Untitled Document
November 14, 2024 [GMT]
காணி விடுவிப்பு குதிரைக் கொம்பு தான்!
[Tuesday 2024-11-12 17:00]

தேசிய மக்கள் சக்திக்கு வாய்ப்பை கொடுத்துப் பார்த்தால் என்ன என்று  சிலர் கருதுகின்றனர். இப்போதுள்ள அரச தரப்புக்கு வாக்களித்து விட்டு ஆறு மாதங்களின் பின்னர் யோசிப்பீர்கள். ஆகவே ஆறு மாதங்கள் வரை காத்திருங்கள். இவர்கள் தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்கப் போவதில்லை என ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் வேட்பாளரும் பாராளுமன்ற முன்னாள் உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

தேசிய மக்கள் சக்திக்கு வாய்ப்பை கொடுத்துப் பார்த்தால் என்ன என்று சிலர் கருதுகின்றனர். இப்போதுள்ள அரச தரப்புக்கு வாக்களித்து விட்டு ஆறு மாதங்களின் பின்னர் யோசிப்பீர்கள். ஆகவே ஆறு மாதங்கள் வரை காத்திருங்கள். இவர்கள் தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்கப் போவதில்லை என ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் வேட்பாளரும் பாராளுமன்ற முன்னாள் உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

  

யாழ் ஊடக அமையத்தில் திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே இதனை தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்திற்கு வந்த ஜனாதிபதி சில கருத்துக்களை வெளியிட்டுள்ளார். ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னரும் யாழ்ப்பாணம் வருகைதந்த ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க தனது கட்சி அரசாங்கத்தை அமைத்தால் பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கம் உள்ளிட்ட பல விடயங்களை செய்வதாக தெரிவித்தார். ஆனால் அனுர குமார திஸாநாயக்க தற்போது ஆட்சிக்கு வந்ததும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் மாறான கருத்துக்களை தெரிவிக்கிறார். ஜேவிபி இராணுவத்துடன் பேசியே தமிழ் மக்களின் காணி விடுவிக்கும் என்றால் அது சாத்தியப்படாது. ராஜபக்ஷ காலத்திலும் இதே நிலைதான் காணப்பட்டது.

சோசலிச வழி வந்த அனுர குமார திஸாநாயக்க இவ்வாறு சொன்னால் காணி விடுவிப்பு என்பது குதிரைக் கொம்பு தான். அவ்வாறு தேசிய மக்கள் சக்திக்கு வாய்ப்பை கொடுத்துப் பார்த்தால் என்ன என்று சிலர் கருதுகின்றனர். இப்போதுள்ள அரச தரப்புக்கு வாக்களித்து விட்டு ஆறு மாதங்களின் பின்னர் யோசிப்பீர்கள். ஆகவே ஆறு மாதங்கள் வரை காத்திருங்கள். இவர்கள் தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்கப் போவதில்லை.

தமிழ் மக்கள் தம்மீது நம்பிக்கை வைத்து வாக்களித்துள்ளார்கள். ஆகவே இனி நாங்கள் பார்த்து கொள்கிறோம் என்றால் தமிழ் மக்கள் தமது பிரச்சினையை கையாள்வதில் நெருக்கடி ஏற்படும். ஊழல் இலஞ்சத்துக்கு ஒழிப்புக்கு மட்டும் ஆதரவளிக்கலாம். ஆனால் சிஸ்டம் சேஞ் என்ற நிகழ்ச்சி நிரலில் தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்கும் நிலை இருக்கிறதா?

ஜேவிபிக்கு அதிக ஆசனம் கிடைத்தால் நாடு சீரழியும் என ஜேவிபி ஸ்தாபகர் ரோஹன விஜேவீர மகனே சொல்கிறார்.

தேசிய மக்கள் சக்தி 113 ஆசனங்களை பெறுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. அவ்வாறு கிடைக்காதுவிட்டால் நெருக்கடி ஏற்படும். இது சந்திரிகா குமாரதுங்க காலத்தில் நிகழ்ந்தது. ஜனாதிபதி ஒரு கட்சியாகவும் பாராளுமன்ற பெரும்பான்மை மற்றொரு கட்சியாகவும் கிடைத்தால் நிலைமை மோசமாகும்.

தமிழர் தரப்பு சரியான ஒரு வலுவான கொள்கை கொண்ட தரப்பை ஆதரிக்க வேண்டும். தமிழ் தேசிய பிரச்சினையை கையாளக்கூடியவர்களை தவிர்த்தால் நிலைமைகள் மோசமாகும். இளைஞர்கள், யுவதிகள் அதீத கற்பனையில் மிதக்காமல் இந்த கால கட்டத்தில் யார் பாராளுமன்றம் சென்றால் சிறந்தது என்பதை பார்த்து தெரிவு செய்ய வேண்டும் - என்றார்

  
   Bookmark and Share Seithy.com



இன்று நாடாளுமன்றத் தேர்தல்!
[Thursday 2024-11-14 05:00]

பத்தாவது பாராளுமன்றத்திற்கான பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்கான தேர்தல், இன்று நடைபெறுகிறது. காலை 7 மணிக்கும் ஆரம்பமாகும் தேர்தல் 4 மணியுடன் நிறைவடையும்.



சுன்னாகம் பொலிசாரால் உயிர் அச்சுறுத்தல்- மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு!
[Thursday 2024-11-14 05:00]

சுன்னாகம் பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்களால் தமது உயிர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அச்சுறுத்தல் காரணமாக தமது உயிர்களுக்கு பாதுகாப்பு வழங்குமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.



தேர்தல் பாதுகாப்புக்கு ஒரு இலட்சம் பொலிசார், படையினர்!
[Thursday 2024-11-14 05:00]

நாடளாவிய ரீதியில் 1,3421 வாக்களிப்பு மத்திய நிலையங்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தேர்தல்கள் சட்டத்துக்கும், பொதுச் சட்டத்துக்கும் அமைய பொதுமக்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும். சட்டம் மற்றும் ஒழுங்கை பாதுகாப்பதற்கு பொலிஸ் உட்பட முப்படையினர் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டுள்ளனர்.



வாக்காளர்களுக்கு விநியோகிக்க கொண்டு வரப்பட்ட உலர் உணவுப் பொதிகள் மீட்பு!
[Thursday 2024-11-14 05:00]

மன்னாரில் வாக்காளர்களுக்கு அரசியல் கட்சி ஒன்றினால் வழங்குவதற்கு என கொண்டு வரப்பட்ட ஒரு தொகுதி உலர் உணவு பொருட்கள் புதன்கிழமை மாலை மன்னார்-யாழ் பிரதான வீதியில் வைத்து அடம்பன் பொலிஸாரினால் வாகனம் ஒன்றில் வைத்து மீட்கப்பட்டுள்ளதோடு மூன்று சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.



விடுமுறை வழங்காவிட்டால் ஒரு மாத சிறைத்தண்டனை!
[Thursday 2024-11-14 05:00]

இன்று இடம்பெறும் பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க செல்ல விடுமுறை வழங்காத நிறுவனங்கள் தொடர்பாக எமக்கு முறைப்பாடு வந்திருக்கிறது. அவ்வாறு விடுறை வழங்காவிட்டால் நிறுவனத்தின் பிரதானிக்கு ஒரு மாதகாலம் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப்பணிப்பாளர் ராேஹன ஹெட்டியாரச்சி தெரிவித்தார்.



சரியான திட்டமிடல் இல்லாவிட்டால் மீண்டும் வங்குரோத்து!
[Thursday 2024-11-14 05:00]

2028ஆகும் போது கடன் மீள செலுத்தும் பின்னணியை ஏற்படுத்திக்கொள்வதே நாடு எதிர்கொண்டுள்ள பாரிய சவாலாகும். சரியான திட்டமிடலை மேற்கொள்ளாவிட்டால் நாடு மீண்டும் வங்குராேத்து நிவைக்கு தள்ளப்படும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.



இடது கை ஆட்காட்டி விரலில் மை!
[Thursday 2024-11-14 05:00]

பொதுத்தேர்தலின்போது வாக்காளரின் இடது கை ஆட்காட்டி விரல் மீது உரிய அடையாளம் இடப்படும். வாக்காளருக்கு இடது கை ஆட்காட்டி விரல் இல்லாதிருப்பின் அவரது வலது கையில் உள்ள வேறு ஏதேனுமொரு விரலில் உரிய அடையாளம் இடப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.



நேற்றிரவு ஒருவர் சுட்டுக்கொலை!
[Thursday 2024-11-14 05:00]

கல்கிஸ்ஸை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட படோவிட்ட பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் சிகிச்சைக்காக களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.



5 மதுபான உற்பத்தி நிறுவனங்களை இழுத்து மூட நடவடிக்கை!
[Thursday 2024-11-14 05:00]

இம்மாதம் 30ஆம் திகதிக்கு முன்னர் நிலுவைத்தொகை செலுத்தப்படாவிட்டால் டபிள்யூ.எம். மெண்டிஸ் நிறுவனம் உட்பட ஐந்து மதுபான உற்பத்தி நிறுவனங்களின் உரிமங்களை இடைநிறுத்த மதுவரி திணைக்களம் தீர்மானித்துள்ளதாக சட்டமா அதிபர் உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.



சொந்த மகளான 10 வயது சிறுமியை தகாத முறைக்கு உட்படுத்திய தந்தைக்கு 10 ஆண்டு கடூழிய சிறை!
[Thursday 2024-11-14 05:00]

2018ஆம் ஆண்டு ஆனி மாதம் தமது சொந்த மகளான 10 வயது சிறுமியை தகாத முறைக்கு உட்படுத்திய எதிரியான தந்தைக்கு 10 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து நீதிபதி இளஞ்செழியன் தீர்ப்பளித்துள்ளார்.



நாளை பொதுத் தேர்தல்- வாக்குப்பெட்டிகளுடன் வாக்களிப்பு நிலையங்கள் தயார்! Top News
[Wednesday 2024-11-13 16:00]

இலங்கையின் பாராளுமன்ற பொதுத் தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில் வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப் பெட்டிகள் அனுப்பி வைக்கப்பட்டு ஏற்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.



அறுகம்குடா பயணக் கட்டுப்பாடுகளை நீக்கியது அமெரிக்கா!
[Wednesday 2024-11-13 16:00]

அறுகம்பேவுக்கு 2024 ஒக்டோபர் 23 ஆம் திகதி வெளியிடப்பட்ட பயணக் கட்டுப்பாடுகளை கொழும்பு அமெரிக்கத் தூதரகம் நீக்கியுள்ளது.



கட்டைபறிச்சான் இறால் பாலம் முற்றாக நீரில் மூழ்கியது!
[Wednesday 2024-11-13 16:00]

மழையினால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக மூதூர் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கட்டைபறிச்சான் இறால் பாலம் தாழிறங்கி முற்றாக நீரில் மூழ்கியுள்ளது. இதனால் அப்பாலத்தின் வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டு பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.



அதிக வேட்பாளர்களால் அதிக செலவு!
[Wednesday 2024-11-13 16:00]

இம்முறை பாராளுமன்ற தேர்தலுக்கு அதிக எண்ணிக்கையிலான வேட்பாளர்கள் இருப்பதால், கூடுதல் வாக்கு எண்ணும் மையங்கள், ஆவணப் பணிகள், வாக்குச் சீட்டு அச்சிடுதல் போன்றவற்றில் கூடுதல் செலவுகள் தேர்தல் ஆணைக்குழுவிற்கு ஏற்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.



படகில் போன வாக்குப் பெட்டி - ஹெலியில் திரும்பி வரும்!
[Wednesday 2024-11-13 16:00]

நெடுந்தீவு, நயினாதீவு, அனலைதீவு, எழுவை தீவு ஆகிய தீவக பகுதிகளுக்கு விசேட படகுகள் மூலம் வாக்கு பெட்டிகள் கொண்டு செல்லப்பட்டுள்ளன.



வேட்பாளர் பட்டியலில் பெயர் இருப்பதை அறியாத பெண்!
[Wednesday 2024-11-13 16:00]

நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் யாழ் . தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் சுயேட்சை குழுவொன்று தனக்கு தெரியாமல் தன்னுடைய பெயரை வேட்பாளர் பட்டியலில் குறிப்பிட்டுள்ளதாக பெண்ணொருவர் தேர்தல் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்துள்ளார்.



வாக்குப்பதிவை படம் பிடிக்கத் தடை!
[Wednesday 2024-11-13 16:00]

வாக்குப்பதிவு தொடர்பான எந்தவொரு நடவடிக்கைகளையும் புகைப்படம் எடுப்பதையோ அல்லது வீடியோ பதிவு செய்வதையோ, அதுபோன்ற படங்களையோ அல்லது வீடியோக்களையோ சமூக ஊடகங்களில் பதிவேற்றுவதையோ தவிர்க்குமாறு தேர்தல் ஆணைக்குழு பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.



நாளை மழைக்கு மத்தியில் தேர்தல்!
[Wednesday 2024-11-13 16:00]

தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வு வலயம் உருவாகியுள்ளது. அதன் தாக்கம் காரணமாக நாட்டின் பல பகுதிகளில் இன்று முதல் எதிர்வரும் சில தினங்களில் மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.



இம்முறை புள்ளடியே போதும்!
[Wednesday 2024-11-13 16:00]

நாளை இடம்பெறவுள்ள பொதுத் தேர்தலில் வாக்களிக்கும்போது, புள்ளடியை மாத்திரம் பயன்படுத்துமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.



யாழ்ப்பாணத்தில் சுயேட்சை வேட்பாளரின் தந்தை மீது தாக்குதல்!
[Wednesday 2024-11-13 16:00]

யாழ்ப்பாணத்தில் சுயேட்சையாக போட்டியிடும் வேட்பாளர் ஒருவரின் தந்தை மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலின் போது காயங்களுக்குள்ளான நிலையில் வேட்பாளரின் தந்தை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளார்.


Airlinktravel-2020-01-01
Vaheesan-Remax-2016
Ambikajewellers-01-08-2021-seithy
 gloriousprinters.com 2021
Logan-Kumaresh-Homelife-02-02-2021
NKS-Ketha-04-11-2021
Mahesan-Remax-169515-Seithy
Asayan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
Rajeef sebarasha 2023/04/19
Karan Remax-2010
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா