Untitled Document
February 2, 2025 [GMT]
39 வேட்பாளர்கள் ஜனாதிபதி தேர்தலில் போட்டி!
[Thursday 2024-08-15 17:00]

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக கட்டுப்பணம் செலுத்திய 40 வேட்பாளர்களில் 39 பேர் இதுவரை தமது வேட்புமனுக்களை சமர்ப்பித்துள்ளதாகவும், அவர்கள் 39 பேரும் தேர்தலில் போட்டியிடத் தகுதிபெற்றுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக கட்டுப்பணம் செலுத்திய 40 வேட்பாளர்களில் 39 பேர் இதுவரை தமது வேட்புமனுக்களை சமர்ப்பித்துள்ளதாகவும், அவர்கள் 39 பேரும் தேர்தலில் போட்டியிடத் தகுதிபெற்றுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

  

இதேவேளை, சுயேட்சை வேட்பாளர் சரத் குமார குணரத்ன வேட்புமனு பத்திரத்தை சமர்பிக்கவில்லை எனவும் குறிப்பிட்டார்.

வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட பின்னர் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

வேட்பு மனுத்தாக்கல் நிறைவடைந்துள்ளது. அனைவருக்கும் நன்றி. நீதியான முறையில் தேர்தலை நடத்த வேட்பாளர்கள் ஒத்துழையுங்கள். தாக்கல் செய்யப்பட்ட 39 வேட்பு மனுக்களில் 3 வேட்பு மனுக்கள் மீது முன்வைக்கப்பட்ட ஆட்சேபனைகள் மூன்றும் நிராகரிக்கப்பட்டுள்ளன.

சமூக வலைத்தளங்கள் ஊடாக தவறான மற்றும் வெறுப்பூட்டும் சித்தரிப்புக்களுடனான பிரச்சாரங்களை மேற்கொள்வதை சிவில் பிரஜைகள் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.

ஒரு வேட்பாளருக்கு மாத்திரம் விசேட சலுகை வழங்கும் ஊடகங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்படும்.

வேட்பாளர்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்பை கருத்திற்கொண்டு தேர்தல் பிரச்சாரங்களுக்கு பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் ஆகியவற்றை பயன்படுத்துவதை தவிர்த்துக் கொள்ளுங்கள் என மேலும் தெரிவித்தார்.

  
   Bookmark and Share Seithy.com



இன்று மாவையின் இறுதி யாத்திரை!
[Sunday 2025-02-02 06:00]

தமிழரசுக்கட்சியின் சிரேஸ்ட தலைவர் மாவை சேனாதிராஜாவின் இறுதிச்சடங்கிற்கு இன்று நடைபெறவுள்ள நிலையில், அவரது உடலை தமிழரசுக்கட்சியின் தலைமையத்திற்கு கொண்டு சென்று அஞ்சலிக்காக வைப்பதற்கு அவரது குடும்பத்தினர் மறுத்துள்ளனர்.



இளைஞர்களிடம் விடுதலை உணர்வை விதைத்தவர் மாவை சேனாதிராசா!
[Sunday 2025-02-02 06:00]

தமிழர் உரிமைக்காக சிறை சென்ற தமிழ்த் தேசியத்தின் அடையாளம் மாவை சேனாதிராசா. அவர்களின் மறைவு தமிழ் தேசியத்திற்கும், தமிழ் மக்களுக்கும் இழப்பாகும்.மாவை சேனாதிராசா அவர்களின் இழப்பின் துயரில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கமும் பங்குகொள்வதுடன் , இழப்பின் துயரில்வாடும் அவரின் மனைவி, மக்கள், தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள் , தமிழ்தேசியவாதிகள் அனைவரின் கரங்களையும் இறுகப்பற்றிக் கொள்கின்றது.



மகிந்தவுக்கு வீடு வழங்கிய கூட்டத்தில் அனுரவும் பங்கேற்றார்!
[Sunday 2025-02-02 06:00]

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு விஜேராம இல்லத்தை வழங்குவதற்கு அனுமதி வழங்கிய கூட்டத்தில் தற்போதைய ஜனாதிபதி அனுரகுமார திநாநாயக்கவும் பிரசன்னமாகியிருந்தார் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நல்லாட்சி அரசாங்க ஆட்சிக் காலத்தில் இந்த இல்லத்தை வழங்குவது குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.



மனச்சாட்சி இருந்தால் வெளியேறுங்கள்!- என்கிறது அரசாங்கம்.
[Sunday 2025-02-02 06:00]

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை உத்தியோகபூர்வ இல்லத்தை விட்டு வௌியேறுமாறு எழுத்து மூலம் அறிவிக்காவிட்டாலும், அதற்கான சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க அரசாங்கம் தயாராகி வருகிறதாக பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார பிரதி அமைச்சர், சட்டத்தரணி சுனில் வட்டகல தெரிவித்தார்.



பாரதிபுரம் படுகொலையின் 27வது ஆண்டு நினைவேந்தல்!
[Sunday 2025-02-02 06:00]

தம்பலகாமம் படுகொலையின் 27வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு சனிக்கிழமை காலை தம்பலகாமம் பகுதியில் அமைக்கப்பட்ட நினைவுத்தூபி பகுதியில் உறவினர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்களினால் அனுஸ்டிக்கப்பட்டது.



மாவைக்கு அஞ்சலி செலுத்தச் சென்ற எம்.பிக்கு அச்சுறுத்தல்!
[Sunday 2025-02-02 06:00]

இலங்கைத் தமிழரசு கட்சியின் முன்னாள் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவின் மறைவுக்கு அஞ்சலி செலுத்திய வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்படுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.



செந்தில் தொண்டமான் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க குழு!
[Sunday 2025-02-02 06:00]

கிழக்கு மாகாணத்தின் முன்னாள் ஆளுநரின் காலத்தில் இடம்பெற்ற முறைகேடுகள் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரட்ணசேகரவால் மூன்று பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஆளுநர் அலுவலகத்துக்கு கிடைக்கும் அனைத்து எழுத்துப்பூர்வ குற்றச்சாட்டுகளும் விசாரணைக்காக அந்தக் குழுவிடம் ஒப்படைக்கப்படும்.



9 நிபந்தனைகளுடன் வாகன இறக்குமதிக்கு அனுமதி!
[Sunday 2025-02-02 06:00]

மோட்டார் வாகனம், மோட்டார் சைக்கிள், முச்சக்கர வண்டி உட்பட பொதுப் போக்குவரத்து பேருந்து, பொருள் விநியோக போக்குவரத்து வாகனங்கள் மற்றும் ஏனைய மோட்டார் எஞ்ஜின் பாவனையற்ற பொறிகள் ஆகியவற்றை இறக்குமதி செய்வதற்கு நேற்று முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.



அரசாங்கத்தை எதிரிகளிடமிருந்து பாதுகாக்க வேண்டும்!
[Sunday 2025-02-02 06:00]

இலங்கை வாழ் மக்கள் இந்த நாட்டில் புதிய அரசியல் வரலாறொன்றை எழுத ஆரம்பித்துள்ளனர். நாடு முன்னோக்கி பயணிக்க ஆரம்பித்துள்ளது. மக்களால் கட்டியெழுப்பப்பட்ட இந்த அரசாங்கத்தை எதிரிகளிடமிருந்து பாதுகாக்க வேண்டும். எமது இலக்கை அடையும் வரை நாம் அனைவரும் ஒன்றாக பயணிக்க வேண்டுமென போக்குவரத்து நெடுஞ்சாலைகள் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.



மாவை சேனாதிராஜாவின் பூதவுடலுக்கு நாமல் ராஜபக்‌ஷ இறுதி அஞ்சலி!
[Sunday 2025-02-02 06:00]

இலங்கை தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவர் மறைந்த மாவை சேனாதிராஜாவின் பூதவுடலுக்கு ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்‌ஷ இறுதி அஞ்சலி செலுத்தினார். இதன்போது, யாழ். மாவட்ட பிரதம அமைப்பாளர் கீதநாத், கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் மதனவாசன் மற்றும் கட்சியின் வடமாகாண ஒருங்குணைப்பாளர்கள் பலரும் கலந்துகொண்டனர்.



பொதுமக்களின் காணியை விகாரைக்கு தாரை வார்க்க ஆளுநர் முயற்சி!- கஜேந்திரகுமார் எதிர்ப்பு.
[Saturday 2025-02-01 16:00]

சட்டவிரோதமான முறையில் கட்டப்பட்ட தையிட்டி விகாரை காணிக்கு பதிலாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாற்றுக்காணி வழங்கும் ஆளுநரின் கருத்தை ஏற்க முடியாது என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஜனாதிபதி முன்னிலையில் ஏற்க முடியாது என தெரிவித்தார்.



ஹபரணவில் வான்- பேருந்து விபத்தில் 2 பேர் பலி, 35 பேர் காயம்!
[Saturday 2025-02-01 16:00]

திருகோணமலை - ஹபரணை வீதியில் கல்மலை பகுதியில் பேருந்து ஒன்றும் வானும் மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்ததுடன், 35 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று முற்பகல் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் வானின் சாரதி உள்ளிட்ட இருவர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.



சுதந்திர தின எதிர்ப்பு போராட்டத்துக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் அழைப்பு!
[Saturday 2025-02-01 16:00]

அரசியல் கைதிகள் விடுதலை, காணி அபகரிப்பு போன்ற பிரச்சினைகள் தீர்வின்றி தொடரும் நிலையில் சுதந்திர தினத்தை கொண்டாட முடியாது எனவும், சுதந்திர தின எதிர்ப்பு போராட்டத்துக்கு ஒத்துழைக்குமாறும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் அழைப்பு விடுத்துள்ளனர்.



மாவையின் இறுதிச்சடங்கிற்கு பயணித்த முன்னாள் எம்.பியின் வாகனம் விபத்தில் சிக்கியது!
[Saturday 2025-02-01 16:00]

மட்டக்களப்பிலிருந்து தமிழரசு கட்சியின் மறைந்த தலைவர் மாவை சேனாதிராஜாவின் மரண சடங்கில் கலந்து கொள்வதற்காக பயணித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கோ.கருணாகரம் ஜனா பயணித்த வாகனம் விபத்துக்குள்ளானது. இந்த விபத்து, திருகோணமலை- உப்புவெளி பிரதேசத்தில் இன்று இடம்பெற்றது.



கொழும்பு வந்தது பாகிஸ்தான் போர்க்கப்பல்!
[Saturday 2025-02-01 16:00]

பாகிஸ்தான் கடற்படைக் கப்பல் (PNS) ASLAT இன்று காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. வருகை தந்த கப்பலை இலங்கை கடற்படை கடற்படை மரபுகளுக்கு இணங்க வரவேற்றது. கப்டன் முஹம்மது அசார் அக்ரம் தலைமையிலான 123 மீட்டர் நீளமுள்ள போர்க்கப்பலான PNS ASLAT 243 பேர் கொண்ட குழுவினரால் நிர்வகிக்கப்படுகிறது.



ஜனாதிபதியின் பாதுகாப்பு வாகனம் விபத்து - 4 பேர் படுகாயம்!
[Saturday 2025-02-01 16:00]

தலாவ பகுதியில் இன்று அதிகாலை 1 மணியளவில் ஜனாதிபதி செயலகத்திற்கு சொந்தமான டிஃபென்டர் வாகனம் ஒன்று விபத்துக்குள்ளானதில் நான்கு பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.



மொரட்டுவ ப.நோ.கூட்டுறவுச் சங்க தேர்தலிலும் தேசிய மக்கள் சக்தி தோல்வி!
[Saturday 2025-02-01 16:00]

இன்று நடைபெற்ற மொரட்டுவ ப.நோ.கூட்டுறவுச் சங்கத் தேர்தலில் முப்பது வருடங்களின் பின்னர் ஐக்கிய மக்கள் சக்தி வெற்றியீட்டியுள்ளது. தேசிய மக்கள் கட்சிக்கு நாற்பத்தாறு வாக்குகளும், ஐக்கிய மக்கள் சக்திக்கு ஐம்பத்தொரு வாக்குகளும் கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதன்படி, நடைபெற்ற இரகசிய வாக்கெடுப்பில் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று ஐக்கிய மக்கள் சக்தி மொரட்டுவ பல்வேறு சேவை கூட்டுறவுச் சங்கம் வெற்றி பெற்றுள்ளது.



ஆண்டுதோறும் 1,000க்கும் மேற்பட்ட குழந்தைகள் புற்றுநோயால் பாதிப்பு!
[Saturday 2025-02-01 16:00]

சுகாதாரத் துறையின் கூற்றுப்படி, இந்த நாட்டில் ஆண்டுதோறும் 1,000க்கும் மேற்பட்ட குழந்தைகள் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர்.



யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள சுற்றுலா மையங்கள் குறித்த சுற்றுலா வழிகாட்டி!
[Saturday 2025-02-01 16:00]

யாழ்ப்பாண மாவட்டத்தின் கலாசார ரீதியான சுற்றுலாவை மேன்மைப்படுத்தும் வகையில், யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள சுற்றுலா மையங்கள் தொடர்பில் டிஜிற்றல் அடிப்படையிலான சுற்றுலா வழிகாட்டி நூலானது நேற்று ஜனாதிபதியால் வெளியிடப்பட்டது.



கடலாமையுடன் ஒருவர் கைது!
[Saturday 2025-02-01 16:00]

கிளிநொச்சி முழங்காவில் பொலிஸ் பிரிவிக்குட்பட்ட நாச்சிக்குடா கடற்கரையில் கடலாமையுடன் ஒருவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். நாச்சிக்குடா பகுதியைச் சேர்ந்த 35 வயதான ஒருவரே கைது செய்யப்பட்டு முழங்காவில் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். இச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முழங்காவில் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.


Airlinktravel-2020-01-01
Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
Karan Remax-2010
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Asayan-Salon-2022-seithy
 gloriousprinters.com 2021
Rajeef sebarasha 2023/04/19
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா