Untitled Document
November 21, 2024 [GMT]
ஒற்றையாட்சி அரசியலமைப்புக்கு இந்தியா துணைபோக கூடாது!
[Thursday 2024-11-21 16:00]



ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவும் ஒற்றையாட்சியை மையப்படுத்திய அரசியலமைப்பு உருவாக்கத்தினை தமிழர்களின் ஆதரவுடன் முன்னெடுக்கவுள்ளதாக காண்பிப்பதற்கு திட்டமிட்டுள்ள நிலையில், அதற்கு ஆதரவளித்து இந்தியா வரலாற்றுத் தவறைச் செய்துவிடக்கூடாது என்று இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவிடம் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவும் ஒற்றையாட்சியை மையப்படுத்திய அரசியலமைப்பு உருவாக்கத்தினை தமிழர்களின் ஆதரவுடன் முன்னெடுக்கவுள்ளதாக காண்பிப்பதற்கு திட்டமிட்டுள்ள நிலையில், அதற்கு ஆதரவளித்து இந்தியா வரலாற்றுத் தவறைச் செய்துவிடக்கூடாது என்று இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவிடம் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கோரிக்கை விடுத்துள்ளார்.

  

பத்தாவது பாராளுமன்றத் தேர்தல் நிறைவின் பின்னரான நிலையில் சமகால மற்றும் எதிர்கால அரசியல்,பொருளாதார நிலைமைகள் சம்பந்தமான கலந்துரையாடலொன்று இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுக்கும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கும் இடையில் நேற்றையதினம் கொழும்பில் உள்ள இந்திய இல்லத்தில் நடைபெற்றிருந்தது. இந்தச் சந்திப்பில் கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார், மற்றும் பொதுச்செயலாளர் செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

இந்தச் சந்திப்பு தொடர்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்ததாவது,

இந்திய உயர்ஸ்தானிகரின் அழைப்பின் பேரில் நானும், எமது கட்சியின் பொதுச்செயலாளரும் சந்திப்பில் பங்கேற்றிருந்தோம். இதன்போது புதிய அரசாங்கத்தின் அடுத்தகட்டச் செயற்பாடுகள் சம்பந்தமாக கவனம் செலுத்தப்பட்டது. அச்சமயத்தில் நாம் எமது நிலைப்பாடுகளை தெளிவுபடுத்தியதோடு கோரிக்கையொன்றையும் முன்வைத்துள்ளோம்.

அந்தவகையில், தமிழர்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் இந்தியா தலையீடுகளைச் செய்ததன் விளைவாகவே இந்திய, இலங்கை ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. குறித்த ஒப்பந்தத்தில் சமஷ்டியை மையப்படுத்திய குணாம்சங்கள் காணப்படுகின்றன.

இருப்பினும் இந்திய, இலங்கை ஒப்பந்தத்தினை மலினப்படுத்தும் வகையிலும் தமிழ் மக்களின் சமஷ்டிக் கோரிக்கையை வலுவிழக்கச் செய்யும் வகையிலும் தான் 13ஆவது திருத்தச்சட்டம் கொண்டுவரப்பட்டது.

13ஆவது திருத்தச்சட்டம் ஒற்றையாட்சிக்குள் தமிழ் மக்களை வலிந்து திணப்பதாகும். அதன் காரணத்தினாலேயே நாம் அதனை நிராகரிக்கின்றோம்.

நாம் இந்திய, இலங்கை ஒப்பந்தத்தினை நிராகரிக்கவில்லை. அதனை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும்.

இவ்வாறான நிலையில், தற்போது அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் மூன்றிலிரண்டு பெரும்பான்மையைப் பெற்றுக்கொண்டுள்ளது.

அத்துடன் வடக்கு,கிழக்கிலும் ஆசனங்களைப் பெற்றுக்கொண்டுள்ளது. வழக்கமாகவே அரசாங்கத்துக்கு ஆதரவாக செல்கின்ற வாக்குகளின் அடிப்படையில் அவர்களுக்கு ஆசனங்கள் கிடைத்துள்ளன.

மாறாக தமிழ் தேசியத்துக்கு எதிராக மக்கள் வாக்களிக்கவில்லை. அதனை புள்ளிவிபரங்கள் மிகத்தெளிவாக காண்பிக்கின்றன. அவ்வாறு பெற்றுக்கொண்ட ஆசனங்களையும் வைத்துக்கொண்டு அநுரகுமார திசாநாயாக்க ஒற்றையாட்சியை மையப்படுத்திய புதியதொரு அரசியலமைப்பினை உருவாக்கவுள்ளார்.

தமிழ்த் தேசிய நிலைப்பாட்டில் உள்ள கட்சிகள் ஒன்றிணைந்து அதனை எதிர்த்தாலும் கூட, வடக்கு, கிழக்கில் தேசிய மக்கள் சக்தியானது தனது பிரதிநிதித்துவங்களை அடிப்படையாக வைத்துக்கொண்டு குறித்த ஒற்றையாட்சி அரசியலமைப்பை வடக்கு,கிழக்கு தமிழ் மக்களும் ஏற்றுக்கொண்டுள்ளார்கள் என்று உள்நாட்டிலும், உலகத்துக்கும் காண்பிக்கவுள்ளார்கள்.

இந்த விடயத்துக்கு இந்தியா துணைபோய்விடக்கூடாது. அநுர தலைமையிலான அரசாங்கத்தின் ஒற்றையாட்சியை மையப்படுத்திய அரசியலமைப்பை ஏற்றுக்கொண்டு தமிழ் மக்களை நடுத்தெரிவில் விடுகின்ற செயற்பாட்டிற்கு துணைபோய் வரலாற்றுத் தவறை இழைத்துவிடக்கூடாது என்பது எமது கோரிக்கையாகும்.

எம்மைப்பொறுத்தவரையில் நாம் சமஷ்டி அடிப்படையிலான ஒரு தீர்வுயோசனையை முன்வைக்கின்றபோது அதனை மையப்படுத்தி பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு தயாராகவே உள்ளோம்.

குறிப்பாக எமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூறியதைப்போன்று, தமிழ் மக்கள் பேரவையின் தேர்தல் விஞ்ஞாபனத்தை மையப்படுத்தியதாக அந்த கலந்துரையாடல் ஆரம்பமாகினால் அதில் பங்கேற்பதற்கு நாம் தயாராகவே இருக்கின்றோம்.

அதேநேரம், பொறுப்புக்கூறல் விடயத்தினை முன்னெடுப்பதற்கு நாம் இந்தச் சந்தர்ப்பத்தினை சரியானதொரு தருணமாகவே பார்க்கின்றோம்.

இந்தியா, இந்த விடயத்தில் நேரடியாக ஈடுபடுவதற்கு நெருக்கடியான நிலைமைகள் காணப்படுமாக இருந்தால் நிச்சயமாக மூன்றாவது தரப்பை மையப்படுத்திய நகர்வுகளை மேற்கொள்வதற்கான ஒத்துழைப்புக்களை வழங்குவது பொருத்தமானதாக இருக்கும். குறிப்பாக, ராஜபக்ஷக்களும், இனவாதிகளும் தென்னிலங்கையில் பலமிழந்துபோயுள்ள நிலையில், இலங்கையில் இழைக்கப்பட்ட மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமானச் சட்டமீறல்கள் தொடர்பில் பொறுப்புக்கூறுவதற்கு சர்வதேச குற்றவியல் நீதிவிசாரணையை முன்னெடுப்பது அவசியமாகும். அதன் மூலமாகவே நியாயமானதொரு நீதி நிலைநாட்டப்படும்.

தற்போதைய நிலையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் சாட்சியங்களைப் பெற்றுக்கொள்வதற்கான ஏதுநிலைகள் காணப்பட்டாலும் அவற்றை கட்டுறுத்தி அடுத்தகட்டமாக விசாரணைகளை முன்னெடுப்பதற்கான எந்தவொரு சூழல்களும் காணப்படவில்லை.

ஆகவே, சாட்சியங்கள் திரட்டப்பட்டு, அதற்கான ஆதரங்கள் வலுவாக்கப்பட்டு அடுத்தகட்ட விசாரணை நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு இந்தியா பகிரங்கமான ஒத்துழைப்புக்களை வெளியிட முடியாது போனாலும் கூட, எதிர்மறையான பிரதிபலிப்புக்களைச் செய்யாது இருக்க வேண்டும் என்றும் கோரியுள்ளோம்.

எமது கருத்துக்களை உயர்ஸ்தானிகர் செவிமடுத்துக்கொண்டதோடு அடுத்தகட்டமாக மேற்படி விடயங்களை ஆராய்வதாகவும் குறிப்பிட்டார் என்றார்.

  
   Bookmark and Share Seithy.com



இனவாதம், மதவாதம் தலையெடுக்க இடமளியேன்! - ஜனாதிபதி அறிவிப்பு.
[Thursday 2024-11-21 16:00]

பத்தாவது பாராளுமன்றின் முதலாவது அமர்வில் அரசாங்கத்தின் கொள்கை பிரகடனத்தை சபையில் முன்வைத்து ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று உரையாற்றினார்.



29 பிரதி அமைச்சர்கள் பதவியேற்பு!
[Thursday 2024-11-21 16:00]

29 பிரதி அமைச்சர்கள் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் சற்றுமுன்னர் சத்தியபிரமாணம் செய்து கொண்டனர். ஜனாதிபதி செயலகத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற நிகழ்வில் பிரதி அமைச்சர்கள் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.



தமிழ் அரசுக் கட்சியின் முதல் நாடாளுமன்றக் குழுக் கூட்டம்!
[Thursday 2024-11-21 16:00]

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியினது முதல் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் இன்று நாடாளுமன்ற நூலகத்தில் நடைபெற்றது. இதன் போது தமிழரசுக் கட்சியின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டார்கள்.



மல்லாவி விபத்தில் இரு இளைஞர்கள் பலி- ஒருவர் படுகாயம்!
[Thursday 2024-11-21 16:00]

முல்லைத்தீவு, மல்லாவி - வன்னிவிளாங்குளம் பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் 2 இளைஞர்கள் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார்.



சபாநாயகராக அசோக சப்புமல் ரன்வல தெரிவு!
[Thursday 2024-11-21 16:00]

தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அசோக சப்புமல் ரன்வல இலங்கையின் பத்தாவது நாடாளுமன்றத்தின் சபாநாயகராக நியமிக்கப்பட்டுள்ளார்.



எதிர்க்கட்சி தலைவர் ஆசனத்தை ஆக்கிரமித்த அர்ச்சுனாவின் கோமாளிக் கூத்து!
[Thursday 2024-11-21 16:00]

பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது பாராளுமன்ற அமர்வு இன்று இடம்பெற்றது. இன்றைய முதல்நாள் அமர்வில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக விசேடமான ஆசன ஒதுக்கீடுகள் எதுவும் இருக்காது என்பதுடன், விரும்பிய ஆசனத்தில் அமர்வதற்கான வாய்ப்புக் கிடைக்குமென அறிவிக்கப்பட்டிருந்தது.



வடக்கில் எந்த மறைமுக நிகழ்ச்சி நிரலும் இல்லை!
[Thursday 2024-11-21 16:00]

நாங்கள் வடக்குக்கு வருவதை பலரும் சந்தேகக் கண் கொண்டு பாா்க்கின்றாா்கள். ஆனால், வடபகுதிக்கு நாங்கள் வருவதில் எமக்கு எந்தவித மறைமுக நிகழ்ச்சியிலும் இல்லை” என்று யாழ்ப்பாணம் சென்ற இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென் ஹொங் தெரிவித்தார். இலங்கையின் உள்விவகாரங்களில் தாங்கள் தலையிடப்போவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.



எதிர்க்கட்சித் தலைவராக சஜித் பிரேமதாச நியமனம்!
[Thursday 2024-11-21 16:00]

பத்தாவது பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராக சஜித் பிரேமதாச நியமிக்கப்பட்டுள்ளார் என்று சபாநாயகர் கலாநிதி அசோக ரன்வல சபையில் அறிவித்தார்.



சிங்கள பௌத்த தேசத்தின் ஒற்றையாட்சிக்கான திசைகாட்டியே!
[Thursday 2024-11-21 15:00]

தற்போது வெற்றிக் களிப்பில் இருக்கும் திசைகாட்டி சிங்கள பௌத்த தேசத்தின் ஒற்றை ஆட்சிக்கான திசை காட்டியே தவிர தமிழர் தேசத்திற்கான திசை காட்டி அல்ல. எமக்கான தீர்வு இவர்கள் காலத்தில் கிட்டப்போவதில்லை என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.



வடக்கில் இராணுவ முகாம்கள் அகற்றப்படுகிறதாம்- நாமல் கவலை!
[Thursday 2024-11-21 04:00]

வட மாகாணத்தில் இராணுவ முகாம் அண்மையில் அகற்றப்பட்டமை மற்றும் எதிர்வரும் மாதங்களில் மேலும் பல முகாம்களை அகற்ற திட்டமிட்டுள்ளமை குறித்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய ஒருங்கிணைப்பாளர், பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, கவலை வெளியிட்டுள்ளார்.



மன்னார் வைத்தியசாலை முன் நீதி கோரி போராட்டம்! Top News
[Thursday 2024-11-21 04:00]

மன்னார் பொது வைத்தியசாலையில் மகப் பேற்றுக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணம் அடைந்த தாய் மற்றும் சிசுவின் மரணத்திற்கு நீதி கோரி மன்னார் பொது வைத்தியசாலைக்கு முன்பாக நேற்று மாலை 4.30 மணியளவில் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் இரவு 8 மணியளவில் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.



டிக் டொக்கில் வேட்பாளருக்கு அபகீர்த்தி- வவுனியாவில் வைத்து லண்டன் பெண் கைது!
[Thursday 2024-11-21 04:00]

லண்டனில் இருந்து வவுனியாவிற்கு வருகை தந்து சமூக வலைத்தளம் மூலம் நபர் ஒருவருக்கு அபகீர்த்தியை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.



திட்டமிட்டபடி திங்களன்று பரீட்சை தொடங்கும்!
[Thursday 2024-11-21 04:00]

2024 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர உயர் தர பரீட்சை திட்டமிட்டபடி நவம்பர் 25ஆம் திகதி ஆரம்பமாகும் என கல்வியமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



மட்டக்களப்பில் இரண்டரை கோடி ரூபா கொள்ளை!
[Thursday 2024-11-21 04:00]

மட்டக்களப்பு- கல்லடி பிரதேசத்தில் தனித்திருந்த சுவிஸ் நாட்டு பிரஜையான பெண்ணொருவரை தாக்கிவிட்டு இரண்டு கோடி 40 லட்சம் ரூபாய் வெளிநாட்டு நாணயங்கள் மற்றும் 10 கிராம் தங்கம் மாலை 29 ஆயிரம் ரூபாய் இலங்கை நாணயம் என்பன கொள்ளையிடப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.



ரவியின் தேசியப் பட்டியல் நியமனம்- விசாரணைக்கு நால்வர் குழு!
[Thursday 2024-11-21 04:00]

புதிய ஜனநாயக முன்னணியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக ரவி கருணாநாயக்கவை நியமித்தமை தொடர்பில் சுயாதீன விசாரணைகளை மேற்கொள்ள நான்கு பேர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்று இடம்பெற்ற கூட்டத்தின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.



இலங்கையர்களின் அரசாங்கம் இப்படித் தான் இருக்குமாம்!
[Thursday 2024-11-21 04:00]

புதிதாக நியமிக்கப்பட்ட அமைச்சரவையில் முஸ்லிம் பிரதிநிதித்துவம் குறைவாக இருப்பதாக தெரிவிக்கப்படும் விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் முகமாக, தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இலங்கையர்களின் அரசாங்கம் என்றும் சிங்களவர்கள், முஸ்லிம்கள் அல்லது தமிழர்களின் அரசாங்கம் அல்ல எனவும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க கூறினார்.



இன்று கூடுகிறது 10ஆவது நாடாளுமன்றம்!
[Thursday 2024-11-21 04:00]

இன்று கூடவுள்ள பத்தாவது பாராளுமன்றத்தின் முதல் அமர்வை சம்பிரதாயபூர்வமாகத் ஆரம்பிப்பதற்கான ஒத்திகை நேற்று பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது. பாராளுமன்ற அறிக்கையின்படி, 10வது பாராளுமன்றம் இன்று காலை 9:55 மணிக்கு வாக்கழைப்பு மணி ஒலித்ததைத் தொடர்ந்து, 10:00 மணிக்கு ஆரம்ப அமர்வு ஆரம்பமாகிறது.



70,000 மெட்ரிக் தொன் அரிசியை இறக்குமதி செய்ய அரசாங்கம் முடிவு!
[Thursday 2024-11-21 04:00]

உள்ளூர் சந்தையில் நிலவும் அரிசி பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் பொருட்டு 70,000 மெட்ரிக் தொன் நாட்டு அரிசியை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. சதொச கூட்டுறவு மொத்த விற்பனை ஸ்தாபனம் மற்றும் இலங்கை அரச வர்த்தக (பொது) கூட்டுத்தாபனம் ஆகியவற்றின் ஊடாக அரிசி இறக்குமதி செய்யப்படும் என வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார்.



சட்டத்திற்கு முரணான மதுபானசாலை அனுமதிப்பத்திரங்கள்- உயர்நீதிமன்றில் வழக்கு!
[Thursday 2024-11-21 04:00]

ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டதன் பின்னர், கலால் சட்டத்திற்கு முரணான மதுபானசாலை அனுமதிப்பத்திரங்களை வழங்கியதன் மூலம், அப்போதைய நிதியமைச்சர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் பிரதிவாதிகள் அடிப்படை மனித உரிமைகளை மீறியுள்ளதாக தீர்ப்பளிக்குமாறு கோரி, உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மனுவொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.



வடக்கு கிழக்கிற்கு வரப் போகும் ஆபத்து!
[Wednesday 2024-11-20 16:00]

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில இடங்களில் 48 மணி நேரத்தில் 350 மி. மீ. இனை விட கூடுதலாக மழைவீழ்ச்சி பதிவாகும் ஆபத்து உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.


Mahesan-Remax-169515-Seithy
Karan Remax-2010
Logan-Kumaresh-Homelife-02-02-2021
NKS-Ketha-04-11-2021
Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
Asayan-Salon-2022-seithy
Rajeef sebarasha 2023/04/19
Ambikajewellers-01-08-2021-seithy
 gloriousprinters.com 2021
Airlinktravel-2020-01-01
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா