Untitled Document
November 23, 2024 [GMT]
புலம்பெயர் தமிழரின் வலைக்குள் ஜனாதிபதி விழுந்து விடக் கூடாது!
[Saturday 2024-11-23 05:00]


வடக்கு மக்கள் இனவாதம், பிரிவினைவாதத்தை முடிவுக்கு கொண்டு வந்து தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளித்துள்ளார்கள். பிரிவினைவாதத்தை போசிக்கும் புலம்பெயர் தமிழ் அமைப்புக்களின் நோக்கங்களுக்கமைய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க செயற்பட கூடாது என தேசிய சுதந்திர முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர தெரிவித்தார்.

வடக்கு மக்கள் இனவாதம், பிரிவினைவாதத்தை முடிவுக்கு கொண்டு வந்து தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளித்துள்ளார்கள். பிரிவினைவாதத்தை போசிக்கும் புலம்பெயர் தமிழ் அமைப்புக்களின் நோக்கங்களுக்கமைய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க செயற்பட கூடாது என தேசிய சுதந்திர முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர தெரிவித்தார்.

  

தேசிய சுதந்திர முன்னணியின் காரியாலயத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தனது கொள்கை பிரகடனத்தில் இந்த நாட்டில் இனி இனவாதத்துக்கும், மதவாதத்துக்கும் இடமில்லை என்று குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி அண்மைகாலமாக இவ்வாறு குறிப்பிடுவதை அவதானிக்க முடிகிறது.

தேசிய மக்கள் சக்திக்கு கிடைத்துள்ள ஆணை அமோகமானது. வடக்கு மக்கள் இனவாதம், பிரிவினைவாதத்தை முடிவுக்கு கொண்டு வந்துள்ளார்கள். பிரிவினைவாதத்தை முன்னிலைப்படுத்தி செயற்பட்ட எம்.ஏ. சுமந்திரனையும் தோற்கடித்துள்ளார்கள். இருப்பினும் ஏனைய பிரிவினைவாதிகள் பாராளுமன்றத்துக்கு தெரிவாகியுள்ளனர்.

வடக்கு மக்கள் வழங்கியுள்ள இனவாதமற்ற ஆணையை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும், தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கும் உண்டு.ஜனாதிபதிக்கு வாழ்த்து தெரிவித்துள்ள கனடா வாழ் புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் பிரிவினைவாதத்தை ஊக்குவிக்கும் வகையில் யோசனைகளை முன்வைத்துள்ளன.

பிரிவினைவாதத்தை போசிக்கும் புலம்பெயர் தமிழ் அமைப்புக்களின் நோக்கங்களுக்கமைய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க செயற்பட கூடாது. வடக்கு மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு கொள்கை அடிப்படையில் தீர்வு காண வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளோம்.

இனங்களுக்கிடையில் முரண்பாடுகளை தோற்றுவிக்கும் அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த பல்வேறு தரப்பினர் அரசாங்கத்துக்கு அழுத்தம் பிரயோகிக்கின்றனர். நாட்டின் ஒருமைப்பாட்டை பாதுகாத்த இராணுவத்தினரை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு ஜனாதிபதிக்கும் ,அரசாங்கத்துக்கும் உண்டு.

நாட்டின் ஒற்றையாட்சிக்கு முன்னுரிமை வழங்கி அரசாங்கம் செயற்பட வேண்டும். தேசியத்துக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் அரசாங்கம் தீர்மானங்களை எடுத்தால் சமூக கட்டமைப்பில் பாரிய நெருக்கடிகள் ஏற்படும். நாட்டின் நலன் கருதி அரசாங்கம் எடுக்கும் சிறந்த தீர்மானங்களுக்கு நிபந்தனையற்ற வகையில் ஒத்துழைப்பு வழங்குவோம்.

புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. புதிய யாப்பு வரைவின் உள்ளடக்கம் குறித்து ஆராய்ந்து வருகிறோம். வெகுவிரைவில் அவற்றையும் பகிரங்கப்படுத்துவோம் என்றார்.

  
   Bookmark and Share Seithy.com



தடை செய்வோம் என்றவர்கள் முதல் அமைச்சரவையில் அரிசி இறக்குமதிக்கு அனுமதி!
[Saturday 2024-11-23 05:00]

இனவாத அரசியலுக்கு இனி இடமளிக்கப் போவதில்லை என்று கூறும் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) 1971இல் மாகாணசபை முறைமையூடாக வடக்கு , கிழக்கிற்கு அதிகாரத்தை வழங்குவதற்கு எதிர்ப்பினை வெளியிட்டது. எவ்வாறிருப்பினும் 53 ஆண்டுகளின் பின்னர் தமது கொள்கைகளை மாற்றிக் கொண்டு இனவாத அரசியலுக்கு இடமில்லை என நிலைப்பாடுக்கு வந்துள்ளமை மகிழ்ச்சிக்குரியது என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.



இனவாதம், பிரிவினைவாதம் இல்லை- விமல் வீரவன்சவுக்கு கனடிய தமிழர் பேரவை பதில்.
[Saturday 2024-11-23 05:00]

இன, மதவாதக் கருத்துக்களை தெரிவித்து மக்களை ஏமாற்ற நினைப்பதை தவிர்த்து முறையான முன்னேற்றகரமான அனைவரையும் உள்ளடக்கிய அரசியலில் ஈடுபடுவதே சிறந்தது என்று கனடியத் தமிழர் பேரவையின் தலைவர் குமார் இரத்தினம் தெரிவித்துள்ளார்.



பாதுகாப்பு அமைச்சராக பொறுப்பேற்றார் அனுர!
[Saturday 2024-11-23 05:00]

தாய்நாட்டை சிறந்த நாடாக மாற்றுவதற்கு ஒன்றிணைந்து செயற்படுமாறு அனைத்து அரச ஊழியர்களுக்கும் அழைப்பு விடுக்கின்றேன் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.



வங்க கடலில் தாழமுக்கம் - கிழக்கு கரையை ஒட்டி நகரப் போகிறது!
[Saturday 2024-11-23 05:00]

வங்காள விரிகுடாவின் தென்கிழக்குப் பகுதியில் தாழ் அமுக்கப் பிரதேசம் ஒன்று இன்று உருவாகின்றது. இது தொடர்ந்து வருகின்ற இரண்டு நாட்களில் மேலும் தீவிரமடைந்து தாழ் அமுக்கமாக வங்காள விரிகுடாவின் தென்மேற்குப் பகுதியில் காணப்படும். இந்த தாழ் அமுக்கமானது மேலும் தீவிரமடைவதுடன் இலங்கையின் கிழக்குக் கரையை அண்மித்ததாக நகர்ந்து செல்லும் என எதிர்பார்க்கப்படுவதாக சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறினார்.



துயரங்களுக்கு வன்முறைகள் பதிலாகாது!
[Saturday 2024-11-23 05:00]

“துயரங்களுக்கு வன்முறைகள் பதிலாகாது” மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் திட்டமிட்டு தோற்றுவிக்கப்பட்ட அவசர நிலை குறித்து மன்னார் வைத்தியசாலை பணிப்பாளர் , வைத்திய நிபுணர்கள் , வைத்தியர்கள் , துணை மருத்துவ உத்தியோகத்தர்கள், தாதிய உத்தியோகத்தர்கள் குடும்ப நல உத்தியோகத்தர்கள் , சுகாதார ஊழியர்கள், நோயளர் காவு வண்டி சாரதிகள், தொழில்நுட்ப உதவியாளர்கள் இணைந்து அறிக்கை ஒன்றை விடுத்துள்ளனர்.



ஐஎம்எவ் பேச்சு வெற்றி!
[Saturday 2024-11-23 05:00]

சர்வதேச நாணய நிதியத்துடன் நடத்தப்பட்ட மூன்றாவது மீளாய்வு கலந்துரையாடல் நேற்று ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. இதில் சர்வதேச நாணய நிதியத்தின் சார்பில் சிரேஷ்ட தூதுக்குழு பிரதானி பீட்டர் ப்ரூவர் உள்ளிட்ட பிரதிநிதிகள் கலந்துகொண்டிருந்ததுடன் இலங்கை அரசாங்கம் சார்பில் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ உள்ளிட்ட குழுவினரும் கலந்துகொண்டனர்.



பழிவாங்கும் நோக்கிலேயே விசாரணைக்கு அழைக்கின்றனர்!
[Saturday 2024-11-23 05:00]

கோட்டாபய ராஜபக்ஷவை ஆட்சியில் அமர்த்துவதற்காக உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டதாகவும், நான் சிறைச்சாலையிலிருந்து கொண்டு சதித்திட்டம் தீட்டியதாகவும் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் அடிப்படையற்றவை என முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.



சஜித்தை சந்தித்த ஐஎம்எவ் பிரதிநிதிகள்!
[Saturday 2024-11-23 05:00]

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கும், சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவிற்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று நேற்று கொழும்பில் இடம்பெற்றது.



ரணில் என்னை நீக்க முடியாது!
[Saturday 2024-11-23 05:00]

புதிய ஜனநாயக முன்னணியின் தேசியப் பட்டியல் உறுப்பினராக என்னை நியமித்ததற்கு ஐக்கிய தேசிய கட்சியின் 99 வீதமானவர்கள் ஆதரவு. கட்சியில் இருக்கும் ஒரு சிலர் இந்த விடயத்தில் ரணில் விக்ரமசிங்கவை பணயக்கைதியாக வைத்திருக்கின்றனர் என புதிய ஜனநாயக முன்னணியின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.



கனடாவில் மகன் கத்தியால் குத்தியதில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தந்தை பலி!- மகன் கைது.
[Friday 2024-11-22 17:00]

கனடா - ஸ்காபரோவில் மகன் கத்தியால் குத்தியதில் தந்தை உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவத்தில் யாழ்ப்பாணம் அரியாலையை சேர்ந்த 66 வயதுடைய குலதுங்கம் மதிசூடி என்பவரே உயிரிழந்தார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



அர்ச்சுனாவுக்கு எதிராக சிஐடியில் முறைப்பாடு!
[Friday 2024-11-22 17:00]

புதிய பாராளுமன்ற உறுப்பினராக பதவிப் பிரமாணம் செய்து கொண்ட ராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராக சிவில் செயற்பாட்டாளர்கள் குழுவொன்று குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு ஒன்றை சமர்ப்பித்துள்ளனர்.



மின்கட்டணத் திருத்தம் இந்த வருடம் இல்லை!
[Friday 2024-11-22 17:00]

மின்சார கட்டண திருத்தம் தொடர்பான அறிக்கையினை இலங்கை மின்சார சபை இன்றுவரை சமர்ப்பிக்காத நிலையில், மின்சார கட்டணத் திருத்தம் தொடர்பான இறுதித் தீர்மானத்தை இந்த வருடம் அறிவிக்க முடியாது என அந்த ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.



அம்பாறையில் வாக்குகளை மீள எண்ணுமாறு கோரி அதாவுல்லா மகஜர்!
[Friday 2024-11-22 17:00]

திகாமடுல்ல மாவட்ட வாக்குகளை மீள எண்ண வேண்டுமெனக் கோரி தேர்தல் ஆணைக்குழுவுக்கு மகஜர் ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.



உயர்தரப் பரீட்சை காலத்தில் அனர்த்தங்களை எதிர்கொள்ள தயார் நிலை!
[Friday 2024-11-22 17:00]

2024 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சை காலத்தில் ஏற்படக்கூடிய அனர்த்தங்களைத் தவிர்ப்பதற்காகவும், பரீட்சையை இடையூறு இன்றி நடத்துவதற்காகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மற்றும் பரீட்சை திணைக்களமும் இணைந்து விஷேட வேலைத்திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்தியுள்ளன.



யாழ்ப்பாணத்தில் அடைமழையினால் 2300 பேர் பாதிப்பு! Top News
[Friday 2024-11-22 17:00]

யாழ்குடா நாட்டில் தொடர்ச்சியாக பெய்த அடை மழை காரணமாக 610 குடும்பங்களைச் சேர்ந்த 2294 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 20 வீடுகள் சேதமடைந்துள்ளதாக யாழ்.மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.



பாடசாலை மாணவிகளை குறிவைத்து நடக்கும் மோசடி!- எச்சரிக்கை.
[Friday 2024-11-22 17:00]

இலங்கையில் பாடசாலை மாணவிகளின் புகைப்படங்களை ஏ.ஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நிர்வாண புகைப்படங்களாக வடிவமைத்து மாணவிகளை அச்சுறுத்தி மோசடியில் ஈடுபடும் சம்பவங்கள் அதிகரித்துள்ளது.



பிள்ளையானிடம் இன்றும் விசாரணை!
[Friday 2024-11-22 17:00]

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் என்றழைக்கப்பும் சிவநேசத்துரை சந்திரகாந்தன் இன்றும் வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.



எம்.பி.க்களுக்கு சொகுசு வாகனங்கள் இல்லை!
[Friday 2024-11-22 17:00]

அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் எரிபொருள் சிக்கன வாகனக்கள் வழங்கப்படும் என, பொது பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.



சிறிகொத்தா முன் பதற்றம்!
[Friday 2024-11-22 17:00]

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஐக்கிய தேசிய கட்சியின் ஆதரவாளர்கள் குழுவொன்று கட்சிக்கு புத்துயிர் அளிப்பது தொடர்பான ஆவணமொன்றை கையளிப்பதற்காக, சிறிகொத்தவுக்கு வருகை தந்த போதே, அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.



தமிழரசு நாடாளுமன்றக் குழு இந்தியத் தூதுவருடன் சந்திப்பு! Top News
[Friday 2024-11-22 04:00]

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுவினருக்கும், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் நடைபெற்றுள்ளது.


Logan-Kumaresh-Homelife-02-02-2021
NKS-Ketha-04-11-2021
Kugeenthiran-200-2022-seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Vaheesan-Remax-2016
Mahesan-Remax-169515-Seithy
 gloriousprinters.com 2021
Airlinktravel-2020-01-01
Rajeef sebarasha 2023/04/19
Karan Remax-2010
Asayan-Salon-2022-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா