Untitled Document
September 19, 2024 [GMT]
முடிவில் மாற்றமில்லை - தமிழரசு கட்சி அறிவிப்பு!
[Monday 2024-09-16 17:00]



எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய மக்கள் கூட்டணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதென்ற எமது கட்சியின் மத்திய குழுத் தீர்மானத்திற்கு அமைவாக வாக்காளர்கள் உரியவாறு தங்கள் வாக்கை அவருக்கு வழங்க வேண்டும் என தமிழரசுக்கட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய மக்கள் கூட்டணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதென்ற எமது கட்சியின் மத்திய குழுத் தீர்மானத்திற்கு அமைவாக வாக்காளர்கள் உரியவாறு தங்கள் வாக்கை அவருக்கு வழங்க வேண்டும் என தமிழரசுக்கட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது.

  

ஜனாதிபதித்தேர்தல் தொடர்பான தீர்மானம் மிக்க உயர்மட்ட கலந்துரையாடல் வவுனியா தமிழரசுக்கட்சியின் அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை (16) நடைபெற்றது.

குறித்த கூட்டத்தில் கட்சியின் தலைவர் மாவைசேனாதிராஜா,பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.எ.சுமந்திரன்,சி.சிறிதரன், செயலாளர் ப.சத்தியலிங்கம், முன்னாள் மட்டுமாநகரசபை மேயர் சரவணபவன், சி.வி.கே.சிவஞானம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

குறித்த கலந்துரையாடலின் பின்னர் தமிழரசுக்கட்சியின் தீர்மான அறிக்கை கட்சியின் தலைவர் மாவைசேனாதிராஜாவால் வாசிக்கப்பட்டது.

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இலங்கையில் எதிர்வரும் 21 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவிருக்கின்றது. இத்தேர்தலில் மூன்று பிரதான வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனங்கள் பரிசீலிக்கப்பட்டன. இத்தேர்தல் விஞ்ஞாபனங்களில் குறிப்பாக தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு மற்றும் தமிழ் மக்களின் பிரதேசங்களின் பொருளாதார மேம்பாடு பற்றி கவனம் செலுத்தப்பட்டது.

இவ்விஞ்ஞாபனங்களில் புதிய அரசியலமைப்பு உருவாக்குதலும் ஏற்கனவே அரசியலமைப்பில் உள்ள பதின்மூன்றாவது அரசியலமைப்புத் திருத்தத்தை முழுமையாக அமுலாக்குவதும் ஆகும். ஒற்றையாட்சி மற்றும் புத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளமை ஏற்றுக்கொள்ள முடியாதனவாகும். அதற்குப் பதிலாக இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வாக தமிழ் மக்களுக்கான சுயநிர்ணய உரிமை அடிப்படையில் சமஷ்டிக் கட்டமைப்பின் மூலம் தீர்வு காணப்படுதல் வேண்டும் என்பது பிரதானமாகும்.

முக்கியமாக இவ்விடயங்களில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஐக்கிய மக்கள் கூட்டணி தலைவர் சஜித் பிரேமதாச, ஜே.வி.பி தலைவர் அநுர குமார திசாநாயக ஆகியோருடன் நேரடியாக பேச்சுக்கள் நடைபெற்றன. தமிழ் அரசியல் தலைமைகள் தமிழ்ப் பேசும் மக்களின் தேசிய இனப் பிரச்சினைக்கு தீர்வு காணும் பொருட்டு இணைப்பாட்சி அடிப்படையிலான சமஷ்டிக் கட்டமைப்பில் முழுமையான தன்னாட்சி சம்பந்தமாக தொடர்ந்து போராடி வந்துள்ளோம். ஜனாதிபதித் தேர்தல் முடிந்ததும், புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தின் பொருட்டு தமிழ்த் தேசிய இனத்தின் அரசியல் தீர்வுக்கான பிரேரணை முன்வைக்கப்படுதல் வேண்டும்.

தமிழ்ப் பேசும் மக்கள் என்ற வகையில் முஸ்லீம் சமூகத்துடனும் மலையக தமிழர்களுடன் இணைந்து செயல்படுதல் வேண்டும். 13ஆவது அரசியல் திருத்தம் அரசியலமைப்பின் ஒற்றையாட்சிக்குட்பட்டது. இதனை அரசியல் தீர்வாக எம்மால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்பதைக் குறிப்பிட வேண்டும். இருப்பினும் தமிழினத்தின் பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வொன்றை அடையும் வரை இந்திய அரசின் நட்புறவுடன் 13ஆவது திருத்தச் சட்டத்தின் மூலம் நடைமுறையிலிருக்கும் மாகாண அரசியலமைப்பை முழுமையாக நடைமுறைப்படுத்த நாம் முழு ஒத்துழைப்பையும் வழங்க வேண்டும்.

2002 டிசம்பரில் ஏற்பட்ட ஒஸ்லோ உடன்பாட்டில் சில அடிப்படைக் கோட்பாடுகளின் மீது இணக்கம் காணப்பட்டது. அக்கோட்பாடு பின்வருமாறு அமைந்தது. இந்த வரலாற்று நிகழ்வு இன்றும் பரிசீலனைக்குரியது. "ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழ்பேசும் மக்களின் வரலாற்று ரீதியான வாழ்விடப்பகுதிகளில் உள்ளக சுயநிர்ணய கொள்கையின் பிரகாரம் சமஷ்டிக் கட்டமைப்பின் அடிப்படையிலமைந்த தீர்வொன்றை ஆராய்தல் என்பதாகும். சர்வதேச நியமங்களின் படியும், சர்வதேச சாசனங்களின் படியும் தமிழர்களாகிய நாங்கள் தனிச்சிறப்புமிக்க மக்கள் குழாமாவோம்.

ஒருமக்கள் குழாமான நாங்கள் பேரினவாதத்தின் பிடிக்கு ஆட்படாது கெளரவத்துடனும் சுயமரியாதையுடனும், சுதந்திரமாகவும், அச்சமின்றியும் நாட்டின் ஏனைய மக்களுடன் சமத்துவமுள்ள மக்களாக வாழ விரும்புகிறோம். 2015 இல் இலங்கை வந்த பாரதப் பிரதமர் நரேந்திர மோடி மார்ச் 13இல் இலங்கையில் பாராளுமன்றத்தில் உரையாற்றிய போது பின்வருமாறு கூறினார். “எமது சமூகத்திலுள்ள அனைத்துப் பாகங்களின் அபிலாசைகளுக்கு நாம் மதிப்பளிக்கும் போது எம்நாட்டின் ஒவ்வொரு பிரஜையின் சக்திகளையும் எமதுநாடு உள்வாங்கிக் கொள்ளும். மாநிலங்கள், மாவட்டங்கள் மற்றும் கிராமங்களை இவ்வாறு வலுவூட்டும் பொழுது நாடு மென்மேலும் மேம்படும் கூட்டுச் சமஷ்டியில் நான் திடமான நம்பிக்கை கொண்டவன்" என்பதையும் குறிப்பிட்டார்.

"இறையாண்மை என்பது மக்களிடமே உண்டு அரசிடம் அல்ல என்பதை நாம் வலியுறுத்துகிறோம். "ஜனாதிபதித் தேர்தல் முடிந்தபின் எங்களால் சமர்ப்பிக்கப்படும் அரசியலமைப்புக்கான அறிக்கையில் குறிப்பிடப்படும் தமிழ்த்தேசிய இனத்திற்கான அரசியல் தீர்வை அடைவதற்கும், தமிழ் மக்கள் எதிர்நோக்கியுள்ள நெருக்கடிகளுக்கும் தீர்வுகாண வெற்றிபெறும் ஜனாதிபதியுடனும் அரசுடனும் வேண்டிய பொருத்தமான நடவடிக்கைகளை எடுப்போம்." தமிழ்த்தேச மக்கள் அரசியல் தீர்வைத் தீர்மானிப்பதிலும் அந்த இலட்சியத்தை அடைவதற்கும் இடர்களோ முரண்பாடுகளோ ஏற்படாமல் நல்லெண்ணத்துடன், ஒற்றுமை உணர்வுடன் தேர்தலின் போதும், எதிர்காலத்திலும் ஒன்றாக நின்று உழைப்போம் என திடமான தீர்மானத்தைக் கொண்டிருக்கிறோம்.'

இந்த நோக்கத்தை நாடளாவிய ரீதியில் செயல்படுத்துவதற்கென நாம் கடந்த காலத்தில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல்களில் எமது பெரும் பங்களிப்பை வழங்கி இருந்தோம். ஆனால் பெரும் ஏமாற்றங்களும், வெறுப்பும், வேதனைகளுமே எஞ்சியுள்ளன. இப்போதைய ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக எம்மால் பரிசீலிக்கப்பட்ட மூன்று பிரதான வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனங்கள் எதுவும் எமது அடிப்படை அரசியல் கோரிக்கைகளை முழுமையாக உள்ளடக்கவில்லை என்பதைக் கருத்தில் கொள்கிறோம். இந்த விஞ்ஞாபனங்களின் அடிப்படையில் எமது தாயகம், தேசியம், தன்னாட்சி, சுயநிர்ணயம் என்ற எமது அடிப்படைக் கோட்பாடுகளில் எந்தவித விட்டுக்கொடுப்பும் இல்லாத வகையில் ஐக்கிய மக்கள் கூட்டணி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் விஞ்ஞாபனம் ஒப்பீட்டு ரீதியில் ஓரளவு திருப்தியாகக் காணப்படுகின்றது.

எனவே, 2024 செப்டெம்பர் 21 ஆம் திகதி நடைபெற உள்ள ஜனாதிபதித் தேர்தலின் வாக்களிப்பின் போது ஐக்கிய மக்கள் கூட்டணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதென்ற எமது கட்சியின் மத்திய குழுத் தீர்மானத்திற்கு அமைவாக வாக்காளர்கள் உரியவாறு தங்கள் வாக்கை அவருக்கு வழங்க வேண்டும் என அன்புடன் கோருகின்றோம் என்றுள்ளது.

இதேவேளை இன்றையதினம் கலந்துகொண்ட ஆறு உறுப்பினர்களில் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் மாத்திரம் குறித்த தீர்மானத்திற்கு இணக்கப்பாடு தெரிவிக்காதநிலையில் ஏனைய ஐவரும் தமது இணக்கப்பாட்டினை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

  
   Bookmark and Share Seithy.com



திலீபன் நினைவேந்தலுக்கு தடைவிதிக்க நீதிமன்றம் மறுப்பு!
[Thursday 2024-09-19 17:00]

நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் அஞ்சலி நிகழ்வை நடத்த அனுமதிக்க கூடாது என பொலிஸார் விடுத்த கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.



அவசரமாக கூடியது பாதுகாப்புச் சபை!
[Thursday 2024-09-19 17:00]

தேசிய பாதுகாப்பு சபை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று காலை கூடியது.



வெளியில் நடமாடுவதை தவிருங்கள்!
[Thursday 2024-09-19 17:00]

வாக்களிப்பு தினத்தன்றும் வைக்களிப்பின் பின்னரும் வெளியில் நடமாடுவதை தவிர்க்குமாறும் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்தது. வீடுகளிலேயே இருக்குமாறும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. அவசியமின்றி பெரிய திரைகளில் தேர்தல் முடிவுகளை அவதானிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.



ஐரோப்பிய ஒன்றிய கண்காணிப்பாளர்கள் 32 பேர் பணியில்!
[Thursday 2024-09-19 17:00]

இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பாளர்கள் அனைத்து மாவட்டங்களிலும் 32 குறுகிய கால தேர்தல் கண்காணிப்பாளர்களை கண்காணிப்பில் ஈடுபடுத்தியுள்ளனர்.



திருகோணமலை இளைஞன் சுவிசில் கொலை?
[Thursday 2024-09-19 17:00]

திருகோணமலையைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தர் சுவிசில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சுவிஸ் - சூரிச் நகரின் அடுக்குமாடி கட்டடத் தொகுதியில் வசித்து வந்த கோபிநாத் என்ற இளைஞன் வசித்து வந்த அறையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும், சந்தேகத்தின்பேரில் அவருடைய அறையில் வசித்து வந்த சுவிஸ் நாட்டவர் இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. உயிரிழந்த இளைஞன் திருமணமாகி, பெண் குழந்தை இருப்பதாகவும் தற்போது அவர் குடும்பத்தை பிரிந்து வாழ்ந்து வந்ததாகவும் தெரிய வருகின்றது.



கிளிநொச்சியில் டிப்பர் மோதி இளைஞன் பலி!
[Thursday 2024-09-19 17:00]

கிளிநொச்சியிலிருந்து வட்டக்கச்சி செல்லும் வீதியின் பன்னங்கண்டி பாலத்திற்கு அருகாமையில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்திலேயே இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.



24 மணிநேரத்தில் 4 பேர் சுட்டுக்கொலை!
[Thursday 2024-09-19 17:00]

குருநாகல், ரஸ்நாயக்கபுர பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 30 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இனந்தெரியாத நபர்களால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் இடம்பெற்ற நான்காவது துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இதுவாகும்.



ரம்புக்வெல்லவின் மகனின் இரண்டு சொகுசு வீடுகளை முடக்கியது நீதிமன்றம்!
[Thursday 2024-09-19 17:00]

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹேலிய ரம்புக்வெல்லவின் மகனும் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரருமான ரமித் ரம்புக்வெல்லவுக்கு சொந்தமான இரண்டு அதிசொகுசு வீடுகளை கொழும்பு மேல் நீதிமன்றம் முடக்கியுள்ளது.



கிருமித் தொற்றினால் 16 நாள் குழந்தை மரணம்!
[Thursday 2024-09-19 17:00]

யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியில் கிருமி தொற்றினால் 16 நாட்களே ஆன குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.



500 ஆடைத் தொழிற்சாலை ஊழியர்கள் வைத்தியசாலையில்!
[Thursday 2024-09-19 17:00]

பொலன்னறுவை, பகமூன பிரதேசத்தில் உள்ள பிரதான தனியார் ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரியும் ஐநூறுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் இன்று காலை உணவு ஒவ்வாமை காரணமாக மிகவும் சுகவீனமடைந்த பகமூனை மற்றும் அத்தனகடலை கிராமிய வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பக்கமூன பொலிஸார் தெரிவித்தனர்.



கஜேந்திரன் பிணையில் விடுதலை!
[Thursday 2024-09-19 05:00]

தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் மற்றும் ஏனைய சந்தேகநபர்களும் நேற்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.



தமிழர்களின் ஒற்றுமையைப் பறைசாற்ற வேண்டும்!
[Thursday 2024-09-19 05:00]

தமிழ் மக்களின் பிரச்சினைகள் இன்னமும் தீர்க்கப்படாமல் இருக்கின்றன என்பதை சர்வதேசத்திடம் சொல்லும் அதேவேளை, தமிழர்களின் ஒற்றுமையைப் பறைசாற்றும் நோக்கில் இம்முறை ஜனாதிபதித்தேர்தலில் களமிறக்கப்பட்டிருக்கும் பொதுவேட்பாளர் பா.அரியநேத்திரனுக்கு தமிழ் மக்கள் அனைவரும் திரண்டுவந்து வாக்களிக்கவேண்டும் என தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்கினேஸ்வரன் அறைகூவல் விடுத்துள்ளார்.



பொது வேட்பாளர் தேசிய அரசியலுக்கு எதிரான ஒன்று அல்ல!
[Thursday 2024-09-19 05:00]

தமிழ்ப் பொதுவேட்பாளர் அரியநேத்திரனுக்கு வாக்களிப்பது என்பது எதிர்ப்பு அரசியலும் அல்ல, இலங்கை தேசிய அரசியலுக்கு எதிரான ஒன்றும் அல்ல என சிவில் சமூக செயற்பாட்டாளர் க.அருந்தவபாலன் தெரிவித்துள்ளார்.



பொதுவேட்பாளர் - விஜயகலா வரவேற்பு!
[Thursday 2024-09-19 05:00]

2010 ஆம் ஆண்டிலேயே தமிழ் பொதுவேட்பாளரை களமிறக்கியிருக்க வேண்டும் என முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சரும் ஐக்கிய தேசிய கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளருமான விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.



எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார் இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டு- ஒன்றாவோம்!
[Thursday 2024-09-19 05:00]

இன்று ஐக்கிய நாடுகள் சபையின் 57 ஆவது கூட்டத்தொடர் ஆரம்பித்து இருக்கும் காலம். சிறி லங்காவின் தேர்தல் காலம் - உலகநாடுகளின் பார்வை அனைத்தும் சிறிலங்கா என்ற நாட்டை சுற்றி வலம் வந்து கொண்டிருக்கின்ற காலம்.



வாக்களிப்பு நிலையங்களுக்குள் நுழையக் கூடியவர்கள் யார்?
[Thursday 2024-09-19 05:00]

எதிர்வரும் செப்டம்பர் 21, 2024 அன்று நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலின் போது வாக்களிப்பு நிலையங்களுக்குள் நுழைய அங்கீகரிக்கப்பட்ட நபர்களை இலங்கை தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.



2 வாக்காளர்களுக்காக ஒரு வாக்களிப்பு நிலையம்!
[Thursday 2024-09-19 05:00]

ஒன்பதாவது ஜனாதிபதியை தேர்ந்தெடுக்கும் ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் 21 திகதி இடம்பெறவுள்ள நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அதற்கான பூர்வாங்க ஏற்பாடுகள் அனைத்தும் நிறைவு செய்யப்பட்டு வருவதாக மட்டக்களப்பு மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரும் மாவட்ட அரசாங்க அதிபருமாகிய திருமதி. ஜஸ்டினா முரளிதரன் தெரிவித்துள்ளார்.



சலுகைக்கான ஒப்பந்த அரசியல் அல்ல எமது தேவை கொள்கைக்கான அரசியலே எமது இலட்சியம்!
[Thursday 2024-09-19 05:00]

விடுதலைப்போராட்டம் அழிக்கப்பட்ட நிலையில் எம்மிடம் இருக்கக் கூடிய வாக்குரிமை என்ற ஜனநாயக ஆயுதத்தினை எமது இனத்தின் அரசியல் விடிவிற்காக நாம் பயன்படுத்தவேண்டுமே தவிர அதனை அதிகாரத்தினைக் கைப்பற்றுவதற்காக போலி உத்தரவாதம் தரும் பேரினவாதிகளுக்கு இரையாக்கக் கூடாது என வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளரும் ரெலோவின் தலைமைக்குழு உறுப்பினருமான தியாகராஜா நிரோஸ் தெரிவித்தார்.



அமைதிக்காலம் தொடங்கியது!
[Thursday 2024-09-19 05:00]

ஜனாதிபதி தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகள் நேற்று நள்ளிரவுடன் நிறைவடைந்துள்ளது.இந்த நிலையில், செப்டெம்பர் 21ஆம் திகதிவரை அமைதியான காலப்பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர். எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்தார்.



அரியநேத்திரனுக்கு பாதுகாப்பு!
[Thursday 2024-09-19 05:00]

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரனுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. பொது வேட்பாளரின் பாதுகாப்பு தொடர்பாக அண்மையில் பிரதிப் பொலிஸ் மா அதிபரால் விடுக்கப்பட்ட எச்சரிக்கைக்கமைய குறித்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.


Kugeenthiran-200-2022-seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Asayan-Salon-2022-seithy
NKS-Ketha-04-11-2021
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Airlinktravel-2020-01-01
Karan Remax-2010
Vaheesan-Remax-2016
Mahesan-Remax-169515-Seithy
Rajeef sebarasha 2023/04/19
 gloriousprinters.com 2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா