Untitled Document
December 23, 2024 [GMT]
ஜனவரி 12இல் சீனா செல்கிறார் அனுர! - 5 நாட்கள் தங்கியிருப்பார்.
[Sunday 2024-12-22 18:00]


ஐந்து நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க எதிர்வரும் ஜனவரி மாதம் 12ஆம் திகதி சீனாவுக்கு செல்கிறார். இந்த விஜயத்தில் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி மற்றும் வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க உள்ளிட்டவர்கள் பங்கேற்கள்ளனர்.

ஐந்து நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க எதிர்வரும் ஜனவரி மாதம் 12ஆம் திகதி சீனாவுக்கு செல்கிறார். இந்த விஜயத்தில் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி மற்றும் வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க உள்ளிட்டவர்கள் பங்கேற்கள்ளனர்.

  

இதேவேளை மக்கள் விடுதலை முன்னணியின் செயலாளர் ரில்வின் சில்வாவும் பெரும்பாலும் ஜனாதிபதியுடனான சீன விஜயத்தில் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங், பிரதமர் லி கியாங், வெளிவிவகார அமைச்சர் வோங் யீ மற்றும் அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் அட்மிரல் டோங் ஜுன் உட்பட சீன கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரையும் பெய்ஜிங்கில் சந்தித்து இருதரப்பு கலந்துரையாடல்களில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான குழுவினர் பங்கேற்க உள்ளனர்.

இதேவேளை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான குழுவுக்கு பெய்ஜிங்கில் அமோக வரவேற்புக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதுடன், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய குழுவின் சர்வதேச விவகாரங்களுக்கான துணை அமைச்சர் சன் ஹையன் விஜயத்திற்கான ஏற்பாடுகளை முன்னெடுக்கப்படுகின்றது.

சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்த்திருந்த ஜனாதிபதியின் இந்திய விஜயத்தை தொடர்ந்து தற்போது சீன விஜயத்திற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

ஜனவரி 12ஆம் திகதி சீனா செல்லும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான குழு 17ஆம் திகதி வரை பெய்ஜிங்கில் தங்கியிருந்து இருதரப்பு கலந்துரையாடல்களை முன்னெடுக்கும்.

இந்த விஜயத்தின் போது, சீன - இலங்கை சுதந்திர வர்த்தக ஒப்பந்தம், துறைமுக நகர் முதலீடுகள், ஹம்பாந்தோட்டையில் உத்தேசிக்கப்படுகின்ற எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் சீன கப்பல் விஜயங்கள் உட்பட பல்வேறு இருதரப்பு ஒத்துழைப்புகள் குறித்து பரந்தளவில் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட உள்ளன.

குறிப்பாக ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை அண்மித்த பகுதியில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை அமைப்பதற்கான இணக்கப்பாட்டை கடந்த அரசாங்கத்துடன் எட்டப்பட்டிருந்தது.

இந்நிலையில், தற்போது ஹம்பாந்தோட்டையில் இந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை பாரிய முதலீட்டில் நிர்மாணிக்க சீனா ஆர்வத்துடன் நடவடிக்கை எடுத்துள்ளது. தெற்காசிய பிராந்தியத்தில் மிகப்பெரிய சுத்திகரிப்பு நிலையத்தை ஹம்பாந்தோட்டையில் உருவாக்குவதே சீனாவின் திட்டமாக உள்ளது.

இதனை தவிர இலங்கையுடனான கடன் மறுசீரமைப்புகள் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான குழு சீன தரப்புகளுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க உள்ளது.

மேலும் இருதரப்பு பொருளாதார ஒத்துழைப்புகளை விரிவுபடுத்துவதற்கான புதிய முதலீடுகள் குறித்தும் பெய்ஜிங் பேச்சுவார்த்தைகளின் போது அவதானம் செலுத்தப்படும்.

அது மாத்திரமின்றி சீன கப்பல்கள் வருகை குறித்து இராஜதந்திர நெருக்கடிகளை இலங்கை எதிர்கொள்கிறது. கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சி காலத்தில் மூலோபாய ஒத்துழைப்புகளை முன்னிலைப்படுத்தி சீனக் கப்பல்கள் இலங்கைக்கு வருவதற்கான விசேட ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. இதனடிப்படையில் பல சீன கப்பல்கள் இலங்கைக்கு வந்தன.

இருப்பினும் ரணில் விக்கிரமசிங்க ஆட்சி காலத்தில் ஏற்பட்ட இராஜதந்திர நெருக்கடியால் சீன ஆய்வுக் கப்பல்கள் இலங்கைக் கடற்பரப்பிற்குள் நுழைவது ஒரு வருட காலத்திற்கு நிறுத்தப்பட்டது.

அந்த கால எல்லை எதிர்வரும் ஜனவரி மாதம் 15 ஆம் திகதியுடன் முடிவடைகிற தருணத்தில், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சீனாவில் தங்கியிருப்பார்.

எனவே இலங்கைக்கு சீன கப்பல்கள் விஜயம் செய்வது தொடர்பிலான இராஜதந்திர அணுகுமுறை முன்னிலைப்படுத்தி இருதரப்பு பேச்சுக்கள் முன்னெடுக்கப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

  
   Bookmark and Share Seithy.com



டிஜிட்டல் அடையாள அட்டை திட்டம்- அடுத்தமாதம் இந்தியாவுடன் ஒப்பந்தம்!
[Monday 2024-12-23 16:00]

இலங்கையுடன் இணைந்து மக்களுக்கு அரசு சேவைகளை வழங்குவதை மேம்படுத்துவதற்கான முயற்சிகளில் இந்தியா ஈடுபடவுள்ளது. இதன் ஒரு கட்டமாகத் டிஜிட்டல் அடையாள திட்டத்தை செயற்படுத்தவுள்ளது.



மியான்மார் அகதிகள் கேப்பாப்பிலவு விமானப்படை முகாமில் தங்க வைப்பு!
[Monday 2024-12-23 16:00]

திருகோணமலை ஜமாலியா முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த மியன்மார் - ரோஹிங்யா அகதிகள் முல்லைத்தீவு கேப்பாப்பிலவு விமானப்படை முகாமில் தங்க வைப்பதற்காக இன்று அழைத்துச் செல்லப்பட்டனர். பொலிஸாருக்கு சொந்தமான இரு பஸ்களில் குறித்த அகதிகள் 103 பேரும் பொலிஸ் பாதுகாப்புடன் இன்று காலை 7.30 மணியளவில் அழைத்துச் செல்லப்பட்டிருந்தார்கள்.



கேக் விலை வீழ்ச்சி!
[Monday 2024-12-23 16:00]

பண்டிகைக் காலங்களில் கேக் கொள்வனவு செய்யும் போது மக்கள் விலை தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டுமென அகில இலங்கை பேக்கரி உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கடந்த வருடத்தை விட இவ்வருடம் கேக் விலையில் சிறிதளவு குறைந்திருப்பதாகக அதன் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்தார்.



இந்தியா - இலங்கை இடையே பாலம் அமைக்க எதிர்ப்பு!
[Monday 2024-12-23 16:00]

இலங்கைக்கும் இந்தியாவுக்கிடையில் பாலம் அமைக்கும் யோசனையை கடுமையாக எதிர்ப்பதாக பிவித்ரு ஹெல உறுமயவின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.



ஜனவரி 2இல் பாடசாலைகள் ஆரம்பம்!
[Monday 2024-12-23 16:00]

அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளில் 2024 ஆம் ஆண்டுக்கான மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் எதிர்வரும் 2ஆம் திகதி வியாழக்கிழமை ஆரம்பமாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன், அனைத்துப் பாடசாலைகளிலும் மூன்றாம் தவணை ஜனவரி 24ஆம் திகதியுடன் முடிவடையும் என்று கல்வி அமைச்சு விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.



30 இலட்சம் ரூபா பெற்றது குற்றம் என்றால் தூக்கில் போடுங்கள்!
[Monday 2024-12-23 16:00]

சிறுநீரக சத்திர சிகிச்சைக்காக, ஜனாதிபதி நிதியத்தில் இருந்து 30 இலட்சம் ரூபா பெற்றுக்கொண்டதாக முன்னாள் அமைச்சர் விமலவீர திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.



சர்வஜன சக்தி கட்சியில் இணைந்தார் எஸ். எம். சந்திரசேன!
[Monday 2024-12-23 16:00]

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராமன்ற உறுப்பினர் எஸ். எம். சந்திரசேன சர்வஜன சக்தி கட்சியின் உறுப்புரிமையை, திங்கட்கிழமை பெற்றுக்கொண்டார்.



முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு- முப்படையினர் நீக்கம்!
[Monday 2024-12-23 16:00]

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டுள்ள முப்படையினரையும் இன்று (23) முதல் அமுலுக்கு வரும் வகையில் நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.



பட்டப்பகலில் துப்பாக்கிச் சூடு!
[Monday 2024-12-23 15:00]

கம்பஹா, வீரகுல பகுதியில் இன்று பகல் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் காயமடைந்த நபர் நபர் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத ஒருவரே இந்த துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.



நத்தாரை முன்னிட்டு விசேட பாதுகாப்பு!
[Monday 2024-12-23 15:00]

நத்தார் ஆராதனைகளை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் பொலிஸ் மற்றும் முப்படையினரால் சிறப்பு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.



மிகை அதிகாரங்களுடன் கிளீன் சிறிலங்கா செயலணி!
[Monday 2024-12-23 05:00]

'தூய்மையான இலங்கை' கருத்திட்டத்துக்கான ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டிருக்கும் புதிய செயலணிக்கு மிகப்பரந்துபட்ட ஆணையும், அதிகாரங்களும் வழங்கப்பட்டிருப்பதாகச் சுட்டிக்காட்டியிருக்கும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன், இந்நடவடிக்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மாறுபட்ட விதத்தில் செயற்படுவார் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தவில்லை எனத் தெரிவித்துள்ளார்.



காணிகளை விடுவிக்காவிடின் உறுதிகளோ உள்ளே நுழைவோம்!
[Monday 2024-12-23 05:00]

“யாழ்ப்பாணம், தையிட்டி பகுதியில் ஆக்கிரமிக்கப்பட்டு இராணுவத்தினர் வசமுள்ள காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இல்லையேல் காணி உறுதிகளுடன் நாங்கள் உள்ளே நுழைவோம்.” இவ்வாறு தையிட்டியைச் சேர்ந்த காணி உரிமையாளரான சுகமாரி சாருஜன் தெரிவித்தார்.



பிரிக்ஸ் உறுப்புரிமைக்கு இந்தியாவிடம் கையேந்தியது வெட்கக்கேடு!
[Monday 2024-12-23 05:00]

இலங்கைக்கு பிரிக்ஸ் உறுப்புரிமை பெற்றுக்கொள்ள தலையிடுமாறு இந்திய பிரதமரை கேட்டுக்கொண்டுள்ளதன் மூலம் ஜனாதிபதி இலங்கையை இழிவுபடுத்தியுள்ளார் என இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் தவிசாளரும் முன்னாள் அமைச்சருமான டியூ குணசேகர தெரிவித்தார்.



செல்பி எடுக்க முயன்ற தாயும் மகளும் ரயில் மோதி மரணம்!
[Monday 2024-12-23 05:00]

அநுராதபுரம் பொது விளையாட்டரங்கில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க வந்த மகளும் தாயும் செல்ஃபி எடுத்த போது ரயிலில் மோதி உயிரிழந்துள்ளதாக அனுராதபுரம் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.



மேல்மாகாண ஆசிரியர்கள் பிரத்தியேக வகுப்புகளை நடத்த தடை!
[Monday 2024-12-23 05:00]

மேல்மாகாணத்தில் உள்ள பாடசாலை ஆசிரியர்கள் தாம் கடமையாற்றும் பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு பிரத்யேக வகுப்புகளை நடத்துவதற்கு தடைவிதித்து சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.



இன்று முதல் விசேட போக்குவரத்து நடவடிக்கை!
[Monday 2024-12-23 05:00]

நாடளாவிய ரீதியில் இன்று முதல் பண்டிகைக்காலம் முடியும் வரை, விசேட போக்குவரத்து நடவடிக்கை அமுல்படுத்தப்படவுள்ளது.



கனகபுரத்தில் புதையல் தோண்டியவர்கள் கைது!
[Monday 2024-12-23 05:00]

கிளிநொச்சி கனகபுரம் பகுதியில் புதையல் அகழ்வில் ஈடுபட்டுக்கொண்டிருந்த 05 சந்தேக நபர்கள் சனிக்கிழமை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் விசேட அதிரடிப்படையின் அறிவியல்நகர் முகாம் அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்.



காய்ச்சலுக்கு குடும்பஸ்தர் பலி!
[Monday 2024-12-23 05:00]

யாழ்ப்பாணத்தில் நான்கு நாட்கள் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட குடும்பஸ்தர் ஒருவர் இன்றையதினம் உயிரிழந்துள்ளார். கோண்டாவில் பகுதியைச் சேர்ந்த கந்தசாமி குணரத்தினம் (வயது 67) என்ற 5 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.



வீதியில் மண் அகழ்வு - கரம்பத்தில் மக்கள் போராட்டம்!
[Monday 2024-12-23 05:00]

யாழ்ப்பாணம் - தென்மராட்சி - கரம்பகம் பிரதேசத்திலுள்ள வீதியில் மண் அகழ்வு இடம்பெற்றுள்ளமையை கண்டித்து பிரதேச மக்கள் நேற்று போரட்டத்தில் ஈடுபட்டனர். கரம்பகத்திலுள்ள விடத்தற்பளை - கரம்பகப் பிள்ளையார் இணைப்பு வீதியிலேயே இந்த மண் அகழ்வு இடம்பெற்றுள்ளது. குறித்த விவசாய வீதி நெடுங்காலமாக மணல் வீதியாகவே இருந்து வந்துள்ளது.



சட்டத்தின் ஆட்சியை மீட்டெடுக்க சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துமாறு கோரிக்கை!
[Monday 2024-12-23 05:00]

சட்டத்தின் ஆட்சியையும் கௌரவத்தையும் மீட்டெடுக்க விரைவான சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துமாறு ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு, ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.


Asayan-Salon-2022-seithy
NKS-Ketha-04-11-2021
Mahesan-Remax-169515-Seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Vaheesan-Remax-2016
Airlinktravel-2020-01-01
Kugeenthiran-200-2022-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
 gloriousprinters.com 2021
Karan Remax-2010
Rajeef sebarasha 2023/04/19
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா