Untitled Document
September 13, 2024 [GMT]
நெடுந்தீவில் பன்றி தாக்கி மூதாட்டி பலி!
[Sunday 2024-08-25 07:00]


பன்றியால் குத்திக் குதறித் தாக்கப்பட்ட வயோதிபப் பெண், சிகிச்சையின்போது  உயிரிழந்துள்ளார்.

பன்றியால் குத்திக் குதறித் தாக்கப்பட்ட வயோதிபப் பெண், சிகிச்சையின்போது உயிரிழந்துள்ளார்.

  

நெடுந்தீவு 15ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த 80 வயதுடைய நாகமுத்து லட்சுமி என்ற வயோதிபப் பெண்ணே இவ்வாறு உயிரிழந்தவராவார்.

நேற்று முன்தினம் இரவு பொல்லுடன் குறித்த மூதாட்டி நின்றுள்ளார். அந்தச் சமயத்தில் அயல்வீட்டில் வளர்க்கப்பட்டு வந்த பன்றியொன்று, திடீரென வெகுண்டெழுந்து அவரை மூர்க்கத் தனமாகத் தாக்கியுள்ளது.

இதையடுத்து நெடுந்தீவு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். சிகிச்சையின்போது நேற்று அந்த மூதாட்டி உயிரிழந்தார்.

இறப்பு விசாரணைகளை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமச்சிவாயம் பிறேமகுமார் மேற்கொண்டார்.

  
   Bookmark and Share Seithy.com



வடக்கு, கிழக்கு இணைப்பு, காணி, பொலிஸ் அதிகாரங்களை கிடைக்காது!
[Friday 2024-09-13 05:00]

பொதுஜன பெரமுனஅரசாங்கத்தின் கீழ் வடக்கு மற்றும் கிழக்கு இணைக்கப்படாது, அதேவேளை பொலிஸ் அல்லது காணி அதிகாரங்கள் இந்தப் பகுதிகளுக்கு வழங்கப்படாது என அக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.



அதிரடியாக தடைகளை அறிவித்தார் தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர்!
[Friday 2024-09-13 05:00]

ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்புக்கு இன்னும் ஒன்பது நாட்களே இருக்கின்ற நிலையில், வாக்களிப்பை நடத்துவதற்கான ஏற்பாடுகள் பூர்த்தி அடைந்துள்ளது எனத் தெரிவித்த தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க, வாக்களிப்பு நிலையங்களுக்கு கையடக்க தொலைபேசிகளை எடுத்துச் செல்வது தடை செய்யப்பட்டுள்ளது என்றார்.



இராணுவமயமாக்கப்பட்ட வடக்கு கிழக்கு - சிங்களமயமாகும் திருகோணமலை!
[Friday 2024-09-13 05:00]

யுத்தத்தின் பின்னர் கடந்த 15 ஆண்டுகளாக தொடர்ந்தும் இராணுவக் கண்காணிப்பின் கீழ் இருக்கும் திருகோணமலை மாவட்டத்தில் சிங்கள மக்களின் ஆதிக்கம் விரிவடைந்து வருகின்றது.



51/1 தீர்மானத்தை காலநீடிப்புச் செய்வது குறித்து ஒக்ரோபர் 7ஆம் திகதி முடிவு!
[Friday 2024-09-13 05:00]

இலங்கை தொடர்பில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டு, நடைமுறையில் இருக்கும் 51/1 தீர்மானத்தை மேலும் ஒன்று அல்லது இரண்டு வருடங்களுக்குக் காலநீடிப்புச் செய்வது குறித்து ஆராயப்பட்டுவரும் நிலையில், எதிர்வரும் ஒக்டோபர் 7 ஆம் திகதி பேரவையில் அதுகுறித்த தீர்மானம் எட்டப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது.



நாமல் வென்றால் மகிந்தவே பிரதமர்!
[Friday 2024-09-13 05:00]

ஜனாதிபதித் தேர்தலில் தான் வெற்றி பெற்றால், பிரதமர் பதவியை மகிந்த ராஜபக்ஷவுக்கு வழங்கவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.



சஜித்துக்கே ஆதரவு என்கிறார் சத்தியலிங்கம்!
[Friday 2024-09-13 05:00]

ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரிக்க மேற்கொண்ட தீர்மானத்தில் மாற்றங்கள் இல்லை என இலங்கைத் தமிழரசுக் கட்சி உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் அறிக்கையொன்றின் மூலம் இதனைத் தெரிவித்துள்ளார்



பெற்ற மகளை பாலியல் வன்புணர்வுக்குட்படுத்திய தந்தை கைது!
[Friday 2024-09-13 05:00]

யாழ்ப்பாணத்தில் தனது மகளை பலமுறை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி கர்ப்பமாக்கிய தந்தைகைது செய்யப்பட்டுள்ளார். 53 வயதான குறித்த தந்தை தனது மகளான 23 வயதுடைய யுவதியை பல தடவைகள் பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார். இந்நிலையில் குறித்த யுவதியும் கர்ப்பமடைந்த நிலையில் 4 மாதங்களுக்கு முன்னர் கர்ப்பம் கலைக்கப்பட்டுள்ளது.



முட்டை வியாபாரிக்கு 6 மாத கடூழியச் சிறைத்தண்டனை!
[Friday 2024-09-13 05:00]

அதிக விலைக்கு முட்டையை விற்பனை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட குருநாகல், மாதவ பிரதேசத்தைச் சேர்ந்த முட்டை வியாபாரி ஒருவருக்கு 10 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 06 மாத கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பிலெஸ்ஸ நீதவான் நீதிமன்றத்தினால் குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது



10 வருட விசாவுடன் தப்பியோடத் தயார் நிலையில் ரிரான் அலஸ்!
[Friday 2024-09-13 05:00]

எந்தவொரு நாட்டிலும் பத்து வருடங்கள் வாழ தான் விசா வைத்திருப்பதாகவும், ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு விசா பெற வேண்டிய அவசியமில்லை என்றும் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரன் அலஸ் தெரிவித்துள்ளார்.



எரிபொருள் விலையை பாதியாக குறைப்பதாக வாக்குறுதி!
[Friday 2024-09-13 05:00]

ஜனாதிபதி வேட்பாளரும் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சருமான ரொஷான் ரணசிங்க எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தாம் தெரிவு செய்யப்பட்டால் எரிபொருள் விலையை 50 வீதத்தால் குறைப்பதாக உறுதியளித்துள்ளார்.



அனுர முன்னணியில் - ரணில் செல்வாக்கும் அதிகரிப்பு!
[Thursday 2024-09-12 16:00]

தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளருக்கு 36 வீத ஆதரவு காணப்படுகின்றது,ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளருக்கு 32 வீத ஆதரவு காணப்படுகின்றது,ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்கவிற்கு 28 வீத ஆதரவு காணப்படுகின்றது .



இன்று எமக்குள்ள ஒரே வழி பொதுவேட்பாளர் தான்!
[Thursday 2024-09-12 16:00]

இந்த நாட்டில் தமிழர்கள் அழிவுப்பாதைக்கு கொண்டு செல்லப்படுகின்றார்கள்.இந்த நாட்டில் தமிழ் மக்களுக்கு நடந்த அநீதிகளை சர்வதேசத்திற்கு கொண்டு செல்வதற்கு இன்று எமக்குள்ள ஒரே வழி பொதுவேட்பாளராகும்.வேறு யாருக்கும் வாக்களிப்பதன் மூலம் அதனை அடையமுடியாது என மட்டக்களப்பு மாவட்ட ஜேசு சபை துறவி அருட்தந்தை ஜோச்மேரி தெரிவித்தார்.



சஜித்தை ஆதரிக்கும் முடிவில் மாற்றம் இல்லை - தமிழரசு கட்சி வீம்பு!
[Thursday 2024-09-12 16:00]

ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாசவை ஆதரிக்கின்ற முடிவில் எந்த மாற்றங்களும் இல்லை என இலங்கைத் தமிழரசுக் கட்சி மீண்டும் அறிவித்துள்ளது.



பெண்கள் மேம்பாட்டுக்கென ஒன்ராறியோ 6.9 மில்லியன் டொலர் முதலீடு! Top News
[Thursday 2024-09-12 16:00]

பல்வேறு துறைகளில் பெண்களுக்கான அத்தியாவசிய திறமைகள் மற்றும் பாதுகாப்பான வேலைகளை உருவாக்கி உதவுவதற்காக ஒன்ராறியோ அரசு 6.9 மில்லியன் டொலர்களை ஒதுக்கியுள்ளது.



ஒக்டோபர் 26இல் குட்டித் தேர்தல்!
[Thursday 2024-09-12 16:00]

எல்பிட்டிய உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஒக்டோபர் 26ஆம் திகதி நடைபெறவுள்ளது. எல்பிட்டிய உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த 9ஆம் திகதி ஆரம்பமாகி வியாழக்கிழமை (12) நண்பகல் 12 மணியுடன் நிறைவடைந்தது.



காணாமலாக்கப்பட்டோரின் பிரச்சினைக்கு 3 வருடங்களுக்குள் நிரந்தரத் தீர்வு!
[Thursday 2024-09-12 16:00]

வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் பிரச்சினைக்கு எதிர்வரும் 3 வருடங்களுக்குள் நிரந்தரத் தீர்வு வழங்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.



18ஆம் திகதிக்குப் பின் வன்முறை வெடிக்கும்?
[Thursday 2024-09-12 16:00]

செப்டம்பர் 18-ம் திகதி பிரச்சார நடவடிக்கைக்கான காலக்கெடு முடிவடைந்த பிறகு, எதிர்க்கட்சியினர் தங்கள் சதிகாரர்களை தேசிய மக்கள் சக்தியினராக பாவித்து வன்முறை சம்பவங்களை உருவாக்கலாம் என்ற சந்தேகம் இருப்பதாக தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.



வவுனியா டிப்போ ஊழியர்கள் போராட்டம் - முடங்கியது பஸ் சேவை!
[Thursday 2024-09-12 16:00]

தமது ஊழியர்களை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி இலங்கை போக்குவரத்து சபையின் வவுனியா சாலை ஊழியர்கள் இன்று பணிபகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.



தேர்தலுக்குப் பின்னர் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை!
[Thursday 2024-09-12 16:00]

சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டுவதற்கு தேர்தலுக்குப் பிந்தைய காலத்தில் நாடளாவிய ரீதியில் பாதுகாப்பை பலப்படுத்துவதற்கான திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, நாட்டின் பல பகுதிகளில் பொலிஸார் நிலைநிறுத்தப்படவுள்ளனர்.



புதிய ஜனாதிபதிக்கு நாடாளுமன்றைக் கலைக்கும் அதிகாரம் உள்ளதா?
[Thursday 2024-09-12 16:00]

ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் நியமிக்கப்படும் புதிய ஜனாதிபதிக்கு, அவர் நியமிக்கப்பட்டு 10 முதல் 12 நாட்களுக்குள் நாடாளுமன்றத்தைக் கலைக்கும் அதிகாரம் கிடைக்கும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.


Asayan-Salon-2022-seithy
Karan Remax-2010
Mahesan-Remax-169515-Seithy
Rajeef sebarasha 2023/04/19
Ambikajewellers-01-08-2021-seithy
NKS-Ketha-04-11-2021
Kugeenthiran-200-2022-seithy
Airlinktravel-2020-01-01
 gloriousprinters.com 2021
Vaheesan-Remax-2016
Logan-Kumaresh-Homelife-02-02-2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா