Untitled Document
December 23, 2024 [GMT]
தமிழ் எம்.பிக்களும் கல்வித் தகைமையை வெளிப்படுத்த வேண்டும்!
[Sunday 2024-12-22 18:00]


கடந்த காலங்களிலே ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களைப் படிக்காதவன், முட்டாள் தாங்கள் தான் கல்விமான்கள் என்று வீரவசனம் பேசிய சில தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களும் தங்கள் கல்வி தொடர்பான ஆவணங்களை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து தங்களை உத்தமர்களாக நிரூபித்தால் அது மிகவும் நன்றாக இருக்கும் என டெலோ செயலாளர் நாயகமும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன்  கருணாகரம் தெரிவித்தார்.

கடந்த காலங்களிலே ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களைப் படிக்காதவன், முட்டாள் தாங்கள் தான் கல்விமான்கள் என்று வீரவசனம் பேசிய சில தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களும் தங்கள் கல்வி தொடர்பான ஆவணங்களை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து தங்களை உத்தமர்களாக நிரூபித்தால் அது மிகவும் நன்றாக இருக்கும் என டெலோ செயலாளர் நாயகமும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.

  

இன்று (22) மட்டக்களப்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

ஜனாதிபதியின் இந்திய விஜயம் கடந்த 15 தொடக்கம் 17ம் திகதிவரை இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து எதிர்வரும் ஜனவரி 12 தொடக்கம் மீண்டும் சீனாவுக்குச் செல்ல இருக்கின்றார். இதிலிருந்து இந்திய சீனா அதிகாரப் போட்டியிலே இலங்கை மீண்டும் சிக்கியிருப்பதாகவே உணர முடிகின்றது.

சர்வதேச அரசியல் அவ்வாறு இருந்தாலும் தற்போது ஆட்சியமைத்துள்ள தேசிய மக்கள் சக்தி கடந்த ஜனாதிபதித் தேர்தலிலும், பாராளுமன்றத் தேர்தலிலும் பல்வேறு தேர்தல் கால வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டது. அதில் வடக்கு கிழக்கு தொடர்பிலும் சில வாக்குறுதிகள் வழங்கப்பட்டன. ஆனால் அந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுவதாகத் தெரியவில்லை.

அத்துமீறிய குடியேற்றங்கள் நிறுத்தப்படும் என்று கூறினார். ஆனால் இதுவரை அது நடைபெறவில்லை. மயிலத்தமடு, மாதவணை மேய்ச்சற்தரைப் பிரச்சனை பல வருடங்களாகியும் இன்னும் தீர்க்கப்படவில்லை. தங்கள் ஆட்சியில் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதாகவும் கூறியிருந்தார்கள். ஆனால் இன்றுவரை ஒருவர் கூட விடுதலை செய்யப்படவில்லை.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் விடயத்திற்கும் ஒரு தீர்வைத் தருவதாகச் சொல்லி இருந்தார்கள். ஆனால் அதற்கும் எதுவுமே நடக்கவில்லை. வடக்கு கிழக்குப் பகுதிகளிலே ஆயிரக் கணக்கான தனியார் பொதுக் காணிகள் அரச படைகளால் வசப்படுத்தப்பட்டுள்ளன. அவைகள் கூட இன்னும் விடுவிக்கப்படுவதாக இல்லை.

ஆனால் தெற்கைப் பொறுத்தமட்டில் அரசியல் ரீதியாக சில விடயங்கள் இடம்பெறுகின்றன. கடந்த கால ஊழல்வாதிகளின் விபரங்கள் வெளிப்படுத்தப்படுகின்றன. ஜனாதிபதி நிதியத்தில் இருந்து பணம் பெற்ற அரசியல்வாதிகளின் பெயர்பட்டியல் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு குறைக்கப்படுகின்றது. ஜனாதிபதி ஊடகப் பிரிவில் இருந்து பொருட்கள் மாயமாக்கப்பட்ட விடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இவைகள் அனைத்தின் எதிர்காலத்தில் தாங்கள் அரசியல் ரீதியில் பலமாக இருக்க வேண்டும் என்பதற்காக மேற்கொள்ளப்படுபவையாகவே தெரிகின்றன. ஆனால் தெற்கிலே பலமாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் வடக்கு கிழக்கிலே தமிழ் மக்கள் கடந்த இரு தேர்தல்களிலும் தேசிய மக்கள் சக்திக்கு கணிசமாக வாக்களித்திருக்கின்றார்கள்.

அந்த வகையில் வடகிழக்கு மக்கள் தொடர்பாக வழங்கப்பட்ட வாக்குறுதிகள் காற்றில் பறந்த வண்ணமே இருக்கின்றது. இதில் தமிழ் மக்கள் தான் ஒன்றை விளங்கிக் கொள்ள வேண்டும்.

கடந்த தேர்தல்களிலும், தேர்தல் இல்லாவிட்டாலும் தமிழ்த் தேசியக் கட்சிகள், தமிழ் மக்கள் ஒற்றுமையாக ஒரே கட்சியில் ஒரே கூட்டமைப்பில் கணிசமான மக்கள் பிரதிநிதிகளைப் பெற்றிருந்தால் கடந்த ஜனாதிபதியின் இந்திய விஜயத்தின் போது தமிழ் மக்கள் தொடர்பான விடயத்தை வேண்டுகோளாக விடுத்த இந்தியப் பிரதமர், அதனை பலமான அழுத்தத்தைக் கொடுத்திருப்பார்.

எதிர்காலத்திலாவது நாங்கள் இவற்றைக் கருத்திற்கொண்டு தமிழ் மக்களுக்காகச் செயற்பட வேண்டும்.

இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வரும் போது தங்கள் கட்சியின் பிரதிநிதிகள் பாராளுமன்ற உறுப்பினர்கள் கல்விமான்கள், படித்தவர்கள், பட்டம் பெற்றவர்கள் கடந்த அரசாங்கங்கள் போலல்லாமல் கல்விமான்களை உள்ளடக்கியவர்கள் என்ற ரீதியிலே ஆட்சிக்கு வந்தவர்கள் இன்று துரதிஸ்டவசமாக கல்விப் பட்டம் விடயத்தில் சபாநாயகர் இன்று இராஜினாமா செய்யும் நிலைக்குச் சென்றிருக்கின்றார்.

உள்நாட்டில் பட்டம் பெற்றவர்களது பட்டப்படிப்புகள் கேள்விக்குட்படுத்தப்படுவதாக இல்லை. ஆனால் வெளிநாடுகளில் பட்டம் பெற்றவர்களின் பட்டங்களே கேள்விக்குட்படுத்தப்படுவதாகவே நான் அறிகின்றேன். சிலவேளைகளில் இந்தியப் பல்கலைக்கழகங்களில் காசு கொடுத்துக் கூட கலாநிதிப் பட்டங்கள் பெற்றுக் கொள்ளும் நிலையும் இருக்கின்றது.

இதில் அரசியல் வாதிகள் மட்டுமல்ல சில அதிகாரிகளும் கூட இவ்வாறு பெற்றுள்ளதாக அறியக் கிடைக்கின்றது. அந்த வகையில் வெளிநாடுகளில் பட்டம் பெற்று தங்கள் பெயர்களின் பின்னால் அந்தப் பட்டங்களை இடுபவர்கள் அதனை நிரூபிக்க வேண்டிய காலகட்டமாகவே இது இருக்கின்றது.

இதற்கு முன்னுதாரணமாக பாராளுமன்றம் திகழ்கின்றது. சபாநாயகர் தன் பதவியை இராஜினாமா செய்துள்ளார். சஜித் பிரேமதாச கூட சாதாரண தரம் சித்தியடையாதவர் என்ற விடயங்கள் கூறப்பட்ட நிலை அவர் இன்று தனது பிறப்புச் சான்றிதல் முதல் பட்டப்படிப்பு வரையான ஆவணங்களைச் சமர்ப்பித்திருக்கின்றார்.

இதே போன்று தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட அனைத்துப் பாராளுமன்ற உறுப்பினர்களும் தங்கள் கல்வித் தகைமைகளை வெளிக்காட்ட வேண்டும்.

கடந்த காலங்களிலே ஒரு சில தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களைப் படிக்காதவன், முட்டாள் தாங்கள் தான் கல்விமான்கள், பட்டம் பெற்றவர்கள் என்றெல்லாம் வீரவசனம் பேசியவர்களும் தங்கள் கல்வி தொடர்பான ஆவணங்களை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து தங்களை உத்தமர்களாக நிரூபித்தால் அது மிகவும் நன்றாக இருக்கும்.

  
   Bookmark and Share Seithy.com



மிகை அதிகாரங்களுடன் கிளீன் சிறிலங்கா செயலணி!
[Monday 2024-12-23 05:00]

'தூய்மையான இலங்கை' கருத்திட்டத்துக்கான ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டிருக்கும் புதிய செயலணிக்கு மிகப்பரந்துபட்ட ஆணையும், அதிகாரங்களும் வழங்கப்பட்டிருப்பதாகச் சுட்டிக்காட்டியிருக்கும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன், இந்நடவடிக்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மாறுபட்ட விதத்தில் செயற்படுவார் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தவில்லை எனத் தெரிவித்துள்ளார்.



காணிகளை விடுவிக்காவிடின் உறுதிகளோ உள்ளே நுழைவோம்!
[Monday 2024-12-23 05:00]

“யாழ்ப்பாணம், தையிட்டி பகுதியில் ஆக்கிரமிக்கப்பட்டு இராணுவத்தினர் வசமுள்ள காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இல்லையேல் காணி உறுதிகளுடன் நாங்கள் உள்ளே நுழைவோம்.” இவ்வாறு தையிட்டியைச் சேர்ந்த காணி உரிமையாளரான சுகமாரி சாருஜன் தெரிவித்தார்.



பிரிக்ஸ் உறுப்புரிமைக்கு இந்தியாவிடம் கையேந்தியது வெட்கக்கேடு!
[Monday 2024-12-23 05:00]

இலங்கைக்கு பிரிக்ஸ் உறுப்புரிமை பெற்றுக்கொள்ள தலையிடுமாறு இந்திய பிரதமரை கேட்டுக்கொண்டுள்ளதன் மூலம் ஜனாதிபதி இலங்கையை இழிவுபடுத்தியுள்ளார் என இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் தவிசாளரும் முன்னாள் அமைச்சருமான டியூ குணசேகர தெரிவித்தார்.



செல்பி எடுக்க முயன்ற தாயும் மகளும் ரயில் மோதி மரணம்!
[Monday 2024-12-23 05:00]

அநுராதபுரம் பொது விளையாட்டரங்கில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க வந்த மகளும் தாயும் செல்ஃபி எடுத்த போது ரயிலில் மோதி உயிரிழந்துள்ளதாக அனுராதபுரம் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.



மேல்மாகாண ஆசிரியர்கள் பிரத்தியேக வகுப்புகளை நடத்த தடை!
[Monday 2024-12-23 05:00]

மேல்மாகாணத்தில் உள்ள பாடசாலை ஆசிரியர்கள் தாம் கடமையாற்றும் பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு பிரத்யேக வகுப்புகளை நடத்துவதற்கு தடைவிதித்து சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.



இன்று முதல் விசேட போக்குவரத்து நடவடிக்கை!
[Monday 2024-12-23 05:00]

நாடளாவிய ரீதியில் இன்று முதல் பண்டிகைக்காலம் முடியும் வரை, விசேட போக்குவரத்து நடவடிக்கை அமுல்படுத்தப்படவுள்ளது.



கனகபுரத்தில் புதையல் தோண்டியவர்கள் கைது!
[Monday 2024-12-23 05:00]

கிளிநொச்சி கனகபுரம் பகுதியில் புதையல் அகழ்வில் ஈடுபட்டுக்கொண்டிருந்த 05 சந்தேக நபர்கள் சனிக்கிழமை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் விசேட அதிரடிப்படையின் அறிவியல்நகர் முகாம் அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்.



காய்ச்சலுக்கு குடும்பஸ்தர் பலி!
[Monday 2024-12-23 05:00]

யாழ்ப்பாணத்தில் நான்கு நாட்கள் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட குடும்பஸ்தர் ஒருவர் இன்றையதினம் உயிரிழந்துள்ளார். கோண்டாவில் பகுதியைச் சேர்ந்த கந்தசாமி குணரத்தினம் (வயது 67) என்ற 5 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.



வீதியில் மண் அகழ்வு - கரம்பத்தில் மக்கள் போராட்டம்!
[Monday 2024-12-23 05:00]

யாழ்ப்பாணம் - தென்மராட்சி - கரம்பகம் பிரதேசத்திலுள்ள வீதியில் மண் அகழ்வு இடம்பெற்றுள்ளமையை கண்டித்து பிரதேச மக்கள் நேற்று போரட்டத்தில் ஈடுபட்டனர். கரம்பகத்திலுள்ள விடத்தற்பளை - கரம்பகப் பிள்ளையார் இணைப்பு வீதியிலேயே இந்த மண் அகழ்வு இடம்பெற்றுள்ளது. குறித்த விவசாய வீதி நெடுங்காலமாக மணல் வீதியாகவே இருந்து வந்துள்ளது.



சட்டத்தின் ஆட்சியை மீட்டெடுக்க சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துமாறு கோரிக்கை!
[Monday 2024-12-23 05:00]

சட்டத்தின் ஆட்சியையும் கௌரவத்தையும் மீட்டெடுக்க விரைவான சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துமாறு ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு, ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.



இரண்டு வருடங்களுக்கு முன் பிறந்த நாள் வாழ்த்து பதிவிட்டவரிடம் விசாரணை!
[Sunday 2024-12-22 18:00]

இரண்டு வருடங்களுக்கு முன்னர் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பிறந்த நாளுக்கு சமூக வலைத்தளத்தில் வாழ்த்து தெரிவித்தவரிடம் பயங்கரவாத புலனாய்வு பிரிவினர் (ரி.ஐ.டி) விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.



ஆபிரிக்க பெருநத்தைகளால் ஆபத்து!
[Sunday 2024-12-22 18:00]

ஆபிரிக்காவைத் தாயகமாகக் கொண்ட பெரும் நத்தைகள் சமீபத்தில் பெய்த பெருமழையின் பின்னர் பல பகுதிகளில் படையெடுக்க ஆரம்பித்துள்ளன. இவற்றை இப்போதே கட்டுப்படுத்தத்தவறின் விரைவில் பேராபத்துகளை விளைவிப்பவையாக இவை அமையும் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் எச்சரித்துள்ளார்.



வவுனியாவில் முதலை தாக்கி பெண் மரணம்!
[Sunday 2024-12-22 18:00]

வவுனியா பாவற்குளத்தை அண்மித்த உலுக்குளம் பிரதேசத்தில் முதலையின் தாக்குதலுக்கு இலக்காகி 67 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்று (21) காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.



இளையோருக்கான தெற்காசிய தடகளப்போட்டியில் சாதித்து முல்லைத்தீவு மாணவனுக்கு பாராட்டு!
[Sunday 2024-12-22 18:00]

காலில் காயம் ஏற்பட்டிருந்தபோதும், இளையோருக்கான தெற்காசிய தடகளப்போட்டியில் காலணி அணியாமல் 3000மீற்றர் தூரத்தை முழுமையாக ஓடிக்கடந்த முல்லைத்தீவு - முத்தையன்கட்டு அரசினர் தமிழ்கலவன் பாடசாலை மாணவன் ஜெயக்காந் விதுசனுக்கு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தனது இதயபூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.



இந்தியாவுக்கான இலங்கைத் தூதுவர் திருப்பி அழைப்பு!
[Sunday 2024-12-22 18:00]

இராஜதந்திர பணிக்காலம் நிறைவடைந்துள்ள நிலையில், இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் ஷேனுகா செனவிரத்ன கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளார்.



வீதியை புனரமைக்க கோரி வல்வெட்டித்துறையில் உண்ணாவிரதப் போராட்டம்! Top News
[Sunday 2024-12-22 18:00]

யாழ். பருத்தித்துறை, பொன்னாலை வீதியை புனரமைக்கக் கோரி வல்வெட்டித்துறையில் உண்ணாவிரத போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.



ஜனவரி 12இல் சீனா செல்கிறார் அனுர! - 5 நாட்கள் தங்கியிருப்பார்.
[Sunday 2024-12-22 18:00]

ஐந்து நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க எதிர்வரும் ஜனவரி மாதம் 12ஆம் திகதி சீனாவுக்கு செல்கிறார். இந்த விஜயத்தில் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி மற்றும் வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க உள்ளிட்டவர்கள் பங்கேற்கள்ளனர்.



நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்தில் மோதி இளைஞன் பலி!
[Sunday 2024-12-22 18:00]

மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலய பிரதான வீதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த வாகனத்தில் மோட்டார் சைக்கிள் மோதியதில் இளைஞன் உயிரிழந்துள்ளார். நேற்று (21) மாலை இடம்பெற்ற இந்த விபத்தில் மாமாங்கம, பாடசாலை வீதியை சேர்ந்த 26வயதுடைய ரஞ்சித் விசிதன் என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார்.



வவுனியாவில் பனிமூட்டம்- திணறும் சாரதிகள்!
[Sunday 2024-12-22 17:00]

வவுனியாவில் அண்மைய நாட்களை விடவும், இன்று அதிக பனிமூட்டமாகக் காணப்படுகின்றது. கடும் பனிமூட்டம் காரணமாக போக்குவரத்தை மேற்கொள்வதில் வாகன சாரதிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். குறிப்பாக ஏ-9 வீதி மற்றும் மன்னார் வீதிகளில் பயணிக்கும் வாகனங்கள் ஒளியைப் பாய்ச்சியபடி சென்றமை அவதானிக்கக்கூடியதாக இருந்தது.



ரஷ்ய போர்முனையில் சிக்கிய தமிழ் இளைஞர்கள் அவசர கோரிக்கை!
[Sunday 2024-12-22 05:00]

ஐரோப்பிய நாடுகளுக்குச் செல்வதற்காக முகவர்கள் மூலம் அழைத்துச் செல்லப்பட்டு ரஷ்ய படையில் இணைந்து போர்க்களத்துக்கு அனுப்பப்பட்டுள்ள வடக்கு தமிழ் இளைஞர்கள் தங்களை இலங்கைக்கு அழைத்துச் செல்வதற்குரிய நடவடிக்கைகளை யாராவது முன்னெடுக்குமாறு பகிரங்கமான கோரிக்கையை மீண்டும் முன்வைத்துள்ளனர்.


Kugeenthiran-200-2022-seithy
NKS-Ketha-04-11-2021
Ambikajewellers-01-08-2021-seithy
Airlinktravel-2020-01-01
Asayan-Salon-2022-seithy
Rajeef sebarasha 2023/04/19
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Mahesan-Remax-169515-Seithy
Karan Remax-2010
 gloriousprinters.com 2021
Vaheesan-Remax-2016
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா