Untitled Document
April 3, 2025 [GMT]
இலங்கைக்கு 44 வீத பரஸ்பர வரியை அறிவித்தார் ட்ரம்ப்! - தப்பியது கனடா.
[Thursday 2025-04-03 05:00]



இலங்கைப் பொருட்களுக்கு அமெரிக்க 44 வீத பரஸ்பர வரியை அறிவித்துள்ளது. சற்று முன்னர் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட்   ட்ரம்ப் நாடுகளுக்கான பரஸ்பர வரி தொடர்பான அறிவிப்பை வெளியிட்டார். இதன்போதே,இலங்கையில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 44 சதவீதம் பரஸ்பர வரி அறவிடப்படும் என்று ட்ரம்ப் அறிவித்துள்ளார். அதேவேளை இந்த பரஸ்பர வரியில் இருந்து கனடாவுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இலங்கைப் பொருட்களுக்கு அமெரிக்க 44 வீத பரஸ்பர வரியை அறிவித்துள்ளது. சற்று முன்னர் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நாடுகளுக்கான பரஸ்பர வரி தொடர்பான அறிவிப்பை வெளியிட்டார். இதன்போதே,இலங்கையில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 44 சதவீதம் பரஸ்பர வரி அறவிடப்படும் என்று ட்ரம்ப் அறிவித்துள்ளார். அதேவேளை இந்த பரஸ்பர வரியில் இருந்து கனடாவுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

  
  
   Bookmark and Share Seithy.com



9ஆம் திகதிக்குள் அமெரிக்காவிடம் நிவாரணம் பெற முயற்சி!
[Thursday 2025-04-03 18:00]

அமெரிக்க அரசாங்கத்தால் விதிக்கப்பட்ட புதிய வரிகள் குறித்து கலந்துரையாடல்கள் மூலம் ஏப்ரல் 9 ஆம் திகதிக்கு முன்னர் ஏதேனும் நிவாரணம் பெற அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக தொழில் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் அனில் ஜயந்த தெரிவித்துள்ளார்.



இலங்கைப் பயணத்தின் நோக்கம் - மோடியின் பதிவு!
[Thursday 2025-04-03 18:00]

இலங்கை விஜயத்தின் போது பன்முகத்தன்மை கொண்ட இந்தியா - இலங்கை நட்புறவு குறித்து மதிப்பாய்வு செய்யப்படவுள்ளதாகவும் புதிய வழிகள் பற்றி ஆராயப்படவுள்ளதாகவும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.



நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்கள் - நாளை தீர்ப்பு!
[Thursday 2025-04-03 18:00]

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுக்கள் மீதான உத்தரவு நாளை வழங்கப்படும் என்று மேல்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது. நீதியரசர் (செயல்பாட்டுத் தலைவர்) எம்.டி. முகமது லாஃபர் மற்றும் நீதியரசர் கே.பி. பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய மேல்முறையீட்டு நீதிமன்ற அமர்வு இந்த உத்தரவை இன்று பிறப்பித்தது.



அமெரிக்க வரி குறித்து பரிந்துரைகளை முன்வைக்க குழு நியமனம்!
[Thursday 2025-04-03 18:00]

அமெரிக்க புதிய வரி முறை குறித்து அரசாங்கத்திற்கு பரிந்துரைகளை சமர்ப்பிக்க ஜனாதிபதியினால் குழு நியமனம் நியமிக்கப்பட்டுள்ளது என ஜனாதிபதி ஊடகப் பிரிவு, அறிவித்துள்ளது.



மனைவியைக் கைது செய்தால் என்ன நடக்கும் என தெரியாது!
[Thursday 2025-04-03 18:00]

ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்கவின் கொள்கைகள் குறித்து கேள்வி எழுப்பியுள்ள முன்னாள் அமைச்சர் லொகான் ரத்வத்தை சமீபத்தில் அரசியல்வாதிகள் அவர்களது மனைவிமார் கைதுசெய்யப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார். ஜனாதிபதி தன்னை மாத்திரமல்ல தனது மனைவியையும் கைதுசெய்தார் என அவர் தெரிவித்துள்ளார்.



கனடிய பொதுத்தேர்தல் களத்தில் நான்கு தமிழ் பேசும் வேட்பாளர்கள்!
[Thursday 2025-04-03 18:00]

எதிர்வரும் ஏப்ரல் 28ம் திகதி நடைபெறவுள்ள கனடிய பொதுத் தேர்தல் களத்தில் நிற்கும் மொத்த வேட்பாளர்களில் நான்கு தமிழ் பேசும் வேட்பாளர்களும் போட்டியிடுகின்றார்கள் .



நாமலின் சட்டத்தரணி தகுதி - விசாரணை தொடங்கியது!
[Thursday 2025-04-03 18:00]

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ தனது சட்டத்தரணிக்கான தகுதியை மோசடியாகப் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளதாக குற்றப் புலனாய்வுத் துறை (சிஐடி) இன்று கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றத்திற்குத் தெரிவித்துள்ளது.



சிறைத்தண்டனைத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு!
[Thursday 2025-04-03 18:00]

இலஞ்சம் மற்றும் ஊழல்களை புலனாய்வு செய்யும் ஆணைக்குழு தாக்கல் செய்த வழக்கில் 16 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்த கொழும்பு மேல் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து வடமத்திய மாகாண முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம். ரஞ்சித் மற்றும் அவரது செயலாளர் சாந்தி சந்திரசேன ஆகியோர் இன்று மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தனர்.



வடக்கில் சிறுவர் இல்லங்களில் அனுமதி கோரும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!
[Thursday 2025-04-03 17:00]

சிறுவர் இல்லங்களில் சேர்ப்பதற்காக அனுமதி கோரும் சிறுவர்களின் எண்ணிக்கை வடக்கில் அதிகரித்துச் செல்வதாக வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் யுனிசெப் பிரதிநிதிகளிடம் சுட்டிக்காட்டினார்.



தேசபந்துவுக்கு மீண்டும் விளக்கமறியல்!
[Thursday 2025-04-03 17:00]

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோனை எதிர்வரும் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மாத்தறை நீதிவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.



சம்பூர் மின் திட்டத்தை மெய்நிகர் முறையிலேயே திறந்து வைப்பார் மோடி!
[Thursday 2025-04-03 05:00]

இந்திய பிரதமர் நரேந்திர மோடி நாளை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். சனிக்கிழமை கொழும்பிலிருந்து பல்வேறு திட்டங்களை ஆரம்பித்து வைக்கவுள்ள பிரதமர் மோடி, வலுசக்தி, சுகாதாரம், டிஜிட்டல் பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் இருதரப்பு ஒப்பந்தங்கள் கையெழுத்திடவுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.



குறைந்தபட்ச ஊதிய வரம்பை உயர்த்துகிறது ஒன்ராறியோ!
[Thursday 2025-04-03 05:00]

முதல்வர் டக் ஃபோர்டின் தலைமையிலான ஒன்ராறியோ அரசு, எதிர்வரும் அக்டோபர் முதலாம் திகதியிலிருந்து, குறைந்தபட்ச ஊதியத்தை மணித்தியாலம் ஒன்றுக்கு 17.20 டொலரிலிருந்து 17.60 டொலராக உயர்த்தவுள்ளது. இவ்வுயர்வு, தொழிலாளர்கள் நியாயமானதும் நிலையானதுமான ஊதியத்தைப் பெறுவதை உறுதிப்படுத்த உதவுகிறது. 2018 முதல், குறைந்தபட்ச ஊதியம் 14 டொலரிலிருந்து 17.20 டொலராக உயர்ந்துள்ளது. இது தொழிலாளர்களுக்கு மிகுந்த உறுதுணையாக உள்ளது.



அருண் தம்பிமுத்து மட்டக்களப்பில் கைது!
[Thursday 2025-04-03 05:00]

தமிழர் விடுதலை கூட்டணியின் தலைவர் அருண் தம்பிமுத்து மட்டக்களப்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். வெளிநாட்டில் உள்ள தனிநபர் ஒருவரிடம் இருந்து கோடிக்கணக்கான நிதியை பெற்று மோசடி செய்தார் என்ற சந்தேகத்தின் பேரில் அவர் கொழும்பிலிருந்து சென்ற நிதி மோசடி விசாரணைப் பிரிவால் பாசிக்குடாவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.



மீனவர்கள் இந்தியாவிடம் கோரிக்கை!
[Thursday 2025-04-03 05:00]

யாழ். மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனம் இந்தியப் பிரதமரிடம் பகிரங்க கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் நாட்களில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள நிலையில் இக்கோரிக்கையை மீனவர்கள் விடுத்துள்ளனர்.



பிரதமர் மோடி வருகை- மூடப்படும் வீதிகள்!
[Thursday 2025-04-03 05:00]

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இலங்கைக்கு வருகை தரும் போதும், நிகழ்வுகளில் பங்கேற்கும் போதும் கொழும்பு மற்றும் பல பகுதிகளில், விசேட போக்குவரத்து மற்றும் விசேட பாதுகாப்புத் திட்டங்களை நடைமுறைப்படுத்தவுள்ளதாக இலங்கை பொலிஸ் தெரிவித்துள்ளது.



ரணிலைத் தொடமாட்டார்கள்!
[Thursday 2025-04-03 05:00]

சர்வஜன பலயவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான திலித் ஜெயவீர, அரசாங்கம் பொதுமக்களை ஏமாற்ற சட்டத்தில் உள்ள ஓட்டைகளைப் பயன்படுத்துவதாகக் குற்றம் சாட்டினார்.



30 இலட்சம் வாக்காளர் அட்டைகளே அச்சிடப்பட்டுள்ளன!
[Thursday 2025-04-03 05:00]

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு தேர்தல் திணைக்களம் 18 மில்லியன் வாக்காளர் அட்டைகளை கோரியுள்ள நிலையில் 30 இலட்சம் வாக்காளர் அட்டைகள் அச்சிடப்பட்டுள்ளன. 109 உள்ளுராட்சிமன்ற அதிகார சபைகளுக்கான தபால்மூல வாக்களிப்புக்குரிய வாக்காளர் அட்டைகள் அச்சிடப்பட்டுள்ளன என்று அரச அச்சகத் திணைக்களத்தின் தலைவர் பிரதீப் புஸ்பகுமார தெரிவித்தார்.



பொலிசாரின் கடமைக்கு இடையூறு விளைவித்ததாக 6பேர் கைது!
[Thursday 2025-04-03 05:00]

நிலாவெளி பொலிஸ் பிரிவில் சீருடை அணிந்த பொலிஸ் அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த சம்பவம் தொடர்பாக ஐந்து சந்தேக நபர்களும் ஒரு பெண் சந்தேக நபரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.



ஜனாதிபதி நிதியத்தில் முறைகேடு குறித்து விசாரணை!
[Thursday 2025-04-03 05:00]

ஜனாதிபதி நிதியிலிருந்து பணம் பெறுவதில் ஏதேனும் முறைகேடு நடந்ததா என்பது குறித்து விசாரணைகள் நடத்தப்படுகின்றன என குற்றப் புலனாய்வு பிரிவு அறிவித்துள்ளது.



பிரித்தானியாவின் தடை - ஆராய அமைச்சரவைக் குழு நியமனம்!
[Wednesday 2025-04-02 16:00]

இலங்கையர்கள் நால்வருக்கு எதிராக ஐக்கிய இராச்சியத்தால் விதிக்கப்பட்ட தடை தொடர்பில் ஆராய்வதற்காக அமைச்சர்கள் குழுவொன்றை நியமிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.


 gloriousprinters.com 2021
Karan Remax-2010
Rajeef sebarasha 2023/04/19
Vaheesan-Remax-2016
Kugeenthiran-200-2022-seithy
Latika-Gold-House-2025
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Asayan-Salon-2022-seithy
Airlinktravel-2020-01-01
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா