Untitled Document
December 4, 2024 [GMT]
ஓமந்தையில் வாள்வெட்டுக்கு ஒருவர் பலி!
[Monday 2024-12-02 05:00]


வவுனியா- ஓமந்தை சேமமடு பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் குடும்பஸ்தர் ஒருவர் பலியாகியுள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை  மாலை குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வவுனியா- ஓமந்தை சேமமடு பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் குடும்பஸ்தர் ஒருவர் பலியாகியுள்ளார். ஞாயிற்றுக்கிழமை மாலை குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

  

குறித்த பகுதியில் மாடுகளை சாய்த்துக்கொண்டுவந்த குடும்பஸ்தர் மீது குழுவொன்று வாளால் வெட்டியுள்ளது. இதனால் படுகாயமடைந்த அவர் அங்கிருந்தவர்களால் மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் அவர் ஏற்கனவே இறந்துள்ளதாக வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தில் நாவற்குளம் பகுதியை சேர்ந்த செல்வநிரோயன் வயது 46 என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே பலியாகியுள்ளார். சம்பவம் தொடர்பாக ஓமந்தை பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.

  
   Bookmark and Share Seithy.com



யாழ்ப்பாணத்தில் 13 நாட்களில் 700 மி.மீ மழை!
[Monday 2024-12-02 05:00]

யாழ்ப்பாணத்தில் கடந்த 18ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 01ஆம் திகதிவரையிலான காலப்பகுதியில், 697.4 மில்லி மீற்றர் மழை கிடைக்கப் பெற்றுள்ளது எனவும், அதனால் 21ஆயிரத்து 987 குடும்பங்களை சேர்ந்த 73ஆயிரத்து 693 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் யாழ். மாவட்ட செயலர் ம.பிரதீபன் தெரிவித்துள்ளார்.



தேசியத் தலைவரின் படத்தை பதிவிட்ட இளைஞனுக்கு விளக்கமறியல்!
[Monday 2024-12-02 05:00]

விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரின் புகைப்படத்தை முகநூலில் பதிவிட்டதாக கைதான இளைஞரை எதிர்வரும் 4ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.



உத்தியோகபூர்வ இல்லங்களுக்கு விண்ணப்பித்துள்ள பெருமளவு என்பிபி எம்.பிக்கள்!
[Monday 2024-12-02 05:00]

பாராளுமன்ற உறுப்பினர் அளவுக்கதிகமாக சிறப்புரிமைகளை அனுபவித்து வருவதாக தேர்தல் மேடைகளில் பிரசாரங்களை மேற்கொண்ட தேசிய மக்கள் சக்தியின் எம்.பி.க்களில் பெருமளவானோர் இன்று உத்தியோகபூர்வ இல்லங்களுக்கு விண்ணப்பித்திருக்கின்றனர்.



தேசிய பட்டியல் ஆசனத்துக்கு காஞ்சன விஜேசேகர!
[Monday 2024-12-02 05:00]

புதிய ஜனநாயக முன்னணியின் எஞ்சியுள்ள தேசிய பட்டியல் ஆசனத்துக்கு முன்னாள் அமைச்சர் காஞ்சன விஜேசேகர நியமிக்கப்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகமுள்ளன.



தேங்காய் விலை 22 ரூபாவைத் தொட்டது!
[Monday 2024-12-02 05:00]

தற்போது சந்தையில் தேங்காய்க்கு தட்டுப்பாடு நிலவி வருவதால், தேங்காய் விலை அதிகளவில் உயர்ந்துள்ளது. இதன்படி சந்தையில் தேங்காய் ஒன்றின் விலை 200 ரூபா வரையில் உயர்ந்துள்ளது. சந்தையில் அரிசி மற்றும் தேங்காய்க்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.



காஞ்சனவுக்கு சென்ற தரகுப்பணம் இப்போது என்பிபிக்கு போகிறது!
[Monday 2024-12-02 05:00]

எரிபொருள் இறக்குமதியின் போது முன்னாள் அமைச்சர் காஞ்சன விஜேசேகரவுக்கு சென்ற தரகுப்பணம் தற்போதைய அரசாங்கத்துக்கும் செல்கிறது. இந்த மக்களை சுரண்டி பிழைக்கிறது என ஐக்கிய ஒன்றிணைந்த தொழிற்சங்கத்தின் ஊடக பேச்சாளர் ஆனந்த பாலித்த தெரிவித்தார்.



வடக்கில் முதலீட்டாளர்கள் மன்றம் - ஆளுநர் வாக்குறுதி!
[Monday 2024-12-02 05:00]

வடக்கு மாகாணத்தில் முதலீட்டாளர்கள் மன்றத்தை உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் எதிர்வரும் காலத்தில் மேற்கொள்ளப்படும் என வடக்கு மாகாண கௌரவ நா.வேதநாயகன் அவர்கள், யாழ் வணிகர் கழகப் பிரதிநிதிகளிடம் தெரிவித்தார்.



யாழ்ப்பாணத்தில் போதைமாத்திரைகளுடன் இருவர் கைது!
[Monday 2024-12-02 05:00]

யாழ்.பொலிஸ் பிரிவில் , போதை மாத்திரைகளுடன் சந்தேக நபர்கள் இருவர் சனிக்கிழமை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் விசேட அதிரடிப்படையின் யாழ்ப்பாண முகாமின் அதிகாரிகள் குழுவொன்று மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.



பிரபாகரனின் பிறந்த நாளை கொண்டாடியவர்கள் மீது விசாரணை!
[Sunday 2024-12-01 18:00]

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வே. பிரபாகரனின் பிறந்த நாள் கொண்டாடப்பட்ட சம்பவம் தொடர்பில் வல்வெட்டித்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.



பிரித்தானியாவில் இருந்து நாடு திரும்பியவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது!
[Sunday 2024-12-01 18:00]

பிரித்தானியாவில் இருந்து நாடு திரும்பிய ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.



நினைவேந்தல்களால் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படவில்லை!
[Sunday 2024-12-01 18:00]

வடக்கு, கிழக்கில், உயிரிழந்த தமது உறவுகளை நினைவேந்தும் நிகழ்வுகளை முன்னெடுத்தமையால் தேசிய பாதுகாப்புக்கு எவ்விதமான அச்சுறுத்தல்களும் ஏற்படவில்லை என பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் எச்.எஸ்.துயகொந்த தெரிவித்துள்ளார்.



சுதுமலை விபத்தில் ஒருவர் பலி!
[Sunday 2024-12-01 18:00]

யாழ்ப்பாணம் - மானிப்பாய் -தாவடி வீதியில் மோட்டார் சைக்கிள் காருடன் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார். நேற்று நடந்த இந்த விபத்தில் கொக்குவில் பகுதியைச் சேர்ந்த 64 வயதுடையவரே உயிரிழந்தவர் ஆவார்.



மாகாணசபை முறையை முடிவுக்கு கொண்டு வருவோம்!
[Sunday 2024-12-01 18:00]

இலங்கையில் நடைமுறையில் உள்ள அரசியலமைப்பின் 13ஆவது திருத்த சட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ள மாகாண சபை முறைமையை முடிவுக்கு கொண்டு வரவும், புதிய அரசியலமைப்பின் ஊடாக அனைத்து இன மக்களுக்கும் சமமான உரிமைகள் கிடைப்பதை உறுதி செய்யவும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா குறிப்பிட்டார்.



மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்களை புறக்கணித்து தேசியப் பட்டியலில் வந்தவருக்கு அமைச்சர் பதவி!
[Sunday 2024-12-01 18:00]

தேசிய மக்கள் சக்தி சார்பிலே யாழ். மாவட்டத்திலிருந்து வைத்தியர், அதிபர் ஆகியோர் மக்களால் தெரிவு செய்யப்பட்டிருக்கிறார்கள். இவர்களுக்கு அமைச்சுப் பதவியோ, பிரதி அமைச்சுப் பதவியோ கொடுக்காது,தேசிய பட்டியல் ஊடாக வந்த ஒருவருக்கு அமைச்சுப் பதவி வழங்குகிறார்கள். இவர்களுடைய ஏமாற்று அரசியலை தமிழ் மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்ட முதன்மை அமைப்பாளர் டேவிட் நவரட்ணராஜ் தெரிவித்தார்.



மின் கட்டண திருத்த யோசனை - 6ஆம் திகதி கையளிப்பு!
[Sunday 2024-12-01 18:00]

மின் கட்டண திருத்த யோசனை எதிர்வரும் 6ஆம் திகதி மின்சார சபையினால் பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் கையளிக்கப்படவுள்ளது.



எரிவாயு பிரச்சினை அரசாங்கம் தலையிடும்!
[Sunday 2024-12-01 18:00]

எரிவாயுவை இறக்குமதி செய்து நுகர்வோருக்கு வழங்க லாஃப்ஸ் கேஸ் தவறினால் அரசாங்கம் அது குறித்து தீர்மானம் எடுக்கும் என வர்த்தகம், , உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க இன்று தெரிவித்தார்.



ஷார்ஜாவில் சதம் அடித்தார் சாருஜன்!
[Sunday 2024-12-01 18:00]

19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கிண்ணத் தொடரில் இன்று ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கைக்கு இடையிலான போட்டி ஷார்ஜாவில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.



வெங்காயத்துக்கு வரி குறைப்பு!
[Sunday 2024-12-01 18:00]

இறக்குமதி செய்யப்படும் வெங்காயத்திற்கான 30 ரூபாய் வரியை 20 ரூபாவாக குறைக்க நிதியமைச்சு தீர்மானித்துள்ளது. இது இம்மாதம் 31ஆம் திகதி வரையிலும் அமுலில் இருக்கும். இதேவேளை, ஒரு கிலோகிராம் உருளைக்கிழங்குக்கான 60 ரூபாய் விசேட வர்த்தக வரியும் இம்மாதம் 31ஆம் திகதி வரை அமுலில் இருக்கும்.



பிரபாகரன், மாவீரர் நாள் படங்களை முகநூலில் பகிர்ந்த 3 பேர் கைது!
[Sunday 2024-12-01 04:00]

தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர் தினத்தை முன்னிட்டு பிரசாரம் செய்து பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்ததாக தெரிவித்து, மூன்று சந்தேக நபர்களை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர் என பொலிஸ் ஊடகப்பிரிவு வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



ஒருங்கிணைப்பு தலைவர் பதவியும் இல்லை- என்பிபியின் யாழ். எம்.பிக்கள் மூவருக்கும் ஏமாற்றம்!
[Sunday 2024-12-01 04:00]

யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராக கடற்றோழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் நியமிக்கப்பட்டுள்ளார்.


Logan-Kumaresh-Homelife-02-02-2021
Vaheesan-Remax-2016
Rajeef sebarasha 2023/04/19
 gloriousprinters.com 2021
Airlinktravel-2020-01-01
Ambikajewellers-01-08-2021-seithy
Mahesan-Remax-169515-Seithy
Kugeenthiran-200-2022-seithy
Asayan-Salon-2022-seithy
NKS-Ketha-04-11-2021
Karan Remax-2010
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா