Untitled Document
December 4, 2024 [GMT]
ஒருங்கிணைப்பு தலைவர் பதவியும் இல்லை- என்பிபியின் யாழ். எம்.பிக்கள் மூவருக்கும் ஏமாற்றம்!
[Sunday 2024-12-01 04:00]


யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராக கடற்றோழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் நியமிக்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராக கடற்றோழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் நியமிக்கப்பட்டுள்ளார்.

  

ஜனாதிபதியினால் கடந்த 28 ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்படும் வகையில் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராக பாராளுமன்ற உறுப்பினரும், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவரது நியமனம் தொடர்பாக பொது நிர்வாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் போராசிரியர் ஏ. எச்.எம்.எச். அபயரத்ன அவர்களினால் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சருக்கு முகவரியிடப்பட்டு யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபருக்கு கடிதம் மூலம் அறியத்தரப்பட்டுள்ளது.

  
   Bookmark and Share Seithy.com



பார் பட்டியல் வெளியானது - கிளிநொச்சிக்கே அதிகம்!
[Wednesday 2024-12-04 18:00]

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் வழங்கப்பட்ட மதுபான சாலை அனுமதிப் பத்திரங்கள் தற்போது வெளியாகியுள்ளன. அதன்படி ரணிலினால் வழங்கப்பட்ட மதுபான சாலை அனுமதிப் பத்திரங்கள் பற்றிய முழுமையான விவரங்கள் - FL4 எனப்படும் சில்லறை (wine stores) அனுமதிப் பத்திரங்கள் மாவட்டவாரியாக அமைச்சரும் சவைத்தலைவருமான பிமல் ரத்நாயக்கவினால் வெளியிடப்பட்டுள்ளன.



முகநூலில் பிரபாகரன் படத்தை பதிவிட்டதாக கைதான இளைஞனுக்கு பிணை!
[Wednesday 2024-12-04 18:00]

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் புகைப்படத்தை முகநூலில் பதிவிட்டதாக கைதான இளைஞருக்கு பிணை வழங்கி யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.



இனவாத அரசாங்கம் வெளியிட்ட சுற்றறிக்கையை நீங்கள் எப்படி நடைமுறைப்படுத்த முடியும்?
[Wednesday 2024-12-04 18:00]

யுத்தத்தின்போது உயிரிழந்த தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர்களையும் தங்கள் உயிர்களை இழந்த தமிழர்களையும் நினைவுகூருவதும் ஜேவிபியின் நினைவுகூரல்களும் ஒரேமாதிரியானவை. வித்தியாசங்கள் இருக்க முடியாது என தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்



இராணுவப் புலனாய்வு பணிப்பாளர் இடமாற்றம்!
[Wednesday 2024-12-04 18:00]

இராணுவ புலனாய்வுப்பிரிவின் பணிப்பாளர் பிரிகேடியர் சந்திக்க மஹாதந்தில, உடனடியாக அமுலாகும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவர் மேல் மாகாண இராணுவ கட்டளை தலைமையகத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். சுமார் 20 வருடகாலம் இராணுவ புலனாய்வுப் பிரிவில் பல முக்கிய பதவிகளை சந்திக்க வகித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் இருந்து ஹிருணிகா விடுதலை!
[Wednesday 2024-12-04 17:00]

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர நீதிமன்றத்தை அவமதித்ததாகக் குற்றம் சுமத்தி அவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையை நிறைவு செய்த மேன்முறையீட்டு நீதிமன்றம், குறித்த குற்றச்சாட்டுக்களில் இருந்து அவரை விடுவிக்க இன்று உத்தரவிட்டது.



பார் அனுமதி பட்டியல் இன்று மாலை வெளியாகும்!
[Wednesday 2024-12-04 17:00]

மதுபானசாலைகள் (பார்) அனுமதி பட்டியல் இன்று மாலை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என சுகாதார அமைச்சரின் ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளர் நளிந்த ஜயதிஸ்ஸ பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.



தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும்!
[Wednesday 2024-12-04 17:00]

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் கோரிக்கை விடுத்துள்ளார்.



பயங்கரவாதத் தடைச்சட்டத்தை பயன்படுத்தி ஊடக அடக்குமுறை!
[Wednesday 2024-12-04 17:00]

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முற்றாக நீக்குவோம் எனக் கூறி ஆட்சிக்கு வந்த அரசு இந்தச் சட்டத்தை பயன்படுத்தி பேச்சுச் சுதந்திரம், ஊடக சுதந்திரம் மற்றும் சிவில் உரிமைகளைப் பறித்து வருகிறது.பயங்கரவாதத் தடைச் சட்டத்தை பயன்படுத்தி ஊடக அடக்கு முறைகளில் ஈடுபடுவதை ஏற்கமுடியாது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.



மாவீரர் நாள் குறித்து பொய் தகவல் வெளியிட்டதாக கைது செய்யப்பட்டவர் விடுவிப்பு!
[Wednesday 2024-12-04 17:00]

தமிழீழ மாவீரர் தினத்தை முன்னிட்டு தனது முகநூல் பக்கத்தில் பொய்யான தகவல்களை வெளியிட்ட குற்றச்சாட்டின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சமூக ஆர்வலர் கெலும் ஜயசுமனவை பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் திலின கமகே, இன்று உத்தரவிட்டுள்ளார்.



வளிமண்டலவியல் திணைக்களத்தின் இணையத்தளம் மீது மீண்டும் சைபர் தாக்குதல்!
[Wednesday 2024-12-04 17:00]

வளிமண்டலவியல் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் குறுகிய காலத்திற்குள் இரண்டாவது முறையாகவும் ஹேக் செய்யப்பட்டுள்ளது.



தோல்வியடைந்துள்ளவர்கள் இனவாதத்தை மீண்டும் தூண்டிவிட முயற்சிக்கிறார்கள்!
[Wednesday 2024-12-04 17:00]

அரசியலில் தோல்வியடைந்துள்ளவர்கள் இனவாதத்தை மீண்டும் தூண்டிவிட முயற்சிக்கிறார்கள். இனவாத செயற்பாடுகளை தோற்கடிக்க கடுமையான நடவடிக்கைகளை எடுப்போம் .அரசியலுக்காக மக்களையும் மாகாணங்களையும், வேறுபடுத்திய காலம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.



இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்!
[Wednesday 2024-12-04 17:00]

பருத்தித்துறை கடற்பரப்பில் எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றத்திற்காக காரைக்கால் மீனவர்கள் 18 பேர் நேற்று கைது செய்யப்பட்டனர். குறித்த 18 இந்திய மீனவர்களையும் யாழ்ப்பாணம் நீரியல்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் பருத்தித்துறை நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டனர். இவ் வழக்கை விசாரித்த நீதிபதி கிருசாந்தன் பொன்னுத்துரை மீனவர்களை எதிர்வரும் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.



188 கிலோ கஞ்சாவுடன் சிக்கியது படகு!
[Wednesday 2024-12-04 17:00]

யாழ்ப்பாணம்- மண்டைதீவு கடல் பகுதியில் 188 கிலோ கிராம் கஞ்சா தொகை கடற்படையினரால் இன்று அதிகாலை கைப்பற்றப்பட்டுள்ளது. சந்தேகத்துக்கிடமான முறையில் பயணித்த டிங்கி படகினை சோதனை செய்ய முற்பட்ட போது படகில் இருந்த இரண்டு நபர்கள் தப்பிச் சென்ற நிலையில் 188 கிலோ கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும் படகின் உரிமையாளர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கடற்படையின் புலனாய்வு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.



3 வேளையும் நாடாளுமன்ற உணவகத்தில் சாப்பிடும் என்பிபி உறுப்பினர்கள்!
[Wednesday 2024-12-04 17:00]

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமைகளை குறைக்கும் என எதிர்பார்த்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.



யாழ்ப்பாணத்தில் 13 நாட்களில் 700 மி.மீ மழை!
[Monday 2024-12-02 05:00]

யாழ்ப்பாணத்தில் கடந்த 18ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 01ஆம் திகதிவரையிலான காலப்பகுதியில், 697.4 மில்லி மீற்றர் மழை கிடைக்கப் பெற்றுள்ளது எனவும், அதனால் 21ஆயிரத்து 987 குடும்பங்களை சேர்ந்த 73ஆயிரத்து 693 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் யாழ். மாவட்ட செயலர் ம.பிரதீபன் தெரிவித்துள்ளார்.



தேசியத் தலைவரின் படத்தை பதிவிட்ட இளைஞனுக்கு விளக்கமறியல்!
[Monday 2024-12-02 05:00]

விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரின் புகைப்படத்தை முகநூலில் பதிவிட்டதாக கைதான இளைஞரை எதிர்வரும் 4ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.



ஓமந்தையில் வாள்வெட்டுக்கு ஒருவர் பலி!
[Monday 2024-12-02 05:00]

வவுனியா- ஓமந்தை சேமமடு பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் குடும்பஸ்தர் ஒருவர் பலியாகியுள்ளார். ஞாயிற்றுக்கிழமை மாலை குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.



உத்தியோகபூர்வ இல்லங்களுக்கு விண்ணப்பித்துள்ள பெருமளவு என்பிபி எம்.பிக்கள்!
[Monday 2024-12-02 05:00]

பாராளுமன்ற உறுப்பினர் அளவுக்கதிகமாக சிறப்புரிமைகளை அனுபவித்து வருவதாக தேர்தல் மேடைகளில் பிரசாரங்களை மேற்கொண்ட தேசிய மக்கள் சக்தியின் எம்.பி.க்களில் பெருமளவானோர் இன்று உத்தியோகபூர்வ இல்லங்களுக்கு விண்ணப்பித்திருக்கின்றனர்.



தேசிய பட்டியல் ஆசனத்துக்கு காஞ்சன விஜேசேகர!
[Monday 2024-12-02 05:00]

புதிய ஜனநாயக முன்னணியின் எஞ்சியுள்ள தேசிய பட்டியல் ஆசனத்துக்கு முன்னாள் அமைச்சர் காஞ்சன விஜேசேகர நியமிக்கப்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகமுள்ளன.



தேங்காய் விலை 22 ரூபாவைத் தொட்டது!
[Monday 2024-12-02 05:00]

தற்போது சந்தையில் தேங்காய்க்கு தட்டுப்பாடு நிலவி வருவதால், தேங்காய் விலை அதிகளவில் உயர்ந்துள்ளது. இதன்படி சந்தையில் தேங்காய் ஒன்றின் விலை 200 ரூபா வரையில் உயர்ந்துள்ளது. சந்தையில் அரிசி மற்றும் தேங்காய்க்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.


Asayan-Salon-2022-seithy
Airlinktravel-2020-01-01
 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
Karan Remax-2010
Mahesan-Remax-169515-Seithy
NKS-Ketha-04-11-2021
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Ambikajewellers-01-08-2021-seithy
Vaheesan-Remax-2016
Rajeef sebarasha 2023/04/19
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா