Untitled Document
November 21, 2024 [GMT]
வடக்கில் எந்த மறைமுக நிகழ்ச்சி நிரலும் இல்லை!
[Thursday 2024-11-21 16:00]


நாங்கள் வடக்குக்கு வருவதை பலரும் சந்தேகக் கண் கொண்டு பாா்க்கின்றாா்கள். ஆனால், வடபகுதிக்கு நாங்கள் வருவதில் எமக்கு எந்தவித மறைமுக நிகழ்ச்சியிலும் இல்லை” என்று யாழ்ப்பாணம் சென்ற இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென் ஹொங் தெரிவித்தார். 
இலங்கையின் உள்விவகாரங்களில் தாங்கள் தலையிடப்போவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

நாங்கள் வடக்குக்கு வருவதை பலரும் சந்தேகக் கண் கொண்டு பாா்க்கின்றாா்கள். ஆனால், வடபகுதிக்கு நாங்கள் வருவதில் எமக்கு எந்தவித மறைமுக நிகழ்ச்சியிலும் இல்லை” என்று யாழ்ப்பாணம் சென்ற இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென் ஹொங் தெரிவித்தார். இலங்கையின் உள்விவகாரங்களில் தாங்கள் தலையிடப்போவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

  

சீனத் தூதுவருக்கும் யாழ்ப்பாணக் குடாநாட்டில் உள்ள புத்திஜீவிகள் மற்றும் வர்த்தக சமூகத்தினருடனான சந்திப்பு நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை இரவு யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் நடைபெற்றது. இந்த சந்திப்பின் போது உரையாற்றிய போதே சீன தூதுவர் கீ சென் ஹொங் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய சீனத் தூதுவர்,

“ஜனாதிபதி தேர்தல் மட்டும் பொது தேர்தலில் பின்னர் வடபகுதியில் சாதகமான ஒரு நிலை உருவாகியிருக்கின்றது, ஒரு முன்னேற்றம் காணப்படுகிறது. இது வரவேற்கத்தக்க ஒரு முன்னேற்றம் ஆகும். கடந்த காலங்களில் இலங்கைக்கு பல்வேறு உதவிகளையும் சீனா வழங்கி இருக்கிறது. அதேபோல் எதிர்காலத்திலும் உதவிகள் வழங்கப்படும்.

நான் யாழ்ப்பாணத்திற்கு பல தடவைகள் வந்து சென்றிருக்கின்றேன். யாழ்ப்பாணத்தில் வீடமைப்புக்கான பொருத்து வீடுகள் மற்றும் மீனவர்களுக்கான மீன்பிடி வலைகள் போன்றவற்றை வழங்கி இருக்கிறோம்.

யாழ்ப்பாணத்தில் இருக்கின்ற மூன்று தீவுகளில் மின் சக்தி திட்டங்களை உருவாக்குவதற்கான யோசனைகளை சீன நிறுவனம் ஒன்று முன் வைத்திருந்தது. அதற்கான அங்கீகாரமும் அரசாங்கத்தால் வழங்கப்பட்டது. ஆனால் பின்னர் இந்த ரத்து செய்யப்பட்டது. நம்மைப் பொறுத்தவரையில் இது ஒரு மோசமான முன்னுதாரணமாக இருக்கின்றது.

வடபகுதியில் செயல்படுத்தக்கூடிய பல திட்டங்கள் இருக்கின்றன. இதற்கான சட்ட ரீதியான வரையறைகளை மேற்கொள்வதற்கு சுதந்திர வர்த்தக உடன்படிக்கை ஒன்று அவசியம். இவ்வாறான உடன்படிக்கை ஒன்று கைச்சாத்திடப்படுமாக இருந்தால், பெரிய நாடு என்ற வகையில் சீனா தான் அதனால் பயன்பெறும் என சிலர் கூறுகிறார்கள். அதாவது அது சீனாவுக்கு சாதகமாக அமையும் என்பது சிலருடைய கருத்து. ஆனால் அவ்வாறான கவலை அவசியமற்றது.

1952 ல் சீனாவிற்கும் இலங்கைக்கும் இடையில் ரப்பர் - அரிசி உடன்படிக்கை ஒன்று கைச்சாத்திடப்பட்டது. அதன் போது இலங்கையில் இருந்து ரப்பரை சர்வதேச சந்தை விலையை விட அதிக விலைக்கு சீனா கொள்வனவு செய்தது. மறுபுறத்தில் இலங்கைக்கு அரிசியை சர்வதேச சந்தை விலையை விட குறைவான விலைக்கு சீனா வாங்கியது. பின்னர் சீனாவில் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்ட நிலைமையிலும் இந்த உடன்படிக்கையை தொடர்ந்து முன்னெடுத்தது. மியன்மாரில் இருந்து அரிசியை வாங்கி இலங்கைக்கு அது வழங்கியது.

சீனாவின் கடன் பொறி தொடர்பாகவும் சிலர் கூறியுள்ளார்கள். அதுவும் தவறான ஒரு தகவல். இலங்கைக்கு நிதி உதவி வழங்குவது நாம் பல நெருக்கடிகளை சந்திக்க வேண்டி உள்ளது. இலங்கையின் கடன் மறுசீரமைப்பு திட்டத்தில் முதலாவதாக கைச்சாத்திட்ட நாடாக சீனாவே இருந்தது” என்றும் சீனத் தூதுவர் தெரிவித்துள்ளார்.

  
   Bookmark and Share Seithy.com



இனவாதம், மதவாதம் தலையெடுக்க இடமளியேன்! - ஜனாதிபதி அறிவிப்பு.
[Thursday 2024-11-21 16:00]

பத்தாவது பாராளுமன்றின் முதலாவது அமர்வில் அரசாங்கத்தின் கொள்கை பிரகடனத்தை சபையில் முன்வைத்து ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று உரையாற்றினார்.



29 பிரதி அமைச்சர்கள் பதவியேற்பு!
[Thursday 2024-11-21 16:00]

29 பிரதி அமைச்சர்கள் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் சற்றுமுன்னர் சத்தியபிரமாணம் செய்து கொண்டனர். ஜனாதிபதி செயலகத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற நிகழ்வில் பிரதி அமைச்சர்கள் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.



தமிழ் அரசுக் கட்சியின் முதல் நாடாளுமன்றக் குழுக் கூட்டம்!
[Thursday 2024-11-21 16:00]

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியினது முதல் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் இன்று நாடாளுமன்ற நூலகத்தில் நடைபெற்றது. இதன் போது தமிழரசுக் கட்சியின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டார்கள்.



மல்லாவி விபத்தில் இரு இளைஞர்கள் பலி- ஒருவர் படுகாயம்!
[Thursday 2024-11-21 16:00]

முல்லைத்தீவு, மல்லாவி - வன்னிவிளாங்குளம் பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் 2 இளைஞர்கள் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார்.



சபாநாயகராக அசோக சப்புமல் ரன்வல தெரிவு!
[Thursday 2024-11-21 16:00]

தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அசோக சப்புமல் ரன்வல இலங்கையின் பத்தாவது நாடாளுமன்றத்தின் சபாநாயகராக நியமிக்கப்பட்டுள்ளார்.



எதிர்க்கட்சி தலைவர் ஆசனத்தை ஆக்கிரமித்த அர்ச்சுனாவின் கோமாளிக் கூத்து!
[Thursday 2024-11-21 16:00]

பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது பாராளுமன்ற அமர்வு இன்று இடம்பெற்றது. இன்றைய முதல்நாள் அமர்வில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக விசேடமான ஆசன ஒதுக்கீடுகள் எதுவும் இருக்காது என்பதுடன், விரும்பிய ஆசனத்தில் அமர்வதற்கான வாய்ப்புக் கிடைக்குமென அறிவிக்கப்பட்டிருந்தது.



ஒற்றையாட்சி அரசியலமைப்புக்கு இந்தியா துணைபோக கூடாது!
[Thursday 2024-11-21 16:00]

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவும் ஒற்றையாட்சியை மையப்படுத்திய அரசியலமைப்பு உருவாக்கத்தினை தமிழர்களின் ஆதரவுடன் முன்னெடுக்கவுள்ளதாக காண்பிப்பதற்கு திட்டமிட்டுள்ள நிலையில், அதற்கு ஆதரவளித்து இந்தியா வரலாற்றுத் தவறைச் செய்துவிடக்கூடாது என்று இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவிடம் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கோரிக்கை விடுத்துள்ளார்.



எதிர்க்கட்சித் தலைவராக சஜித் பிரேமதாச நியமனம்!
[Thursday 2024-11-21 16:00]

பத்தாவது பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராக சஜித் பிரேமதாச நியமிக்கப்பட்டுள்ளார் என்று சபாநாயகர் கலாநிதி அசோக ரன்வல சபையில் அறிவித்தார்.



சிங்கள பௌத்த தேசத்தின் ஒற்றையாட்சிக்கான திசைகாட்டியே!
[Thursday 2024-11-21 15:00]

தற்போது வெற்றிக் களிப்பில் இருக்கும் திசைகாட்டி சிங்கள பௌத்த தேசத்தின் ஒற்றை ஆட்சிக்கான திசை காட்டியே தவிர தமிழர் தேசத்திற்கான திசை காட்டி அல்ல. எமக்கான தீர்வு இவர்கள் காலத்தில் கிட்டப்போவதில்லை என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.



வடக்கில் இராணுவ முகாம்கள் அகற்றப்படுகிறதாம்- நாமல் கவலை!
[Thursday 2024-11-21 04:00]

வட மாகாணத்தில் இராணுவ முகாம் அண்மையில் அகற்றப்பட்டமை மற்றும் எதிர்வரும் மாதங்களில் மேலும் பல முகாம்களை அகற்ற திட்டமிட்டுள்ளமை குறித்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய ஒருங்கிணைப்பாளர், பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, கவலை வெளியிட்டுள்ளார்.



மன்னார் வைத்தியசாலை முன் நீதி கோரி போராட்டம்! Top News
[Thursday 2024-11-21 04:00]

மன்னார் பொது வைத்தியசாலையில் மகப் பேற்றுக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணம் அடைந்த தாய் மற்றும் சிசுவின் மரணத்திற்கு நீதி கோரி மன்னார் பொது வைத்தியசாலைக்கு முன்பாக நேற்று மாலை 4.30 மணியளவில் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் இரவு 8 மணியளவில் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.



டிக் டொக்கில் வேட்பாளருக்கு அபகீர்த்தி- வவுனியாவில் வைத்து லண்டன் பெண் கைது!
[Thursday 2024-11-21 04:00]

லண்டனில் இருந்து வவுனியாவிற்கு வருகை தந்து சமூக வலைத்தளம் மூலம் நபர் ஒருவருக்கு அபகீர்த்தியை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.



திட்டமிட்டபடி திங்களன்று பரீட்சை தொடங்கும்!
[Thursday 2024-11-21 04:00]

2024 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர உயர் தர பரீட்சை திட்டமிட்டபடி நவம்பர் 25ஆம் திகதி ஆரம்பமாகும் என கல்வியமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



மட்டக்களப்பில் இரண்டரை கோடி ரூபா கொள்ளை!
[Thursday 2024-11-21 04:00]

மட்டக்களப்பு- கல்லடி பிரதேசத்தில் தனித்திருந்த சுவிஸ் நாட்டு பிரஜையான பெண்ணொருவரை தாக்கிவிட்டு இரண்டு கோடி 40 லட்சம் ரூபாய் வெளிநாட்டு நாணயங்கள் மற்றும் 10 கிராம் தங்கம் மாலை 29 ஆயிரம் ரூபாய் இலங்கை நாணயம் என்பன கொள்ளையிடப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.



ரவியின் தேசியப் பட்டியல் நியமனம்- விசாரணைக்கு நால்வர் குழு!
[Thursday 2024-11-21 04:00]

புதிய ஜனநாயக முன்னணியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக ரவி கருணாநாயக்கவை நியமித்தமை தொடர்பில் சுயாதீன விசாரணைகளை மேற்கொள்ள நான்கு பேர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்று இடம்பெற்ற கூட்டத்தின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.



இலங்கையர்களின் அரசாங்கம் இப்படித் தான் இருக்குமாம்!
[Thursday 2024-11-21 04:00]

புதிதாக நியமிக்கப்பட்ட அமைச்சரவையில் முஸ்லிம் பிரதிநிதித்துவம் குறைவாக இருப்பதாக தெரிவிக்கப்படும் விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் முகமாக, தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இலங்கையர்களின் அரசாங்கம் என்றும் சிங்களவர்கள், முஸ்லிம்கள் அல்லது தமிழர்களின் அரசாங்கம் அல்ல எனவும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க கூறினார்.



இன்று கூடுகிறது 10ஆவது நாடாளுமன்றம்!
[Thursday 2024-11-21 04:00]

இன்று கூடவுள்ள பத்தாவது பாராளுமன்றத்தின் முதல் அமர்வை சம்பிரதாயபூர்வமாகத் ஆரம்பிப்பதற்கான ஒத்திகை நேற்று பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது. பாராளுமன்ற அறிக்கையின்படி, 10வது பாராளுமன்றம் இன்று காலை 9:55 மணிக்கு வாக்கழைப்பு மணி ஒலித்ததைத் தொடர்ந்து, 10:00 மணிக்கு ஆரம்ப அமர்வு ஆரம்பமாகிறது.



70,000 மெட்ரிக் தொன் அரிசியை இறக்குமதி செய்ய அரசாங்கம் முடிவு!
[Thursday 2024-11-21 04:00]

உள்ளூர் சந்தையில் நிலவும் அரிசி பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் பொருட்டு 70,000 மெட்ரிக் தொன் நாட்டு அரிசியை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. சதொச கூட்டுறவு மொத்த விற்பனை ஸ்தாபனம் மற்றும் இலங்கை அரச வர்த்தக (பொது) கூட்டுத்தாபனம் ஆகியவற்றின் ஊடாக அரிசி இறக்குமதி செய்யப்படும் என வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார்.



சட்டத்திற்கு முரணான மதுபானசாலை அனுமதிப்பத்திரங்கள்- உயர்நீதிமன்றில் வழக்கு!
[Thursday 2024-11-21 04:00]

ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டதன் பின்னர், கலால் சட்டத்திற்கு முரணான மதுபானசாலை அனுமதிப்பத்திரங்களை வழங்கியதன் மூலம், அப்போதைய நிதியமைச்சர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் பிரதிவாதிகள் அடிப்படை மனித உரிமைகளை மீறியுள்ளதாக தீர்ப்பளிக்குமாறு கோரி, உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மனுவொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.



வடக்கு கிழக்கிற்கு வரப் போகும் ஆபத்து!
[Wednesday 2024-11-20 16:00]

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில இடங்களில் 48 மணி நேரத்தில் 350 மி. மீ. இனை விட கூடுதலாக மழைவீழ்ச்சி பதிவாகும் ஆபத்து உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.


Karan Remax-2010
NKS-Ketha-04-11-2021
Asayan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
Airlinktravel-2020-01-01
Ambikajewellers-01-08-2021-seithy
Rajeef sebarasha 2023/04/19
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Kugeenthiran-200-2022-seithy
 gloriousprinters.com 2021
Mahesan-Remax-169515-Seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா