Untitled Document
October 26, 2026 [GMT]
கோவை மாணவர் மரணம்: நீதிபதி சந்துருவின் பரிந்துரைகளை ஏற்க தயங்குகிறதா தவெக அரசு?
[Friday 2026-10-23 16:00]

கோயம்புத்தூரில் பட்டியல் சமூக மாணவர் ஒருவர் சாதிய வன்கொடுமையால் உயிரை மாய்த்துக்கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில் மாணவர்கள் மத்தியில் சாதிய பாகுபாடுகளை களைய, முன்னாள் நீதிபதி சந்துரு கொடுத்த பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் என பலரும் கோரியுள்ளனர். அரசு இதை அமல்படுத்த தயங்குகிறதா? என்பது கேள்வியாக எழுந்திருக்கிறது. கோயம்புத்தூர் பீளமேடு பகுதியில் செயல்பட்டு வரும் அரசு உதவிபெறும் பள்ளியில் அகிலன் எனும் மாணவர் 11ம் வகுப்பு படித்து வந்தார். ஓரிரு நாட்களுக்கு முன்னர் வகுப்பறையில் ஆசிரியர் விஜயகுமார், யாரெல்லாம் மாட்டுக்கறி சாப்பிடுவீர்கள்? என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

கோயம்புத்தூரில் பட்டியல் சமூக மாணவர் ஒருவர் சாதிய வன்கொடுமையால் உயிரை மாய்த்துக்கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில் மாணவர்கள் மத்தியில் சாதிய பாகுபாடுகளை களைய, முன்னாள் நீதிபதி சந்துரு கொடுத்த பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் என பலரும் கோரியுள்ளனர். அரசு இதை அமல்படுத்த தயங்குகிறதா? என்பது கேள்வியாக எழுந்திருக்கிறது. கோயம்புத்தூர் பீளமேடு பகுதியில் செயல்பட்டு வரும் அரசு உதவிபெறும் பள்ளியில் அகிலன் எனும் மாணவர் 11ம் வகுப்பு படித்து வந்தார். ஓரிரு நாட்களுக்கு முன்னர் வகுப்பறையில் ஆசிரியர் விஜயகுமார், யாரெல்லாம் மாட்டுக்கறி சாப்பிடுவீர்கள்? என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

  

அதற்கு அகிலன் கை உயர்த்தியதால், சக மாணவர்களால் அவர் சாதிய வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. இது குறித்து தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அகிலனின் பெற்றோர் கூறுகின்றனர். நிலைமை இப்படி இருக்கையில் அகிலன் நேற்றைய தினம் தற்கொலை செய்துக்கொண்டு உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. பள்ளி மாணவர்களிடம் சாதிய மனநிலையை ஒழிக்க வேண்டிய அவசியத்தை இந்த சம்பவம் வலியுறுத்தியுள்ளது. மாணவர்களிடம் சாதிய வண்ணம் முன்னதாக கடந்த 2023ம் ஆண்டு இதேபோல திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் மாணவர்களிடையே சாதிய மோதல் ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து அப்போதைய திமுக அரசு, இனி வரும் காலங்களில் சாதிய மோதல்களை தவிர்க்க மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்ககைகள் குறித்து, அரசுக்கு பரிந்துரைக்க சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.சந்துரு தலைமையில் ஒரு நபர் ஆணையத்தை அமைத்தது. இந்த ஆணையம் 2024ம் ஆண்டு தனது பரிந்துரைகளை அரசுக்கு முன்வைத்தது. பள்ளிகளில் செய்யப்பட வேண்டிய மாற்றம் அதில், பல முக்கியமான விஷயங்கள் வலியுறுத்தப்பட்டிருந்தன. குறிப்பாக பள்ளிகளில் 'கள்ளர் மறுவாழ்வு', 'ஆதிதிராவிடர் நல' போன்ற அடையாள சொற்கள் நீக்கப்பட வேண்டும். இப்படியான பள்ளிகள் அனைத்தும் 'அரசு பள்ளிகள்' என்றே குறிப்பிடப்பட வேண்டும். பள்ளிகள் அமைந்துள்ள ஊரின் பெயரை சேர்த்துக்கொள்ளும்போது குழப்பம் வராது.

அதேபோல மிகவும் பிற்படுத்தப்பட்ட, ஆதிதிராவிட, பழங்குடியின நலத்துறைகளுக்கு கீழ் உள்ள பள்ளிகள் அனைத்தும் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும். சாதிய விவரங்கள் பள்ளிகளுக்கு நன்கொடை அளித்தவர்களின் பெயர்களில் உள்ள சாதி அடையாளத்தை நீக்க வேண்டும். மாவட்ட அளவிலான கல்வி அதிகாரிகள், உயர்நிலை, மேல்நிலை பள்ளி தலைமையாசிரியர்கள் நியமிக்கப்படும்போது, அந்தந்த பகுதிகளில் உள்ள பெரும்பான்மை சாதியினரை சேர்ந்தவர் அல்லாதவராக நியமிக்கப்பட வேண்டும். தலைமையாசிரியர், கல்வி அதிகாரிகளை தவிர.. ஆசிரியர்கள் உட்பட எவரின் பார்வைக்கும் மாணவர்களின் சாதி விவரங்கள் தெரியும்படி வைக்கப்பட கூடாது.

சாதிய அடையாளங்கள் உதவித்தொகையை பெறுபவரின் விவரங்கள் பொதுவாக அறிவிக்கப்பட கூடாது. குறிப்பாக மாணவர்களின் கைகளில் சாதியை பிரதிநிதித்துவப்படுத்தும் கையிறுகள் அணிந்துவர அனுமதிக்க கூடாது. சாதியை அடையாளப்படுத்தும் வகையில் நெற்றியில் வைக்கப்படும் பொட்டுக்கும் தடை விதிக்கப்பட வேண்டும். மாணவர்கள் பயன்படுத்தும் சைக்கிள்களில் சாதியை அடையாளப்படுத்தும் குறியீடுகள் இருக்கக்கூடாது. அரசு விழித்துக்கொள்ளுமா? இப்படி பல பரிந்துரைகளை நீதிபதி சந்துரு கொடுத்திருக்கிறார். இந்த பரிந்துரைகள் கடந்த ஆட்சிக்காலத்தில் அமல்படுத்தப்படவில்லை. ஆனால், நாங்கள்தான் தூய சத்தி என்று சொல்லிக்கொண்டிருக்கும் தவெக அரசு, இந்த பரிந்துரைகளை அமல்படுத்துமா? என பெற்றோர்கள், கல்வியாளர்கள் கேள்வி எழுப்பியிருக்கின்றனர். இன்னொரு அகிலனை இழப்பதற்கு முன், தவெக அரசு விழித்துக்கொள்ளுமா?

  
   Bookmark and Share Seithy.com



செஞ்சி சிறுமி மாயமான வழக்கு: அதிமுக ஆர்ப்பாட்டம்!
[Monday 2026-10-26 16:00]

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள ஆலம்பூண்டியில், 7 வயது சிறுமி மாயமான வழக்கில் காவல்துறையினரின் செயலற்ற தன்மையைக் கண்டித்து இன்று அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே ஆலம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த 7 வயது சிறுமி கடந்த 12ஆம் திகதி அதிகாலை மாயமானார். பிறந்த நாள் கொண்டாடிவிட்டு இரவு பெற்றோருடன் தூங்கிய சிறுமி, மறுநாள் காலையில் காணாமல் போனார்.



விபத்தை ஏற்படுத்திய நீதிபதியின் மகன்: தந்தை மீது வழக்கு!
[Monday 2026-10-26 16:00]

நீதிபதி ஒருவருடைய மகன் ஏற்படுத்திய விபத்து உயிர் பலி வாங்கியதால், தந்தை மீது வழக்கு. கேரளாவிலுள்ள சேரநல்லூர் என்னுமிடத்தில், நேற்று அதிகாலை 2.00 மணிக்கு மேல், தன் உணவகத்தை மூடிவிட்டு தனது மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக்கொண்டிருந்திருக்கிறார் ஜெய பாலகிருஷ்ணன் (55). அப்போது வேகமாக வந்த மெர்சிடிஸ் பென்ஸ் கார் ஒன்று பாலகிருஷ்ணனின் மோட்டார் சைக்கிள் மீது பின்னாலிருந்து மோத, தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.



"மழையால் மிகவும் மன அழுத்தமாக உள்ளது, லீவு கொடுங்கள்" - கலெக்டருக்கு மாணவர்கள் கோரிக்கை!
[Monday 2026-10-26 16:00]

மழை காரணமாக மாவட்டத்திற்கு இன்று விடுமுறை அறிவிக்க வேண்டும் என பள்ளி மாணவர்கள் பலர் மாவட்ட ஆட்சியர் ஆனந்த மோகனின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வரும் நிலையில், திருநெல்வேலி மாவட்டத்தில் இன்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது.



துப்பில்லாத ஹீரோவாக மாறிய துப்பாக்கி ஹீரோ: மு.க ஸ்டாலின் விமர்சனம்!
[Monday 2026-10-26 16:00]

கொலைக்களமாகவும், குற்றவாளிகளின் வேட்டைக்காடாகவும் தமிழ்நாடு மாறி வருவது தடுத்துநிறுத்தப்பட வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது.., த.வெ.க. ஆட்சியில் Wild Wild Tamil Nadu..! கடந்த இரு மாதங்களாகத் தமிழ்நாட்டில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நடைபெற்று வரும் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை மற்றும் சிறுவர்கள் மாயமாகும் சம்பவங்களால் பொதுமக்கள் பீதியில் உறைந்து போயுள்ளனர்.



கொட்டி தீர்க்கும் மழை: தமிழகத்தில் 6 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை!
[Monday 2026-10-26 07:00]

தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. கடந்த 10 நாட்களுக்கு மேலாக கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. அரசு சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இன்றும் பல்வேறு மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. வங்கக் கடலில் உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று அர்னாப் புயலாக உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.



திமுக முன்னாள் அமைச்சர் கேஎன் நேரு தொடர்ந்த வழக்கில் ஐகோர்ட் இன்று தீர்ப்பு!
[Monday 2026-10-26 07:00]

நகராட்சி நிர்வாகத்துறை அதிகாரிகள் நியமனத்தில் முறைகேடு செய்தது குறித்து வழக்குப்பதிவு செய்யும்படி, லஞ்ச ஒழிப்புத் துறைக்கு பிறப்பித்த உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு தாக்கல் செய்த மனு மீது சென்னை உயர் நீதிமன்றம் இன்று (அக்டோபர் 26) தீர்ப்பளிக்க உள்ளது. கடந்த திமுக ஆட்சி காலத்தில் நகராட்சி நிர்வாகத் துறையில் 2,538 உதவி பொறியாளர்கள் மற்றும் இளநிலை பொறியாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் நியமனத்துக்கு ரூபாய் 634 கோடி லஞ்சம் பெறப்பட்டுள்ளதாகவும், இது சம்பந்தமாக வழக்குப்பதிவு செய்யும்படி, தமிழ்நாடு டிஜிபிக்கு, அமலாக்கத்துறை கடிதம் அனுப்பியிருந்தது.



தமிழகத்தில் அதிக வருவாய் ஈட்டும் 10 கோவில்கள் பட்டியல் வெளியீடு!
[Monday 2026-10-26 07:00]

தமிழ்நாட்டில் பிரசித்தி பெற்ற கோவில்கள் ஏராளமாக உள்ளன. முருகப்பெருமானின் அறுபடை வீடுகள், மதுரை மீனாட்சி அம்மன், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் என பிரபலமான கோவில்கள் பல உள்ளன. தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை இந்த கோவில்களின் நிர்வாகங்களை கவனித்து வருகிறது. இந்த கோவில்களில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் பணத்தை குறிப்பிட்ட இடைவெளியில் அறநிலையத்துறை சார்பில் எண்ணப்படுகிறது. இதன் விவரங்களை ஒவ்வொரு ஆண்டும் இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டு வருகிறது.



“தமிழ்நாடு அரசு துணை நிற்கும்” - உறுதியளித்த முதல்வர் விஜய்!
[Sunday 2026-10-25 17:00]

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்களை வென்று சாதனைப் படைத்த தமிழக வீரர்களுக்கு தமிழக முதல்வர் ஜோசப் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முதல்வர் விஜய் தெரிவித்துள்ளதாவது, “ஜப்பானில் நடைபெற்ற 5-வது பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், இந்தியாவின் சார்பில் பங்கேற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த பாரா விளையாட்டு வீரர், வீராங்கனைகள் 3 தங்கம், 5 வெள்ளி, 7 வெண்கலம் என மொத்தம் 15 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளமைக்கு எனது நெஞ்சார்ந்த பாராட்டுகளையும், நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.



குழந்தைகளை வைத்து, ஓட்டு வாங்கி ஆட்சிக்கு வந்த விஜய் எங்கே போனார்? - எம். பி கனிமொழி!
[Sunday 2026-10-25 17:00]

குழந்தைகளை வைத்து, ஓட்டு வாங்கி ஆட்சிக்கு வந்த விஜய் மாமா எங்கே போனார் என திமுக எம். பி கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார். அவர் கூறியதாவது.., செஞ்சியில் காணாமல் போன ஏழு வயதுச் சிறுமியை 14 நாட்களாகியும் கண்டுபிடிக்கவில்லை.



சமையல் துறைக்கு பேரிழப்பு: செஃப் தாமுவிற்கு முதல்வர் விஜய் இரங்கல்!
[Sunday 2026-10-25 17:00]

பிரபல சமையல் கலைஞர் செஃப் தாமுவின் மறைவிற்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார். உடல்நலக்குறைவால் காலமான பிரபல சமையல் கலைஞர் செஃப் தாமுவிற்கு, தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார். சென்னைப் பல்கலைக்கழகத்தில் ஹொட்டல் மேலாண்மைத் துறையில் முனைவர் பட்டம் பெற்றதில் சாதனை படைத்தவர் செஃப் கே.தாமோதரன் என்கிற தாமு.



அதி தீவிர புயலாக கரையைக் கடக்கும் அர்னாப்!
[Sunday 2026-10-25 17:00]

மத்திய கிழக்கு, அதையொட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், அதி தீவிர புயலாகக் கரையைக் கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வானிலை மையம் கூறுகையில்.., மத்திய கிழக்கு மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்.



விஜய் ஆட்சிக்கு வந்ததும் "லியோ தாஸ்"ஆக நினைக்கும் குற்றவாளிகள்: எடப்பாடி விமர்சனம்!
[Sunday 2026-10-25 06:00]

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு, சமூக நீதி சந்தி சிரிப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். மேலும் தமிழ்நாட்டில் தற்போது நடக்கும் கொலைகளை எல்லாம் பார்க்கும் போது, முதல்வர் விஜய் ஆட்சிக்கு வந்ததும் குற்றவாளிகள் எல்லாம் தங்களை 'லியோ தாஸ்'ஆக நினைத்துக் கொண்டு வலம் வருகின்றனரோ? என்று சந்தேகிக்க தான் தோன்றுவதாக அவர் கூறியுள்ளார். தமிழகத்தில் தவெக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே சட்டம் ஒழுங்கு சரியில்லை என்ற குற்றச்சாட்டு நிலவி வருகிறது. கொலைகள், கொள்ளைகள் நடப்பதாகவும், பெண்கள், குழந்தைகளுக்கே பாதுகாப்பு இல்லை என்று நினைக்கும் அளவுக்கு தவெக ஆட்சி இருப்பதாகவும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றனர்.



அரசியல் களத்திற்கு ரெடியாகும் தனுஷ்?
[Sunday 2026-10-25 06:00]

நடிகர் தனுஷ் அரசியல் கட்சி ஆரம்பிக்கப்போவதாக கடந்த சில நாட்களாகவே தகவல் பரவி வருகிறது. அதை உறுதிப்படுத்தும் விதமாகவே தனுஷின் அடுத்தடுத்த நகர்வுகளும் இருந்து வருகின்றன. இந்நிலையில் நாளை சென்னை ஓஎம்ஆரில் தனது நற்பணி இயக்கத்தை சேர்ந்த 3,000-க்கும் மேற்பட்ட பெண் நிர்வாகிகள், உறுப்பினர்களை தனுஷ் நேரில் சந்திக்க இருக்கிறார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் தனுஷ் உரையாற்றுவார் என்ற எதிர்பார்ப்பும் அவரது ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் தனுஷ்.



வங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு மண்டலம்: வானிலை மையம் எச்சரிக்கை!
[Sunday 2026-10-25 06:00]

வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வரும் 26 ஆம் தேதி அதி தீவிர புயலாக மாறலாம் என்றும், இந்த புயல் வரும் 28 ஆம் தேதி ஆந்திராவின் விசாகப்பட்டினம் அருகே புயல் கரையை கடக்கும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது.



5 தொகுதி இடைத்தேர்தலுக்கு தயாராகும் திமுக!
[Saturday 2026-10-24 14:00]

5 தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக அந்தந்த தொகுதி திமுக நிர்வாகிகளுடன் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். குறிப்பாக கே.என்.நேரு, செந்தில் பாலாஜி மற்றும் ஓபிஎஸ் ஆகியோர் இந்த ஆலோசனையில் பங்கேற்று இருக்கின்றனர். இதன் மூலமாக திமுகவின் தேர்தல் பணிகள் தொடங்கிவிட்டதாக பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல் நிறைவடைந்துவிட்டது. இரு தொகுதிகளில் தவெக வெற்றி பெற்றாலும், திமுக 2வது இடத்தை பிடித்து ஆச்சரியம் கொடுத்தது. அதேபோல் சட்டசபைத் தேர்தலில் இரு தொகுதிகளிலும் வென்ற அதிமுக, இடைத்தேர்தலில் 3வது இடத்திற்கு தள்ளப்பட்டது.



ஜெம் வீரமணியின் மகள் அர்ச்சனாவுக்கு எஸ்ஐடி மீண்டும் சம்மன்!
[Saturday 2026-10-24 14:00]

ஜெம் வீரமணியின் மகள் அர்ச்சனா, நாளை காலை விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என சிறப்பு புலனாய்வுக் குழு சம்மன் அனுப்பியுள்ளது. நேற்று அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஜெம் வீரமணிக்கு எதிராக பாலியல் குற்றங்கள் தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தன. இந்த நிலையில் இந்த வழக்கில் தினந்தோறும் ஒரு அப்டேட் வந்து மக்களை அதிர வைக்கிறது. அந்த வகையில் வீரமணியின் மகள் அர்ச்சனா, சிங்கப்பூர் செல்லவிருந்தாராம்.



மண் சரிவில் சிக்கிய ஓட்டுநருக்கு நேர்ந்த சோகம்: வேண்டுகோள் விடுத்த நீலகிரி மாவட்ட ஆட்சியர்!
[Saturday 2026-10-24 14:00]

தென்கிழக்கு வங்கக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகியுள்ள நிலையில், தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் கனமழை மற்றும் மிக கனமழை பெய்து வருகிறது. இதனிடையே கனமழை காரணமாக திருநெல்வேலி, கன்னியாகுமரி, நீலகிரி, கோயம்புத்தூர், தேனி ஆகிய 5 மாவட்டங்களுக்கு இன்று (24-10-26) ஆரஞ்ச் நிற அலர்ட் விடுக்கப்பட்டிருந்தது. அதன்படி, மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் நீலகிரி மாட்டத்தில் நேற்று இரவு முதலே இடைவிடாமல் மழை பெய்து வருகிறது.



தமிழகத்தில் அடுத்த பரபரப்பு சம்பவம்: டியூஷன் சென்ற சிறுவன் திடீரென மாயம்!
[Saturday 2026-10-24 14:00]

கடந்த அக்டோபர் 11ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே இரண்டாம் வகுப்பு படித்து வந்த சிறுமி ஒருவர் மர்மமான முறையில் காணாமல் போன சம்பவம் தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. 8 தனிப்படை அமைக்கப்பட்டு சுமார் 10 நாட்களுக்கு மேலாக அந்த சிறுமியை போலீசார் தேடி வந்தும், தற்போது வரை அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த வழக்கின் முக்கியத்துவத்தைக் கருதி, இந்த வழக்கு சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றப்பட்டு சிபிசிஐடி அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.



"மேயர் பிரியாவுக்கு இதே வேலையா போச்சு" - கடுகடுத்த செங்கோட்டையன்!
[Saturday 2026-10-24 07:00]

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. சென்னை, கோவை உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அரசு சார்பில் முன்னெச்சரிக்கை, நிவாரண பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு தமிழக அரசியல் களம் அடியோடு மாறியுள்ளது. சென்னையில் தவெகவினரை நிவாரண பணிகளுக்கு திமுக மேயர் பிரியா தடையாக இருப்பதாக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.



'கொடைக்கானலுக்கு வராதீர்கள்' - திண்டுக்கல் காவல் கண்காணிப்பாளர் வேண்டுகோள்!
[Saturday 2026-10-24 07:00]

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்திருக்கிறது. குறிப்பாக திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் மழையின் தாக்கம் அதிகரித்திருக்கிறது. எனவே, கொடைக்கானலுக்கு வருவதை தவிர்க்க வேண்டும் என்று திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் வேண்டுகோள் விடுத்திருக்கிறார். கொடைக்கானலில் பெய்த மழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கிறது. குறிப்பாக வெள்ளி அருவியில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக அருவியை தாண்டி வாகனங்கள் மேலே வர முடியாதபடியும், மேலிருந்து கீழே இறங்கும் வாகனங்கள் கீழே இறங்க முடியாதபடியும் பாதிக்கப்பட்டிருக்கின்றன.


Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Asiaan-Salon-2022-seithy
 gloriousprinters.com 2021
Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா