Untitled Document
December 4, 2024 [GMT]
‘பயணிகளின் கவனத்திற்கு’ - முக்கிய ரயில் சேவைகள் ரத்து!
[Monday 2024-12-02 07:00]

தென்மேற்கு வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் கடந்த சில தினங்களாக விட்டுவிட்டு கனமழை பெய்து வருகிறது. இத்தகைய சூழலில் ஃபெஞ்சல் புயல் புதுச்சேரி அருகில் நேற்று முன்தினம் (30.11.2024) மாலை 5 மணி அளவில் கரையைக் கடக்க துவங்கியது. நேற்று இரவு 10.30 மணிக்கும் 11.30 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் கரையைக் கடந்தது. இது புதுச்சேரிக்கு அருகில் நிலை கொண்டிருந்தது. இதனையடுத்து ஃபெஞ்சல் புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நேற்று (01.12.2024) காலை 11.30 மணியளவில் வலுவிழந்தது.

தென்மேற்கு வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் கடந்த சில தினங்களாக விட்டுவிட்டு கனமழை பெய்து வருகிறது. இத்தகைய சூழலில் ஃபெஞ்சல் புயல் புதுச்சேரி அருகில் நேற்று முன்தினம் (30.11.2024) மாலை 5 மணி அளவில் கரையைக் கடக்க துவங்கியது. நேற்று இரவு 10.30 மணிக்கும் 11.30 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் கரையைக் கடந்தது. இது புதுச்சேரிக்கு அருகில் நிலை கொண்டிருந்தது. இதனையடுத்து ஃபெஞ்சல் புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நேற்று (01.12.2024) காலை 11.30 மணியளவில் வலுவிழந்தது.

  

இருப்பினும் தமிழகத்தின் பல்வேறு வட மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதே சமயம் திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (02.12.2024) ஒரு நாள் மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும் வேலூர், சேலம், திருப்பத்தூர், தருமபுரி, ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன. அதோடு மழை காரணமாக நீலகிரி மாவட்டத்திற்கு உட்பட்ட உதகை, கூடலூர், கோத்தகிரி வட்டத்திலுள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன.

அதே போன்று நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை மாவட்ட ஆட்சியர் உமா பிறப்பித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டத்தில் திருப்போரூர், திருக்கழுக்குன்றம், செய்யூர், மதுராந்தகம் மற்றும் செங்கல்பட்டு என 5 தாலுகாக்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் பள்ளிகளில் மழைநீர் இருந்தால் அதன் சூழ்நிலையைப் பொறுத்து அப்பள்ளி தலைமை ஆசிரியரே விடுமுறை விடுவது குறித்து முடிவு செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகள் இன்று வழக்கம்போல் இயங்கும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

இந்நிலையில் விக்கிரவாண்டி - முண்டியம்பாக்கம் இடையிலான பாலம் துண்டிக்கப்பட்டதை அடுத்து பல்வேறு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதே சமயம் மழை பாதிப்பு காரணமாக இன்று எழும்பூரில் இருந்து திருச்சி செல்லும் சோழன் விரைவுவண்டி ரத்து செய்யப்பட்டுள்ளது. அதன்படி விழுப்புரத்தில் இருந்து தாம்பரம் செல்லும் ரயிலும், புதுச்சேரியில் இருந்து எழும்பூர் செல்லும் ரயிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது. தஞ்சாவூரில் இருந்து நேற்று (02.12.2024) எழும்பூர் புறப்பட்ட உழவன் விரைவுவண்டி (வண்டி எண் : 16866 ) விழுப்புரம், காட்பாடி வழியாக எழும்பூர் செல்லும். எனவே இந்த ரயில் மேல்மருவத்தூர், செங்கல்பட்டு, தாம்பரம், மாம்பலம் நிலையங்களில் ரயில் நிற்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மன்னார்குடியில் இருந்து நேற்று எழும்பூர் புறப்பட்ட ரயில் (வண்டி எண் : 16180), செங்கல்பட்டு, தாம்பரம், மாம்பலம் நிறுத்தங்களில் நிற்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காரைக்காலில் இருந்து நேற்றிரவு தாம்பரம் புறப்பட்ட ரயில் (வண்டி எண் : 16176) விழுப்புரம், காட்பாடி வழியாக எழும்பூர் செல்லும். செங்கல்பட்டில் நிற்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. செங்கோட்டையில் இருந்து நேற்று புறப்பட்ட சிலம்பு அதிவேக விரைவுவண்டி ரயிலும் (வண்டி எண் : 20682) விழுப்புரம், காட்பாடி வழியாக எழும்பூர் செல்லும். எனவே செங்கல்பட்டில் நிற்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நீலகிரியில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்றும், நாளையும் மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. மண்சரிவு ஏற்படும் அபாயத்தால் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது என தெற்கு ரயில்வே விளக்கமளித்துள்ளது.

  
   Bookmark and Share Seithy.com



பூத்துக்கு ஒரு அமைச்சர்: வெள்ளத்தில் எங்கே போனாங்க? கிடுக்குப்பிடி போட்ட ஆதவ் அர்ஜுனா!
[Wednesday 2024-12-04 08:00]

ஒரு இடைத்தேர்தல் வந்தால் ஆளும் தரப்பு, இருபது பூத்திற்கு ஒரு அமைச்சர், எம்பி என்று பொறுப்பாளர்களை நியமித்து பம்பரம் போல் களப்பணியை மேற்கொண்டு தேர்தல் வெற்றிக்காக அவர்கள் காட்டும் ஆர்வத்தை, இப்போது வெள்ளம் என்ற பெரும் துயரில் மக்கள் சிக்கியுள்ள வேளையில், இடைத்தேர்தல் பாணியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான அடிப்படை தேவைகளை தீர்க்கும் பணியில் ஏன் ஈடுபடவில்லை என விசிக துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா கேள்வி எழுப்பியுள்ளார்.



வேலையைக் காட்டிய வெள்ளம்: தள்ளிப்போகும் அரையாண்டு தேர்வுகள்?
[Wednesday 2024-12-04 08:00]

பெஞ்சல் புயல் காரணமாக விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, வேலூர், கிருஷ்ணகிரி மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் அரையாண்டு தேர்வு தள்ளிவைக்கப்படுவதாகக் கூறப்படும் நிலையில் இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சில நாட்களாகவே வங்கக்கடலில் போக்கு காட்டி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஒருவழியாக பெஞ்சல் புயலாக உருமாறியது.



வெள்ள பாதிப்புக்கு ரூ.2 ஆயிரம் எப்படி போதும்? - தமிழக அரசுக்கு அண்ணாமலை கோரிக்கை!
[Wednesday 2024-12-04 08:00]

ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் நிவாரண உதவி வழங்கப்படும் என்று முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது போதாது என்றும் ஒரு ரேஷன் கார்டுக்கு ரூ.10 ஆயிரத்து 400 வரை கொடுக்க வேண்டும் என்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். வங்க கடலில் உருவான 'ஃபெஞ்சல்'புயலால் சென்னை, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட வட மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் கனமழை கொட்டியது. கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் அதிகனமழை பெய்தது.



ஃபெஞ்சல் புயல் பாதிப்பு: நிவாரண உதவிகள் வழங்கிய தவெக தலைவர் விஜய்!
[Tuesday 2024-12-03 17:00]

ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் நிவாரணம் வழங்கினார். ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.



தமிழக அமைச்சர் மீது சேற்றை வீசிய மக்கள்: வெள்ள பாதிப்பு குறித்து கேட்க சென்றபோது பரபரப்பு!
[Tuesday 2024-12-03 17:00]

வெள்ள பாதிப்பு குறித்து கேட்டறிய ஆய்வுக்கு சென்ற தமிழக அமைச்சர் பொன்முடி மீது சேற்றை வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஃபெங்கல் புயல் காரணாமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்தது. அந்தவகையில், விழுப்புரம் மாவட்டத்தில் வரலாறு காணாத மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.



திருவண்ணாமலை மட்டுமல்ல, பெரிய பெரிய மலைகளும் இனி காணாமல் போகும் - அதிர்ச்சியை கிளப்பிய அனுமோகன்!
[Tuesday 2024-12-03 17:00]

திருவண்ணாமலை மட்டுமல்ல, பெரிய பெரிய மலைகளும் இனி காணாமல் போகும் என அதிர்ச்சியை ஏற்படுத்தும் தகவலை இந்திய திரைப்பட இயக்குனர் மற்றும் நகைச்சுவை நடிகரான அனுமோகன் கூறியுள்ளார். நிலச்சரிவில் நிலைகுலைந்த திருவண்ணாமலை தமிழ்நாட்டின் கோயில் நகரமான திருவண்ணாமலையில் திங்கட்கிழமை பிற்பகல் இரண்டாவது நிலச்சரிவு ஏற்பட்டது. முதலாவதாக ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணியளவில் அண்ணாமலையார் மலையின் கீழ் சரிவு ஏற்பட்டது.



ஜாமீன் பெற்ற உடனே செந்தில் பாலாஜி அமைச்சராக பதவியேற்றது ஏன்? - உச்சநீதிமன்றம் கேள்வி!
[Tuesday 2024-12-03 17:00]

ஜாமீன் பெற்ற உடனேயே செந்தில் பாலாஜி அமைச்சராக பதவியேற்றது ஏன் என்பது குறித்து விளக்கம் அளிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஆண்டு ஜூன் 14-ம் திகதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். இதனால், அவருடைய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, 472 நாட்கள் புழல் சிறையில் இருந்த செந்தில் பாலாஜி கடந்த செப்டம்பர் 26-ம் திகதி விடுதலையானார்.



‘18 மீனவர்கள் கைது’ - இலங்கை கடற்படை அதிரடி!
[Tuesday 2024-12-03 08:00]

தமிழகம் மற்றும் புதுவையைச் சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் சம்பவம் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. அதோடு மீனவர்களின் விசைப் படகுகளைப் பறிமுதல் செய்து அரசுடைமையாக்குவது போன்ற நடவடிக்கைகளையும் இலங்கை அரசு மேற்கொண்டு வருகிறது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்படும் சூழலும் நிலவி வருகிறது. இந்த துயரச் சம்பவங்களுக்கு இடையே மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்களும் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.



13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!
[Tuesday 2024-12-03 08:00]

தென்மேற்கு வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் தமிழகத்தின் பல்வேறு வட மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சேலம், கடலூர், விழுப்புரம், ஆகிய மாவட்டங்களிலும், புதுச்சேரியில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (03.12.2024) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதோடு கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு உட்பட்ட ஊத்தங்கரை, போச்சம்பள்ளி வட்டத்திற்கு உட்பட்ட பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.



'நெஞ்சை பதற வைக்கிறது, ஆழ்ந்த அனுதாபங்கள்' - தவெக தலைவர் விஜய் இரங்கல்!
[Tuesday 2024-12-03 08:00]

திருவண்ணாமலையில் தொடர்ந்து பரவலாக மழை பொழிந்து வரும் நிலையில் திருவண்ணாமலை வ.உ.சி நகரில் நேற்று இரவு மண் சரிவு ஏற்பட்டிருந்தது. மலை அடிவாரத்தில் இருக்கும் வ.உ.சி நகரில் மண்சரிவு ஏற்பட்டதில் பல வீடுகள் பாதிக்கப்பட்டன. 20 மணி நேரமாகியும் உள்ளே சிக்கியுள்ளவர்கள் நிலை என்ன என தெரியாமல் இருந்த நிலையில் மீட்பிற்காக பயன்படுத்தப்பட்ட ஜேசிபி இயந்திரத்தில் சிறுவனின் உடல் ஒன்று சிக்கியது. மீட்கப்பட்டது கௌதமன்(9) என்ற சிறுவனின் உடல் என்பது தெரியவந்துள்ளது.



எச்.ராஜாவுக்கு சிறை தண்டனை வழங்கப்பட்ட நிலையில் தற்போது நிறுத்திவைப்பு!
[Monday 2024-12-02 16:00]

பாஜகவைச் சேர்ந்த எச்.ராஜாவிற்கு சிறை தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கடந்த 2018 -ம் ஆண்டில் பாஜக ஒருங்கிணைப்பு குழு தலைவர் எச்.ராஜா, பெரியார் சிலையை உடைப்பேன் என கூறியது மற்றும் திமுக எம்பி கனிமொழி குறித்து விமர்சனம் வைத்தது தொடர்பாக பல்வேறு வழக்குகள் பதியப்பட்டது. இந்த வழக்குகளை தள்ளுபடி செய்ய வேண்டும் என எச்.ராஜா கோரிய மனுக்களை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.



UPSC தேர்வில் வென்று பொறுப்பேற்க வந்த இளம் ஐபிஎஸ் அதிகாரி சாலை விபத்தில் மரணம்!
[Monday 2024-12-02 16:00]

பயிற்சியை முடித்துவிட்டு பதவியேற்க வந்துகொண்டிருந்த ஐபிஎஸ் அதிகாரி சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்திய மாநிலமான மத்திய பிரதேசத்தைச் சேர்ந்தவர் ஹர்ஷ் பர்தன் (26). இவர், கர்நாடகாவில் கேடராக 2023 பேட்ச் ஐபிஎஸ் பேட்சில் பயிற்சி பெற்றுள்ளார். சமீபத்தில் தான், தனது நான்கு வார பயிற்சியை மைசூருவில் உள்ள கர்நாடக பொலிஸ் அகாடமியில் முடித்தார்.



இந்தியா - ரஷ்யா இணைந்து உருவாக்கிய அதிவேக BrahMos ஏவுகணையை வாங்க 3 நாடுகள் ஆர்வம்!
[Monday 2024-12-02 16:00]

இந்தியா மற்றும் ரஷ்யா ஒத்துழைப்பில் உருவாக்கப்பட்ட பிரம்மோஸ் ஏவுகணையை வாங்க 3 நாடுகள் விருப்பம் தெரிவித்துள்ளன. இந்தியாவும் ரஷ்யாவும் இணைந்து உருவாக்கிய உலகின் அதிவேக ஏவுகணையான பிரம்மோஸ் (BrahMos) பிரபலமடைந்து வருகிறது. சீனாவின் ஆக்கிரமிப்பிற்கு எதிராக போராடி வரும் பிலிப்பைன்சுக்கு, பிரம்மோஸ் ஏவுகணையை ஏற்கனவே இந்தியா வழங்கியுள்ளது.



எச்.ராஜா குற்றவாளி என தீர்ப்பு: 6 மாதம் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவு!
[Monday 2024-12-02 16:00]

பாஜகவைச் சேர்ந்த எச்.ராஜாவை குற்றவாளி என்றும், அவருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்தும் சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2018 -ம் ஆண்டில் பாஜக ஒருங்கிணைப்பு குழு தலைவர் எச்.ராஜா, பெரியார் சிலையை உடைப்பேன் என கூறியது மற்றும் திமுக எம்பி கனிமொழி குறித்து விமர்சனம் வைத்தது தொடர்பாக பல்வேறு வழக்குகள் பதியப்பட்டது.



‘10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு’ - வானிலை மையம் அறிவிப்பு!
[Monday 2024-12-02 07:00]

தென்மேற்கு வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் கடந்த சில தினங்களாக விட்டுவிட்டு கனமழை பெய்து வருகிறது. இத்தகைய சூழலில் ஃபெஞ்சல் புயல் புதுச்சேரி அருகில் நேற்று முன்தினம் (30.11.2024) மாலை 5 மணி அளவில் கரையைக் கடக்க துவங்கியது. நேற்று இரவு 10.30 மணிக்கும் 11.30 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் கரையைக் கடந்தது. இது புதுச்சேரிக்கு அருகில் நிலை கொண்டிருந்தது. இதனையடுத்து ஃபெஞ்சல் புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நேற்று (01.12.2024) காலை 11.30 மணியளவில் வலுவிழந்தது.



27 கிலோ குட்கா பறிமுதல் - 2 பேர் கைது!
[Monday 2024-12-02 07:00]

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள புளிச்சங்காடு கைகாட்டி பகுதியில் உள்ள சில பெட்டிக் கடைகளில் விற்பனைக்காக குட்கா பொருட்களை பெரியநாயகி புரத்தைச் சேர்ந்த சுல்தான் மகன் பாரூக்(65), மொத்தமாக விற்பனை செய்வதாக வந்த புகார் வெளியானது.



கரையை கடந்தது ஃபெஞ்சல் புயல்: மிதமானது முதல் கன மழை தொடர வாய்ப்பு!
[Sunday 2024-12-01 06:00]

வங்கக் கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் கரையை கடந்துள்ளது. வங்கக் கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் சனிக்கிழமை நள்ளிரவில் மகாபலிபுரம் - புதுச்சேரி இடையே கரையை கடந்துள்ளது. இதனையடுத்து, புதுச்சேரி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கடலோரப் பகுதிகளில் மணிக்கு 70 முதல் 80 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசி வருகிறது.



'381 இடங்களில் தேங்கிய மழைநீர், 3 பேர் உயிரிழப்பு' - அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் பேட்டி!
[Sunday 2024-12-01 06:00]

ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நள்ளிரவு முதல் விட்டுவிட்டு கனமழை பெய்து வருகிறது. மரக்காணம் அருகே புயல் கரையை கடக்க தொடங்கியுள்ளதால் அந்த பகுதியில் பலத்த காற்று வீசி வருகிறது. தொடர் கனமழை காரணமாக சென்னையின் புறநகர் பகுதிகளில் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது.



பட்டாக் கத்தியை காட்டி மிரட்டிய இந்து முன்னணி பொறுப்பாளர்!
[Sunday 2024-12-01 06:00]

புதுக்கோட்டை மாவட்டம் கலைஞர் சாலையில் நகைக்கடை நடத்தி வருபவர் கௌரிசங்கர். சம்பவத்தன்று 3 பேர் கொண்ட ரவுடி கும்பல் ஒன்று கலைஞர் சாலையில் உள்ள ஒரு துணிக்கடையில் பணம் கேட்டு மிரட்டி விட்டு அந்தக் கடையில் விற்பனைக்காக தொங்கிய குல்லாவை எடுத்து மாட்டிக் கொண்டு அருகில் இருந்த கௌரிசங்கரின் நகைக் கடைக்குள் நுழைந்தனர். பட்டாக் கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்டடுள்ளனர். பணம் கொடுக்காததால் நகை எடை வைக்கும் தராசு மற்றும் கண்ணாடிகளை உடைத்துவிட்டுச் சென்றுவிட்டனர்.



நாளை 7 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!
[Saturday 2024-11-30 18:00]

சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு இன்றும், நாளையும் ரெட் அலர்ட் என்று வானிலை மையம் எச்சரிக்கை அறிவிப்பு விடுத்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் மையம் கொண்ட ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று தீவிர புயலாக மாறியது. ஃபெங்கல் புயல் மணிக்கு 7 கி.மீ நகர்ந்த நிலையில் தற்போது 12 கிமீ வேகத்தில் நகர்ந்து வருகிறது.


Vaheesan-Remax-2016
Karan Remax-2010
Asayan-Salon-2022-seithy
Mahesan-Remax-169515-Seithy
NKS-Ketha-04-11-2021
Rajeef sebarasha 2023/04/19
Ambikajewellers-01-08-2021-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Kugeenthiran-200-2022-seithy
Airlinktravel-2020-01-01
 gloriousprinters.com 2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா