 2026-ல் நம் இலக்கை அடைவோம். வெற்றி நிச்சயம்” என்று தெரிவித்துள்ளார்.

  
   Bookmark and Share Seithy.com



“ஒரே நாடு, ஒரே தேர்தலுக்கு வாய்ப்பில்லை” - மல்லிகார்ஜுன கார்கே!
[Friday 2024-11-01 06:00]

சர்தாய் வல்லபாய் படேலின் 149வது பிறந்தநாளை முன்னிட்டு, குஜராத்தில் ராஷ்ட்ர்ய ஏக்தா திவாஸ் நிகழ்ச்சி இன்று கொண்டாடப்பட்டது. இரண்டு நாள் பயணமாக குஜராத்துக்குச் சென்ற பிரதமர் மோடி, அங்கு சென்ற அவர், சர்தார் வல்லபாய் படேலின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும், கேவாடியில் உள்ள யூனிட்டி ஆஃப் பரேல் மைதானத்தில் நடைபெறும் ராஷ்ட்ர்ய ஏக்தா திவாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார்.



தீபாவளி பட்டாசால் நேர்ந்த விபரீதம்!
[Friday 2024-11-01 06:00]

பட்டாசுகளை பாதுகாப்பாக வெடிக்க வேண்டும் என்று எச்சரிக்கை விடப்பட்டிருந்தாலும் ஆங்காங்கே பட்டாசு தீயால் சேதங்கள் ஆகியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் தர்மர் கோயில் தெருவைச் சேர்ந்தவர் காமராஜ் (48). இவர் கீரமங்கலம் பேருந்து நிலையம் அருகே பூக்கடை வைத்துள்ளார். தீபாவளியான இன்று காலை அவரது குடும்பத்தினர் வீட்டிற்குள் இருந்த போது எங்கிருந்தோ பறந்த வந்த பட்டாசு தீ காமராஜ் வீட்டு மேற்கூறையில் விழுந்து தீ பற்றியுள்ளது.



தமிழகத்தை நோக்கி காற்றழுத்த தாழ்வு மண்டலம்!
[Friday 2024-11-01 06:00]

நவம்பர் முதல் வார இறுதியில் காற்றழுத்த நிலை தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை மையம் தெரிவித்துள்ளதாவது, ‘நவம்பர் முதல் வார இறுதியில் தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்த நிலை, காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்பு இருக்கிறது.



தலையில் கிரிக்கெட் பந்து தாக்கி 15 வயது மாணவி உயிரிழப்பு!
[Thursday 2024-10-31 17:00]

இந்திய மாநிலம் கேரளாவில் 15 வயது மாணவி கிரிக்கெட் பந்து தலையில் தாக்கியதில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த 15 வயது பாடசாலை மாணவி தபஸ்யா. இவர் கேரளாவின் மலப்புரத்தில் உள்ள கோட்டக்கலில் கிரிக்கெட் பயிற்சியில் ஈடுபட்டார்.



தீபாவளி பண்டிகைக்காக வீட்டை சுத்தம் செய்த பெண்ணுக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி!
[Thursday 2024-10-31 17:00]

தீபாவளி பண்டிகைக்காக வீட்டை சுத்தம் செய்த பெண்ணொருவருக்கு, 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் கிடைத்ததைக் காட்டும் வீடியோ ஒன்று வைரலாகியுள்ளது. பெண்ணொருவர் தீபாவளிக்காக வீட்டை சுத்தம் செய்யும்போது அவருக்கு பை ஒன்று கிடைத்துள்ளது. அந்தப் பையில் இருப்பதை கீழே கொட்ட, 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் கொண்ட ஒரு கட்டுப் பணம் அதில் இருந்துள்ளது.



தீபாவளி கொண்டாட்டம்: டெல்லியில் காற்றின் தரம் மோசம்!
[Thursday 2024-10-31 17:00]

தீபாவளி நாளான இன்று இந்திய தலைநகர் டெல்லியின் காற்றின் தரம் மோசமடைந்துள்ளதாக மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. உலகம் முழுவதும் இன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. காலை முதலே புத்தாடை அணிந்து பட்டாசுகள் வெடித்து பண்டிகையை மக்கள் கொண்டாடி வருகின்றனர்.



விஜய்யின் மாநாடு குறித்து பேசிய ரஜினிகாந்த்!
[Thursday 2024-10-31 17:00]

விஜய்யின் மாநாடு குறித்து கருத்து தெரிவித்துள்ளார் நடிகர் ரஜினிகாந்த். இன்று உலகம் முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது, புத்தாடை அணிந்து, பட்டாசு வெடித்து இனிப்புகளை பகிர்ந்து கொண்டு மக்கள் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரஜினிகாந்த் வீட்டின் முன் ஏராளமான ரசிகர்கள் திரண்டனர்.



திணறும் சென்னை: அதிகரிக்கும் காற்று மாசு!
[Thursday 2024-10-31 06:00]

சென்னையில் இன்று பல இடங்களில் பரவலாக மழை பொழிந்த நிலையில் காற்றின் தரக் குறியீடு 118 ஆக பதிவாகி பதிவாகியுள்ளது. மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் கணக்கீட்டின்படி காற்றின் தரக் குறியீடு 100லிருந்து 200 ஆக இருந்தால் அது மிதமான மாசுபாட்டை குறிக்கும், 200 முதல் 300 வரை இருந்தால் மோசமான மாசுக் கட்டுப்பாடு, 300 இருந்து 400 வரை இருந்தால் மிக மோசம் என்று குறிக்கும். தீபாவளி பண்டிகை காரணமாக பட்டாசு வெடிப்பதன் மூலம் காற்றின் மாசு அதிகரிப்பது வாடிக்கை. நேற்று மாலை 7 மணி நிலவரப்படி சென்னையில் ஒட்டுமொத்த சராசரி காற்றின் தரக்குறியீடு 118 ஆக பதிவாகியுள்ளது.



காட்டுப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட கல் மரம்!
[Thursday 2024-10-31 06:00]

புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் ஒன்றியம் மிரட்டுநிலை அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியரின் வழிகாட்டுதலின்படி அறிவியல் ஆசிரியர் மா.ஜீவிதா மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்கள் பள்ளியின் அருகில் உள்ள பொன்னாம்பட்டி கிராமத்தில் காட்டுப் பகுதியில் கல்மரம் வெளிப்பட்டிருப்பதை கண்டறிந்துள்ளனர். ஏற்கனவே புதுக்கோட்டை மாவட்டத்தில் சிறிய சில கல்மரங்களை கண்டுபிடித்துள்ள புதுகை தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வு நடுவம் தலைவர் ச.பாண்டியன் ஆய்வு செய்து இது கல் மரம் தான் என்பது உறுதிப்படுத்தினார்.



சிகிச்சைக்கு வந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த கொடூர மருத்துவர்!
[Thursday 2024-10-31 06:00]

மேற்கு வங்க மாநிலம், வடக்கு பர்கானாஸில் உள்ள ஹஸ்னாபாத் பகுதியைச் சேர்ந்தவர் 26 வயது பெண். இவருடைய கணவர், பீகாரில் வேலை பார்த்து வருகிறார். மேற்கு வங்கத்தில் வசித்து வந்த அந்த பெண்ணுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தில் சர்தார் (40) என்ற மருத்துவர் நடத்தி வரும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார்.



விஜயை கோபப்படுத்த அஜித்துக்கு வாழ்த்தா? உதயநிதியை கிண்டலடித்த தமிழிசை!
[Wednesday 2024-10-30 18:00]

நடிகர் அஜித்குமாருக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்த நிலையில் தமிழிசை சௌந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார். தமிழில் முன்னணி நடிகரான அஜித்குமார் நடிப்பது மட்டுமல்லாமல் வீனஸ் மோட்டார்சைக்கிள் டூர்ஸ் எனும் நிறுவனத்தை துவங்கி, பைக் ரைடிங் ஆர்வலர்களுக்கு வணிக நோக்கில் ரைடிங் சார்ந்த சேவைகளை வழங்கி வருகிறார்.



தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை - வானிலை மையம்!
[Wednesday 2024-10-30 18:00]

தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் கூறியுள்ளது. வானிலை மையம் கூறுகையில்.., கடலூர், மயிலாடுதுறை, நாகை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், சிவகங்கை, ராமநாதபுரத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையில் 48 மணி நேரத்திற்கு இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யும். அதிகபட்சமாக 34 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகும்.



விஜயின் அரசியல் மாநாடு எப்படி இருந்தது? - துணை முதலமைச்சர் பதில்!
[Wednesday 2024-10-30 18:00]

தமிழக வெற்றி கழகத்தின் மாநாடு நடைபெற்று முடிந்த நிலையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார். கடந்த ஒக்டோபர் 27 -ம் திகதி அன்று தமிழக வெற்றி கழகத்தின் மாநாடு விக்கிரவாண்டியில் பிரம்மாண்டமாக நடைபெற்று முடிந்தது. இந்த மாநாட்டில் லட்சக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.



சூப்பர் பவர் இருப்பதாக நினைத்த இளைஞர்: 4 -வது மாடியில் இருந்து குதித்ததால் விபரீதம்!
[Wednesday 2024-10-30 18:00]

தனக்கு சூப்பர் பவர் இருப்பதாக நினைத்த கல்லூரி இளைஞர் 4 -வது மாடியில் இருந்து குதித்துள்ளார். தமிழக மாவட்டமான ஈரோடு, பெருந்துறையை சேர்ந்த இளைஞர் பிரபு (19). இவர், கோவை மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இந்நிலையில், நேற்று திடீரென கல்லூரி விடுதியின் 4 -வது மாடியில் இருந்து கீழே குதித்துள்ளார். இதனால், இவருக்கு கை மற்றும் கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டது. மேலும், தலையில் காயம் ஏற்பட்டுள்ளது.



போலி ஹால்மார்க் முத்திரை: ரூ.1 கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்!
[Wednesday 2024-10-30 06:00]

போலி ஹால்மார்க் முத்திரை பயன்படுத்தப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தங்க நகைகள் திருத்தச் சட்டம் 2023இன் படி எச்.யூ.ஐ.டி. குறியீடு இல்லாமல் தங்க நகைகள் விற்பனை விற்பனை செய்யக் கூடாது எனச் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இருப்பினும் இதனையும் மீறி சட்டவிரோதமாக முறையான எச்.யூ.ஐ.டி குறியீடு இல்லாமல் தங்க நகைகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர் அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் உள்ள நகைக்கடையில் ஒன்றில் இன்று ஆய்வு மேற்கொண்டனர்.



“பத்திரிக்கையாளர்களுக்கு முதலிடம் கொடுப்போம்” - அமைச்சர் மதிவேந்தன்!
[Wednesday 2024-10-30 06:00]

தமிழ்த் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கத்தின் தீபாவளி திருவிழா நேற்று (29.10.2024) மாலை மிகப் பிரம்மாண்டமாகவும் கோலாகலமாகவும் நடந்தது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் மற்றும் லப்பர் பந்து பட ஹீரோ ஹரிஷ் கல்யாண் இருவரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். இந்த நிகழ்வில், மூத்த பத்திகையாளர்கள், கங்காதரன், தேவி மணி, திரை நீதி செல்வம் ஆகியோருக்கு பாராட்டும் பரிசும் வழங்கப்பட்டது.



சென்னையில் விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்!
[Wednesday 2024-10-30 06:00]

நாடு முழுவதும் உள்ள பல்வேறு பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள், விமானங்கள் மற்றும் விமான நிலையங்களுக்கு அவ்வப்போது சமூக வலைத்தளங்கள் மூலமாகவும், மின்னஞ்சல் மூலமாகவும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் சம்பவம் வாடிக்கையாகி வருகிறது. இது தொடர்பாக நடத்திய விசாரணையில் அனைத்தும் புரளி என்று கண்டயறிப்பட்டு வருகிறது. இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமானங்களின் பயண அட்டவணை மாற்றம், விமான ரத்து என விமான சேவைகள் பலவகைகளில் மாற்றம் செய்யப்படுகிறது. இதனால், விமான பயணிகள் கடும் சிரமத்துக்குள்ளாகி வருவதுடன், பயணிகள் மத்தியில் பீதியையும் உருவாக்கியுள்ளது.



அடுத்த 3 மணி நேரத்திற்கு 6 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை!
[Tuesday 2024-10-29 18:00]

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய மிக கனமழைக்கான வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. வானிலை மையம் கூறுகையில்.., தென்னிந்திய கிழக்கு கடலோரப்பகுதிகளை ஒட்டி ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று 29.10.2024 மற்றும் நாளை 30.10.2024 தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.



இந்திய ரயிலில் அசுத்தமான கழிவறை: வெளிநாட்டு பெண் எடுத்த வீடியோ வைரல்!
[Tuesday 2024-10-29 18:00]

இந்தியாவில் உள்ள ரயிலில் கழிவறை அசுத்தமாக இருப்பதை வெளிநாட்டு பெண் ஒருவர் வீடியோ எடுத்து பதிவிட்டது பேசப்பட்டு வருகிறது. வீடியோக்களுக்கு லைக் கிடைக்க வேண்டும் என்பதற்காக விசித்திரமான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் சில வீடியோக்கள் வரவேற்பை பெற்றாலும், பல வீடியோக்கள் விமர்சனமாகின்றன.



விஜய்யின் வருகையால் எனது வாக்குகள் குறையாது: நாம் தமிழர் சீமான்!
[Tuesday 2024-10-29 18:00]

தங்களைப் பொறுத்தவரை யாருடனும் கூட்டணி இல்லை என்று நாம் தமிழர் சீமான் தெரிவித்துள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நடந்து முடிந்ததைத் தொடர்ந்து, அதன் தலைவர் விஜய்யுடன் நாம் தமிழர் கட்சி கூட்டணி அமைக்குமா என்ற கேள்வியை ஊடகங்கள் எழுப்பின. அதற்கு பதில் அளித்த நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான், 'யாருடனும் நாம் தமிழர் கட்சிக்கு கூட்டணி கிடையாது' என்றார்.


Vaheesan-Remax-2016
Karan Remax-2010
Rajeef sebarasha 2023/04/19
Ambikajewellers-01-08-2021-seithy
NKS-Ketha-04-11-2021
Airlinktravel-2020-01-01
 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
Asayan-Salon-2022-seithy
Mahesan-Remax-169515-Seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா