Untitled Document
March 31, 2025 [GMT]
கறுப்பு நிறம் குறித்த விமர்சனத்திற்கு உருக்கமாக பதிவிட்ட கேரள பெண் ஐஏஎஸ் அதிகாரி!
[Thursday 2025-03-27 19:00]

கேரள தலைமைச் செயலாளர் சாரதா முரளீதரன், சிலர் தன்னை கறுப்பு நிறம் என்று விமர்சித்ததாக பதிவிட்டுள்ளார். கேரள தலைமைச் செயலாளர் சாரதா முரளீதரன் சமீபத்தில் ஃபேஸ்புக்கில் கறுப்பு நிறத்தால் எதிர்கொண்ட சம்பவம் குறித்து முகநூலில் பதிவிட்டிருந்தார். அந்த முகநூல் பதிவில்

கேரள தலைமைச் செயலாளர் சாரதா முரளீதரன், சிலர் தன்னை கறுப்பு நிறம் என்று விமர்சித்ததாக பதிவிட்டுள்ளார். கேரள தலைமைச் செயலாளர் சாரதா முரளீதரன் சமீபத்தில் ஃபேஸ்புக்கில் கறுப்பு நிறத்தால் எதிர்கொண்ட சம்பவம் குறித்து முகநூலில் பதிவிட்டிருந்தார். அந்த முகநூல் பதிவில் "கறுப்பு நிறத்தால் பலரும் தங்களை வித்தியாசமாக பார்ப்பதை அனுபவித்துள்ளோம். அதனை கண்டு கொள்ளாமல் உங்களது வேலையை பாருங்கள் என்று சிலர் கூறுகின்றனர். ஆனால், அதனால் ஏற்படும் சங்கடங்களை பலரும் வந்து கூறுகின்றனர்.

  

திருமணத்திற்கு கூட வெள்ளையாக இருக்கும் பெண்கள் வேண்டும் என்கிறார்கள். கறுப்பாக இருந்தாலும் அழகியாக இருக்க வேண்டும் என்கிறார்கள். இதனை எதிர்த்து போரிட வேண்டும் என்று தான் தோன்றுகிறது.

என்னை யார் கறுப்பு என்றார்கள் என்பதை வெளிப்படையாக கூற விரும்பவில்லை. இது தனி மனிதன் மனநிலை அல்ல, சமூகத்தின் மனநிலை.

50 ஆண்டுகளாக இதை அனுபவதித்ததால் என் பார்வையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதனை குழந்தைகள் ஏற்றுக் கொள்வார்கள், சுற்றியுள்ளவர்கள் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள்.

ஆண்களில் இதனை எதிர்பார்க்க மாட்டார்கள். பெண்களின் நிறம், உருவம் ஆகியவை இவ்வாறு தான் இருக்க வேண்டும் என சமூகம் நினைக்கின்றது. கறுப்பில் இருக்கும் அழகு சமூகத்துக்கு தெரிய வேண்டும்.

கறுப்பு நிறத்தை ஹீரோ ஆக்கவேண்டும். என் கணவருக்கு இதை பற்றி தெரியும். நாங்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டோம். கறுப்போ, வெள்ளையோ யாராக இருந்தாலும் தன்னம்பிக்கை வேண்டும்" என்றார்.

  
   Bookmark and Share Seithy.com



“வரலாறு காணாத வெற்றியை காண்போம்” - முதல்வர் ஸ்டாலின் பேச்சு!
[Monday 2025-03-31 06:00]

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டப் பேரவை உறுப்பினராக இருந்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மரணம் அடைந்ததைத் தொடர்ந்து, இந்த தொகுதிக்குக் கடந்த பிப்ரவரி மாதம் 5ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. திமுக சார்பில் வி.சி. சந்திரகுமார், நாம் தமிழர் கட்சி சார்பில் மா.கி. சீதாலட்சுமி என 46 பேர் போட்டியிட்டனர். முக்கிய எதிர்க்கட்சிகளான அதிமுக, தேசிய கட்சியான பாஜக, தேமுதிக, தவெக உள்ளிட்டவை இந்த இடைத்தேர்தலைப் புறக்கணித்தன. இந்த இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் பிப்ரவரி 8ஆம் தேதி எண்ணப்பட்டது.



15ஆம் நூற்றாண்டு பெருமாள் சிலை கண்டுபிடிப்பு!
[Monday 2025-03-31 06:00]

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அரசுக் கலை அறிவியல் கல்லூரித் தமிழ்த் துறைத் தலைவர் மற்றும் தொல்லியல் வரலாற்று ஆய்வாளர் காளிதாஸ், பேராசிரியர் சாலை கலையரசன் ஆகியோர் கொண்ட குழுவினர் புதுக்கோட்டை வடமலாப்பூர் பகுதியில் கள ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, பெருமாள் சிலை ஒன்றைக் கண்டறிந்தனர். இவ்வூரைச் சேர்ந்த கருப்பையா என்பவர் கொடுத்த தகவலாவது, இச்சிலை ஆவாண்டு என்னுமிடத்தில் இருந்ததாகவும், தற்பொழுது சாலை ஓரத்தில் கிடப்பதாகவும் கூறினார்.



எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்களின் வேலைநிறுத்தம் வாபஸ்!
[Monday 2025-03-31 06:00]

தென் மண்டல எல்.பி.ஜி. டேங்க் லாரி உரிமையாளர்கள் சங்கம் தமிழகத்தில் நாமக்கல்லைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இதில் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த டேங்கர் லாரி உரிமையாளர்கள் இணைந்துள்ளனர். மத்திய அரசுக்குச் சொந்தமான எண்ணெய் நிறுவனங்களில் இருந்து எரிவாயு நிரப்பும் மையங்களுக்கு எரிவாயுவை டேங்கர் மூலம் வாடகை ஒப்பந்தம் அடிப்படையில் இயக்கி வருகின்றனர். இத்தகைய சூழலில் தான் எல்பிஜி டேங்கர் உரிமையாளர்கள் சங்க லாரிகள் எண்ணெய் சுத்திகரிப்பு மையங்கள் முன்பு வேலை நிறுத்தத்தைத் தொடங்க அறிவித்திருந்தது.



பள்ளிக்கல்வித்துறையின் முக்கிய அறிவிப்பு!
[Sunday 2025-03-30 17:00]

தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதன் காரணமாகத் தொடக்கப் பள்ளிகளுக்கு முன்கூட்டியே கோடை விடுமுறை விடப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது 1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கான ஆண்டு இறுதித்தேர்வுகள் வரும் ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி வரை நடைபெற இருந்தது.



லிப்ட் மெக்கானிக் கொலை: ஏரியில் வீசப்பட்ட சடலம்!
[Sunday 2025-03-30 17:00]

திருவள்ளூர் அருகே லிப்ட் மெக்கானிக் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்துள்ள சின்னம்பேடு பகுதியில் வசித்து வருபவர் சங்கர் (30). திருமணம் ஆகாத நிலையில் லிப்ட் மெக்கானிக்காக பணியாற்றி வந்துள்ளார். நேற்று காலை வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற மெக்கானிக் சங்கர் இரவு வரை வீடு திரும்பவில்லை என்று கூறப்படுகிறது. பல இடங்களில் அவரை அவரது குடும்பத்தார் தேடி வந்தனர்.



'தமிழ் படித்தவர்களுக்கு வேலை இல்லையா?' - பாமக ராமதாஸ் ஆதங்கம்!
[Sunday 2025-03-30 17:00]

'தமிழ் படித்தவர்களுக்கு வேலை இல்லையா? அரசு பள்ளிகளில் தமிழ் கற்பிக்க தமிழாசிரியர் பணியிடங்களை உடனடியாக ஏற்படுத்த வேண்டும்' என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தமிழ்நாட்டில் தமிழை முதன்மைப் பாடமாகத் தேர்வு செய்து பட்டப்படிப்பு (பி.ஏ), பட்ட மேற்படிப்பு (எம்.ஏ), இளம் முனைவர்(எம்.பில்), முனைவர் (பி.எச்டி) படிப்புகளையும், அவற்றுடன் கல்வியியல் (பி.எட்) பட்டமும் பெற்ற 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் வேலைவாய்ப்பின்றியும், தகுதிக்கு குறைவான பணிகளை பார்த்துக் கொண்டும் அவதிப்பட்டு வருகின்றனர். பலர் பட்டம் பெற்று 25 ஆண்டுகளுக்கு மேலாகியும் கூட அவர்களுக்கு வேலை கிடைக்கவில்லை. அவர்களின் அவல நிலைக்கு தமிழக அரசு கடைபிடித்து வரும் அன்னைத் தமிழுக்கு எதிரான கொள்கைகள் தான் காரணம் ஆகும்.



விஜய் முதலில் திமுக எதிர்ப்பை தீவிரப்படுத்த வேண்டும்: தமிழிசை!
[Sunday 2025-03-30 17:00]

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் திமுகவை எதிர்ப்பதை தீவிரப்படுத்த வேண்டும் என தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். தவெக கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் தலைவர் விஜய் பேசியது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. அவர் தவெக - திமுக இடையேதான் போட்டி என கூறியதை தொண்டர்களை உற்சாகப்படுத்த பேசியதாக எடப்பாடி பழனிசாமி கூறினார்.



மத்திய அரசு மீது முதல்வர் மு.க. ஸ்டாலின் கடும் விமர்சனம்!
[Sunday 2025-03-30 07:00]

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம் (MGNREGA) எனப்படும் 100 நாள் வேலை உறுதி திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டிற்குத் தரவேண்டிய ரூ.4 ஆயிரத்து 34 கோடி நிதியை வழங்காமல் தமிழ்நாட்டைத் தொடர்ச்சியாக வஞ்சித்து வருவதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக மத்திய பாஜக அரசைக் கண்டித்து திமுக சார்பில் அனைத்து ஒன்றியங்களிலும் தலா 2 இடங்களில் (29.03.2025) மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்நிலையில் இது தொடர்பான புகைப்படங்களை முதல்வர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.



தர்ப்பூசணி பழத்தில் கலப்படம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை!
[Sunday 2025-03-30 07:00]

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட அடையார் மண்டலம் இந்திரா நகர் தொடக்கப் பள்ளியில் கோடைகால வெப்ப அலை பாதிப்பு மற்றும் வெப்பவாத தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியினை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் (29.03.2025) தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் துணை மேயர் மு. மகேஷ் குமார், கூடுதல் ஆணையர் வி. ஜெயச்சந்திர பானு ரெட்டி, தேசிய நலவாழ்வு குழும இயக்குநர் அருண் தம்புராஜ் எனப் பலரும் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து அமைச்சர் சுப்பிரமணியன் செய்தியாளர்களைச் சந்ந்தித்து பேசினார்.



மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்கு தி.மு.க. பதிலடி!
[Sunday 2025-03-30 07:00]

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆங்கில செய்தி ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்திருந்தார். அதில், ‘மருத்துவம் மற்றும் பொறியியல் கல்வியை தமிழில் கொண்டு வராததால் திமுக அரசு தமிழர்களுக்கு எதிரானது’ என்ற கருத்தைத் தெரிவித்திருந்தார். இந்த கருத்தை எக்ஸ் சமூக வலைத்தளத்திலும் வெளியிட்டிருந்தார். இந்நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் திமுக வின் அதிகாரப்பூர்வ எக்ஸ் சமூக வலைத்தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது.



குழந்தை வேண்டும் என்பதற்காக மந்திரவாதி உதவியுடன் இளைஞரை நரபலி கொடுத்த நபர்!
[Saturday 2025-03-29 18:00]

பீஹாரில், தனக்கு குழந்தை வேண்டும் என்பதற்காக மந்திரவாதி ஒருவரின் உதவியுடன் இளைஞர் ஒருவரை நரபலி கொடுத்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். பீஹாரிலுள்ள ஔரங்கபாதைச் சேர்ந்த யுகல் யாதவ் என்னும் இளைஞர் காணாமல் போனதாக அவரது உறவினர்கள் அளித்த புகாரின்பேரில் பொலிசார் அவரைத் தேடிவந்துள்ளார்கள். அப்போது, Banger என்னும் கிராமத்தில் ஒரு இடத்தில் சாம்பலுக்குள் மனித எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.



ரஷ்ய எண்ணெய் கப்பலை திருப்பி அனுப்பிய இந்தியா!
[Saturday 2025-03-29 18:00]

ஆவணங்கள் குறைபாடு காரணமாக ரஷ்ய எண்ணெய் கப்பல் இந்திய துறைமுகத்தில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. ஹோண்டுராஸ்(Honduras) கொடி ஏற்றப்பட்ட "அந்தமான் ஸ்கைஸ்"(Andaman Skies) என்ற பழமையான ரஷ்ய எண்ணெய் கப்பல் இந்திய துறைமுகத்தில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. இந்த கப்பல் சுமார் 7,67,000 பேரல் ரஷ்ய கச்சா எண்ணெயை ஏற்றி வந்த நிலையில், இந்திய துறைமுகமான வாடினாரில்(Vadinar) நுழைய மறுப்பு தெரிவிக்கப்பட்டது.



"தொண்டர்களை உற்சாகப்படுத்தவே விஜய் இவ்வாறு பேசியுள்ளார்" - எடப்பாடி பழனிச்சாமி!
[Saturday 2025-03-29 18:00]

தவெக தொண்டர்களை உற்சாகப்படுத்தவே விஜய் இவ்வாறு பேசியுள்ளார் என எடப்பாடி பழனிச்சாமி பேசியுள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய் ஆவேசமாக உரையாற்றினார். அப்போது அவர், "2026 சட்டமன்ற தேர்தலில் இரண்டே கட்சிகள் இடையே மட்டும் தான் போட்டி.



முட்டை வியாபாரிக்கு ₹6 கோடி ஜிஎஸ்டி வரி: வருமான வரித்துறை அறிவிப்பால் அதிர்ச்சி!
[Saturday 2025-03-29 18:00]

கோடிக்கணக்கான வரி கட்டச் சொல்லி ஏழை வியாபாரிகளுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் வழங்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப் பிரதேசத்திலும் உத்தரப் பிரதேசத்திலும் முட்டை விற்பனையாளர் மற்றும் ஜூஸ் விற்பனையாளர் ஆகிய இருவருக்கு, கோடிக்கணக்கான ரூபாய்களை வரி கட்டச் சொல்லி வருமான வரித்துறை அனுப்பிய அறிவிப்பால் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.



தாட்கோவிற்கு புதிய தலைவர் நியமனம்: தமிழக அரசு அறிவிப்பு!
[Saturday 2025-03-29 06:00]

தமிழகத்தில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி, வருமானம் ஈட்டுவதற்கான பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களை மேற்கொள்ளும் வகையில் கடந்த 1974ஆம் ஆண்டு தாட்கோ (TAHDCO - தமிழ்நாடு ஆதி திராவிடர் வீட்டு வசதி மேம்பாட்டு வாரியம்) ஆரம்பிக்கப்பட்டது. இந்த இந்நிறுவனம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலனுக்கான பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களைச் செயல்படுத்துதல், இளைஞர்களுக்கு வேலை மற்றும் சுய வேலைவாய்ப்புக்காகத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி வழங்குதல், அரசாங்கத்தால் ஒப்படைக்கப்பட்ட கட்டுமான நடவடிக்கைகளை மேற்கொள்கிறது.



பிரதமர் மோடியுடன் கார்த்தி சிதம்பரம் எம்.பி. சந்திப்பு!
[Saturday 2025-03-29 06:00]

சிவகங்கை மக்களவைத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் பிரதமர் மோடியை (28.03.2025) சந்தித்துப் பேசியுள்ளார். இது தொடர்பாக கார்த்தி சிதம்பரம் எம்.பி. எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “அதிகரித்து வரும் தெருநாய்களால் ஏற்படும் உடல்நல பாதிப்பு மற்றும் பாதுகாப்பு குறைபாடுகள் குறித்த கவலைகள் குறித்து பிரதமரின் கவனத்திற்குக் கொண்டுவருவதற்காக, இன்று நாடாளுமன்றக் கட்டட அலுவலகத்தில் பிரதமரைச் சந்தித்தேன்.



“புதிய உச்சத்தை தொட்டிருக்கிறோம்” - முதல்வர் மு.க. ஸ்டாலின் பேச்சு!
[Saturday 2025-03-29 06:00]

சென்னையில் இந்திய தொழில் கூட்டமைப்பின் சார்பில் இந்திய நகரங்களில் வாழக்கூடிய சூழல்களை உருவாக்குவது குறித்த மாநாடு (28.03.2025) நடைபெற்றது. இந்த மாநாட்டில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “இந்தியாவின் வளர்ச்சியில் தமிழ்நாடு முக்கியப் பங்கு வகிக்கிறது. இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய பொருளாதாரமாக தமிழ்நாடு விளங்குகிறது. இந்தியாவின் உற்பத்தித் துறை மொத்த மதிப்புக் கூட்டலில், தமிழ்நாடு 12.11 விழுக்காடு பங்களிப்பு செய்கிறது. கடந்த 3 ஆண்டுகளில், தமிழ்நாடு 8 விழுக்காட்டுக்கும் அதிகமான பொருளாதார வளர்ச்சி கண்டிருக்கிறது. தமிழ்நாட்டின் வளர்ச்சி தனித்தன்மை வாய்ந்தது.



தங்க மணல்: வித்தியாசமான மோசடியில் ஈடுபட்ட நபர்கள்!
[Friday 2025-03-28 18:00]

கேரளாவில் ஒரு வீட்டில் தங்கியிருந்த சிலர், தங்களிடம் தங்கம் கலந்த மண் இருப்பதாகக் கூறி தமிழ்நாட்டிலுள்ள பொற்கொலர்கள் சிலரை தொடர்புகொண்டுள்ளாரக்ள். இந்த பொற்கொல்லர்கள் கேரளாவிலுள்ள கொச்சிக்கு செல்ல, தங்க மண் வைத்திருப்பதாகக் கூறிய நபர்கள் அவர்களை ஒரு அறைக்குள் அழைத்துச் சென்றுள்ளர்கள். தாங்கள் வைத்திருந்த மண் மூட்டையிலிருந்து சிறிது மண்ணை எடுத்துக்கொள்ள அவர்கள் கூற, இந்த பொற்கொல்லர்கள் ஐந்து கிலோ மண்ணை ஒரு பையில் எடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.



ஆண் குழந்தை பிறக்காததால் இரட்டை பெண் குழந்தைகளை கொலை செய்த தந்தை!
[Friday 2025-03-28 18:00]

தனக்கு ஆண் குழந்தை பிறக்காததால் இரட்டை பெண் குழந்தைகளை தந்தையே கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்திய மாநிலமான ராஜஸ்தான் சிகாரைச் சேர்ந்த தம்பதியினர் அசோக் யாதவ் மற்றும் அனிதா. இவர்களுக்கு ஏற்கனவே 5 வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில், கடந்த நவம்பர் மாதத்தில் இவர்களுக்கு இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தது. ஆனால், அசோக் மற்றும் அவரது குடும்பத்தினர் ஆண் குழந்தையை விரும்பியுள்ளனர்.



தெருக்களில் தொழுகை செய்தால் கடவுச்சீட்டு, ஓட்டுநர் உரிமம் ரத்து: உ.பி. காவல்துறை அதிரடி!
[Friday 2025-03-28 18:00]

தெருக்களில் தொழுகை செய்தால் கடவுச்சீட்டு, ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும் என உத்தரப் பிரதேச காவல்துறை அறிவித்துள்ளது. மசூதிகள் மற்றும் பைஸ்-இ-ஆம் இன்டர் கல்லூரி மைதானம் போன்ற நியமிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே ஈத் தொழுகை நடத்த உத்தரப் பிரதேச மாநில மீரட் காவல்துறை அனுமதி வழங்கியிருக்கிறது. விதிகளை மீறுபவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மீரட் எஸ்.பி ஆயுஷ் விக்ரம் சிங் கூறியுள்ளார்.


Asayan-Salon-2022-seithy
Karan Remax-2010
Vaheesan-Remax-2016
Latika-Gold-House-2025
 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
Airlinktravel-2020-01-01
Rajeef sebarasha 2023/04/19
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா