Untitled Document
September 20, 2024 [GMT]
தமிழர் ஆதரவு மட்டுமல்ல சர்வதேசத்தின் ஆதரவும் கிடைத்துள்ளது! - நிரோஸ்
[Friday 2024-09-20 06:00]



போரின் பின்பாக நாட்டின் தேசிய இனங்களில் ஒன்றான தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வை முன்வைக்காது ஏமாற்றிய சிங்களப் பேரினவாதத் தலைவர்கள் தமிழ் பொது வேட்பாளருக்கு தமிழ் மக்கள் அளித்துவரும் ஆதரவைப் பார்த்து அச்சமடைந்துள்ளார்கள் என்பதுடன் சர்வதேசம் பொதுவேட்பாளரின் நியாயப்பட்டை அங்கீகரிக்கின்றது. இந்நிலைமை எமது தேசியத்துக்குக் கிடைத்த வெற்றி. இவ் வெற்றியை எதிர்வரும் தேர்தல் முடிவுகளின் வாயிலாக எமது மக்கள் வரலாற்று வெற்றியாக்குவர் என்பதில் எந்தவித மாற்றமும் இல்லை என ரெலோவின் தலைமைக்குழு உறுப்பினரும் முனனாள் தவிசாளருமான தியாகராஜா நிரோஸ் தெரிவித்தார்.

போரின் பின்பாக நாட்டின் தேசிய இனங்களில் ஒன்றான தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வை முன்வைக்காது ஏமாற்றிய சிங்களப் பேரினவாதத் தலைவர்கள் தமிழ் பொது வேட்பாளருக்கு தமிழ் மக்கள் அளித்துவரும் ஆதரவைப் பார்த்து அச்சமடைந்துள்ளார்கள் என்பதுடன் சர்வதேசம் பொதுவேட்பாளரின் நியாயப்பட்டை அங்கீகரிக்கின்றது. இந்நிலைமை எமது தேசியத்துக்குக் கிடைத்த வெற்றி. இவ் வெற்றியை எதிர்வரும் தேர்தல் முடிவுகளின் வாயிலாக எமது மக்கள் வரலாற்று வெற்றியாக்குவர் என்பதில் எந்தவித மாற்றமும் இல்லை என ரெலோவின் தலைமைக்குழு உறுப்பினரும் முனனாள் தவிசாளருமான தியாகராஜா நிரோஸ் தெரிவித்தார்.

  

யாழ். முத்திரைச்சந்தியில் இடம்பெற்ற தமிழ்த் தேசிய பொதுவேட்பாளரின் இறுதிப் பொதுக் கூட்டத்தில் பேசும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும், தமிழ் மக்கள் தம் மீது இலங்கையில் காலத்திற்குக் காலம் கட்டவீழ்த்து விடப்பட்ட திட்டமிட்ட இன ஒடுக்குமுறைகள் மற்றும் இனப்படுகொலைக்கு நீதியோ தீர்வோ வழங்கப்படாது நாம் ஏமாற்றப்பட்டு வந்த விரக்தி நிலையில் தமிழ்த் தேசிய பொது வேட்பளரை நிறுத்தினோம். இப் பொதுவேட்பாளர் எண்ணம் தனியே அரசியல் கட்சி சார்ந்த அணுகுமுறையல்ல. மாறாக தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புக்கள், புத்திஜீவிகள், நீதிக்கான சர்வதேச அணுகுமுறைகளை கையாளத்தக்க சர்வதேச வழிநடத்தலை கொண்டது. தமிழ் மக்கள் தாயகம் தேசியம், சுயநிர்ணய உரிமைக்கு உரித்துடையவர்கள். அவ்வாறான பிரிக்கமுடியா உரிமைகளை ஒருபடி மேலே சென்று அணுகுவதற்கு எமது மக்களின் ஜனநாயக ஆணை இன்றைய சூழ்நிலையிலும் அவசியமாகவுள்ளது.

தேர்தல் முடிவுகளை அடிப்படையாக வெளிப்படுத்தி நாம் சொந்த நாட்டிற்குள் எந்தளவு தூரம் ஒடுக்கப்படுகின்றோம் என்பதை வெளிப்படுத்தி நியாயத்தினைப் பெற்றுக் கொள்வற்கான நகர்வுகளை மேற்கொள்வதற்கு அரசியல் - புத்திஜீவிகள் கட்டமைப்பினை தமிழ்த் தேசம் உருவாக்கிவிட்டது. இவற்றுக்கு மேலாக சர்வதேச நீதியை அணுகத்தக்க நிபுணத்துவமுள்ள பல கட்டமைப்புக்கள் பொதுக்கட்டமைப்பினுள் உள்ளன.

ஜனநாயக ரீதியில் முன்னெடுக்கப்படும் இந்த முயற்சிகளுக்கு சர்வதேச ஆதரவும் தாரளமாக இருக்கின்றது. மக்கள் அச்சமின்றி நம்பிக்கையுடன் வாக்களித்து தமிழ்த் தேசிய அரசியல் வரலாற்றை உலகம் ஏற்றுக்கொண்ட அறிவார்த்தமான வழிமுறைக்கு மேலும் ஒருபடி முன்நகர்த்துவதற்கு ஆணையளிக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம் என்றார்.

  
   Bookmark and Share Seithy.com



அசம்பாவிதம் நடந்தால் மீள் வாக்குப்பதிவு!
[Friday 2024-09-20 06:00]

ஜனாதிபதித் தேர்தல் வாக்களிப்பின் போது ஏதேனும் வாக்களிப்பு நிலையத்தில் ஏதேனும் அசம்பாவித நிலைமை ஏற்படுமாக இருந்தால் அந்த வாக்களிப்பு நிலையத்தின் வாக்குகளை சூனியமாக்க நேரிடும் என்பதுடன், அங்கே மீண்டும் வாக்கெடுப்பை நடத்தும் வரையில் நாடாளவிய ரீதியிலான இறுதித் தேர்தல் முடிவுகளை அறிவிக்க முடியாத நிலைமை ஏற்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.



ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பது எப்படி?
[Friday 2024-09-20 06:00]

ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்குகளை எண்ணும் பணி தேர்தல் தினத்தன்று பிற்பகல் 04.15 மணிக்கு ஆரம்பமாகும். எண்ணும் பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து உரிய முடிவுகளை ஊடகங்களுக்கு வழங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.உத்தியோகபூர்வ முடிவுகள் கிடைக்கப்பெறும் வரை உத்தியோகபூர்வமற்ற முடிவுகள் வெளியிடுவதைத் தவிர்க்க வேண்டும். என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.



தேர்தல் நாளன்று ஆறு தடைகள்!
[Friday 2024-09-20 06:00]

ஆறு முக்கிய விடயங்கள் தடை செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அதனடிப்படையில், வாக்களிக்குமாறு இரந்து கேட்டல, எவரேனும் தேருநரின் வாக்கைப் பரிந்து கேட்டல், குறிப்பிட்ட எவரேனும் வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டாமென்று எவரேனும் நேருநரை தூண்டி வசப்படுத்த முயலுதல், தேர்தலில் வாக்களிக்க வேண்டாமென்று நேருநரை தூண்டி வசப்படுத்த முயலுதல் தடைசெய்யப்பட்டுள்ளது.



புதிய முதலீடுகள்,வேலைவாய்ப்புப் பெருக்கங்களுக்கு வழியேற்படுத்துகிறது ஒன்ராறியோ!
[Friday 2024-09-20 06:00]

புதிய வணிகங்களை ஈர்ப்பதற்கும், நல்ல ஊதியம் தரும் வேலைகளை உருவாக்குவதற்குமான களத்தினைத் தயார்ப்படுத்தும் பொருளாதார உயர்வுத் திட்டங்களுக்கென 75 மில்லியன் டொலர்களை ஒன்ராறியோ முதலீடு செய்துள்ளது. பெரும் முதலீட்டாளர்களை ஒன்ராறியோவை நோக்கி வரவைக்கும் இம்முன்முயற்சியானது தொழில் வளர்ச்சிக்கான களத்தைத் அமைத்துக்கொடுக்கும் திட்டமாக அமையும்.



யாழ்ப்பாணத்தில் தேர்தலுக்கு தயார்!
[Friday 2024-09-20 06:00]

யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் ஜனாதிபதி தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூா்த்தி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட தெரிவித்தாட்சி அலுவலரும் பதில் மாவட்ட செயலாளருமான மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்தார்.



சமூக ஊடகங்களில் வெளியிடத் தடை!
[Friday 2024-09-20 06:00]

எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் அன்று வாக்கெடுப்பு நிலையங்களில் வாக்களிக்கும் சந்தர்ப்பங்களையும் அடையாளமிடப்பட்ட வாக்குச் சீட்டுக்களையும் நிழற்படமெடுத்தல் மற்றும் வீடியோ எடுத்தல் அல்லது சமூக ஊடக வலைத்தளங்களில் வெளியிடுதல் தேர்தல் சட்டத்தை மீறும் செயல்கள் என தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.



சிஐடி விசாரணைக்குப் பின்னரே மீள் பரீட்சை குறித்து முடிவு!
[Friday 2024-09-20 06:00]

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் முதலாவது வினாத்தாள் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினை தொடர்பில் பரீட்சை திணைக்களம் மற்றும் குற்றப் புலனாய்வு திணைக்களம் இணைந்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள விசேட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



அளவெட்டியில் மனைவியின் கையை வெட்டித் துண்டித்த கணவன்!
[Friday 2024-09-20 06:00]

தகாத உறவில் ஈடுபட்ட தனது மனையின் கையை இரண்டாக வெட்டி எடுத்த கணவன் கைது செய்யப்பட்டுள்ளதாக தெல்லிப்பழை பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் சந்தேக நபரான கணவன் யாழ்ப்பாணம், அளவெட்டி பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.



திலீபன் நினைவேந்தலுக்கு தடைவிதிக்க நீதிமன்றம் மறுப்பு!
[Thursday 2024-09-19 17:00]

நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் அஞ்சலி நிகழ்வை நடத்த அனுமதிக்க கூடாது என பொலிஸார் விடுத்த கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.



அவசரமாக கூடியது பாதுகாப்புச் சபை!
[Thursday 2024-09-19 17:00]

தேசிய பாதுகாப்பு சபை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று காலை கூடியது.



வெளியில் நடமாடுவதை தவிருங்கள்!
[Thursday 2024-09-19 17:00]

வாக்களிப்பு தினத்தன்றும் வைக்களிப்பின் பின்னரும் வெளியில் நடமாடுவதை தவிர்க்குமாறும் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்தது. வீடுகளிலேயே இருக்குமாறும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. அவசியமின்றி பெரிய திரைகளில் தேர்தல் முடிவுகளை அவதானிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.



ஐரோப்பிய ஒன்றிய கண்காணிப்பாளர்கள் 32 பேர் பணியில்!
[Thursday 2024-09-19 17:00]

இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பாளர்கள் அனைத்து மாவட்டங்களிலும் 32 குறுகிய கால தேர்தல் கண்காணிப்பாளர்களை கண்காணிப்பில் ஈடுபடுத்தியுள்ளனர்.



திருகோணமலை இளைஞன் சுவிசில் கொலை?
[Thursday 2024-09-19 17:00]

திருகோணமலையைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தர் சுவிசில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சுவிஸ் - சூரிச் நகரின் அடுக்குமாடி கட்டடத் தொகுதியில் வசித்து வந்த கோபிநாத் என்ற இளைஞன் வசித்து வந்த அறையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும், சந்தேகத்தின்பேரில் அவருடைய அறையில் வசித்து வந்த சுவிஸ் நாட்டவர் இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. உயிரிழந்த இளைஞன் திருமணமாகி, பெண் குழந்தை இருப்பதாகவும் தற்போது அவர் குடும்பத்தை பிரிந்து வாழ்ந்து வந்ததாகவும் தெரிய வருகின்றது.



கிளிநொச்சியில் டிப்பர் மோதி இளைஞன் பலி!
[Thursday 2024-09-19 17:00]

கிளிநொச்சியிலிருந்து வட்டக்கச்சி செல்லும் வீதியின் பன்னங்கண்டி பாலத்திற்கு அருகாமையில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்திலேயே இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.



24 மணிநேரத்தில் 4 பேர் சுட்டுக்கொலை!
[Thursday 2024-09-19 17:00]

குருநாகல், ரஸ்நாயக்கபுர பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 30 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இனந்தெரியாத நபர்களால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் இடம்பெற்ற நான்காவது துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இதுவாகும்.



ரம்புக்வெல்லவின் மகனின் இரண்டு சொகுசு வீடுகளை முடக்கியது நீதிமன்றம்!
[Thursday 2024-09-19 17:00]

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹேலிய ரம்புக்வெல்லவின் மகனும் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரருமான ரமித் ரம்புக்வெல்லவுக்கு சொந்தமான இரண்டு அதிசொகுசு வீடுகளை கொழும்பு மேல் நீதிமன்றம் முடக்கியுள்ளது.



கிருமித் தொற்றினால் 16 நாள் குழந்தை மரணம்!
[Thursday 2024-09-19 17:00]

யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியில் கிருமி தொற்றினால் 16 நாட்களே ஆன குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.



500 ஆடைத் தொழிற்சாலை ஊழியர்கள் வைத்தியசாலையில்!
[Thursday 2024-09-19 17:00]

பொலன்னறுவை, பகமூன பிரதேசத்தில் உள்ள பிரதான தனியார் ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரியும் ஐநூறுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் இன்று காலை உணவு ஒவ்வாமை காரணமாக மிகவும் சுகவீனமடைந்த பகமூனை மற்றும் அத்தனகடலை கிராமிய வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பக்கமூன பொலிஸார் தெரிவித்தனர்.



கஜேந்திரன் பிணையில் விடுதலை!
[Thursday 2024-09-19 05:00]

தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் மற்றும் ஏனைய சந்தேகநபர்களும் நேற்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.



தமிழர்களின் ஒற்றுமையைப் பறைசாற்ற வேண்டும்!
[Thursday 2024-09-19 05:00]

தமிழ் மக்களின் பிரச்சினைகள் இன்னமும் தீர்க்கப்படாமல் இருக்கின்றன என்பதை சர்வதேசத்திடம் சொல்லும் அதேவேளை, தமிழர்களின் ஒற்றுமையைப் பறைசாற்றும் நோக்கில் இம்முறை ஜனாதிபதித்தேர்தலில் களமிறக்கப்பட்டிருக்கும் பொதுவேட்பாளர் பா.அரியநேத்திரனுக்கு தமிழ் மக்கள் அனைவரும் திரண்டுவந்து வாக்களிக்கவேண்டும் என தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்கினேஸ்வரன் அறைகூவல் விடுத்துள்ளார்.


Karan Remax-2010
Vaheesan-Remax-2016
Logan-Kumaresh-Homelife-02-02-2021
 gloriousprinters.com 2021
Ambikajewellers-01-08-2021-seithy
Asayan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
NKS-Ketha-04-11-2021
Rajeef sebarasha 2023/04/19
Airlinktravel-2020-01-01
Mahesan-Remax-169515-Seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா