Untitled Document
May 19, 2026 [GMT]
"உதயநிதி ஸ்டாலின் சொன்ன அந்த வார்த்தை" - உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை!
[Tuesday 2026-05-19 07:00]

உதயநிதி ஸ்டாலின் சனாதனம் குறித்து மீண்டும் பேசிய விவகாரம் பெரும் புயலை கிளப்பியுள்ள நிலையில், அதற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட புதிய அவசர வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.. தமிழக சட்டசபையில் சபாநாயகர் முன்னிலையிலேயே அவர் பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளதால், இந்த வழக்கில் நீதிமன்றம் என்ன மாதிரியான அதிரடி முடிவை எடுக்கப்போகிறது என்ற பரபரப்பு இப்பவே தொற்றியுள்ளது.. தமிழக அரசியல் களம் எப்போதுமே பரபரப்பிற்குப் பஞ்சம் இல்லாதது என்றாலும், சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டசபை வளாகத்தில் மீண்டும் ஒரு பரபரப்பு கிளம்பி உள்ளது.

உதயநிதி ஸ்டாலின் சனாதனம் குறித்து மீண்டும் பேசிய விவகாரம் பெரும் புயலை கிளப்பியுள்ள நிலையில், அதற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட புதிய அவசர வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.. தமிழக சட்டசபையில் சபாநாயகர் முன்னிலையிலேயே அவர் பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளதால், இந்த வழக்கில் நீதிமன்றம் என்ன மாதிரியான அதிரடி முடிவை எடுக்கப்போகிறது என்ற பரபரப்பு இப்பவே தொற்றியுள்ளது.. தமிழக அரசியல் களம் எப்போதுமே பரபரப்பிற்குப் பஞ்சம் இல்லாதது என்றாலும், சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டசபை வளாகத்தில் மீண்டும் ஒரு பரபரப்பு கிளம்பி உள்ளது.

  

ஜேசிடி பிரபாகர் தேர்வு தமிழக சட்டசபையின் புதிய சபாநாயகராக தவெக எம்எல்ஏ ஜேசிடி பிரபாகர் தேர்வு செய்யப்பட்டதை தொடர்ந்து, அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் வரலாற்று சிறப்புமிக்க தீர்மானம் அவையில் கொண்டுவரப்பட்டது. இந்தத் தீர்மானத்தின் மீது பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களது வாழ்த்துரைகளைத் தெரிவித்து வந்த நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசத் தொடங்கினார்.. மிகவும் சுமுகமாக சென்று கொண்டிருந்த அந்த வாழ்த்துரையின் இறுதி நிமிடங்களில், ஒட்டுமொத்த அவையையும், அதன் பிறகு ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கும் வகையிலான ஒரு கருத்து அவரிடமிருந்து வெளிவந்தது.

தனது உரையை நிறைவு செய்யும் தருவாயில், "மக்களை பிரிக்கும் சனாதனம் நிச்சயம் ஒழிக்கப்பட வேண்டும்" என்று உதயநிதி ஸ்டாலின் மிக திட்டவட்டமாகக் கூறி முடித்தார்.. அவர் பேசி முடித்த அடுத்த கணமே, அவை வளாகத்திற்குள்ளும் வெளியேயும் கடுமையான விவாதங்களும் எதிர்ப்புகளும் கிளம்பத் தொடங்கின.. இந்த விவகாரம் தீயாய் பரவத் தொடங்கியதைத் தொடர்ந்து, தமிழக பாஜகவினர் உள்ளிட்ட மாற்றுத் தரப்பினர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராகக் கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்யத் தொடங்கினர்.. உதயநிதி தந்த விளக்கம் உதயநிதி தனது பேச்சுக்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் வலுத்தன.. சட்டசபையில் எழுந்த இந்த அதிரடித் திருப்பத்தைத் தொடர்ந்து, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் இது தொடர்பாக ஒரு விரிவான விளக்க அறிக்கையை வெளியிட்டார்.

அதில், தமிழ்நாடு சட்டப்பேரவையில் தான் பேசிய கருத்துக்காக சிலர் தன்னை விமர்சிப்பதாகவும், ஆனால் இதுபோன்ற எதிர்ப்புகளுக்கு தான் ஒருபோதும் அஞ்சப்போவதில்லை என்றும் அவர் சவால் விடுத்துள்ளார்.. திராவிட இயக்கம் என்பதே எதிர்ப்புகளுக்கு மத்தியில்தான் வளர்ந்தது என்பதை குறிப்பிட்ட அவர், சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும் என்பதன் உண்மையான பொருள் யாரும் கோவிலுக்கு போகக் கூடாது என்பது அல்ல என்று தெளிவுபடுத்தினார்.. பாகுபாடு கிடையாது அதுமட்டுமல்லாமல் தனது விளக்கத்தில், கோவில்களில் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த சமூகத்திலும் அனைவருக்கும் சமஉரிமை கிடைக்க வேண்டும் என்பதுதான் தனது பேச்சின் நோக்கம் என்றும் பதிவிட்டார். மேல் சாதி மற்றும் கீழ் சாதி என மக்களைப் பிரித்து வைக்கும் பாகுபாட்டு முறையைத்தான் தான் ஒழிக்க வேண்டும் என்று குறிப்பிட்டதாகக் கூறிய உதயநிதி, தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், பேரறிஞர் அண்ணா மற்றும் கலைஞர் கருணாநிதி ஆகியோர் வழியுறுத்திய அதே கொள்கையைத்தான் தானும் பேசுவதாகக் குறிப்பிட்டார்.

இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை தாங்கள் யாருடைய கடவுள் நம்பிக்கைக்கும் எதிரானவர்கள் அல்ல என்றும், ஆனால் சமூகத்தில் நிலவும் சமத்துவமின்மையையும் ஒடுக்குமுறையையும் தங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் திட்டவட்டமாக சொன்னார்.. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற வள்ளுவரின் உயரிய நெறியே தங்களின் வழி என்றும் அவர் அந்த பதிவில் விளக்கியிருந்தார். இருந்தாலும் இந்த விளக்கம் தங்களுக்குத் திருப்தி அளிக்கவில்லை என்று கூறி, டெல்லியில் உள்ள உச்சநீதிமன்றத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராகப் புதிய மனு ஒன்று அவசர அவசரமாகத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வழக்கறிஞர் அமிதா சச்தேவா தாக்கல் செய்துள்ள அந்த மனுவில், ஏற்கனவே 2023ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் சனாதன தர்மத்தை டெங்கு மற்றும் மலேரியா போன்ற நோய்களுடன் ஒப்பிட்டுப் பேசிய விவகாரத்தில் உதயநிதிக்கு எதிராகப் பல வழக்குகள் நிலுவையில் உள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார்.

வெறுப்பு பேச்சு பேசினாரா வெறுப்புப் பேச்சு வழக்குகளில் காவல்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் முந்தைய உத்தரவுகள் இருந்தபோதிலும், டெல்லி காவல்துறை நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளார். நீதிமன்றம் ஏற்கனவே இந்த விவகாரத்தில் தனது அதிருப்தியைத் தெரிவித்தும்கூட, மீண்டும் சட்டசபையில் அதே போன்றதொரு கருத்தை உதயநிதி ஸ்டாலின் பேசியிருப்பது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல்ம், தசட்டசபையில் பேசிய தற்போதைய பேச்சையும் அவருக்கு எதிரான கூடுதல் ஆவணமாக நீதிமன்றம் பதிவு செய்துகொள்ள வேண்டும் என்றும் அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த நாட்டின் கவனத்தையும் ஈர்த்துள்ள இந்த முக்கிய வழக்கு, உச்சநீதிமன்றத்தில் மே 19ம் தேதியான இன்று விசாரணைக்கு வரவுள்ளதால், தீர்ப்பின் திசை எதை நோக்கி இருக்கும் என்ற பெரும் எதிர்பார்ப்பும் பரபரப்பும் டெல்லி மற்றும் சென்னை அரசியல் வட்டாரங்களில் தொற்றிக்கொண்டுள்ளது..!!

  
   Bookmark and Share Seithy.com



அமெரிக்க தடைகளை பொருட்படுத்தாமல் ரஷ்ய எண்ணெய் வாங்கும் இந்தியா!
[Tuesday 2026-05-19 07:00]

இந்தியா, தனது எரிசக்தி பாதுகாப்பை முன்னிலைப்படுத்தி, அமெரிக்காவின் தடைகள் அல்லது விலக்குகளைப் பொருட்படுத்தாமல் ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதைத் தொடரும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அமெரிக்கா, உக்ரைன் போருக்குப் பிறகு ரஷ்யாவிற்கு கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளது. பல நாடுகள் அந்த தடைகளை பின்பற்றினாலும், இந்தியா தனது தேவைகளை முன்னிலைப்படுத்தி, ரஷ்ய எண்ணெய் இறக்குமதியைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.



"முள்ளிவாய்க்கால் நினைவுகளை இதயத்தில் ஏந்துவோம்" - தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்!
[Tuesday 2026-05-19 07:00]

முள்ளிவாய்க்கால் நினைவுகளை இதயத்தில் ஏந்துவோம் என தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் பதிவிட்டுள்ளார். 2009ஆம் ஆண்டு மே 18ம் தேதி ஈழப்போரின் இறுதிநாளில் முள்ளிவாய்க்காலில் ஏராளமான தமிழர்கள் கொல்லப்பட்டதை தமிழினப்படுகொலையாக ஒவ்வொரு ஆண்டும் உலகெங்கும் வாழும் தமிழர்கள், நினைவு கூர்ந்து வருகின்றனர்.



முதல்வர் விஜய்யின் செயலாளர்களுக்கான துறைகள் ஒதுக்கீடு!
[Monday 2026-05-18 18:00]

தமிழ்நாட்டில் புதிய அரசு பொறுப்பேற்றுள்ள சூழலில், சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள முதலமைச்சர் அலுவலகத்தின் (CMO) பல்வேறு அரசுத் துறைகளைக் கவனிக்கும் பொறுப்புகள், முதலமைச்சரின் செயலாளர்கள் மற்றும் கூடுதல் செயலாளருக்குப் பிரித்து வழங்கி அதிகாரப்பூர்வ அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, முதலமைச்சரின் கூடுதல் தலைமைச் செயலாளர் / செயலாளர்-I ஆக நியமிக்கப்பட்டுள்ள பி. செந்தில்குமாரிடம் நிதித்துறை, உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை, பொது மற்றும் மறுவாழ்வுத் துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை, பொதுப்பணித்துறை மற்றும் லஞ்ச ஒழிப்பு ஆணையம் உள்ளிட்ட 10 முக்கியத் துறைகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன.



அம்மா உணவகங்களைச் சீரமைக்க முதல்வர் விஜய் உத்தரவு!
[Monday 2026-05-18 18:00]

தமிழ்நாட்டின் புதிய முதல்வராகப் பொறுப்பேற்றிருக்கும் தவெக தலைவர் விஜய், பல்வேறு அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் பல்வேறு அதிகாரிகளை இடமாற்றம் செய்து வருகிறார். அதோடு பல்வேறு துறைகளின் அதிகாரிகளிடம் தொடர்ந்து ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் அம்மா உணவகங்களைப் புதுப்பித்து சீரமைக்க முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.



மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் கூண்டோடு பணியிட மாற்றம்: தமிழக அரசு அதிரடி உத்தரவு!
[Monday 2026-05-18 18:00]

தமிழ்நாட்டின் புதிய முதல்வராகப் பொறுப்பேற்றிருக்கும் தவெக தலைவர் விஜய், பல்வேறு அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் பல்வேறு அதிகாரிகளை இடமாற்றம் செய்து வருகிறார். அதோடு பல்வேறு துறைகளின் அதிகாரிகளிடம் தொடர்ந்து ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் தமிழ்நாடு அரசு பல்வேறு மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளை அதிரடியாக பணியிட மாற்றம் செய்து இன்று (18.05.2026) அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளராக இருந்த ககன்தீப் சிங் பேடி, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளராக மாற்றப்பட்டுள்ளார்.



யானைகளுக்கு இடையேயான மோதலில் சென்னையை சேர்ந்த பெண் உயிரிழப்பு!
[Monday 2026-05-18 18:00]

யானைகளுக்கு இடையேயான மோதலில் சிக்கி, சென்னையை சேர்ந்த பெண் உயிரிழந்துள்ளார். சென்னையை சேர்ந்த 33 வயதான பெண் கர்நாடகா மாநிலத்திற்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளார். கர்நாடகாவின் கொடகு மாவட்டத்தில் உள்ள துபரே யானைகள் முகாமில் யானைகள் குளிப்பாட்டப்படுவதைப் பார்த்துக் கொண்டிருந்துள்ளார். குளிப்பாட்டப்படும் போது, கஞ்சன் என்ற யானை, மார்த்தாண்டா என்ற மற்றொரு யானையைத் தாக்கியது. யானையை கட்டுப்படுத்த பாகன்கள் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்தன.



ரயிலில் அநாதரவாகக் கிடந்த பெட்டி: திடுக்கிடவைத்த காட்சி!
[Monday 2026-05-18 18:00]

இந்தியாவின் உத்தரப்பிரதேசத்தில், ரயில் ஒன்றில் அநாதரவாகக் கிடந்த பெட்டி மற்றும் பையை சோதனையிட்ட பொலிசார் அதிர்ச்சியடைய நேர்ந்தது. உத்தரப்பிரதேசத்திலுள்ள லக்னோ நகரில், கோமதி நகர் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த ரயில் ஒன்றை துப்புரவுத் தொழிலாளர்கள் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார்கள். அப்போது, ரயில் பெட்டி ஒன்றிலுள்ள கழிவறை ஒன்றின் அருகே தகரப் பெட்டி ஒன்றும் பை ஒன்றும் அநாதரவாகக் கிடப்பதைக் கண்ட அவர்கள் அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்க, அதிகாரிகள் பொலிசாரை அழைத்துள்ளனர்.



ஆபரேஷன் ப்ளூ ஜெயண்ட்' - தூக்கப்படும் திமுகவின் டாப் தலைகள்?
[Sunday 2026-05-17 07:00]

தமிழக அரசியல் களம் இதுவரை கண்டிராத ஒரு மாபெரும் திருப்பத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதாகத் தலைநகர வட்டாரங்களில் இருந்து அதிர்ச்சியூட்டும் தகவல்கள் கசிந்துள்ளன. தமிழகத்தில் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், திமுகவின் முக்கியப் புள்ளிகளைக் குறிவைத்து ஒரு ரகசிய அதிரடி திட்டத்தைத் தீட்டியுள்ளதாகத் தற்போதைய அரசியல் வட்டாரங்கள் பரபரப்பாகப் பேசி வருகின்றன. 'ஆபரேஷன் ப்ளூ ஜெயண்ட்' (Operation Blue Giant) என்று ரகசியப் பெயரிடப்பட்டுள்ள இந்த அதிரடி நடவடிக்கையின் கீழ், திமுகவின் 5 முதல் 6 வரையிலான மிக முக்கியத் தலைவர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.



இரவோடு இரவாக உடையும் அதிமுக: தவெக அள்ளித்தரும் முக்கிய இலாக்காக்கள்!
[Sunday 2026-05-17 07:00]

தமிழக அரசியல் களம் தற்போது வரலாறு காணாத விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) புதிய அமைச்சரவை நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கோட்டை வட்டாரத்தில் இருந்து மற்றுமொரு அதிரடியான ரகசிய தகவல் கசிந்துள்ளது. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 9 அமைச்சர்களின் பட்டியலைத் தாண்டி, மீதமுள்ள முக்கிய அமைச்சரவை இலாக்காக்கள் அனைத்தும், தங்களுக்கு ஆதரவளிக்க முன்வரும் அதிமுக உறுப்பினர்களுக்காகவே ரகசியமாக ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.



பத்திரப்பதிவு டூ போக்குவரத்து: அமைச்சர்கள் நியமிக்கப்படாத துறைகள்!
[Sunday 2026-05-17 07:00]

தமிழ்நாட்டின் தவெக ஆட்சி அமைந்து ஒரு வாரமாகிவிட்ட சூழலில், 9 அமைச்சர்களுக்கு இன்று இலாகா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள சூழலில், இன்னும் முக்கியமான துறைகளுக்கு அமைச்சர்கள் நியமனம் செய்யப்படாமல் இருக்கிறது. அது எந்தெந்த துறைகள் என்பதையும், அதற்கான காரணம் குறித்தும் விரிவாக பார்க்கலாம். தமிழக சட்டசபை தேர்தலில் தவெக 108 இடங்களில் வெற்றி பெற்றும் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து ஆட்சியை பிடித்துள்ளது. தேர்தலுக்கு பின் தவெக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி இணைந்திருக்கிறது.



"கள்ளச்சந்தையில் மது விற்பனை நடந்தால்..." - அடுத்த ரெய்டுவிட்ட முதல்வர் விஜய்!
[Sunday 2026-05-17 07:00]

தமிழ்நாட்டில் கள்ளச்சந்தையில் மது விற்கப்படுவதை தடுக்கும் வகையில் ஒவ்வொரு மண்டலத்திலும் 24 மணி நேரமும் கண்காணிக்க முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார். சட்டவிரோதமாக மது விற்கும் நபர்களை கண்காணிக்க போலீசார் மஃப்டியில் ரோந்து செல்ல வேண்டும் என்றும், இரவு 10 மணிக்கு மேல் பார் மூடப்பட்டதை புகைப்படம் எடுத்து அதிகாரிகளுக்கு அனுப்ப வேண்டும் என்றும் அறிவுறுத்தி இருக்கிறார்.



வெள்ளி இறக்குமதிக்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ள இந்திய அரசு!
[Sunday 2026-05-17 07:00]

இந்திய அரசு, மே 16, 2026 முதல் வெள்ளி இறக்குமதிக்கு புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. Directorate General of Foreign Trade (DGFT) வெளியிட்ட அறிவிப்பின் படி, ITC HS Code 71069221 மற்றும் 71069229 உட்பட்ட வெள்ளி பொருட்கள் (99.9% தூய்மையான வெள்ளி பட்டைகள், பிற வகை வெள்ளி பார்கள்) “Free” வகையிலிருந்து “Restricted” வகைக்கு மாற்றப்பட்டுள்ளன.



தமிழ்நாடு அமைச்சர்களுக்கு துறை ஒதுக்கீடு!
[Saturday 2026-05-16 18:00]

026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தவெக ஆட்சியை கைப்பற்றிய நிலையில் தமிழ்நாட்டின் முதலமைச்சராக கடந்த மே 10 ஆம் திகதி சி.ஜோசப் விஜய் பதவியேற்றார். அவருடன் 9 அமைச்சர்களும் பதவியேற்றனர். இந்நிலையில் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களுக்கான துறைகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் முதலமைச்சர் விஜய், பொது நிர்வாகம், உள்துறை, காவல், இளைஞர் நலன், மகளிர் மேம்பாடு, குழந்தைகள் நலன், முதியோர், மாற்று திறனாளிகள் நலன், சிறப்பு திட்ட செயலாக்கம், நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் ஆகிய துறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.



பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுத்த இந்திய இராணுவத் தளபதி!
[Saturday 2026-05-16 18:00]

இந்தியாவிற்கு எதிராக செயல்பட்டால் வரைபடத்தில் நீடிக்க வேண்டுமா என்று முடிவு செய்ய வேண்டும் என, இராணுவத் தளபதி பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். டெல்லியில் நடந்த கலந்துரையாடல் அமர்வில் ஆபரேஷன் சிந்தூரை குறிப்பிட்டு, இந்திய இராணுவ தளபதி உபேந்திர திவேதியிடம் கேள்வி முன்வைக்கப்பட்டது.



திருமண கொண்டாட்டத்தில் மஞ்சள் பூசியதால் உயிரிழந்த மணப்பெண்!
[Saturday 2026-05-16 18:00]

மத்திய பிரரேசத்தில் நச்சு கலந்த மஞ்சளை பூசிய மணப்பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப் பிரதேசத்தின் கர்கோனில் நடைபெற்ற திருமண கொண்டாட்டத்தின் போது நடைபெற்ற ஹால்டி(Haldi) என அழைக்கப்படும் மஞ்சள் பூசும் கொண்டாட்டத்தில் நச்சு கலந்த மஞ்சள் கலவை பயன்படுத்தப்பட்டதில் 21 வயது மணப்பெண் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.



ரூ.2500 மகளிர் உரிமைத்தொகை எப்போது வழங்கப்படும்?
[Saturday 2026-05-16 18:00]

ரூ.2500 மகளிர் உரிமைத்தொகை எப்போது வழங்கப்படும் என அமைச்சர் நிர்மல்குமார் விளக்கமளித்துள்ளார். கடந்த திமுக அரசு, குடும்பத்தலைவிகளுக்கு மகளிர் உரிமைத்தொகையாக ரூ.1000 வங்கிக்கணக்கில் செலுத்தி வந்தது. தவெக தேர்தல் அறிக்கையில், மகளிர் உரிமைத்தொகை ரூ.2,500 வழங்கப்படும் என அறிவித்தது. தற்போது தவெக ஆட்சியை கைப்பற்றிய நிலையில், மகளிர் உரிமைத்தொகை முதல் கையெழுத்தாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 200 யூனிட் இலவச மின்சாரம் உள்ளிட்ட 3 திட்டங்களுக்கு கையெழுத்திட்டார்.



மத்திய அரசுக்கு எதிராக முதல் அறிக்கையை வெளியிட்ட முதல்வர் விஜய்!
[Saturday 2026-05-16 07:00]

புதிதாக பதவியேற்ற தமிழ்நாடு முதல்வர் ஜோசப் விஜய், மத்திய அரசுக்கு எதிராக தனது முதல் அறிக்கையை வெளியிட்டுள்ளார். பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்த்தப்பட்டதை “ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல” எனக் கூறி, உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். "ஒன்றிய அரசின்‌ பொதுத்துறை எண்ணெய்‌ நிறுவனங்கள்‌, பெட்ரோலியப்‌ பொருட்களின்‌ விலையை, குறிப்பாக லிட்டர்‌ ஒன்றுக்கு பெட்ரோல்‌ ரூ.3 மற்றும்‌ டீசல்‌ ரூ.3 என்ற அளவில்‌ உயர்த்தியுள்ளன. இது ஏற்கத்தக்கதல்ல.



தவெக தரப்பில் பேரம் பேசினார்கள்: போட்டு உடைத்த கேசி வீரமணி!
[Saturday 2026-05-16 07:00]

தவெக தரப்பில் இருந்து 10 அமைச்சர் பதவி தருவதாக பேரம் பேசப்பட்டதாக அதிமுக எம்எல்ஏ கேசி வீரமணி தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தவெக மீது குதிரை பேர குற்றச்சாட்டு எழுந்திருக்கும் சூழலில், எஸ்பி வேலுமணி தரப்பு ஆதரவு எம்எல்ஏ கேசி வீரமணி பேசி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. சட்டசபைத் தேர்தலில் அடைந்த தோல்விக்கு பின் அதிமுகவில் உச்சக்கட்ட மோதல் ஏற்பட்டுள்ளது.



தொடரும் விஜய் வேட்டை: 10 ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்!
[Saturday 2026-05-16 07:00]

தமிழக அரசியல் களம் சட்டமன்ற தேர்தலில் பல்வேறு திருப்பங்கள் ஏற்பட்டு வருகின்றன. 108 தொகுதிகளில் வெற்றி பெற்ற தவெக பிற கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைத்துள்ளது. முதலமைச்சராக விஜய் பதவியேற்றுள்ளார். விஜய் தினசரி பல்வேறு அதிரடிகளை அரங்கேற்றி வருகிறார். இந்நிலையில் தமிழகத்தில் 10 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று தவெக ஆட்சியமைத்துள்ளது. தவெக ஆட்சி மற்றும் முதலமைச்சர் விஜய்யின் செயல்பாடுகளில் ஆதரவும், எதிர்ப்பும் கலந்து கட்டி வந்து கொண்டிருக்கிறது.



திருச்சி கிழக்கு தொகுதி: திமுக சார்பாக களமிறங்கும் அன்பில் மகேஷ்?
[Friday 2026-05-15 17:00]

திருச்சி கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தலில் திமுக சார்பாக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் களமிறங்கக் கூடும் என்று அக்கட்சியினர் மத்தியில் விவாதங்கள் எழுந்துள்ளன. அதேபோல் தவெக சார்பாக குப கிருஷ்ணன் வேட்பாளராக போட்டியிடக் கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக சட்டசபைத் தேர்தலில் தவெக 108 இடங்களில் வென்று பெரும்பான்மை கட்சியாக உருவெடுத்து, ஆட்சியை பிடித்துள்ளது. தவெகவுக்கு காங்கிரஸ், விசிக, சிபிஐ, சிபிஎம், ஐயூஎம்எல் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.


Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Asiaan-Salon-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா