Untitled Document
November 12, 2024 [GMT]
கனடியத் தேசிய வீரர் நினைவு நாள் நவம்பர் 11- 2024.
[Saturday 2024-11-09 17:00]


நவம்பர் 11.2024 திங்கள்கிழமை அன்று, கனடியத் தேசிய வீரர் நினைவு நாள் ஆகும். கனடா வாழ் மக்கள் அனைவரும் கனடியத் தேசிய வீரர்கள் அனைவருக்கும் வீர வணக்கம் செய்யும் இந்த வணக்க நாள், ஒவ்வொரு ஆண்டும் நினைவு கூரப் படுவதை நாம் அனைவரும் அறிவோம்.

நவம்பர் 11.2024 திங்கள்கிழமை அன்று, கனடியத் தேசிய வீரர் நினைவு நாள் ஆகும். கனடா வாழ் மக்கள் அனைவரும் கனடியத் தேசிய வீரர்கள் அனைவருக்கும் வீர வணக்கம் செய்யும் இந்த வணக்க நாள், ஒவ்வொரு ஆண்டும் நினைவு கூரப் படுவதை நாம் அனைவரும் அறிவோம்.

  

11.11.2024 அன்று, கனடா வாழ் அனைத்து மக்களோடும், தமிழ் மக்கள் அனைவரோடும் இணைந்து நின்று கனடியத் தமிழர் நினைவெழுச்சி அகவம் தனது வீர வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கின்றது.

சொந்த மண்ணை விட்டுப், புலம் பெயர்ந்து கனடாவில் வாழும் ஈழத் தமிழ் மக்களாகிய எமக்குக் கனடிய மண் ஆதரவு தந்து வாழ வைத்துக் கொண்டிருக்கின்றது. கனடா வாழ் ஈழத் தமிழர்களாகிய நாம், இங்கு வாழும் பல்லினப் பண்பாட்டு மக்களோடு வாழும் எமது நல் வாழ்வுக்காகக் கனடிய மண்ணை மதித்துப் போற்றுகின்றோம்.

நன்றியுணர்வோடும் வாழ்கின்றோம். கனடிய மண்ணுக்காகத் தாயக உணர்வோடு, தமது தேசியக் கடமையைச் செய்த கனடியத் தேசிய வீரர்கள் அனைவரையும் நாம் பொப்பி மலர் அணிந்து, வணங்கி நிற்கின்றோம்.

கனடியத் தமிழர் நினைவெழுச்சி அகவம், 11.11. 2024 திங்கள்கிழமை அன்று, கனடா வாழ் ஈழத் தமிழ் மக்கள் அனைவரோடும் இணைந்து நின்று கனடியத் தேசிய வீரர் நினைவு நாளை நினைவு கூர்கின்றது.

நன்றி

வணக்கம்.

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.

கனடியத் தமிழர் நினைவெழுச்சி அகவம்.

தொடர்பு இலக்கம் 647 619 3619

  
   Bookmark and Share Seithy.com



காணி விடுவிப்பு குதிரைக் கொம்பு தான்!
[Tuesday 2024-11-12 17:00]

தேசிய மக்கள் சக்திக்கு வாய்ப்பை கொடுத்துப் பார்த்தால் என்ன என்று சிலர் கருதுகின்றனர். இப்போதுள்ள அரச தரப்புக்கு வாக்களித்து விட்டு ஆறு மாதங்களின் பின்னர் யோசிப்பீர்கள். ஆகவே ஆறு மாதங்கள் வரை காத்திருங்கள். இவர்கள் தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்கப் போவதில்லை என ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் வேட்பாளரும் பாராளுமன்ற முன்னாள் உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.



சிஐடி விசாரணை அழைப்பு - நழுவினார் பிள்ளையான்!
[Tuesday 2024-11-12 17:00]

பிள்ளையான் என அழைக்கப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.



பிரபாகரனின் நோக்கத்தை புதிய அரசியலமைப்பால் நிறைவேற்ற இடமளிக்க முடியாது!
[Tuesday 2024-11-12 17:00]

பிரபாகரனின் நோக்கத்தை புதிய அரசியலமைப்பால் நிறைவேற்ற இடமளிக்க முடியாது. நாட்டின் ஒற்றையாட்சியை கருத்திற் கொண்டு மக்கள் பொதுத்தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் கொழும்பு மாவட்ட வேட்பாளர் சரத் வீரசேகர தெரிவித்தார்.



தோட்டக் கிணற்றில் சடலம்! - மதுபோதையில் உருண்டு விழுந்ததாக சந்தேகம்.
[Tuesday 2024-11-12 17:00]

யாழ்ப்பாணம் - மயிலங்காடு பகுதியில் தோட்டக்கிணற்றில் இருந்து குடும்பஸ்தர் ஒருவரது சடலம் நேற்று மீட்கப்பட்டுள்ளது. மயிலங்காடு, எழாலை தெற்கு பகுதியைச் சேர்ந்த 46 வயதுடையவரே உயிரிழந்துள்ளார்.



சுழிபுரத்தில் சுமந்திரனின் கூட்டத்தில் குழப்பம்!
[Tuesday 2024-11-12 17:00]

வட்டுக்கோட்டை - சுழிபுரம் பகுதியில், நேற்றிரவு நடைபெற்ற இலங்கை தமிழரசுக் கட்சியின் பிரசார கூட்டத்தில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.



பயண எச்சரிக்கையை தளர்த்துமாறு அமெரிக்காவிடம் கோரிக்கை!
[Tuesday 2024-11-12 17:00]

அறுகம்குடா தொடர்பில் அமெரிக்க விடுத்த பயண எச்சரிக்கையை அந்த நாடு நீக்கிக்கொள்ளவேண்டும் என இலங்கையின் வெளிவிவகார அமைச்சு வேண்டுகோள் விடுத்துள்ளது. வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார் என வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.



அமைதியான தேர்தலுக்கு சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும்!
[Tuesday 2024-11-12 17:00]

அமைதியான முறையில் தேர்தலை நடத்துவதற்கு கடுமையான முறையில் சட்டம் அமுல்படுத்தப்படும் எனவும் வாக்களித்ததன் பின்னர் பொது இடங்களில் ஒன்று கூடுவதை தவிர்த்துக் கொள்ளுமாறும் தேர்தல்கள் ஆணைக்குழு பொதுமக்களிடம் வலியுறுத்தியுள்ளது.



இன்று முதல் விசேட பாதுகாப்பு!
[Tuesday 2024-11-12 17:00]

பொதுத் தேர்தலை முன்னிட்டு இன்று முதல் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.



விபத்தில் குடும்பஸ்தர் பலி!
[Tuesday 2024-11-12 17:00]

மானிப்பாய் - கைதடி பிரதான வீதியில் நேற்று இடம்பெற்ற வாகன விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் ஸ்தலத்தில் உயிரிழந்துள்ளார். இதன்போது அரசடை வீதி வட்டுத்தெற்கு வட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த 53 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.



மருந்துக் கொள்வனவு மோசடி - 18 அமைச்சர்களிடம் விசாரணை!
[Tuesday 2024-11-12 17:00]

அரச வைத்தியசாலைகளுக்கு தரமற்ற மருந்துகளை விநியோகித்தமை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கிற்காக, அப்போது அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த 18 அமைச்சர்களிடமும் வாக்குமூலம் பதிவு செய்யுமாறு மாளிகாகந்த நீதவான் லோச்சனி அபேவிக்ரம உத்தரவிட்டுள்ளார்.



மாற்றம் வரவேண்டும் என்பதற்காக மாற்றானுக்கு வாக்களிக்க முடியாது!
[Tuesday 2024-11-12 04:00]

இலங்கை தமிழ் அரசுக் கட்சி பிரிந்து பிரிந்து செயலிழந்து விட்டது. இந்நிலையில் தற்போது அக்கட்சிக்கு தமிழ் மக்கள் வாக்களித்தால் சுமந்திரனே தெரிவாகுவார் என யாழ். தேர்தல் மாவட்டத்தில் மாம்பழம் சின்னத்தில் முதன்மை வேட்பாளராக போட்டியிடும் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா தெரிவித்தார்.



அநுர அரசுக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை வழங்கக் கூடாது!
[Tuesday 2024-11-12 04:00]

பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை அதிகாரத்தை பெற்ற அனைத்து ஜனாதிபதிகளும் எதேச்சாதிகாரமாகவே செயற்பட்டு வந்துள்ளனர். அதனால் அநுரகுமார திஸாநாயக்கவும் அந்த நிலைக்கு செல்லாமல் இருப்பதற்கு மக்கள் அரசாங்கத்துக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வழங்கக்கூடாது என முன்னாள் அமைச்சரும் சிறீலங்கா கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவருமான டியூ குணசேகர தெரிவித்தார்.



வவுனியாவில் மஸ்தான் - ரிசாட் ஆதரவாளர்கள் மோதல்- இருவர் காயம்.
[Tuesday 2024-11-12 04:00]

வவுனியா- பட்டாணிச்சூர் பகுதியில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தானின் பொதுக்கூட்டம் இடம்பெற்ற பகுதியில் ஏற்பட்ட குழப்பநிலையில் இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.



சுன்னாகம் சம்பவம் - 4 பொலிசார் பணியில் இருந்து இடைநிறுத்தம்!
[Tuesday 2024-11-12 04:00]

வீதி விபத்தின் பின்னர் நபர் ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம், சுன்னாகம் பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த நான்கு உத்தியோகத்தர்கள் பணியிலிருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளனர்.



உயிர்த்த ஞாயிறு தாக்குதல் - பிள்ளையானிடம் இன்று விசாரணை!
[Tuesday 2024-11-12 04:00]

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவனேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) சிஐடியினரால் இன்று விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.



என்னிடம் வந்தால் அத்தனை மதுபான சாலைகளையும் மூடுவேன்!
[Tuesday 2024-11-12 04:00]

மது, புகைத்தலுக்கு எதிராக தலைவர் பிரபாகரன் கட்டளையிடமுன்னர் தமிழரசு கட்சி தீர்மானம் எடுத்தார்கள் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமத்திரன் தெரிவித்துள்ளார்.



மொட்டு அமைப்பாளராக கீதநாத்!
[Tuesday 2024-11-12 04:00]

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் யாழ்ப்பாணம் மாவட்ட அமைப்பாளராக கீதநாத் காசிலிங்கம் நியமிக்கப்பட்டுள்ளார். அந்த கட்சித் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்சவினால் குறித்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இதன்படி நேற்று (11) முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது



டிசம்பருக்குள் கடன் மறுசீரமைப்பு!
[Tuesday 2024-11-12 04:00]

டிசம்பர் மாதத்திற்குள் இலங்கையின் கடன் மறுசீரமைப்பு செய்யப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.



கொழும்பு- தலைமன்னார் ரயில் சேவை - இன்று மீண்டும் ஆரம்பம்!
[Tuesday 2024-11-12 04:00]

தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருக்கும் தலைமன்னார் ரயில் சேவை இன்று மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது. அரசாங்க தகவல் திணைக்களம் அறிக்கை ஒன்றில் இதனை தெரிவித்துள்ளது.



அவுஸ்ரேலிய குடியுரிமையை துறந்து விட்டேன்!
[Tuesday 2024-11-12 04:00]

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் களுத்துறை மாவட்டத்தில் போட்டியிடும் இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் டி.எம்.தில்ஷான், தனது இரட்டைக் குடியுரிமையை துறக்கவில்லை என்ற குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.


Airlinktravel-2020-01-01
Ambikajewellers-01-08-2021-seithy
Karan Remax-2010
NKS-Ketha-04-11-2021
 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
Asayan-Salon-2022-seithy
Mahesan-Remax-169515-Seithy
Rajeef sebarasha 2023/04/19
Logan-Kumaresh-Homelife-02-02-2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா