Untitled Document
April 4, 2025 [GMT]
தேசபந்துவுக்கு மீண்டும் விளக்கமறியல்!
[Thursday 2025-04-03 17:00]


விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோனை எதிர்வரும் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மாத்தறை நீதிவான் நீதிமன்றம் இன்று   உத்தரவிட்டுள்ளது.

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோனை எதிர்வரும் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மாத்தறை நீதிவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

  

பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் இன்று நீதிமன்றில் முன்னிறுத்தப்பட்டதையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2023ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 13ஆம் திகதி மாத்தறை வெலிகம பெலேன பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோனை கைது செய்து நீதிமன்றில் முன்னிறுத்துமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இருந்தபோதிலும், தேசபந்து தென்னக்கோன் நீதிமன்ற உத்திரவை அவமதித்து சுமார் 20 நாட்கள் தலைமறைவாக இருந்த நிலையில், கடந்த புதன்கிழமை (19) காலை மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்ததையடுத்து தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

  
   Bookmark and Share Seithy.com



வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதற்கு எதிரான 53 மனுக்களையும் தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்!
[Friday 2025-04-04 15:00]

உள்ளூராட்சித் தேர்தலுக்காக சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதற்கு எதிராக அரசியல் கட்சிகள் தாக்கல் செய்த 53 ரிட் மனுக்கள் மற்றும் ஆறு அடிப்படை உரிமை மனுக்களை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாமல் தள்ளுபடி செய்ய உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.



நிராகரிக்கப்பட்ட 37 வேட்புமனுக்களை ஏற்றுக் கொள்ள நீதிமன்றம் உத்தரவு!
[Friday 2025-04-04 15:00]

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக நிராகரிக்கப்பட்ட சுமார் 37 வேட்புமனுக்களை மீண்டும் ஏற்றுக்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (04) உத்தரவிட்டது.



கடவுச்சீட்டு படத்தில் பொட்டு வைக்கத் தடை - சிறீதரன் அவசர கடிதம்!
[Friday 2025-04-04 15:00]

ஈழத்தமிழர்களின் இன, மத அடையாளங்களை உறுதிசெய்யுமாறு நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான சிவஞானம் சிறீதரன் கோரிக்கை விடுத்துள்ளார்.



ஷானி அபேசேகரவை பிரதிப் பொலிஸ் மா அதிபராக பதவி உயர்த்த அனுமதி!
[Friday 2025-04-04 15:00]

சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகரவை பிரதிப் பொலிஸ் மா அதிபர் பதவிக்கு நியமிக்க தேசிய பொலிஸ் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.



புத்தாண்டு சலுகைப் பொதியை நிறுத்தியது தேர்தல் ஆணைக்குழு!
[Friday 2025-04-04 15:00]

தமிழ்- சிங்கள புத்தாண்டை முன்னிட்டு சலுகை விலையில் உணவுப் பொதிகள் வழங்கும் அரசாங்கத்தின் தீர்மானத்தினை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.



விபத்தில் சிக்கிய தாதி மரணம்!
[Friday 2025-04-04 15:00]

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் தாதிய உத்தியோகத்தராக கடமை புரியும் பெண்ணொருவர் விபத்தில் சிக்கிய நிலையில் நேற்றையதினம் உயிரிழந்துள்ளார். வட்டுத் தெற்கு, சித்தங்கேணி பகுதியை சேர்ந்த ரவீந்திரன் கிருஷ்ணவேணி என்ற 52 வயது பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.



பாடசாலை மாணவி கூட்டு பாலியல் துஷ்பிரயோகம்- 7 பேருக்கு விளக்கமறியல்!
[Friday 2025-04-04 15:00]

பாடசாலை மாணவி ஒருவரை கூட்டு பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஏழு சந்தேக நபர்களில் 6 பேரை எதிர்வரும் 11 ஆம் திகதி வரை சிறுவர் நன்னடத்தை பராமரிப்பு நிலையத்தில் வைக்குமாறு ஹோமாகம பதில் நீதவான் பத்மசிறி ஜயவர்தன இன்று உத்தரவிட்டுள்ளார்.



இன்று மாலை வருகிறார் மோடி - முன்னரே வந்த 4 ஹெலிகள்!
[Friday 2025-04-04 15:00]

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று பிற்பகல் இலங்கைக்கு வருகை தர உள்ளார். இந்தியப் பிரதமரின் இலங்கை விஜயத்தை முன்னிட்டு நாளை காலை சுதந்திர சதுக்கத்தில் சிறப்பு வரவேற்பு வழங்கப்படவுள்ளது. இதன் பின்னர், ஜனாதிபதிக்கும் இந்தியப் பிரதமருக்கும் இடையே இருதரப்பு கலந்துரையாடல் நடைபெறும்.



வவுனியாவில் 15 கிலோ கஞ்சாவுடன் மூவர் கைது!
[Friday 2025-04-04 15:00]

வவுனியாவில் 15 கிலோ கிராம் கஞ்சா விசேட அதிரடிப் படையினரால் மீட்கப்பட்டுள்ளதுடன், மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக நெளுக்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.



யோஷித, டெய்சிக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்!
[Friday 2025-04-04 15:00]

பண மோசடி குற்றச்சாட்டின் கீழ் யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டி டெய்சி பொரஸ்ட் மீது கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.



தையிட்டி விகாரை தொடர்பான கூட்டம்- இடையில் நழுவிய அமைச்சர்கள்!
[Friday 2025-04-04 06:00]

தையிட்டி திஸ்ஸ விகாரை விடுவிப்பு தொடர்பான முக்கிய கலந்துரையாடலில் அரசாங்கத்தின் சார்பாக கலந்துகொண்ட நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்கார உள்ளிட்ட அரச தரப்பு பிரதிநிதிகள் தீர்வு குறித்த காத்திரமான பேச்சுவார்த்தைகள் ஏதும் இன்றியும், ஊடங்கங்களைப் புறக்கணித்தும் மாற்றுப் பாதையூடாக வெளியேறிய விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.



ரணிலைக் குற்றம்சாட்டியவர் இந்தியாவுடன் இரகசிய ஒப்பந்தம் செய்யவுள்ளார்!
[Friday 2025-04-04 06:00]

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான ஒப்பந்தம் பாராளுமன்றத்துக்கு அறிவிக்காமல் திருட்டுத்தனமான முறையில் கைச்சாத்திடப்படவுள்ளது. சீன இராணுவ எழுச்சியை எதிர்கொள்ளும் வகையில் இந்தியாவுடன் பாதுகாப்பு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளது. இதன் விளைவை என்றோ ஒரு நாள் நிச்சயம் எதிர்கொள்ள நேரிடுமென தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.



முடிந்தால் 13ஆவது திருத்தத்தை நீக்குங்கள் - ஐதேக சவால்!
[Friday 2025-04-04 06:00]

மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டால் அதற்கான தண்டனை மரணம் என ஆரம்ப காலங்களில் ஜே.வி.பி. அச்சுறுத்தியது. மாகாண சபை உறுப்பினர்கள் பலரும் அந்தக் காலப்பகுதியில் கொல்லப்பட்டனர். 13ஆவது திருத்தம் தேவையற்றதெனில், நாளையே பாராளுமன்றத்தைக் கூட்டி அதனை இரத்து செய்ய முடியுமல்லவா? அவ்வாறில்லை என்றால் அதனை நீக்குவதாக மக்களுக்கு பொய் வாக்குறுதி அளித்தமைக்காக ஜே.வி.பி. அரசாங்கம் மன்னிப்பு கோர வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன வலியுறுத்தினார்.



3 மாதங்களில் 565 பேர் விபத்துக்களில் பலி!
[Friday 2025-04-04 06:00]

இந்த வருடம் ஜனவரி முதல் மார்ச் வரையிலான 3 மாதங்களில் மாத்திரம் 565 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும், இதன் விளைவாக 592 பேர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.



உடனடியாக அமெரிக்காவுக்கு குழுவை அனுப்புங்கள்!
[Friday 2025-04-04 06:00]

இன்றைய நிலவரப்படி, உலகின் அனைத்து நாடுகளிற்குமான புதிய இறக்குமதி வரியை ஐக்கிய அமெரிக்க குடியரசு அறிவித்துள்ளது. வர்த்தக நிலுவையை கொண்டுள்ள நாடுகளிற்கு அமெரிக்கா அதிகளவு வரிகளை விதித்துள்ளது. இலங்கையில் இருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு 44 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது.



குடிநீருக்கான விலை நிர்ணயம்!
[Friday 2025-04-04 06:00]

நுகர்வோர் விவகார அதிகாரசபை (CAA) போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீருக்கான அதிகபட்ச சில்லறை விலையை (MRP) நிர்ணயித்து வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.



கனடியரின் முறைப்பாட்டில் கைதான அருண் தம்பிமுத்து பிணையில் விடுதலை!
[Friday 2025-04-04 06:00]

மட்டக்களப்பில் சிஜடி நிதி மோசடி பிரிவினரால் கைது செய்யப்பட்ட தமிழர் விடுதலை கூட்டணியின் முன்னாள் தலைவர் அருண் தம்பிமுத்துவை 3 கோடி 28 இலட்சம் ரூபா பெறுமதியான இரு சரீரப்பிணையில் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் வியாழக்கிழமை (3) பிணையில் விடுவித்துள்ளார்



துப்பாக்கிச் சூட்டில் கணவன் பலி, மனைவி காயம்!
[Friday 2025-04-04 06:00]

ஹிக்கடுவ - குமாரகந்த பகுதியில் நேற்று இரவு 7 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இருவரில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.



பெரும்பாலான இடங்களில் இன்று மழை!
[Friday 2025-04-04 06:00]

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.



கச்சதீவை வைத்து விளையாடுகிறார்கள்!
[Friday 2025-04-04 06:00]

கச்சதீவு பிரச்சினையை வைத்து தமிழகத்தில் வாக்கு வேட்டை அரசியல் நடத்தப்பட்டு வருகின்றது. எது எப்படி இருந்தாலும் கச்சதீவென்பது இலங்கைக்குரியதாகும் என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.


Rajeef sebarasha 2023/04/19
Kugeenthiran-200-2022-seithy
 gloriousprinters.com 2021
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Karan Remax-2010
Vaheesan-Remax-2016
Asayan-Salon-2022-seithy
Airlinktravel-2020-01-01
Latika-Gold-House-2025
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா