Untitled Document
November 14, 2024 [GMT]
“த.வெ.க.வுடன் கூட்டணியா?” - பிரேமலதா விஜயகாந்த் சூசகம்!
[Monday 2024-11-11 06:00]

சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிகவின் தலைமை அலுவலகத்தில் (10.11.2024) அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டு தலைமை தாங்கினார். இந்தக் கூட்டத்தில் 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதனைத் தொடர்ந்து பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிகவின் தலைமை அலுவலகத்தில் (10.11.2024) அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டு தலைமை தாங்கினார். இந்தக் கூட்டத்தில் 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதனைத் தொடர்ந்து பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

  

அப்போது செய்தியாளர்கள், ‘தேமுதிக, விஜய்யுடன் கூட்டணி வைக்க வாய்ப்பு இருக்கிறதா?’ எனக் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பதில் அளித்துப் பேசுகையில், “விஜய்யின் நிலைப்பாட்டை விஜய்யிடம் தான் கேட்க வேண்டும். ஏனென்றால் மாநாடு நடத்திய பிறகு அவரை மீண்டும் பொதுவெளியில் சந்திக்கவில்லை. அதனால் இன்றைக்கு விஜய் பற்றி என்னிடம் கேட்கின்ற கேள்விக்குப் பதில் என்னவென்றால் விஜய் செய்தியாளர் சந்திப்பைக் கூட்டி அதில் இந்த கேள்விகளை அவரிடம் எழுப்ப வேண்டும். அப்போது தான் அவரோடு அவருடைய எண்ணம் என்ன?, வியூகம் என்ன?, கூட்டணி வைத்துப் போட்டியிடுகிறாரா? இல்லையா? என்று பதில் அளிக்க வேண்டியவர் விஜய்.

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் விருதுநகர் தொகுதி விஜய் பிரபாகரன் போட்டியிட்ட அந்த தேர்தல் முடிவு வெளியிடுவதற்கு முன்பாகவே மாலை 5 மணிக்கு 40க்கு 40 தொகுதிகளில் வென்றோம் என்று முதல்வர் அறிவிக்கிறார். இது இந்த ஆட்சியின் ஆட்சி பலம், அதிகார பலம், பண பலம் உள்ளங்கை நெல்லிக்கனியாகத் தெரிகிறது. அந்த வகையில் 2026இல் வரும் சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதியில் வென்றெடுப்போம் என்று சொல்லி சொல்லி மூளைச் சலவை செய்கிறார்கள். ஆனால் திமுகவிற்கு எந்த அளவுக்கு நம்பிக்கை உள்ளதோ அதற்கும் மேலே எங்களுக்கும் நம்பிக்கை உள்ளது. உறுதியாக இருநூற்று முப்பத்து நான்கு தொகுதிகளிலும் தேமுதிக கூட்டணி வென்றெடுக்கும். இதற்கான பணிகளை இன்றிலிருந்து தொடங்கியுள்ளோம். அதற்கான வியூகம், கூட்டணி எல்லாம் அந்த அந்த காலகட்டத்தில் அறிவிப்பு வரும்.

விஜய் பிரபாகரனுக்குக் கட்சியில் முக்கியத்துவம் கொடுப்பது குறித்து, விஜயகாந்த் இருந்த போதும், இப்போதும் மாவட்டச் செயலாளர்கள், மூத்த நிர்வாகிகள் வலியுறுத்தி வருகின்றனர். இது குறித்து மூத்த நிர்வாகிகள், மாவட்ட கழக செயலாளர் என அனைவரும் கலந்து பேசி அடுத்து நடக்க உள்ள செயற்குழு பொதுக்குழுவில் அன்றைக்கு விஜய பிரபாகரன் மட்டுமன்றி மூத்த நிர்வாகிகள் பல பேருக்கும் பல முக்கியமான பதவிகள் அறிவிக்க உள்ளோம். ஒரு நாள் மழைக்கே சென்னை தாங்கவில்லை என்பது ஒட்டுமொத்த சென்னைவாசிகளுக்கும் தெரியும். தமிழகம் முழுவதும் இருக்கின்ற அனைத்து சாலைகளின் நிலைமை எப்படி உள்ளது என்றும் அனைவருக்கும் தெரியும்,. இந்த அரசு கொடுத்த வாக்குறுதி நிறைவேற்றாமல் ஆட்சி பலம், அதிகார பலத்தை வைத்துக் கொண்டு ஒரு மாயை உருவாக்கிக் கொண்டு உள்ளனர். திமுக கூட்டணியில் பல குளறுபடிகள் உள்ளன. 2026 தேர்தல் வரை இந்த கூட்டணி தொடருமா என்று கேள்வி எழுந்துள்ளது” எனத் தெரிவித்தார்.

  
   Bookmark and Share Seithy.com



யாருக்கும் பாதுகாப்பு இல்லாத ஆட்சி: விஜய் கண்டனம்!
[Wednesday 2024-11-13 18:00]

கிண்டி கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் பணியில் இருந்த மருத்துவர் கத்தியால் தாக்கப்பட்ட விவகாரத்திற்கு தவெக தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார். விஜய் கூறியதாவது.., இது தொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் தள பதிவில் "தமிழ்நாட்டில் பட்டப் பகலில் அரங்கேறும் குற்றச் செயல்கள் சட்டம் ஒழுங்கின் சீர்கேட்டையே காட்டுகிறது என்று எங்கள் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் வாயிலாகக் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், அரசு ஊழியர்கள், வியாபாரிகள், பொதுமக்கள் என யாருக்கும் பாதுகாப்பு இல்லாத ஆட்சியாக இந்த ஆட்சி உள்ளது என்பது தினம் தினம் நிகழும் குற்றச் செயல்களால் நிரூபணமாகிறது.



கலைஞர் பெயரை சூட்டுவதில் காட்டிய அக்கறை மருத்துவர்களை பாதுகாப்பதில் காட்டாதது ஏன்? சீமான் கேள்வி!
[Wednesday 2024-11-13 18:00]

அரசு மருத்துவமனைக்கு கலைஞர் பெயரைச் சூட்டுவதில் காட்டிய அக்கறையில் அணுவளவாவது அரசு மருத்துவர்களைப் பாதுகாப்பதில் திமுக அரசு காட்டாதது ஏன் என்று சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். தனது தாயாருக்கு சரியாக சிகிச்சை அளிக்கவில்லை என்று கூறி விக்னேஷ் என்பவர், கிண்டி கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் பணியில் இருந்த மருத்துவர் பாலாஜியை கத்தியால் தாக்கியுள்ளார்.



தமிழகத்தில் இன்று 12 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை!
[Wednesday 2024-11-13 18:00]

தமிழகத்தில் இன்று 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வானிலை மையம் கூறுகையில்.., வடதமிழக கடலோரப் பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. கேரள கடலோரப் பகுதிகளை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.



சென்னையில் மருத்துவமனையிலேயே மருத்துவருக்கு கத்திக்குத்து: விசாரணைக்கு உத்தரவு!
[Wednesday 2024-11-13 18:00]

சென்னை கிண்டி மருத்துவமனையில் வடமாநில இளைஞர் ஒருவர், அங்கு பணிபுரியும் மருத்துவரை கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிண்டி கலைஞர் அரசு மருத்துவமனையில் புற்றுநோய் துறையில் மருத்துவராக பணிபுரிந்து வருபவர் பாலாஜி ஜெகன்நாதன். இவரை வடமாநில இளைஞர் விக்னேஷ் உட்பட 4 பேர் கத்தியால் குத்தியுள்ளனர். தனது தாய்க்கு மருத்துவர் சரியாக சிகிச்சை அளிக்கவில்லை என விக்னேஷ் கூறியதாக தெரிகிறது.



இந்தியா-ரஷ்யா வர்த்தகம் விரைவில் 100 பில்லியன் டொலரைக் கடக்கும்: ஜெய்சங்கர் நம்பிக்கை!
[Wednesday 2024-11-13 06:00]

இந்தியா-ரஷ்யா இடையிலான வர்த்தகம் மிக விரைவில் 100 பில்லியன் டொலரைக் கடக்கும் என ஜெய்சங்கர் கூறியுள்ளார். இந்தியா மற்றும் ரஷ்யாவுக்கு இடையிலான வருடாந்திர இருதரப்பு வர்த்தகம் 2030க்கு முன்னரே 100 பில்லியன் அமெரிக்க டொலரைக் கடக்கும் என வெளி விவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.



‘கடும் எதிர்ப்பு’ - சூரியனார் கோயில் ஆதீனம் எடுத்த அதிரடி முடிவு!
[Wednesday 2024-11-13 06:00]

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் பிரசித்திபெற்ற சூரியனார் கோயில் ஆதீனம் அமைந்துள்ளது. இந்த ஆதீனத்தின் 28வது தலைமை மாடதிபதியாக மகாலிங்க சுவாமி (வயது 54) என்பவர் இருந்து வந்தார். இத்தகைய சூழலில் தான் ஹேமா ஸ்ரீ (வயது 47) என்ற பெண் பக்தர் ஒருவரை மகாலிங்க சுவாமி திருமணம் செய்துள்ளார். இவர்கள் இருவரும் பெங்களூரில் கடந்த அக்டோபர் மாதம் 10ஆம் தேதி பதிவு திருமணம் செய்து கொண்டனர். இது தொடர்பாகத் தகவல்கள் வெளியாகி இருந்தன.



சுங்கச்சாவடி திறப்பு? - களத்தில் இறங்கிய பொதுமக்கள்!
[Wednesday 2024-11-13 06:00]

திருப்பூர் மாவட்டம் அவினாசி முதல் அவினாசிபாளையம் வரை சுமார் 32 கிலோமீட்டர் தூரத்திற்குத் தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த நெடுஞ்சாலையில் வேலம்பட்டி என்ற இடத்தில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் சுங்கச்சாவடி அமைக்கப்பட்டது. இருப்பினும் இந்த சுங்கச்சாவடி நீர் நிலையை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டது. எனவே இந்த கட்டிடத்தை இடிக்கக் கோரி தொடர்ச்சியாகக் கடந்த சில வருடங்களாக அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள் எனப் பல்வேறு தரப்பினரும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதனால் சுங்கச்சாவடி திறக்கப்படாமல் இருந்து வந்தது.



இந்திய மீனவர்களுக்கு 2 வருட சிறை தண்டனை: இலங்கை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!
[Tuesday 2024-11-12 18:00]

எல்லைத்தாண்டிய 11 இந்திய மீனவர்களுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எல்லை தாண்டி மீன் பிடித்தமையால், புதுக்கோட்டையை சேர்ந்த 15 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.



தெலுங்கு மக்களை எப்படி பிரித்து பார்க்க முடியும்? - கஸ்தூரிக்கு நீதிபதி சரமாரி கேள்வி!
[Tuesday 2024-11-12 18:00]

தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய விவகாரத்தில் நடிகை கஸ்தூரிக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. வன்கொடுமை தடுப்புச் சட்டம் போல் பிராமணர்களைப் பாதுகாக்க ஒரு புதிய சட்டம் இயற்ற வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட நடிகை கஸ்தூரி தெலுங்கு மக்கள் குறித்து சர்ச்சையாக பேசியது பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.



உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி: தமிழகத்தில் 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட்!
[Tuesday 2024-11-12 18:00]

தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களுக்கு இந்திய வானிலை மையம் ஆரஞ்சு அலெர்ட் விடுத்துள்ளது. வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. மேலும், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நேற்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இதனால் சென்னை மற்றம் அதன் புறநகர்ப்பகுதிகளில் நேற்றிரவு முதல் லேசான முதல் கனமழை வரை பெய்து வருகிறது.



"என் பயணம் என் கால்களை நம்பி தான்" - தனித்து போட்டியிடுவதாக சீமான் உறுதி!
[Tuesday 2024-11-12 18:00]

தமிழகத்தில் வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் உறுதியளித்துள்ளார். தமிழக மாவட்டமான தூத்துக்குடியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னை விமான நிலையத்திற்கு வருகை தந்திருந்தார்.



சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் போட்டி: முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!
[Tuesday 2024-11-12 06:00]

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால், 2வது சென்னை கிராண்ட் மாஸ்டர் செஸ் சாம்பியன் ஷிப் போட்டி நடத்தப்பட்டது. இந்த போட்டி கடந்த 5ஆம் தேதி முதல் 11.11.2024 வரை சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்றது. இதில் ௮ சர்வதேச மற்றும் இந்தியா கிராண்ட் மாஸ்டர்கள் கலந்துகொண்டனர். இப்போட்டி 7 சுற்றுகளைக் கொண்டு ரவுண்டு ராபின் (Round Robin) முறையில் கிளாசிக்கல் செஸ் வகையில் விளையாடப்பட்டது. இப்போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த அர்ஜுன் எரிகைரி தமிழ்நாட்டைச் சேர்ந்த அரவிந்த் சிதம்பரம், அமெரிக்காவைச் சேர்ந்த லெவோன் ஆரோனின் உட்பட 8 சர்வதேச மற்றும் இந்திய வீரர்கள் பங்குபெற்றனர்.



பிறந்த குழந்தை இறந்த விவகாரம்: மருத்துவர் மீது பாய்ந்த நடவடிக்கை!
[Tuesday 2024-11-12 06:00]

தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் வட்டம் மரத்துரை வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் முருகேசன். இவரது மனைவி சிவரஞ்சனி (வயது 28). கர்ப்பிணிப் பெண்ணான இவர் கடந்த 2ஆம் தேதி பிரசவத்திற்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து மருத்துவர்கள் சிவரஞ்சனிக்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்யாமல் நான்கு நாட்கள் வரை சுகப்பிரசவத்திற்காகக் காத்திருந்தனர்.



ஸ்டெர்லைட் ஆலை விவகாரம்: ‘மறு ஆய்வு மனு தள்ளுபடி’ - உச்சநீதிமன்றம் திட்டவட்டம்!
[Tuesday 2024-11-12 06:00]

தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலையால் அந்தப் பகுதிகளில் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதாகப் பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தினர். இதனையடுத்து, கடந்த 2018ம் ஆண்டு மே 22ம் நாள் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 11 ஆண்கள் மற்றும் 2 பெண்கள் என 13 பேர் கொல்லப்பட்டனர். 40 பேர் பலத்த காயங்களை அடைந்தனர். அதனைத் தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை மூடத் தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.



ராகுல் காந்தி டி ஷர்ட்டில் உள்ள ஆங்கில வார்த்தை: பிரச்சாரத்தில் சுவாரஸ்யம்!
[Monday 2024-11-11 18:00]

வயநாடு தேர்தல் பிரச்சாரத்தின்போது ராகுல் காந்தி அணிந்திருந்த டி ஷர்ட் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்திய மாநிலமானா கேரளா, வயநாடு மக்களவை தொகுதியில் வரும் 13 -ம் திகதியில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தொகுதியில் காங்கிரஸ் சார்பில் ஏற்கனவே போட்டியிட்ட ராகுல் காந்தியின் சகோதரி பிரியங்கா காந்தி போட்டியிடுகிறார்.



கலைஞரின் சிலை உடைக்கப்படும்: மறைமுகமாக விமர்சித்த சீமான்!
[Monday 2024-11-11 18:00]

ஆந்திராவில் சிலைகள் உடைக்கப்பட்டது போல தமிழ்நாட்டில் உங்களுக்கும் சிலைகள் உடைக்கப்படும் என்று நாம் தமிழர் கட்சி சீமான் பேசியுள்ளார். நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், "வங்கதேச தந்தையின் சிலைகளே அந்நாட்டில் உடைக்கப்பட்டன. அதிகாரம் என்பது நிலையானது அல்ல.



பொதுமன்னிப்பு கேட்டுவிட்டேன்: நடிகை கஸ்தூரி முன் ஜாமின் மனுதாக்கல்!
[Monday 2024-11-11 18:00]

தெலுங்கர்கள் குறித்து அவதூறாக பேசிய விவகாரத்தில் நடிகை கஸ்தூரி முன் ஜாமின் கோரியுள்ளார். தமிழ்ப்பட நடிகை கஸ்தூரி சமீபத்தில் தெலுங்கு மக்கள் குறித்து பேசிய விடயம் சர்ச்சையானது. அதனைத் தொடர்ந்து கஸ்தூரியை மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பொலிஸில் புகார் அளிக்கப்பட்டது.



அயோத்தி குழந்தை ராமருக்கு குளிராமல் இருக்க சால்வைகள் போர்த்த முடிவு!
[Monday 2024-11-11 18:00]

குளிர்காலம் வருவதால் அயோத்தியில் உள்ள குழந்தை ராமருக்கு சால்வைகள் போர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. பெரும் சர்ச்சைக்கு மத்தியிலும், பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியிலும் உத்தரபிரதேச மாநிலம், அயோத்தியில் கட்டப்பட்ட ராமர் கோயிலில் கடந்த ஜனவரி 22 -ம் திகதி ஸ்ரீ பாலராமர் பிரதிஷ்டை செய்யப்பட்டு கண்களில் இருந்த துணி அகற்றப்பட்டது.



“பெண் கல்வி ஏழேழு தலைமுறைக்கும் அரணாக விளங்கும்” - முதல்வர் நெகிழ்ச்சி!
[Monday 2024-11-11 06:00]

மதுரை மாவட்டம் திருவேங்கடம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ஷோபனா. இவர் குடும்ப சூழ்நிலை காரணமாக உயர்கல்வி பயில இயலாத நிலை குறித்துக் கடந்த 2021ஆம் ஆண்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு கடிதம் எழுதி இருந்தார். அதனைத் தொடர்ந்து இது தொடர்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உடனடியாக நடவடிக்கை எடுத்து மாணவியை மதுரை ஸ்ரீ மீனாட்சி அரசினர் மகளிர் கல்லூரியில் பயில ஏற்பாடு செய்தார். அதோடு மாணவிக்கு புத்தகங்கள் மற்றும் நிதியுதவியும் வழங்கி உதவி செய்தார்.



‘கூட்டணி நிலைப்பாட்டில் மாற்றம்?’ - எடப்பாடி பழனிசாமி பரபரப்பு பதில்!
[Monday 2024-11-11 06:00]

விருதுநகரில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இதன் ஒரு பகுதியாக (10.11.2024) பட்டம்புதூரில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமியைக் கடுமையாக விமர்சித்திருந்தார். இதனையடுத்து திருச்சி விமான நிலையத்தில் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார்.


Ambikajewellers-01-08-2021-seithy
Mahesan-Remax-169515-Seithy
 gloriousprinters.com 2021
NKS-Ketha-04-11-2021
Asayan-Salon-2022-seithy
Karan Remax-2010
Airlinktravel-2020-01-01
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Rajeef sebarasha 2023/04/19
Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா