Untitled Document
April 1, 2025 [GMT]
மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்கு தி.மு.க. பதிலடி!
[Sunday 2025-03-30 07:00]

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆங்கில செய்தி ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்திருந்தார். அதில், ‘மருத்துவம் மற்றும் பொறியியல் கல்வியை தமிழில் கொண்டு வராததால் திமுக அரசு தமிழர்களுக்கு எதிரானது’ என்ற கருத்தைத் தெரிவித்திருந்தார். இந்த கருத்தை எக்ஸ் சமூக வலைத்தளத்திலும் வெளியிட்டிருந்தார். இந்நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் திமுக வின் அதிகாரப்பூர்வ எக்ஸ் சமூக வலைத்தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆங்கில செய்தி ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்திருந்தார். அதில், ‘மருத்துவம் மற்றும் பொறியியல் கல்வியை தமிழில் கொண்டு வராததால் திமுக அரசு தமிழர்களுக்கு எதிரானது’ என்ற கருத்தைத் தெரிவித்திருந்தார். இந்த கருத்தை எக்ஸ் சமூக வலைத்தளத்திலும் வெளியிட்டிருந்தார். இந்நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் திமுக வின் அதிகாரப்பூர்வ எக்ஸ் சமூக வலைத்தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது.

  

அதில், “பொய், பொய், பொய் - பாஜகவிடம் அவ்வளவுதான். இந்த முட்டாள்தனத்தை உண்மைகளுடன் உடைப்போம். கடந்த 2010ஆம் ஆண்டும் முதல், அண்ணா பல்கலைக்கழகம் சிவில் மற்றும் இயந்திர பொறியியலில் தமிழ் மொழியில் பொறியியல் படிப்புகளை வழங்கி வருகிறது. இதை யார் சாத்தியமாக்கினார்கள்? என்றால் அப்போதைய திமுக தலைவரும், தமிழ்நாட்டின் முதலமைச்சருமான மறைந்த,கலைஞர் ஆவார். தமிழின் உண்மையான ஜோதியை ஏந்தியவர் ஆவார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில், தமிழில் மருத்துவக் கல்வி ஏற்கனவே செயல்பாட்டில் உள்ளது.

கடந்த ஆண்டு ஜனவரியில், ஒரு வருடத்திற்கும் மேலாக தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வி சேவைகள் கழகம் (TNTBESC), மாணவர்களுக்கான கிரேயின் உடற்கூறியல் மற்றும் மருத்துவ உடலியல் கைட்டன் மற்றும் ஹால் பாடநூல் போன்ற முக்கிய மருத்துவப் பாடப்புத்தகங்களின் தமிழ் மொழிபெயர்ப்புகளை வெளியிட்டது. இளநிலை மருத்துவ மாணவர்களுக்காக மொத்தம் 13 தமிழ் புத்தகங்களை 50 மருத்துவ வல்லுநர்கள் கொண்ட குழு உருவாக்கி வருகிறது. தமிழ் அடையாளத்தை அழிக்க விரும்புவது பாஜக தான். அதனால்தான் இறந்த மொழியான சமஸ்கிருதத்திற்கு நூற்றுக்கணக்கான கோடி நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் மத்திய அரசு தமிழுக்கு எந்த நிதியும் வழங்கவில்லை.

இதற்கிடையில், தமிழ் தளங்களில் தொல்பொருள் ஆய்வுக்கு நிதியுதவி செய்வது திமுக அரசுதான். அதே நேரத்தில் தமிழ் மொழி மற்றும் கலாச்சாரத்தின் புகழ்பெற்ற வரலாற்றை கவனத்திற்குக் கொண்டுவருவதற்காக பண்டைய தளங்களில் உள்ள கல்வெட்டுகளைப் புரிந்துகொள்வதற்கு ஒரு மில்லியன் டாலர் பரிசு வழங்குகிறது. மக்கள் புத்திசாலிகளாகிவிட்டார்கள். பாஜக மற்றும் அதன் தலைவர்களின் வெட்கமற்ற அப்பட்டமான பொய்களை மக்கள் புரிந்துகொள்கிறார்கள். பாஜகவின் தமிழர் விரோத பிரச்சாரம் பெரியார், அண்ணா மற்றும் கலைஞர் ஆகியோரின் மண்ணில் வேலை செய்யாது.

கடந்த1965 ஆம் ஆண்டு இந்தி திணிப்புக்கு எதிராக தமிழக மக்கள் எப்படிக் கிளர்ந்தெழுந்தார்களோ, அதைப் போலவே, திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலினின் ஆதரவுடன் இதையும் எதிர்க்கத் தயங்க மாட்டார்கள். அவர் முன்னணியில் இருந்து தமிழுக்கு எதிரான எந்தவொரு அச்சுறுத்தலுக்கும் எதிராகப் போராடுவார். நமது வளமான பாரம்பரியத்தையும் துடிப்பான கலாச்சாரத்தையும் பாதுகாக்க, என்ன நடந்தாலும் போராடுவார்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் மருத்துவகல்விக்கான தமிழ்வழி புத்தகங்கள் தொடர்பாக வெளியான செய்திகளும் இந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளன.

  
   Bookmark and Share Seithy.com



காதல் தோல்வியால் ஆட்டை திருமணம் செய்து கொண்ட இளைஞர்!
[Tuesday 2025-04-01 19:00]

காதல் தோல்வியை சந்தித்த இளைஞர்கள், பெரும்பாலும் அதில் இருந்து மீண்டும் வேறு திருமணம் செய்து கொண்டு, தனது வாழ்க்கையை தொடர்வார்கள். சிலர் அதனை ஏற்றுக்கொள்ள முடியாமல், விபரீத முடிவெடுப்பது உண்டு. ஒரு சிலர் விதிவிலக்காக காதல் தோல்விக்கு பின்னர், திருமணமே செய்து கொள்ளாமல் வாழ்க்கையை நடத்துவார்கள்.



பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 13 பேர் உயிரிழப்பு!
[Tuesday 2025-04-01 19:00]

குஜராத்தில் பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் 13 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய மாநிலமான குஜராத், பனஸ்கந்தா மாவட்டத்தில் பட்டாசு தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையின் ஒரு பகுதியில் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது.



CSK தோல்வியை கிண்டல் செய்ததாக தாக்கப்பட்ட இளைஞர் மரணம்!
[Tuesday 2025-04-01 19:00]

சென்னையில் இளைஞர் ஒருவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வியுற்றதை கிண்டல் செய்ததாக தாக்கப்பட்டு உயிரிழந்தார். துரைப்பாக்கம் பகுதியில் கடந்த 28ஆம் திகதி, ஜீவரத்தினம் என்ற இளைஞரை சிலர் கடுமையாக தாக்கியதால், படுகாயமடைந்து ஆபத்தான முறையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் தோல்வியுற்றதை, ஜீவரத்தினம் கிண்டல் செய்ததால் அவர் தாக்குதலுக்கு உள்ளானார் என செய்தி வெளியானது.



2 மணி நேரத்தில் இந்தியாவில் இருந்து துபாய் பயணம் - கடலுக்கடியில் ஓடவிருக்கும் ரயில்!
[Tuesday 2025-04-01 19:00]

தொழில்நுட்பம் வளர வளர மக்களின் பயண தூரம் குறைவதற்கான சாத்தியக்கூறுகள் உருவாகி வருகிறது. தரைக்கு மேல் புல்லட் ரயில் போன்ற அதிவேக ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில், கடலுக்கு அடியில் 600 கிமீ வேகத்தில் பயணிக்கும் ரயிலை இயக்க ஐக்கிய அரபு அமீரகம் திட்டமிட்டுள்ளது. துபாயில் இருந்து இந்தியாவின் மும்பை வரை கடலுக்கு அடியில் செல்லும் ரயிலை இயக்க ஐக்கிய அரபு அமீரகத்தின் தேசிய ஆலோசகர் பணியகம் இந்த பரிந்துரையை வழங்கியுள்ளது.



"பணியாளர்கள் பா.ஜ.க.வினரிடம் கேள்வி கேட்கும் நிலை உருவாகும்” - அமைச்சர்!
[Tuesday 2025-04-01 06:00]

தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் குறித்து எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு இருக்கிறார். இந்த செய்திக்கு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி மறுப்பு தெரிவித்து அறிக்கை விட்டு இருக்கிறார். அந்த அறிக்கையில் அவர் கூறி இருப்பதாவது, “மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும், இவ்வளவு தொகை என்று ஒதுக்கீடு செய்யப்படுவதில்லை. மாறாக, எவ்வளவு மனித சக்தி நாட்கள் என்றுதான் ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இது தொழிலாளர் மதிப்பீடு எனப்படுகிறது.



“அனைத்தும் நன்மைக்கே” - முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பதில்!
[Tuesday 2025-04-01 06:00]

தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கடந்த வாரம் டெல்லி சென்றிருந்தார். முன்னதாக டெல்லியில் கட்டப்பட்டுள்ள அதிமுக அலுவலகத்தைப் பார்வையிடச் செல்வதாகக் கூறியிருந்த நிலையில் அன்று மாலை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவைச் சந்தித்திருந்தார். இந்த சந்திப்பின்போது அதிமுக எம்.பி. தம்பிதுரை, முன்னாள் அமைச்சர்கள் சி.வி. சண்முகம், எஸ்.பி. வேலுமணி ஆகியோரும் உடன் சென்றிருந்தனர். இதில் அதிமுக - பாஜக கூட்டணி குறித்துப் பேசப்பட்டதாகத் தகவல்கள் வெளியான நிலையில் அதனை எடப்பாடி பழனிசாமி மறுத்திருந்தார்.



வணிக வளாகத்தில் பார்க்கிங் கட்டணம் வசூலிக்க தடை!
[Tuesday 2025-04-01 06:00]

சென்னை கொசப்பேட்டை பகுதியைச் சேர்ந்த அருண்குமார் என்பவர் சென்னை வடக்கு மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் புகார் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், “சென்னை திருமங்கலத்தில் செயல்பட்டு வரும் பிரபல வணிக வளாகத்தில் வாகனங்களை நிறுத்த முதல் ஒரு மணி நேரத்திற்கு வாகன நிறுத்தத்திற்கு 50 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. அதற்கு அடுத்த ஒவ்வொரு மணி நேரத்திற்கும் தலா ரூ. 30 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.



ஓய்வை அறிவிக்க உள்ளாரா பிரதமர் மோடி?
[Monday 2025-03-31 18:00]

பிரதமர் மோடி ஓய்வு பெற உள்ளதாக வெளியான தகவலுக்கு மகாராஷ்டிரா முதல்வர் விளக்கமளித்துள்ளார். இந்திய பிரதமர் நரேந்திர மோடி, பிரதமராக பதவியேற்று 11 ஆண்டுகள் ஆன நிலையில், முதல்முறையாக நேற்று மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைமை அலுவலகத்திற்கு சென்றுள்ளார்.



ஒன்றரை ஆண்டுகளில் மூன்று முறை வெளியே வந்துள்ளார்: விஜயை விமர்சித்த அண்ணாமலை!
[Monday 2025-03-31 18:00]

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் பாஜகவை விமர்சித்த நிலையில் அண்ணாமலை அதற்கு பதிலடி கொடுத்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, "களத்தில் நின்று தினமும் போராடுவதே அரசியல். கட்சி தொடங்கி ஒன்றரை ஆண்டுகளில் மூன்று முறை வெளியே வருவது ஒரு அரசியல்.



கும்பமேளா மோனலிசாவுக்கு வாய்ப்பு கொடுத்த இயக்குநர் வன்கொடுமை குற்றச்சாட்டில் கைது!
[Monday 2025-03-31 18:00]

மகா கும்பமேளாவில் வைரலான மோனலிசாவுக்கு படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்த இயக்குநர் வன்கொடுமை குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டடுள்ளார். இயக்குனர் சனோஜ் மிஸ்ராவால் மகா கும்பமேளாவில் வைரலான மோனலிசாவுக்கு ஒரு படத்தில் நடிக்க வாய்ப்பு வழங்கப்பட்டது. தற்போது அவர் பெரும் சிக்கலில் சிக்கியுள்ளார். டெல்லி நீதிமன்றம் அவரது ஜாமீன் மனுவை நிராகரித்ததை அடுத்து அவர் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.



விமான நிலைய கழிவறையில் குழந்தை பெற்றுக்கொண்டு குப்பை தொட்டியில் வீசிய மாணவி!
[Monday 2025-03-31 18:00]

மும்பை விமான நிலையத்தில் உள்ள கழிவறையில் இருந்த குப்பை தொட்டியில் குழந்தை ஒன்றின் உடல் இருந்துள்ளது. மும்பை விமான நிலையத்தில் உள்ள கழிவறை குப்பை தொட்டியில் குழந்தையின் உடல் கிடந்ததை பார்த்த துப்புரவு தொழிலாளி, உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். இந்த சம்பவம் 4 நாட்களுக்கு முன்பாக நடந்தது.



“வரலாறு காணாத வெற்றியை காண்போம்” - முதல்வர் ஸ்டாலின் பேச்சு!
[Monday 2025-03-31 06:00]

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டப் பேரவை உறுப்பினராக இருந்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மரணம் அடைந்ததைத் தொடர்ந்து, இந்த தொகுதிக்குக் கடந்த பிப்ரவரி மாதம் 5ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. திமுக சார்பில் வி.சி. சந்திரகுமார், நாம் தமிழர் கட்சி சார்பில் மா.கி. சீதாலட்சுமி என 46 பேர் போட்டியிட்டனர். முக்கிய எதிர்க்கட்சிகளான அதிமுக, தேசிய கட்சியான பாஜக, தேமுதிக, தவெக உள்ளிட்டவை இந்த இடைத்தேர்தலைப் புறக்கணித்தன. இந்த இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் பிப்ரவரி 8ஆம் தேதி எண்ணப்பட்டது.



15ஆம் நூற்றாண்டு பெருமாள் சிலை கண்டுபிடிப்பு!
[Monday 2025-03-31 06:00]

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அரசுக் கலை அறிவியல் கல்லூரித் தமிழ்த் துறைத் தலைவர் மற்றும் தொல்லியல் வரலாற்று ஆய்வாளர் காளிதாஸ், பேராசிரியர் சாலை கலையரசன் ஆகியோர் கொண்ட குழுவினர் புதுக்கோட்டை வடமலாப்பூர் பகுதியில் கள ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, பெருமாள் சிலை ஒன்றைக் கண்டறிந்தனர். இவ்வூரைச் சேர்ந்த கருப்பையா என்பவர் கொடுத்த தகவலாவது, இச்சிலை ஆவாண்டு என்னுமிடத்தில் இருந்ததாகவும், தற்பொழுது சாலை ஓரத்தில் கிடப்பதாகவும் கூறினார்.



எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்களின் வேலைநிறுத்தம் வாபஸ்!
[Monday 2025-03-31 06:00]

தென் மண்டல எல்.பி.ஜி. டேங்க் லாரி உரிமையாளர்கள் சங்கம் தமிழகத்தில் நாமக்கல்லைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இதில் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த டேங்கர் லாரி உரிமையாளர்கள் இணைந்துள்ளனர். மத்திய அரசுக்குச் சொந்தமான எண்ணெய் நிறுவனங்களில் இருந்து எரிவாயு நிரப்பும் மையங்களுக்கு எரிவாயுவை டேங்கர் மூலம் வாடகை ஒப்பந்தம் அடிப்படையில் இயக்கி வருகின்றனர். இத்தகைய சூழலில் தான் எல்பிஜி டேங்கர் உரிமையாளர்கள் சங்க லாரிகள் எண்ணெய் சுத்திகரிப்பு மையங்கள் முன்பு வேலை நிறுத்தத்தைத் தொடங்க அறிவித்திருந்தது.



பள்ளிக்கல்வித்துறையின் முக்கிய அறிவிப்பு!
[Sunday 2025-03-30 17:00]

தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதன் காரணமாகத் தொடக்கப் பள்ளிகளுக்கு முன்கூட்டியே கோடை விடுமுறை விடப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது 1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கான ஆண்டு இறுதித்தேர்வுகள் வரும் ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி வரை நடைபெற இருந்தது.



லிப்ட் மெக்கானிக் கொலை: ஏரியில் வீசப்பட்ட சடலம்!
[Sunday 2025-03-30 17:00]

திருவள்ளூர் அருகே லிப்ட் மெக்கானிக் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்துள்ள சின்னம்பேடு பகுதியில் வசித்து வருபவர் சங்கர் (30). திருமணம் ஆகாத நிலையில் லிப்ட் மெக்கானிக்காக பணியாற்றி வந்துள்ளார். நேற்று காலை வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற மெக்கானிக் சங்கர் இரவு வரை வீடு திரும்பவில்லை என்று கூறப்படுகிறது. பல இடங்களில் அவரை அவரது குடும்பத்தார் தேடி வந்தனர்.



'தமிழ் படித்தவர்களுக்கு வேலை இல்லையா?' - பாமக ராமதாஸ் ஆதங்கம்!
[Sunday 2025-03-30 17:00]

'தமிழ் படித்தவர்களுக்கு வேலை இல்லையா? அரசு பள்ளிகளில் தமிழ் கற்பிக்க தமிழாசிரியர் பணியிடங்களை உடனடியாக ஏற்படுத்த வேண்டும்' என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தமிழ்நாட்டில் தமிழை முதன்மைப் பாடமாகத் தேர்வு செய்து பட்டப்படிப்பு (பி.ஏ), பட்ட மேற்படிப்பு (எம்.ஏ), இளம் முனைவர்(எம்.பில்), முனைவர் (பி.எச்டி) படிப்புகளையும், அவற்றுடன் கல்வியியல் (பி.எட்) பட்டமும் பெற்ற 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் வேலைவாய்ப்பின்றியும், தகுதிக்கு குறைவான பணிகளை பார்த்துக் கொண்டும் அவதிப்பட்டு வருகின்றனர். பலர் பட்டம் பெற்று 25 ஆண்டுகளுக்கு மேலாகியும் கூட அவர்களுக்கு வேலை கிடைக்கவில்லை. அவர்களின் அவல நிலைக்கு தமிழக அரசு கடைபிடித்து வரும் அன்னைத் தமிழுக்கு எதிரான கொள்கைகள் தான் காரணம் ஆகும்.



விஜய் முதலில் திமுக எதிர்ப்பை தீவிரப்படுத்த வேண்டும்: தமிழிசை!
[Sunday 2025-03-30 17:00]

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் திமுகவை எதிர்ப்பதை தீவிரப்படுத்த வேண்டும் என தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். தவெக கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் தலைவர் விஜய் பேசியது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. அவர் தவெக - திமுக இடையேதான் போட்டி என கூறியதை தொண்டர்களை உற்சாகப்படுத்த பேசியதாக எடப்பாடி பழனிசாமி கூறினார்.



மத்திய அரசு மீது முதல்வர் மு.க. ஸ்டாலின் கடும் விமர்சனம்!
[Sunday 2025-03-30 07:00]

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம் (MGNREGA) எனப்படும் 100 நாள் வேலை உறுதி திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டிற்குத் தரவேண்டிய ரூ.4 ஆயிரத்து 34 கோடி நிதியை வழங்காமல் தமிழ்நாட்டைத் தொடர்ச்சியாக வஞ்சித்து வருவதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக மத்திய பாஜக அரசைக் கண்டித்து திமுக சார்பில் அனைத்து ஒன்றியங்களிலும் தலா 2 இடங்களில் (29.03.2025) மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்நிலையில் இது தொடர்பான புகைப்படங்களை முதல்வர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.



தர்ப்பூசணி பழத்தில் கலப்படம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை!
[Sunday 2025-03-30 07:00]

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட அடையார் மண்டலம் இந்திரா நகர் தொடக்கப் பள்ளியில் கோடைகால வெப்ப அலை பாதிப்பு மற்றும் வெப்பவாத தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியினை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் (29.03.2025) தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் துணை மேயர் மு. மகேஷ் குமார், கூடுதல் ஆணையர் வி. ஜெயச்சந்திர பானு ரெட்டி, தேசிய நலவாழ்வு குழும இயக்குநர் அருண் தம்புராஜ் எனப் பலரும் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து அமைச்சர் சுப்பிரமணியன் செய்தியாளர்களைச் சந்ந்தித்து பேசினார்.


Karan Remax-2010
Airlinktravel-2020-01-01
Asayan-Salon-2022-seithy
Latika-Gold-House-2025
Kugeenthiran-200-2022-seithy
 gloriousprinters.com 2021
Vaheesan-Remax-2016
Rajeef sebarasha 2023/04/19
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா