Untitled Document
November 14, 2024 [GMT]
தமிழ் தேசியத்தின் ஒற்றுமையை, வெளிப்படுத்தும் விதமாக வாக்குகளை பயன்படுத்துங்கள்!
[Wednesday 2024-11-13 04:00]

தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கு எமது சுயநிர்ணய உரிமையை பிரயோகிப்பதனூடாக எட்டப்படும் தீர்வே நிரந்தரமாக அமையும். 
ஆகவே தமிழ் தேசியத்தின் ஒற்றுமையை, தமிழ் மக்களின் பலத்தினை வெளிப்படுத்தும் விதமாக தமிழ் மக்கள் வாக்குகளை பயன்படுத்த வேண்டுமென  பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கு எமது சுயநிர்ணய உரிமையை பிரயோகிப்பதனூடாக எட்டப்படும் தீர்வே நிரந்தரமாக அமையும். ஆகவே தமிழ் தேசியத்தின் ஒற்றுமையை, தமிழ் மக்களின் பலத்தினை வெளிப்படுத்தும் விதமாக தமிழ் மக்கள் வாக்குகளை பயன்படுத்த வேண்டுமென பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

  

அவ்வியக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் வேலன் சுவாமிகள் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

எதிர்வரும் நவம்பர் 14ம் திகதி இலங்கைப் பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இலங்கை தேசம் தமது ஆட்சி அதிகாரத்தை தீர்மானிக்கும் தேர்தலாக இது இருந்த போதும் இத்தேர்தலானது தமிழர்தேசத்தின் மீதும் திணிக்கப்பட்டுள்ளது.

இலங்கைப் பாராளுமன்றம் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைக்கு எவ்வித தீர்வையும் தராத போதும் எமது பிரதிநிதித்துவத்தையாவது உறுதிப்படுத்த வேண்டிய ஒரு கட்டாய நிலையிலே உள்ளோம். அதேபோலவே தமிழ் மக்கள் எமது அரசியல் நிலைப்பாட்டையும் உறுதியாக வெளிப்படுத்த வேண்டிய தேவையும் உள்ளது.

இலங்கையின் பேரினவாதக்கட்சிகள் தாமே தமிழ் மக்களின் மீட்பர்கள் போலவும், தமிழ் மக்களுக்கு அரசியல் பிரச்சினை எதுவுமே இல்லை என்பது போல ஒரு மாயத்தோற்றத்தினை எம்மக்களிடையே, குறிப்பாக இளைய சமுதாயத்தை குறிவைத்தே விதைக்கின்றனர்.

குறிப்பாக தேசிய மக்கள் சக்தி என்னும் முகமூடியுடன் வலம் வரும் ஜே.வி.பி எனும் சிங்கள இனவாத கட்சி, தமிழ் மக்களின் விடுதலை அவாவினை இலங்கை தேசியத்தில் கரைத்து சிங்கள பௌத்த மேலாதிக்கத்தை நிறுவுவதில் மும்முரமாக உள்ளது.

தமிழர் தாயகத்தை நீதிமன்றத்தினூடாக இருகூறாக பிரிப்பதில் ஆணிவேராக செயற்பட்ட இவர்கள், தமிழர் தேசத்திற்கும் சிறிலங்கா தேசத்திற்கும் இடையில் சர்வதேச அனுசரணையுடன் நடைபெற்ற சமாதான பேச்சுவார்த்தையை முறிவடைய செய்வதில் காத்திரமான பங்கு வகித்தவர்கள்.

குறிப்பாக சுனாமி பேரழிவின் பின் உருவாக்கப்பட்ட சுனாமி கட்டமைப்பை செயலிழக்க செய்வதில் பெரும் பங்கு வகித்தவர்கள். தென்னிலங்கையில் சிங்கள இனவாதத்தை தூண்டி, தமிழர் மீது நடாத்தப்பட்ட இனவழிப்பு யுத்தத்திற்கு ஊக்கிகளாக இயங்கியவர்கள்.

முள்ளிவாய்க்காலின் இரத்தக்கறை இவர்கள் கையிலும் உள்ளது. எமது இனத்தின் மீதான இனவழிப்பை இலகுவாக மறந்து, மறைத்து தமிழருக்கு இனப்பிரச்சனையே இல்லை என்று எமக்கே பாடம் எடுக்கின்றனர். இவர்களும் சிங்கள பேரினவாதிகளின் இன்னொரு வடிவமே.

இடதுசாரிகளாக தம்மை வெளிப்படுத்தும் இவர்கள் ஈழத்தமிழ் தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமையை ஏற்றுக்கொள்ள என்றுமே தயாராக இல்லை. இவர்களை எமது தாயகத்திலிருந்து முழுமையாக அகற்ற வேண்டிய தலையாய கடமை ஒவ்வொரு தமிழனுக்கும் உண்டு.

எமது மண்ணிலேயே பிறந்து வளர்ந்தும், அற்ப சலுகைகளுக்காக எமதினத்தின் இருப்பையே சிங்கள பேரினவாதத்திடம் தாரைவார்க்கும் துரோகிகளும் எமது மண்ணில் எம்மிடையே உள்ளார்கள். உரிமைகளை விலைபேசி சலுகைகளை பெற்றவர்கள், இன்று அந்த சலுகைகளை கூட பெற்றுக்கொள்ள முடியாத கையறு நிலையிலேயே உள்ளார்கள்.

இவர்கள் மீண்டு எழுந்து வரமுடியாத மாபெரும் தோல்வியை வழங்கும் நேரம் இப்போது கனிந்துள்ளது. அதேபோல் தமிழ் தேசியத்தை உதட்டளவில் பேசிக்கொண்டு, தமிழ் மக்களின் இருப்பையும் ஒற்றுமையையும் சிதைப்பதில் மும்முரமாய் உள்ள சிலரும் வாக்கு வேண்டி உங்களிடம் வருவார்கள். இந்த கயவர்களுக்கு மீளமுடியாத தோல்வியை கொடுக்க வேண்டிய பாரிய கடமையும் உங்கள் அனைவருக்கும் உண்டு.

இலங்கையின் எந்த தேர்தல்களோ அல்லது ஆட்சி பொறிமுறைகளோ தமிழ் மக்களின் தேசிய கேள்விக்கு எந்த பதிலையும் தராது என்ற யதார்த்தத்தினை உணர்ந்து கொண்டு, ஆயினும் தமிழ் தேசியத்தின் ஒற்றுமையை, தமிழ் மக்களின் பலத்தினை வெளிப்படுத்தும் விதமாக உங்களின் வாக்குகளை பயன்படுத்துங்கள்.

தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கு எமது சுயநிர்ணய உரிமையை பிரயோகிப்பதனூடாக எட்டப்படும் தீர்வே நிரந்தரமாக அமையும். அதன் ஒரு பொறிமுறையாக, தமிழ் மக்களிடையே சர்வதேசத்தினால் நடாத்தி கண்காணிக்கப்படும் ஒரு சர்வசன வாக்கெடுப்பினூடாகவேதான் ஓர் நிரந்தர அரசியல் தீர்வினை அடைய முடியும் என்பதை நாம் திடமாக நம்புகின்றோம். நிரந்தரமான தமிழர்தேசம் இந்த பூமிப்பந்தில் உதிக்க தொடர்ந்தும் பாடுபடுவோம் என உறுதி எடுத்துக் கொள்வோம்.

  
   Bookmark and Share Seithy.com



இன்று நாடாளுமன்றத் தேர்தல்!
[Thursday 2024-11-14 05:00]

பத்தாவது பாராளுமன்றத்திற்கான பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்கான தேர்தல், இன்று நடைபெறுகிறது. காலை 7 மணிக்கும் ஆரம்பமாகும் தேர்தல் 4 மணியுடன் நிறைவடையும்.



சுன்னாகம் பொலிசாரால் உயிர் அச்சுறுத்தல்- மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு!
[Thursday 2024-11-14 05:00]

சுன்னாகம் பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்களால் தமது உயிர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அச்சுறுத்தல் காரணமாக தமது உயிர்களுக்கு பாதுகாப்பு வழங்குமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.



தேர்தல் பாதுகாப்புக்கு ஒரு இலட்சம் பொலிசார், படையினர்!
[Thursday 2024-11-14 05:00]

நாடளாவிய ரீதியில் 1,3421 வாக்களிப்பு மத்திய நிலையங்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தேர்தல்கள் சட்டத்துக்கும், பொதுச் சட்டத்துக்கும் அமைய பொதுமக்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும். சட்டம் மற்றும் ஒழுங்கை பாதுகாப்பதற்கு பொலிஸ் உட்பட முப்படையினர் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டுள்ளனர்.



வாக்காளர்களுக்கு விநியோகிக்க கொண்டு வரப்பட்ட உலர் உணவுப் பொதிகள் மீட்பு!
[Thursday 2024-11-14 05:00]

மன்னாரில் வாக்காளர்களுக்கு அரசியல் கட்சி ஒன்றினால் வழங்குவதற்கு என கொண்டு வரப்பட்ட ஒரு தொகுதி உலர் உணவு பொருட்கள் புதன்கிழமை மாலை மன்னார்-யாழ் பிரதான வீதியில் வைத்து அடம்பன் பொலிஸாரினால் வாகனம் ஒன்றில் வைத்து மீட்கப்பட்டுள்ளதோடு மூன்று சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.



விடுமுறை வழங்காவிட்டால் ஒரு மாத சிறைத்தண்டனை!
[Thursday 2024-11-14 05:00]

இன்று இடம்பெறும் பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க செல்ல விடுமுறை வழங்காத நிறுவனங்கள் தொடர்பாக எமக்கு முறைப்பாடு வந்திருக்கிறது. அவ்வாறு விடுறை வழங்காவிட்டால் நிறுவனத்தின் பிரதானிக்கு ஒரு மாதகாலம் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப்பணிப்பாளர் ராேஹன ஹெட்டியாரச்சி தெரிவித்தார்.



சரியான திட்டமிடல் இல்லாவிட்டால் மீண்டும் வங்குரோத்து!
[Thursday 2024-11-14 05:00]

2028ஆகும் போது கடன் மீள செலுத்தும் பின்னணியை ஏற்படுத்திக்கொள்வதே நாடு எதிர்கொண்டுள்ள பாரிய சவாலாகும். சரியான திட்டமிடலை மேற்கொள்ளாவிட்டால் நாடு மீண்டும் வங்குராேத்து நிவைக்கு தள்ளப்படும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.



இடது கை ஆட்காட்டி விரலில் மை!
[Thursday 2024-11-14 05:00]

பொதுத்தேர்தலின்போது வாக்காளரின் இடது கை ஆட்காட்டி விரல் மீது உரிய அடையாளம் இடப்படும். வாக்காளருக்கு இடது கை ஆட்காட்டி விரல் இல்லாதிருப்பின் அவரது வலது கையில் உள்ள வேறு ஏதேனுமொரு விரலில் உரிய அடையாளம் இடப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.



நேற்றிரவு ஒருவர் சுட்டுக்கொலை!
[Thursday 2024-11-14 05:00]

கல்கிஸ்ஸை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட படோவிட்ட பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் சிகிச்சைக்காக களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.



5 மதுபான உற்பத்தி நிறுவனங்களை இழுத்து மூட நடவடிக்கை!
[Thursday 2024-11-14 05:00]

இம்மாதம் 30ஆம் திகதிக்கு முன்னர் நிலுவைத்தொகை செலுத்தப்படாவிட்டால் டபிள்யூ.எம். மெண்டிஸ் நிறுவனம் உட்பட ஐந்து மதுபான உற்பத்தி நிறுவனங்களின் உரிமங்களை இடைநிறுத்த மதுவரி திணைக்களம் தீர்மானித்துள்ளதாக சட்டமா அதிபர் உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.



சொந்த மகளான 10 வயது சிறுமியை தகாத முறைக்கு உட்படுத்திய தந்தைக்கு 10 ஆண்டு கடூழிய சிறை!
[Thursday 2024-11-14 05:00]

2018ஆம் ஆண்டு ஆனி மாதம் தமது சொந்த மகளான 10 வயது சிறுமியை தகாத முறைக்கு உட்படுத்திய எதிரியான தந்தைக்கு 10 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து நீதிபதி இளஞ்செழியன் தீர்ப்பளித்துள்ளார்.



நாளை பொதுத் தேர்தல்- வாக்குப்பெட்டிகளுடன் வாக்களிப்பு நிலையங்கள் தயார்! Top News
[Wednesday 2024-11-13 16:00]

இலங்கையின் பாராளுமன்ற பொதுத் தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில் வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப் பெட்டிகள் அனுப்பி வைக்கப்பட்டு ஏற்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.



அறுகம்குடா பயணக் கட்டுப்பாடுகளை நீக்கியது அமெரிக்கா!
[Wednesday 2024-11-13 16:00]

அறுகம்பேவுக்கு 2024 ஒக்டோபர் 23 ஆம் திகதி வெளியிடப்பட்ட பயணக் கட்டுப்பாடுகளை கொழும்பு அமெரிக்கத் தூதரகம் நீக்கியுள்ளது.



கட்டைபறிச்சான் இறால் பாலம் முற்றாக நீரில் மூழ்கியது!
[Wednesday 2024-11-13 16:00]

மழையினால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக மூதூர் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கட்டைபறிச்சான் இறால் பாலம் தாழிறங்கி முற்றாக நீரில் மூழ்கியுள்ளது. இதனால் அப்பாலத்தின் வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டு பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.



அதிக வேட்பாளர்களால் அதிக செலவு!
[Wednesday 2024-11-13 16:00]

இம்முறை பாராளுமன்ற தேர்தலுக்கு அதிக எண்ணிக்கையிலான வேட்பாளர்கள் இருப்பதால், கூடுதல் வாக்கு எண்ணும் மையங்கள், ஆவணப் பணிகள், வாக்குச் சீட்டு அச்சிடுதல் போன்றவற்றில் கூடுதல் செலவுகள் தேர்தல் ஆணைக்குழுவிற்கு ஏற்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.



படகில் போன வாக்குப் பெட்டி - ஹெலியில் திரும்பி வரும்!
[Wednesday 2024-11-13 16:00]

நெடுந்தீவு, நயினாதீவு, அனலைதீவு, எழுவை தீவு ஆகிய தீவக பகுதிகளுக்கு விசேட படகுகள் மூலம் வாக்கு பெட்டிகள் கொண்டு செல்லப்பட்டுள்ளன.



வேட்பாளர் பட்டியலில் பெயர் இருப்பதை அறியாத பெண்!
[Wednesday 2024-11-13 16:00]

நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் யாழ் . தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் சுயேட்சை குழுவொன்று தனக்கு தெரியாமல் தன்னுடைய பெயரை வேட்பாளர் பட்டியலில் குறிப்பிட்டுள்ளதாக பெண்ணொருவர் தேர்தல் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்துள்ளார்.



வாக்குப்பதிவை படம் பிடிக்கத் தடை!
[Wednesday 2024-11-13 16:00]

வாக்குப்பதிவு தொடர்பான எந்தவொரு நடவடிக்கைகளையும் புகைப்படம் எடுப்பதையோ அல்லது வீடியோ பதிவு செய்வதையோ, அதுபோன்ற படங்களையோ அல்லது வீடியோக்களையோ சமூக ஊடகங்களில் பதிவேற்றுவதையோ தவிர்க்குமாறு தேர்தல் ஆணைக்குழு பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.



நாளை மழைக்கு மத்தியில் தேர்தல்!
[Wednesday 2024-11-13 16:00]

தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வு வலயம் உருவாகியுள்ளது. அதன் தாக்கம் காரணமாக நாட்டின் பல பகுதிகளில் இன்று முதல் எதிர்வரும் சில தினங்களில் மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.



இம்முறை புள்ளடியே போதும்!
[Wednesday 2024-11-13 16:00]

நாளை இடம்பெறவுள்ள பொதுத் தேர்தலில் வாக்களிக்கும்போது, புள்ளடியை மாத்திரம் பயன்படுத்துமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.



யாழ்ப்பாணத்தில் சுயேட்சை வேட்பாளரின் தந்தை மீது தாக்குதல்!
[Wednesday 2024-11-13 16:00]

யாழ்ப்பாணத்தில் சுயேட்சையாக போட்டியிடும் வேட்பாளர் ஒருவரின் தந்தை மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலின் போது காயங்களுக்குள்ளான நிலையில் வேட்பாளரின் தந்தை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளார்.


Mahesan-Remax-169515-Seithy
Rajeef sebarasha 2023/04/19
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Airlinktravel-2020-01-01
 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
Asayan-Salon-2022-seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Karan Remax-2010
NKS-Ketha-04-11-2021
Vaheesan-Remax-2016
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா