Untitled Document
November 12, 2024 [GMT]
‘பாமகவினர் திட்டமிட்டே பதற்றத்தை உருவாக்குகின்றனர்’ - திருமா ஆவேசம்!
[Friday 2024-11-08 06:00]

சமூக நல்லிணக்கத்தைச் சிதைக்கும் நோக்கில் செயல்படுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வி.சி.க.வின் நிறுவனத் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினருமான திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடலூர் மாவட்டம், புவனகிரி அருகேயுள்ள மஞ்சக்கொல்லையில் கடந்த சில மாதங்களாகவே விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கொடிக் கம்பத்தைச் சேதப்படுத்திய பிரச்சினை தொடர்கிறது. கடந்த 23.08.2024 அன்று சிறுத்தைகளின் கொடியை அறுத்தெறிந்தனர். அது தொடர்பாக புகார் அளிக்கப்பட்டது. யாரும் கைது செய்யப்படவில்லை.

சமூக நல்லிணக்கத்தைச் சிதைக்கும் நோக்கில் செயல்படுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வி.சி.க.வின் நிறுவனத் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினருமான திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடலூர் மாவட்டம், புவனகிரி அருகேயுள்ள மஞ்சக்கொல்லையில் கடந்த சில மாதங்களாகவே விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கொடிக் கம்பத்தைச் சேதப்படுத்திய பிரச்சினை தொடர்கிறது. கடந்த 23.08.2024 அன்று சிறுத்தைகளின் கொடியை அறுத்தெறிந்தனர். அது தொடர்பாக புகார் அளிக்கப்பட்டது. யாரும் கைது செய்யப்படவில்லை.

  

கைது நடவடிக்கைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டாமென த.வா.க. மாவட்டப் பொறுப்பாளர்கள் விடுத்த வேண்டுகோளையேற்று மஞ்சக்கொல்லை சிறுத்தைகள் இரு சமூகங்களுக்கான நல்லிணக்கத்தைக் கருத்தில் கொண்டு அதனைப் பெரிதுபடுத்தவில்லை. ஆனால், அடுத்து 15.10.2024 அன்று கொடிக் கம்பத்தை அடியோடு அறுத்தெடுத்துக் கொண்டு போய்விட்டனர். அது குறித்தும் விசிக தரப்பிலிருந்து புகார் அளிக்கப்பட்டது. வழக்குப் பதிவானது. ஆனால், யாரும் கைது செய்யப்படவில்லை. இந்நிலையில், 01.11. 2024 அன்று மஞ்சக்கொல்லை அருகேயுள்ள உடையூர் கிராமத்தில் ஆதிதிராவிடர் குடியிருப்பையொட்டி மஞ்சக்கொல்லை கிராமத்தைச்சார்ந்த முத்துக்குமார், அரி உள்ளிட்ட பத்துபேர் மது அருந்திக் கொண்டிருந்தனர்.

அவர்களை உடையூர் ஆதிதிராவிட சமூகத்தைச் சார்ந்த இளைஞர்கள் சிலர், அவர்களிடம் 'ஊரைத் தாண்டிப்போய் குடியுங்கள்' என்று சொல்லியுள்ளனர். அது வாக்குவாதமாக மாறியுள்ளது. அப்போது உடையூர் தலித் இளைஞர்களை அவர்கள் தாக்கியுள்ளனர். அதனைக் கவனித்த உடையூர் தலித் மக்கள் ஓடிவந்து அவர்களைத் தடுத்துள்ளனர். போதையிலிருந்த அவர்களில் மஞ்சக்கொல்லையைச் சார்ந்த செல்லத்துரை என்பவரைத் தவிர மற்றவர்கள் அங்கிருந்து வெளியேறிவிட்டனர். தனியே சிக்கிக்கொண்ட அவரைத் தலித் இளைஞர்கள் சிலர் தாக்கியதில் அவர் காயமடைந்துள்ளார். இதனையொட்டி தலித் இளைஞர்கள் ஐந்து பேரைக் காவல்துறையினர் உடனடியாகக் கைது செய்தனர். எனினும், அத்தாக்குதலைக் கண்டித்து மஞ்சக்கொல்லையைச் சார்ந்த வன்னியர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதனை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தி பாமகவும் வன்னியர் சங்கமும் தலையிட்டு இரு சமூகங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தைச் சிதைக்கும் நோக்கில் அந்த ஆர்ப்பாட்டத்தில் பேசினர்.

அதாவது, "திருமாவளவன் மூன்று முறை இங்கே எப்படி ஜெயிக்கிறான்? என்றும் "அவன் இவன்" என்றும் பாமக மாவட்ட செயலாளர் பேசி, தமது கட்சியினரின் சாதி உணர்ச்சிகளைத் தூண்டியிருக்கிறார். வன்னியர் சங்கத் தலைவர் பு.தா. அருள்மொழி் ஆதிதிராவிட மக்களுக்கு எதிராக அப்பாவி வன்னியர்களைத் தூண்டும் வகையில் பேசியிருக்கிறார். அவர் பேசிய பின்னர் தான், ஒரு பெண்மணி கடப்பாரையால் விசிக கொடிக் கம்பத்தின் பீடத்தை இடிக்க முயற்சித்திருக்கிறார். இது தொடர்பாகவும் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. குறிப்பாக, சாதிவெறியைத் தூண்டும் வகையில் பேசிய வன்னியர் சங்கத் தலைவர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்படவில்லை. எனவேதான், புவனகிரியில் சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதில் ஓரிருவர் பாமக'வினரைப் போலவே வெறுப்பு அரசியலுக்கு இரையாகும் வகையில் பேசியது ஏற்புடையதில்லை. அது வன்மையான கண்டனத்துக்குரியது.

அவ்வாறு பேசியதற்காக சிறுத்தைகளின் மாவட்டச்செயலாளர் உள்ளிட்ட முன்னணி பொறுப்பாளர்கள் பலர் மீது வழக்குப்பதிவு செய்து, 'செல்வி முருகன்' என்பவரை உடனடியாகக் கைது செய்துள்ளனர். ஆனால், விசிக' வின் கொடியை அறுத்தது; பின்னர் கொடிக் கம்பத்தை அறுத்தது; அதன் பிறகு கம்பத்தின் பீடத்தை இடிக்க முயற்சித்தது; உடையூரில் தலித் இளைஞர்களைத் தாக்கியது; மஞ்சக்கொல்லையில் வன்முறையைத் தூண்டும் வகையில் பாமகவினரும் வன்னியர் சங்கத்தினரும் பேசியது உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களை இதுவரை கைது செய்யாத காவல்துறை தான், விசிகவுக்கு ஆதரவாக செயல்படுவதாகக் கூறுகின்றனர். இது மிகவும் வேடிக்கையாக உள்ளது.

வட மாவட்டங்களில் தலித்துகளுக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் நோக்கில்தான் பாமகவினர் திட்டமிட்டே சமூகப் பதற்றத்தை உருவாக்குகின்றனர். இந்நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் மிகுந்த எச்சரிக்கையாக இருத்தல் வேண்டும். இதற்கு எதிர் வினையாற்றுகிறோம் என்னும் பெயரில், இரு சமூகங்களுக்கிடையில் நல்லிணக்கத்தைச் சிதைக்கும் வகையில் ஈடுபடுவோருக்கு துணை போய்விடக்கூடாது. சட்டம் - ஒழுங்கு என்னும் பெயரில் பாதிக்கப்பட்ட தலித் மக்கள் மீதே நடவடிக்கை எடுக்கும் காவல்துறையின் போக்கை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கண்டிக்கிறது. விசிக கொடியை அறுத்தது , கம்பத்தை வெட்டியது, பீடத்தை உடைக்க முயற்சித்தது, தலித்துகளுக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியது ஆகியவற்றில் தொடர்புடைய பாமக மற்றும் வன்னியர் சங்கத்தைச் சார்ந்த அனைவரின் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென விசிக சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்” எனத் தெரிவித்துள்ள்ளார்.

  
   Bookmark and Share Seithy.com



இந்திய மீனவர்களுக்கு 2 வருட சிறை தண்டனை: இலங்கை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!
[Tuesday 2024-11-12 18:00]

எல்லைத்தாண்டிய 11 இந்திய மீனவர்களுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எல்லை தாண்டி மீன் பிடித்தமையால், புதுக்கோட்டையை சேர்ந்த 15 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.



தெலுங்கு மக்களை எப்படி பிரித்து பார்க்க முடியும்? - கஸ்தூரிக்கு நீதிபதி சரமாரி கேள்வி!
[Tuesday 2024-11-12 18:00]

தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய விவகாரத்தில் நடிகை கஸ்தூரிக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. வன்கொடுமை தடுப்புச் சட்டம் போல் பிராமணர்களைப் பாதுகாக்க ஒரு புதிய சட்டம் இயற்ற வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட நடிகை கஸ்தூரி தெலுங்கு மக்கள் குறித்து சர்ச்சையாக பேசியது பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.



உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி: தமிழகத்தில் 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட்!
[Tuesday 2024-11-12 18:00]

தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களுக்கு இந்திய வானிலை மையம் ஆரஞ்சு அலெர்ட் விடுத்துள்ளது. வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. மேலும், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நேற்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இதனால் சென்னை மற்றம் அதன் புறநகர்ப்பகுதிகளில் நேற்றிரவு முதல் லேசான முதல் கனமழை வரை பெய்து வருகிறது.



"என் பயணம் என் கால்களை நம்பி தான்" - தனித்து போட்டியிடுவதாக சீமான் உறுதி!
[Tuesday 2024-11-12 18:00]

தமிழகத்தில் வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் உறுதியளித்துள்ளார். தமிழக மாவட்டமான தூத்துக்குடியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னை விமான நிலையத்திற்கு வருகை தந்திருந்தார்.



சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் போட்டி: முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!
[Tuesday 2024-11-12 06:00]

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால், 2வது சென்னை கிராண்ட் மாஸ்டர் செஸ் சாம்பியன் ஷிப் போட்டி நடத்தப்பட்டது. இந்த போட்டி கடந்த 5ஆம் தேதி முதல் 11.11.2024 வரை சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்றது. இதில் ௮ சர்வதேச மற்றும் இந்தியா கிராண்ட் மாஸ்டர்கள் கலந்துகொண்டனர். இப்போட்டி 7 சுற்றுகளைக் கொண்டு ரவுண்டு ராபின் (Round Robin) முறையில் கிளாசிக்கல் செஸ் வகையில் விளையாடப்பட்டது. இப்போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த அர்ஜுன் எரிகைரி தமிழ்நாட்டைச் சேர்ந்த அரவிந்த் சிதம்பரம், அமெரிக்காவைச் சேர்ந்த லெவோன் ஆரோனின் உட்பட 8 சர்வதேச மற்றும் இந்திய வீரர்கள் பங்குபெற்றனர்.



பிறந்த குழந்தை இறந்த விவகாரம்: மருத்துவர் மீது பாய்ந்த நடவடிக்கை!
[Tuesday 2024-11-12 06:00]

தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் வட்டம் மரத்துரை வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் முருகேசன். இவரது மனைவி சிவரஞ்சனி (வயது 28). கர்ப்பிணிப் பெண்ணான இவர் கடந்த 2ஆம் தேதி பிரசவத்திற்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து மருத்துவர்கள் சிவரஞ்சனிக்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்யாமல் நான்கு நாட்கள் வரை சுகப்பிரசவத்திற்காகக் காத்திருந்தனர்.



ஸ்டெர்லைட் ஆலை விவகாரம்: ‘மறு ஆய்வு மனு தள்ளுபடி’ - உச்சநீதிமன்றம் திட்டவட்டம்!
[Tuesday 2024-11-12 06:00]

தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலையால் அந்தப் பகுதிகளில் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதாகப் பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தினர். இதனையடுத்து, கடந்த 2018ம் ஆண்டு மே 22ம் நாள் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 11 ஆண்கள் மற்றும் 2 பெண்கள் என 13 பேர் கொல்லப்பட்டனர். 40 பேர் பலத்த காயங்களை அடைந்தனர். அதனைத் தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை மூடத் தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.



ராகுல் காந்தி டி ஷர்ட்டில் உள்ள ஆங்கில வார்த்தை: பிரச்சாரத்தில் சுவாரஸ்யம்!
[Monday 2024-11-11 18:00]

வயநாடு தேர்தல் பிரச்சாரத்தின்போது ராகுல் காந்தி அணிந்திருந்த டி ஷர்ட் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்திய மாநிலமானா கேரளா, வயநாடு மக்களவை தொகுதியில் வரும் 13 -ம் திகதியில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தொகுதியில் காங்கிரஸ் சார்பில் ஏற்கனவே போட்டியிட்ட ராகுல் காந்தியின் சகோதரி பிரியங்கா காந்தி போட்டியிடுகிறார்.



கலைஞரின் சிலை உடைக்கப்படும்: மறைமுகமாக விமர்சித்த சீமான்!
[Monday 2024-11-11 18:00]

ஆந்திராவில் சிலைகள் உடைக்கப்பட்டது போல தமிழ்நாட்டில் உங்களுக்கும் சிலைகள் உடைக்கப்படும் என்று நாம் தமிழர் கட்சி சீமான் பேசியுள்ளார். நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், "வங்கதேச தந்தையின் சிலைகளே அந்நாட்டில் உடைக்கப்பட்டன. அதிகாரம் என்பது நிலையானது அல்ல.



பொதுமன்னிப்பு கேட்டுவிட்டேன்: நடிகை கஸ்தூரி முன் ஜாமின் மனுதாக்கல்!
[Monday 2024-11-11 18:00]

தெலுங்கர்கள் குறித்து அவதூறாக பேசிய விவகாரத்தில் நடிகை கஸ்தூரி முன் ஜாமின் கோரியுள்ளார். தமிழ்ப்பட நடிகை கஸ்தூரி சமீபத்தில் தெலுங்கு மக்கள் குறித்து பேசிய விடயம் சர்ச்சையானது. அதனைத் தொடர்ந்து கஸ்தூரியை மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பொலிஸில் புகார் அளிக்கப்பட்டது.



அயோத்தி குழந்தை ராமருக்கு குளிராமல் இருக்க சால்வைகள் போர்த்த முடிவு!
[Monday 2024-11-11 18:00]

குளிர்காலம் வருவதால் அயோத்தியில் உள்ள குழந்தை ராமருக்கு சால்வைகள் போர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. பெரும் சர்ச்சைக்கு மத்தியிலும், பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியிலும் உத்தரபிரதேச மாநிலம், அயோத்தியில் கட்டப்பட்ட ராமர் கோயிலில் கடந்த ஜனவரி 22 -ம் திகதி ஸ்ரீ பாலராமர் பிரதிஷ்டை செய்யப்பட்டு கண்களில் இருந்த துணி அகற்றப்பட்டது.



“பெண் கல்வி ஏழேழு தலைமுறைக்கும் அரணாக விளங்கும்” - முதல்வர் நெகிழ்ச்சி!
[Monday 2024-11-11 06:00]

மதுரை மாவட்டம் திருவேங்கடம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ஷோபனா. இவர் குடும்ப சூழ்நிலை காரணமாக உயர்கல்வி பயில இயலாத நிலை குறித்துக் கடந்த 2021ஆம் ஆண்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு கடிதம் எழுதி இருந்தார். அதனைத் தொடர்ந்து இது தொடர்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உடனடியாக நடவடிக்கை எடுத்து மாணவியை மதுரை ஸ்ரீ மீனாட்சி அரசினர் மகளிர் கல்லூரியில் பயில ஏற்பாடு செய்தார். அதோடு மாணவிக்கு புத்தகங்கள் மற்றும் நிதியுதவியும் வழங்கி உதவி செய்தார்.



“த.வெ.க.வுடன் கூட்டணியா?” - பிரேமலதா விஜயகாந்த் சூசகம்!
[Monday 2024-11-11 06:00]

சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிகவின் தலைமை அலுவலகத்தில் (10.11.2024) அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டு தலைமை தாங்கினார். இந்தக் கூட்டத்தில் 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதனைத் தொடர்ந்து பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.



‘கூட்டணி நிலைப்பாட்டில் மாற்றம்?’ - எடப்பாடி பழனிசாமி பரபரப்பு பதில்!
[Monday 2024-11-11 06:00]

விருதுநகரில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இதன் ஒரு பகுதியாக (10.11.2024) பட்டம்புதூரில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமியைக் கடுமையாக விமர்சித்திருந்தார். இதனையடுத்து திருச்சி விமான நிலையத்தில் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார்.



பிரபல எழுத்தாளர் மறைவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!
[Sunday 2024-11-10 17:00]

பிரபல எழுத்தாளரான இந்திரா சௌந்தர்ராஜன் (வயது 65) மதுரையில் வசித்து வந்தார். இத்தகைய சூழலில் தான் அவரது வீட்டில் எதிர்பாராத விதமாகத் தவறி விழுந்த நிலையில் அவரது உயிர் உயிரிழந்தார். இவர் ஏராளமான நாவல்கள் மற்றும் சிறுகதைகளை எழுதியுள்ளார். இவரது மறைவுக்குப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இந்திரா சௌந்தர்ராஜன் மறைவிற்குத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.



‘எக்ஸ்ரேவுக்கு பதில் ஜெராக்ஸ்’ - சிகிச்சைக்கு சென்றவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!
[Sunday 2024-11-10 17:00]

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் காளி பாண்டி. இவர் உணவகம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். இத்தகைய சூழலில் தான், இவர் இருசக்கர வாகனத்தில் சென்றபோது விபத்து ஏற்பட்டது. இதில் அவரது கையில் உள்ள எலும்பில் முறிவு ஏற்பட்டது. இதனையடுத்து தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அவர் சிகிச்சைக்காகச் சென்றுள்ளார். அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர் காளி பாண்டியிடம் எக்ஸ்ரே எடுக்க பரிந்துரைத்துள்ளார்.



திரு டெல்லி கணேஷின் திடீர் மறைவு பேரிழப்பு: தவெக தலைவர் விஜய்!
[Sunday 2024-11-10 17:00]

மறைந்த நடிகர் டெல்லி கணேஷிற்கு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார். பழம்பெரும் நடிகர் டெல்லி கணேஷ் தனது 80 வயதில் காலமானது தமிழ் திரையுலகை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. நடிகர்கள் சிவகுமார், கார்த்தி உட்பட பலர் அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.



வங்கக்கடலில் இன்று உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி!
[Sunday 2024-11-10 17:00]

தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. வானிலை மையம் கூறியதாவது.., "தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் இன்று இரவு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தாழ்வு மண்டலமாக வலுவடைய வாய்ப்பு உள்ளது.



இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் 23 பேர் கைது!
[Sunday 2024-11-10 08:00]

தமிழக மீனவர்கள் தொடர்ச்சியாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படும் சம்பவங்கள் அரங்கேறி வரும் நிலையில் இன்று தமிழக மீனவர்கள் 23 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.



ரயில் ஓட்டுநரின் கவனக்குறைவு: உடல் நசுங்கி உயிரிழந்த ஊழியர்!
[Sunday 2024-11-10 08:00]

பீகார் மாநிலத்தில் பரவுனி என்ற ரயில் நிலையம் அமைந்துள்ளது. இந்த ரயில் நிலையத்தில் லக்னோ-பரவுனி எக்ஸ்பிரஸ் ரயிலின் பெட்டிகளை, எஞ்சினுடன் இணைக்கும் கப்ளிங்கை (COUPLING) பிரிக்கும் பணியில் ரயில்வே ஊழியர் அமர் குமார் ராவ் என்பவர் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது ரயில் ஒட்டுநர் ரயில் எஞ்சினை முன்னோக்கி இயக்குவதற்குப் பதிலாகப் பின்னோக்கி இயக்கியதாகக் கூறப்படுகிறது.


Vaheesan-Remax-2016
Asayan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
Karan Remax-2010
Rajeef sebarasha 2023/04/19
 gloriousprinters.com 2021
Airlinktravel-2020-01-01
NKS-Ketha-04-11-2021
Mahesan-Remax-169515-Seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Ambikajewellers-01-08-2021-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா