Untitled Document
December 5, 2024 [GMT]
3 வேளையும் நாடாளுமன்ற உணவகத்தில் சாப்பிடும் என்பிபி உறுப்பினர்கள்!
[Wednesday 2024-12-04 17:00]


தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமைகளை குறைக்கும் என எதிர்பார்த்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமைகளை குறைக்கும் என எதிர்பார்த்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

  

கடந்த காலங்களில் தாம் நாடாளுமன்ற உணவகத்தில் பகல் உணவு மட்டும் சில நாட்களில் உட்கொண்டதாகவும் காலை உணவு உட்கொண்டதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் காலை மற்றும் மதிய உணவை உட்கொள்வது மட்டுமன்றி, முடிந்தால் இரவிற்கும் உணவை கட்டி எடுத்துச் செல்லும் நிலை காணப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னர் மக்கள் விடுதலை முன்னணியின் 39 உறுப்பினர்கள் நாடாளுமன்றிற்கு தெரிவாகியிருந்த போதும் இந்த நிலையை அவதானிக்க முடிந்தது என தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

  
   Bookmark and Share Seithy.com



தமிழரசு எம்.பிக்களை சந்தித்தார் ஜனாதிபதி அநுர! Top News
[Thursday 2024-12-05 05:00]

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலான சந்திப்பு நேற்று பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இதன்போது இலங்கை தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள் நீண்ட காலமாக வடக்கு மற்றும் கிழக்கு மக்கள் முகம்கொடுத்து வரும் பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதியிடம் விளக்கமளித்தனர்.



தேசிய மக்கள் சக்தி தமிழர்களுக்கு எதிரான அரசியல் போரை தீவிரப்படுத்தும்!
[Thursday 2024-12-05 05:00]

தேசிய மக்கள் சக்தியின் ஆட்சி காலம் என்பது வடகிழக்கு தமிழர்களின் அரசியலுக்கு எதிரான உக்கிரமான அரசியல் போர்க்காலமாக இருக்கும் என்பதற்கான அறிகுறிகள் தென்பட தொடங்கியுள்ளன என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.



அரசியல் இலஞ்சமாக பார் அனுமதி!- மாவட்ட ரீதியாக விபரம்.
[Thursday 2024-12-05 05:00]

கடந்த அரசாங்கத்தில் நாடு முழுவதும் 361 மதுபான சாலைகளுக்கான அனுமதி அரசியல் இலஞ்சமாக வழங்கப்பட்டுள்ளது என சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்னாயக்க, பாராளுமன்றத்தில், புதன்கிழமை தெரிவித்தார்.



இலங்கையர் என்ற அடையாளம் பேச்சளவில் மாத்திரமே பயன்படுத்தப்படுகிறது!
[Thursday 2024-12-05 05:00]

மனித உரிமை விவகாரத்தில் அரசாங்கம் வெளிப்படைத்தன்மைக்கான புதிய கொள்கைக்கு அமைய செயற்பட வேண்டும். இலங்கையர் என்ற அடையாளம் பேச்சளவில் மாத்திரம் பயன்படுத்தப்படுகிறதென பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.



கைதுகளில் பாகுபாடு - தயாசிறி கேள்வி!
[Thursday 2024-12-05 05:00]

வடக்கில் மாவீரர்களை நினைவுகூர்ந்த சிவாஜிலிங்கம் தண்டனை சட்டக் கோவையின் கீழ் கைது செய்யப்படுகிறார். மாவீரர்களை நினைவுகூர்ந்ததை வெளிப்படுத்திய சமூக செயற்பாட்டாளர்கள் தெற்கில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுகிறார்கள். ஏன் இந்த இரட்டை நிலைப்பாடு என ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பி.யான தயாசிறி ஜயசேகர கேள்வி எழுப்பினார்.



செல்வம் எம்.பியை சந்திக்கிறார் கஜேந்திரகுமார்!
[Thursday 2024-12-05 05:00]

தமிழ் மக்கள் பேரவையினால் தயாரிக்கப்பட்ட தீர்வுத்திட்ட வரைவு மற்றும் தமிழ்த்தேசிய கட்சிகளின் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்துக் கலந்துரையாடும் நோக்கில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இவ்வார இறுதியில் ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்றக்குழுத் தலைவர் செல்வம் அடைக்கலநாதனை மன்னாரில் சந்திக்கவிருக்கிறார்.



வடக்கையும் தெற்கையும் குழப்பி இனவாத யுத்தத்தை மீண்டும் ஏற்படுத்த முயற்சி!
[Thursday 2024-12-05 05:00]

மாவீரர் தினத்தை அனுஷ்டித்ததாக பொய் பிரசாரங்களையும் போலி தகவல்களையும் சமூகவலைத்தளங்களில் பதிவேற்றி, வடக்கையும் தெற்கையும் குழப்பி இனவாத யுத்தத்தை மீண்டும் ஏற்படுத்தவா இவ்வாறு செய்கிறார்கள்? எனக் கேள்வி எழுப்பிய நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார,பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படவேண்டும் என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம் என்றார்.



வடக்கில் 244 இடங்களில் மாவீரர் நினைவேந்தல்!
[Thursday 2024-12-05 05:00]

வடக்கில் நடைபெற்ற 244 மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளில் 10 இடங்களில் விடுதலைப் புலிகளின் சின்னங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்ததாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.



மென்டிஸ் உற்பத்தி இன்றுடன் நிறுத்தம்!
[Thursday 2024-12-05 05:00]

5.7 பில்லியன் ரூபா வரி மற்றும் மேலதிக கட்டணங்களை செலுத்த தவறியதன் காரணமாக டபிள்யு எம்.மெண்டிஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட மதுபான உற்பத்தி உரிமம் இன்று முதல் நிறுத்தப்படவுள்ளது.



அரசாங்க கொள்கை அறிக்கை வாக்கெடுப்பின்றி நிறைவேறியது!
[Thursday 2024-12-05 05:00]

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவினால் நவம்பர் 21 ஆம் திகதி பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட அரசாங்க கொள்கை அறிக்கை மீதான தீர்மானம் நேற்று பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பின்றி ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.



பார் பட்டியல் வெளியானது - கிளிநொச்சிக்கே அதிகம்!
[Wednesday 2024-12-04 18:00]

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் வழங்கப்பட்ட மதுபான சாலை அனுமதிப் பத்திரங்கள் தற்போது வெளியாகியுள்ளன. அதன்படி ரணிலினால் வழங்கப்பட்ட மதுபான சாலை அனுமதிப் பத்திரங்கள் பற்றிய முழுமையான விவரங்கள் - FL4 எனப்படும் சில்லறை (wine stores) அனுமதிப் பத்திரங்கள் மாவட்டவாரியாக அமைச்சரும் சவைத்தலைவருமான பிமல் ரத்நாயக்கவினால் வெளியிடப்பட்டுள்ளன.



முகநூலில் பிரபாகரன் படத்தை பதிவிட்டதாக கைதான இளைஞனுக்கு பிணை!
[Wednesday 2024-12-04 18:00]

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் புகைப்படத்தை முகநூலில் பதிவிட்டதாக கைதான இளைஞருக்கு பிணை வழங்கி யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.



இனவாத அரசாங்கம் வெளியிட்ட சுற்றறிக்கையை நீங்கள் எப்படி நடைமுறைப்படுத்த முடியும்?
[Wednesday 2024-12-04 18:00]

யுத்தத்தின்போது உயிரிழந்த தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர்களையும் தங்கள் உயிர்களை இழந்த தமிழர்களையும் நினைவுகூருவதும் ஜேவிபியின் நினைவுகூரல்களும் ஒரேமாதிரியானவை. வித்தியாசங்கள் இருக்க முடியாது என தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்



இராணுவப் புலனாய்வு பணிப்பாளர் இடமாற்றம்!
[Wednesday 2024-12-04 18:00]

இராணுவ புலனாய்வுப்பிரிவின் பணிப்பாளர் பிரிகேடியர் சந்திக்க மஹாதந்தில, உடனடியாக அமுலாகும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவர் மேல் மாகாண இராணுவ கட்டளை தலைமையகத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். சுமார் 20 வருடகாலம் இராணுவ புலனாய்வுப் பிரிவில் பல முக்கிய பதவிகளை சந்திக்க வகித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் இருந்து ஹிருணிகா விடுதலை!
[Wednesday 2024-12-04 17:00]

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர நீதிமன்றத்தை அவமதித்ததாகக் குற்றம் சுமத்தி அவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையை நிறைவு செய்த மேன்முறையீட்டு நீதிமன்றம், குறித்த குற்றச்சாட்டுக்களில் இருந்து அவரை விடுவிக்க இன்று உத்தரவிட்டது.



பார் அனுமதி பட்டியல் இன்று மாலை வெளியாகும்!
[Wednesday 2024-12-04 17:00]

மதுபானசாலைகள் (பார்) அனுமதி பட்டியல் இன்று மாலை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என சுகாதார அமைச்சரின் ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளர் நளிந்த ஜயதிஸ்ஸ பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.



தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும்!
[Wednesday 2024-12-04 17:00]

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் கோரிக்கை விடுத்துள்ளார்.



பயங்கரவாதத் தடைச்சட்டத்தை பயன்படுத்தி ஊடக அடக்குமுறை!
[Wednesday 2024-12-04 17:00]

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முற்றாக நீக்குவோம் எனக் கூறி ஆட்சிக்கு வந்த அரசு இந்தச் சட்டத்தை பயன்படுத்தி பேச்சுச் சுதந்திரம், ஊடக சுதந்திரம் மற்றும் சிவில் உரிமைகளைப் பறித்து வருகிறது.பயங்கரவாதத் தடைச் சட்டத்தை பயன்படுத்தி ஊடக அடக்கு முறைகளில் ஈடுபடுவதை ஏற்கமுடியாது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.



மாவீரர் நாள் குறித்து பொய் தகவல் வெளியிட்டதாக கைது செய்யப்பட்டவர் விடுவிப்பு!
[Wednesday 2024-12-04 17:00]

தமிழீழ மாவீரர் தினத்தை முன்னிட்டு தனது முகநூல் பக்கத்தில் பொய்யான தகவல்களை வெளியிட்ட குற்றச்சாட்டின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சமூக ஆர்வலர் கெலும் ஜயசுமனவை பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் திலின கமகே, இன்று உத்தரவிட்டுள்ளார்.



வளிமண்டலவியல் திணைக்களத்தின் இணையத்தளம் மீது மீண்டும் சைபர் தாக்குதல்!
[Wednesday 2024-12-04 17:00]

வளிமண்டலவியல் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் குறுகிய காலத்திற்குள் இரண்டாவது முறையாகவும் ஹேக் செய்யப்பட்டுள்ளது.


Airlinktravel-2020-01-01
NKS-Ketha-04-11-2021
 gloriousprinters.com 2021
Ambikajewellers-01-08-2021-seithy
Kugeenthiran-200-2022-seithy
Karan Remax-2010
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Rajeef sebarasha 2023/04/19
Vaheesan-Remax-2016
Mahesan-Remax-169515-Seithy
Asayan-Salon-2022-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா