Untitled Document
September 19, 2024 [GMT]
கலைக்கப்படுகிறதா நாடாளுமன்றம்?
[Wednesday 2024-09-18 05:00]


இலங்கையின் 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவுசெய்யும் தேர்தல் எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெற உள்ள நிலையில், இன்று நள்ளிரவுடன் பிரச்சார நடவடிக்கைகள் நிறைவடைவதால் பிரதான வேட்பாளர்கள் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இலங்கையின் 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவுசெய்யும் தேர்தல் எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெற உள்ள நிலையில், இன்று நள்ளிரவுடன் பிரச்சார நடவடிக்கைகள் நிறைவடைவதால் பிரதான வேட்பாளர்கள் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

  

பிரதான வேட்பாளர்கள் தமது இறுதி பிரச்சாரக் கூட்டங்களை கொழும்பை மையப்படுத்தி நடத்த உள்ளனர். இதற்காக கொழும்பில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில், நாடாளுமன்றத்தை கலைப்பதற்கான முயற்சிகளில் அரசாங்கம் ஈடுபட கூடுமொன சில கருத்துகள் சமூகத்தில் பகிரப்பட்டு வருகின்றன.

ஆனால், அத்தகைய முயற்சிகள் எதனையும் அரசாங்கம் செய்யாதென அரசதரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வெற்றிபெற்றால் 2025ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்ட பின்னரே நாடாளுமன்றம் கலைக்கப்படும் என அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்திருந்தார்.

ஆனால், ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமாச மற்றும் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க ஆகியோர் தாம் வெற்றிபெற்ற பின்னர் நாடாளுமன்றத்தை கலைத்து பொதுத் தேர்தலை நடத்த உள்ளதாக கூறியுள்ளனர்.

இந்த நிலையில் அண்மையில் இடம்பெற்ற தொலைக்காட்சி நிகழ்சியொன்றில் கருத்து வெளியிட்ட அனுரகுமார திஸாநாயக்க,

ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி வெற்றிபெற்றதும் நாடாளுமன்றம் கலைக்கப்படுவது உறுதியாகும். அதேபோன்று ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டால் அதனை எதிர்கொள்வதற்கான வழிமுறைகளும் தேசிய மக்கள் சக்தியிடம் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்

  
   Bookmark and Share Seithy.com



கஜேந்திரன் பிணையில் விடுதலை!
[Thursday 2024-09-19 05:00]

தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் மற்றும் ஏனைய சந்தேகநபர்களும் நேற்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.



தமிழர்களின் ஒற்றுமையைப் பறைசாற்ற வேண்டும்!
[Thursday 2024-09-19 05:00]

தமிழ் மக்களின் பிரச்சினைகள் இன்னமும் தீர்க்கப்படாமல் இருக்கின்றன என்பதை சர்வதேசத்திடம் சொல்லும் அதேவேளை, தமிழர்களின் ஒற்றுமையைப் பறைசாற்றும் நோக்கில் இம்முறை ஜனாதிபதித்தேர்தலில் களமிறக்கப்பட்டிருக்கும் பொதுவேட்பாளர் பா.அரியநேத்திரனுக்கு தமிழ் மக்கள் அனைவரும் திரண்டுவந்து வாக்களிக்கவேண்டும் என தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்கினேஸ்வரன் அறைகூவல் விடுத்துள்ளார்.



பொது வேட்பாளர் தேசிய அரசியலுக்கு எதிரான ஒன்று அல்ல!
[Thursday 2024-09-19 05:00]

தமிழ்ப் பொதுவேட்பாளர் அரியநேத்திரனுக்கு வாக்களிப்பது என்பது எதிர்ப்பு அரசியலும் அல்ல, இலங்கை தேசிய அரசியலுக்கு எதிரான ஒன்றும் அல்ல என சிவில் சமூக செயற்பாட்டாளர் க.அருந்தவபாலன் தெரிவித்துள்ளார்.



பொதுவேட்பாளர் - விஜயகலா வரவேற்பு!
[Thursday 2024-09-19 05:00]

2010 ஆம் ஆண்டிலேயே தமிழ் பொதுவேட்பாளரை களமிறக்கியிருக்க வேண்டும் என முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சரும் ஐக்கிய தேசிய கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளருமான விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.



எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார் இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டு- ஒன்றாவோம்!
[Thursday 2024-09-19 05:00]

இன்று ஐக்கிய நாடுகள் சபையின் 57 ஆவது கூட்டத்தொடர் ஆரம்பித்து இருக்கும் காலம். சிறி லங்காவின் தேர்தல் காலம் - உலகநாடுகளின் பார்வை அனைத்தும் சிறிலங்கா என்ற நாட்டை சுற்றி வலம் வந்து கொண்டிருக்கின்ற காலம்.



வாக்களிப்பு நிலையங்களுக்குள் நுழையக் கூடியவர்கள் யார்?
[Thursday 2024-09-19 05:00]

எதிர்வரும் செப்டம்பர் 21, 2024 அன்று நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலின் போது வாக்களிப்பு நிலையங்களுக்குள் நுழைய அங்கீகரிக்கப்பட்ட நபர்களை இலங்கை தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.



2 வாக்காளர்களுக்காக ஒரு வாக்களிப்பு நிலையம்!
[Thursday 2024-09-19 05:00]

ஒன்பதாவது ஜனாதிபதியை தேர்ந்தெடுக்கும் ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் 21 திகதி இடம்பெறவுள்ள நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அதற்கான பூர்வாங்க ஏற்பாடுகள் அனைத்தும் நிறைவு செய்யப்பட்டு வருவதாக மட்டக்களப்பு மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரும் மாவட்ட அரசாங்க அதிபருமாகிய திருமதி. ஜஸ்டினா முரளிதரன் தெரிவித்துள்ளார்.



சலுகைக்கான ஒப்பந்த அரசியல் அல்ல எமது தேவை கொள்கைக்கான அரசியலே எமது இலட்சியம்!
[Thursday 2024-09-19 05:00]

விடுதலைப்போராட்டம் அழிக்கப்பட்ட நிலையில் எம்மிடம் இருக்கக் கூடிய வாக்குரிமை என்ற ஜனநாயக ஆயுதத்தினை எமது இனத்தின் அரசியல் விடிவிற்காக நாம் பயன்படுத்தவேண்டுமே தவிர அதனை அதிகாரத்தினைக் கைப்பற்றுவதற்காக போலி உத்தரவாதம் தரும் பேரினவாதிகளுக்கு இரையாக்கக் கூடாது என வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளரும் ரெலோவின் தலைமைக்குழு உறுப்பினருமான தியாகராஜா நிரோஸ் தெரிவித்தார்.



அமைதிக்காலம் தொடங்கியது!
[Thursday 2024-09-19 05:00]

ஜனாதிபதி தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகள் நேற்று நள்ளிரவுடன் நிறைவடைந்துள்ளது.இந்த நிலையில், செப்டெம்பர் 21ஆம் திகதிவரை அமைதியான காலப்பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர். எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்தார்.



அரியநேத்திரனுக்கு பாதுகாப்பு!
[Thursday 2024-09-19 05:00]

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரனுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. பொது வேட்பாளரின் பாதுகாப்பு தொடர்பாக அண்மையில் பிரதிப் பொலிஸ் மா அதிபரால் விடுக்கப்பட்ட எச்சரிக்கைக்கமைய குறித்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.



சங்கு சின்னத்திற்கு மாத்திரம் வாக்களியுங்கள்!
[Wednesday 2024-09-18 19:00]

தமிழ் பொது வேட்பாளர் பற்றிய தவறான தகவல்கள், வதந்திகளை பரப்ப பல தரப்பினர்களும் திட்டமிட்டுள்ளதாகவும், அதனால் மக்கள் விழிப்பாக இருந்து 21ஆம் திகதி தமது வாக்குகளை தமிழ் பொது வேட்பாளருக்கு மாத்திரம் அளிக்க வேண்டும் என தமிழ் பொது வேட்பாளர் பா. அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.



நல்லூரில் பொது வேட்பாளருக்கு ஆதரவான இறுதி பிரசாரக் கூட்டம்! Top News
[Wednesday 2024-09-18 19:00]

யாழ்ப்பாணம் கிட்டு பூங்காவில் 'நமக்காக நாம்' பொது வேட்பாளரை ஆதரித்து பொதுக்கூட்டம் இடம்பெற்று வருகிறது.



சஜித், அனுர இடையே தான் போட்டி!- ரணில் 3ஆவது இடம்.
[Wednesday 2024-09-18 19:00]

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் சஜித் பிரேமதாச மற்றும் தேசிய மக்கள் சக்தியின் அனுரகுமார திஸாநாயக்க ஆகியோர் முன்னணியில் இருப்பதாகவும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 3வது இடத்தில் பின்தங்கியுள்ளதாகவும் பல சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.



உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த விசாரணைக்கு விசேட நீதிமன்றம்!
[Wednesday 2024-09-18 19:00]

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விடயத்தில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நீதிபதிகளையும் விசாரணையாளர்களையும் இணைத்துக்கொண்டு உண்மையை வெளிப்படுத்துவோம். விசேட நீதிமன்றம் ஒன்றை ஏற்படுத்தி விசாரணை நடவடிக்கைகளை முறையாக மேற்கொள்வோம் என எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளருமான சஜித் பிரேமதாச தெரிவித்தார்.



சுமந்திரன், சாணக்கியனால் ஆபத்து இல்லை!
[Wednesday 2024-09-18 19:00]

நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ. சுமந்திரன் மற்றும் இராசமாணிக்கம் சாணக்கியன் போன்றவர்களால் தனக்கு உயிர் ஆபத்து ஏற்படாது என தான் நம்புவதாக தமிழ் பொது வேட்பாளர் பா. அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.



ஜனாதிபதி தேர்தலில் தேசமாய் திரள்வோம்!
[Wednesday 2024-09-18 19:00]

ஜனாதிபதி தேர்தலில் தமிழரசுக் கட்சியின் முடிவுக்கு எதிராக தேசமாய் திரள்வோம் என யாழ்.பல்கலைக்கழக மாணவ ஒன்றியம் பகிரங்க அழைப்பு விடுத்துள்ளது.



தமிழராகிய நாம் பொதுவேட்பாளருக்கே வாக்களிக்க வேண்டும்!
[Wednesday 2024-09-18 19:00]

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழராகிய நாம் தமிழ் பொது வேட்பாளருக்கே வாக்களிக்க வேண்டும் என பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.



ஓமந்தை விபத்தில் இருவர் பலி!
[Wednesday 2024-09-18 19:00]

வவுனியா -ஓமந்தை பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். ஓமந்தை பன்றிக்கெய்தகுளம் பகுதியில் இருந்து வவுனியா நோக்கி மோட்டார்சைக்கிளில் வந்துகொண்டிருந்த இருவர் ஓமந்தை எரிபொருள் நிரப்புநிலையத்திற்கு அண்மையில் சென்றுகொண்டிருந்த போது வீதியில் நின்ற ஒருவருடன் மோதியதில் விபத்து இடம்பெற்றது.



பரீட்சைத் திணைக்களம் முன்பாக பெற்றோர் போராட்டம்!
[Wednesday 2024-09-18 19:00]

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் முதலாம் வினாத்தாளில் இருந்து 03 வினாக்களை நீக்கி இறுதி புள்ளிகளை கணக்கிடுவதற்காக பரீட்சை திணைக்களம் எடுத்துள்ள தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பெற்றோர்கள், பரீட்சை திணைக்களத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



யாருக்கு யார் ஒழுக்காற்று நடவடிக்கைள் எடுப்பது?
[Wednesday 2024-09-18 19:00]

இலங்கை தமிழரசுக் கட்சி கட்சியாகவே இருக்கிறது கட்சிக்குள் என்ன நடக்கிறது என்பதை மக்கள்தான் புரிந்து கொள்ளவேண்டும் என இலங்கை தமிழரசு கட்சியின் துணை தலைவரும் வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவருமான சீ.வீ.கே சிவஞானம் தெரிவித்தார். யாழ்.ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடவியலாளர் சந்திப்பிலே அவர் இதனை தெரிவித்தார்.


Ambikajewellers-01-08-2021-seithy
 gloriousprinters.com 2021
Vaheesan-Remax-2016
Airlinktravel-2020-01-01
Asayan-Salon-2022-seithy
Mahesan-Remax-169515-Seithy
Kugeenthiran-200-2022-seithy
NKS-Ketha-04-11-2021
Rajeef sebarasha 2023/04/19
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Karan Remax-2010
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா