Untitled Document
December 23, 2024 [GMT]
அடுத்த 12 மணி நேரத்தில் வலுப்பெறும் காற்றழுத்த தாழ்வு பகுதி!
[Friday 2024-12-20 16:00]

வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வானிலை மையம் கூறுகையில்..,
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவியது.

வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வானிலை மையம் கூறுகையில்.., தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவியது.

  

இது அடுத்த 12 மணி நேரத்தில், வடமேற்கு திசையில் வடதமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளை நோக்கி நகர்ந்து அதற்கடுத்த 24 மணி நேரத்தில், இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடக்கு திசையில், ஆந்திர கடலோரப்பகுதிகளை ஒட்டி நகரக்கூடும்.

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வரும் இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி வரும் 22ஆம் திகதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்பு உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

இந்நிலையில் வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்.

இதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மேலும், அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

  
   Bookmark and Share Seithy.com



பப்ஜியால் உருவான காதல்: சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்த பாகிஸ்தான் பெண் கர்ப்பம்!
[Monday 2024-12-23 17:00]

காதலனை பார்க்க 4 குழந்தைகளுடன் பாகிஸ்தானில் இருந்து ஓடிவந்த பெண் கர்ப்பம் அடைந்துள்ள செய்தி பரவி வருகிறது. பாகிஸ்தானைச் சேர்ந்த சீமா ஹைதருக்கு 4 குழந்தைகள் உள்ளன. இவருக்கு பப்ஜி விளையாட்டு மூலம் இந்தியாவில் உள்ள உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சச்சின் மீனா மீது காதல் வந்துள்ளது.



சன்னி லியோன் பெயரில் மாதம்தோறும் ரூ.1000 உதவித்தொகை: அதிகாரிகள் அதிர்ச்சி!
[Monday 2024-12-23 17:00]

சத்தீஸ்கர் மாநிலத்தில் நடிகை சன்னி லியோன் பெயரில் மாதம் தோறும் ரூ.1,000 உதவித்தொகை டெபாசிட் செய்யப்பட்டு வந்தது தெரியவந்துள்ளது. பெண்களின் முன்னேற்றத்திற்காக மாநில அரசுகள் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. அந்தவகையில், தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமை தொகை என்ற பெயரில் திருமணமான பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கி வருகிறது.



ஐபோனில் முருகன் யாருடன் பேசப்போகிறார்? - சீமான் விமர்சனம்!
[Monday 2024-12-23 17:00]

திருப்போரூர் முருகன் கோயில் உண்டியலில் பக்தரின் ஐபோன் விழுந்த சம்பவம் குறித்து சீமான் கருத்து தெரிவித்துள்ளார். சென்னையில் உள்ள திருப்போரூர் கந்தசுவாமி கோயிலுக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சென்னை அம்பத்தூர் விநாயகபுரத்தைச்சேர்ந்த தினேஷ் என்பவர் சென்றுள்ளார். அப்போது அவர் உண்டியலில் காணிக்கை செலுத்தும்போது தவறுதலாக ஐபோனையும் போட்டுவிட்டார். உடனே, அவர் தனது செல்போனை எடுத்துக்கொடுக்குமாறு ஊழியர்களிடம் கூறியுள்ளார்.



தமிழகத்தை நோக்கி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி!
[Monday 2024-12-23 17:00]

மத்திய மேற்கு மற்றும் அதையொட்டிய, தென்மேற்கு வங்கக்கடலில் நிலவிய, காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது. இது, நேற்று காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மேலும் வலுவிழந்து, மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவி வருகிறது. இது நாளை ஆந்திர - வடதமிழகம் கடற்கரையை நோக்கி நகரும் என்றும், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி கரையை நோக்கி நகரும்போது சில பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.



'திமுக போடும் வழக்கமான நாடகம் இது' - வானதி ஸ்ரீனிவாசன் விமர்சனம்!
[Monday 2024-12-23 07:00]

நேற்று திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் திமுகவின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய அரசைக் கண்டித்து பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. குறிப்பாக பாராளுமன்றத்தில் அம்பேத்கர் குறித்து அமித்ஷா பேசியதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதேபோல் பேரிடர் நிதியை ஒன்றிய அரசு ஒதுக்காததற்கும் கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது. டங்ஸ்டன் சுரங்க ஆலை சட்டத்தை கைவிடும்படி பாஜகவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதனை ஆதரித்ததாக அதிமுகவிற்கு எதிராகவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.



'கடலூர் - சிதம்பரம்': தனியார் பேருந்துகள் இயங்காது!
[Monday 2024-12-23 07:00]

விழுப்புரம் முதல் நாகப்பட்டினம் வரை தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இதில் சிதம்பரம் அருகே கொத்தட்டை கிராமத்தில் டோல்கேட் அமைக்கப்பட்டுள்ளது. சாலையில் முழுவதும் பணி முடிவடையாத நிலையில் கடலூர் அருகே உள்ள பூண்டியாங்குப்பம் கிராமத்திலிருந்து சீர்காழி அருகே உள்ள சட்டநாதபுரம் வரை அமைக்கப்பட்டுள்ள சாலைக்கு சுங்கவரி வசூலிக்கப் போவதாக அறிவிக்கப்பட்டது.



நூதன முறையில் கோயிலில் திருட்டு: விசாரணையில் வெளியான திடுக் தகவல்!
[Monday 2024-12-23 07:00]

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள வடகாடு காவல் சரகத்திற்கு உட்பட்ட எல்.என்.புரம் ஊராட்சி அணவயல் கிராமத்தில் உள்ள கிராம காவல் தெய்வமான தாணான்டி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இங்கு வந்த ஒரு நபர் கோயில் பூசாரியிடம் அர்ச்சனை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். அதன்படி அர்ச்சனை பொருட்களை வாங்கிப் பார்த்த போது அதில் தேங்காய் இல்லையே என்று பூசாரி கூறியுள்ளார். உங்க வீட்ல தேங்காய் இருந்தால் எடுத்து வந்து அர்ச்சனை செய்ங்க அதுக்கு காசு தந்துடுறேன் என்று வந்த நபர் கூறியுள்ளார்.



தமிழகத்தின் அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுப்பு?: இ.பி.எஸ். கண்டனம்!
[Monday 2024-12-23 07:00]

நாட்டின் 76வது குடியரசு தின விழா வரும் ஜனவரி 26ஆம் தேதி (26.01.2025) நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட உள்ளது. வழக்கமாக டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவில், குடியரசுத் தலைவர் மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்துவார். அதன் பின்னர் பாதுகாப்பு வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை குடியரசுத் தலைவர் ஏற்றுக்கொள்வார்.



“கேள்வி கேட்டால் முதல்வர் என் மீது பழி போடுகிறார்” - இபிஎஸ்!
[Sunday 2024-12-22 07:00]

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி (21-12-24) சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “கேள்வி கேட்டால் என் மீது முதல்வர் பழி போடுகிறார். அண்டை மாநில மருத்துவக் கழிவு கொட்டப்பட்டதை கூட திமுக அரசால் தடுக்க முடியவில்லை. மக்கள் பிரச்சனையை திமுக அரசு கண்டுகொள்ளவில்லை. செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு குறித்து முதல்வர் தேவையில்லாத கருத்துக்களை கூறி வருகிறார். செம்பரம்பாக்கன் ஏரி திறப்பால் பாதிப்பில்லை. அதிக மழைதான் பாதிப்புக்கு காரணம்.



“இஸ்ரேலை தமிழ்நாடு பின்பற்ற வேண்டும்” - ராமதாஸ்!
[Sunday 2024-12-22 07:00]

திருவண்ணாமலை மாவட்டத்தில், பா.ம.க சார்பில் உழவர் பேரியக்கத்தின் மாநில மாநாடு (21-12-24) நடைபெற்றது. உழவர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற இந்த மாநாட்டில் பா.ம.க நிறுவனர் ராமதாஸ் மற்றும் பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ், பா.ம.க எம்.எல்.ஏ ஜி.கே.மணி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த மாநாட்டில், அன்புமணி ராமதாஸ் பேசியதை தொடர்ந்து பா.ம.க நிறுவனர் ராமதாஸ் பேசினார்.



“தி.மு.க அரசு முதலாளிகளின் பக்கம் உள்ளது” - அன்புமணி ராமதாஸ் விமர்சனம்!
[Sunday 2024-12-22 07:00]

திருவண்ணாமலை மாவட்டத்தில், பா.ம.க சார்பில் உழவர் பேரியக்கத்தின் மாநில மாநாடு (21-12-24) நடைபெற்றது. உழவர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற இந்த மாநாட்டில் பா.ம.க நிறுவனர் ராமதாஸ் மற்றும் பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ், பா.ம.க எம்.எல்.ஏ ஜி.கே.மணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.



மின்கம்பி உரசியதில் பேருந்தில் பாய்ந்த மின்சாரம்: இளம்பெண் மரணம்!
[Saturday 2024-12-21 17:00]

டீ குடிப்பதற்காக பேருந்தை நிறுத்தியபோது மின்கம்பத்தில் உரசியதால் மின்சாரம் பாய்ந்து இளம்பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். தமிழக மாவட்டமான ராணிப்பேட்டை, வாணியம்பாடி வெங்கடாபுரம் பகுதியை சேர்ந்த 40-க்கும் மேற்பட்டோர் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயிலுக்கு பேருந்தில் சென்றுள்ளனர். ஆற்காடு அருகே பேருந்து சென்று கொண்டிருந்தபோது டீ குடிப்பதற்காக பேருந்தை நிறுத்தியுள்ளனர். அப்போதுசாலையோரம் சென்ற உயரழுத்த மின்சாரக்கம்பி பேருந்தின் மேல் தளத்தில் உரசியதாக தெரிகிறது.



இந்தியாவின் பெருமையாக விளங்கும் சித்தோர்கர் கோட்டை!
[Saturday 2024-12-21 17:00]

இந்தியாவில் உள்ள சித்தோர்கர் கோட்டை யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமாகவும் அறிவிக்கப்பட்டது. இந்தியாவின் பெருங்கோட்டைகளில் ஒன்றாக இருக்கும் சித்தோர்கர் கோட்டையானது உலகப் பாரம்பரியக் களங்களில் ஒன்றாகும். இந்திய மாநிலமான ராஜஸ்தான், மேவார் பகுதியில் சித்தோர்கர் மாவட்டத்தின் தலைநகரான சித்தோர்கரில் சித்தூர் கோட்டை அமைந்துள்ளது. இது, டெல்லி - மும்பை நெடுஞ்சாலையில் அஜ்மீர் நகரத்திலிருந்து 233 கிமீ தொலைவில் உள்ளது.



ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தின் அம்சங்கள்!
[Saturday 2024-12-21 17:00]

55வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பாப்கார்னுக்கு 18 சதவீதம் வரை வரி விதிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில், மாநிலங்களவை உறுப்பினர்களை உள்ளடக்கிய 55 -வது ஜிஎஸ்டி கவுன்சில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பொருட்களுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரி குறித்து பல்வேறு ஆலோசனைகள் நடைபெற்றது.



6 வயது குழந்தையை கழுத்து நெரித்து கொன்ற சித்தி!
[Saturday 2024-12-21 17:00]

கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டத்தில் சூனியம் செய்ததாக சந்தேகிக்கப்படும் வழக்கில் ஆறு வயது சிறுமியை அவரது சித்தி கழுத்தை நெரித்து கொன்றதாக தகவல் வெளியாகியுள்ளது. கொத்தமங்கலம் அருகே உள்ள நெல்லிக்குழியில் வசித்து வந்த உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த அஜாஸ் கான் என்பவரின் மகள் முஸ்கான் என்ற சிறுமி.



‘காற்றழுத்த தாழ்வு மண்டலம்’ - வானிலை ஆய்வு மையம் முக்கிய தகவல்!
[Saturday 2024-12-21 07:00]

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் 15ஆம் தேதி (15.10.2024) தொடங்கியதாக வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. அந்த வகையில் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மிகத்தீவிரமாக உள்ளது. இதன் காரணமாகத் தமிழகம் முழுவதும் பரவலாகக் கனமழை பெய்து வருகிறது. அதே சமயம் வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.



'இனியாவது ஆளுநர் அரசியல் செய்வதை கைவிட வேண்டும்'-அமைச்சர் கோவி.செழியன்!
[Saturday 2024-12-21 07:00]

துணைவேந்தர் தேடுதல் குழுவை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும் என தமிழக ஆளுநர் உத்தரவிட்டிருந்தார். இந்தநிலையில் துணைவேந்தர் தேடுதல் குழு தொடர்பான ஆளுநரின் அறிவுறுத்தல்கள் உள்நோக்கம் கொண்டது என உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார்.



நெல்லை நீதிமன்ற கொலை சம்பவம்: 5 பேர் கைது!
[Saturday 2024-12-21 07:00]

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் மாவட்ட நீதிமன்றம் செயல்பட்டு வருகிறது. இன்று (20.12.2024) காலை கீழநத்தம் என்ற பகுதியைச் சேர்ந்த மாயாண்டி என்பவர் வழக்கில் ஆஜராவதற்காக நீதிமன்ற வாயிலில் காத்திருந்தார். இந்நிலையில் அப்போது அங்கு வந்த 4 பேர் கொண்ட மர்ம கும்பல் ஒன்று அவரை சுற்றி வளைத்து நீதிமன்ற வளாகத்திற்கு விரட்டினர். அதன் பின்னர் அவர் உயிருக்குப் பயந்து ஒடிய நிலையில் மீண்டும் நீதிமன்ற வாயில் அருகே வந்துள்ளார். அச்சமயத்தில் அவர் நீதிமன்ற வாயிலில் வைத்து கொடூரமான முறையில் முகம் கை, கால் உள்ளிட்ட பகுதிகளில் கடுமையாக வெட்டி படுகொலை செய்தனர்.



அமெரிக்காவில் மிஸ் இந்தியா பட்டத்தை வென்ற சென்னை பெண்!
[Friday 2024-12-20 17:00]

கலிபோர்னியா மாகாணத்தை சேர்ந்த 19 வயது மாணவியான கேட்லின் சாண்ட்ரா மிஸ் இந்தியா பட்டத்தை வென்றார். வாஷிங்டன் நியூ ஜெர்சியில் நடந்த 2024 மிஸ் இந்தியா யு.எஸ்.ஏ. பட்டத்தை சென்னையை சேர்ந்த இந்திய அமெரிக்க இளம்பெண் கேட்லின் சாண்ட்ரா பெற்றுள்ளார். நியூ ஜெர்சியில் இந்திய விழாக் குழு ஏற்பாடு செய்த மிஸ் இந்தியா யு.எஸ்.ஏ. மற்றும் மிஸஸ் இந்தியா யு.எஸ்.ஏ., மிஸ் டீன் இந்தியா யு.எஸ்.ஏ. போட்டியானது நடைபெற்றது.



கோயில் உண்டியலில் தவறுதலாக விழுந்த பக்தரின் ஐபோன்: கடவுளுக்கே சொந்தம் என கொடுக்க மறுப்பு!
[Friday 2024-12-20 16:00]

கோயில் உண்டியலில் தவறுதலாக விழுந்த பக்தரின் ஐபோனை திருப்பி கொடுக்க நிர்வாகம் மறுத்துள்ளது. சென்னையில் உள்ள திருப்போரூர் கந்தசுவாமி கோயிலுக்கு பக்தர்கள் வந்து உண்டியலில் காணிக்கை செலுத்துவது வழக்கம். அந்த வகையில், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சென்னை அம்பத்தூர் விநாயகபுரத்தைச்சேர்ந்த தினேஷ் என்பவர் திருப்போரூர் முருகன் கோவிலுக்கு சென்றுள்ளார்.


Logan-Kumaresh-Homelife-02-02-2021
Airlinktravel-2020-01-01
Ambikajewellers-01-08-2021-seithy
Vaheesan-Remax-2016
Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Remax-169515-Seithy
Asayan-Salon-2022-seithy
Rajeef sebarasha 2023/04/19
Karan Remax-2010
NKS-Ketha-04-11-2021
 gloriousprinters.com 2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா