Untitled Document
April 5, 2025 [GMT]
அமெரிக்க தடையின் பாதிப்பு - ஆராய்கிறது ஐஎம்எவ்!
[Saturday 2025-04-05 06:00]


அமெரிக்க அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட வரி அதிகரிப்பல் ஏற்படக் கூடிய பாரிய பொருளாதார தாக்கங்கள் குறித்து  மதிப்பிட்டு வருவதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீயேவா தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட வரி அதிகரிப்பல் ஏற்படக் கூடிய பாரிய பொருளாதார தாக்கங்கள் குறித்து மதிப்பிட்டு வருவதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீயேவா தெரிவித்துள்ளார்.

  

அறிக்கையொன்றை வெளியிட்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசாங்கம் சமீபத்தில் இலங்கை உட்பட பல நாடுகள் மீது பரஸ்பர வரிகளை விதித்த நிலையில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

மந்தமான அபிவிருத்தியின் போது அமெரிக்க வரி அதிகரிப்பானது உலகளாவிய பொருளாதாரக் கண்ணோட்டத்துக்கு ஒரு குறிப்பிடத்தக்க ஆபத்தை தெளிவாகக் குறிக்கின்றது. உலகப் பொருளாதாரத்திற்கு மேலும் தீங்கு விளைவிக்கும் நடவடிக்கைகளைத் தவிர்ப்பது முக்கியம்.

வர்த்தக பதட்டங்களைத் தீர்க்கவும் நிச்சயமற்ற தன்மையைக் குறைக்கவும் ஆக்கப்பூர்வமாக செயல்பட அமெரிக்காவையும் அதன் வர்த்தக பங்காளர்களையும் நாம் கேட்டுக்கொள்கிறோம்.

இந்த மாத இறுதியில் சர்வதேச நாணய நிதியம் - உலக வங்கி வசந்த காலக் கூட்டங்களின் போது வெளியிடப்படும் உலகப் பொருளாதாரக் கண்ணோட்டத்தில் நாணய நிதியம் தனது மதிப்பீட்டின் முடிவுகளைப் பகிர்ந்து கொள்ளும்

ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் திருத்தப்பட்ட வர்த்தகக் கொள்கையின் கீழ் அமெரிக்காவால் இலங்கைப் பொருட்களுக்கு 44 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது. நீண்ட காலமாக இலங்கையின் மிக முக்கியமான ஏற்றுமதி சந்தையாக அமெரிக்கா காணப்படுகிறது.

கடந்த ஆண்டு அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட சுமார் 3 பில்லியன் டொலர்களில், 70 சதவீதத்துக்கும் அதிகமானவை ஆடைத்துறை சார்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

  
   Bookmark and Share Seithy.com



கொழும்பு வந்தார் இந்தியப் பிரதமர் மோடி! Top News
[Saturday 2025-04-05 06:00]

இலங்கைக்கு மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்திய பிரதமர் நரேந்திர மோடி, நேற்றிரவு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.



பூஸா உயர்பாதுகாப்புச் சிறையில் தமிழ் கைதி கொலை!
[Saturday 2025-04-05 06:00]

பூஸா உயர் பாதுகாப்பு சிறைச்சாலையில், கைதி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக, சிறைச்சாலைகள் திணைக்கள ஊடகப் பேச்சாளரும் சிறைச்சாலைகள் ஆணையாளருமான காமினி பி. தெரிவித்தார். இந்தக் கொலை தொடர்பாக தற்போது விசாரணை நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.



இன்று முதல் இலங்கைக்கு மேலாக உச்சம் கொடுக்கும் சூரியன்!
[Saturday 2025-04-05 06:00]

சூரியனின் வடக்கு நோக்கிய நகர்வின் காரணமாக இன்று முதல் 14 ம் திகதி வரையான காலப்பகுதியில் சூரியன் இலங்கைக்கு மேலாக உச்சம் கொடுக்கின்றது. இதன் அடிப்படையில் இன்று மதியம் சுமார் 12.13 மணியளவில் ஹகவ,மிட்டியாகொட, எலமல்தெனிய, அம்பகொலவெவ மற்றும் வுன்தல போன்ற இடங்களுக்கு மேலாக உச்சம் கொடுக்கின்றதென சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறினார்.



இந்தியாவுக்காக சீனாவைப் பகைக்க கூடாது!
[Saturday 2025-04-05 06:00]

இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையில் அதிகார போட்டித்தன்மை தீவிரமடைந்துள்ள பின்னணியில் இந்தியாவுடன் இலங்கை பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவது பிரச்சினைகளை ஏற்படுத்தும். இதனால் சீனா கடும் அதிருப்தியடையும். ஒரு நாட்டுக்காக ஏனைய நாடுகளை பகைத்துக்கொள்ள கூடாது என்று ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்தார்.



மட்டக்களப்பில் கடலில் மூழ்கிய சிறுவர்கள் மீட்பு!
[Saturday 2025-04-05 06:00]

மட்டக்களப்பு, நாசிவன்தீவு கடற்பகுதியில் நீராடிக் கொண்டிருந்த 7 வயதுடைய இரு சிறுவர்கள் நீரில் மூழ்கிய நிலையில் காப்பாற்றப்பட்டு, மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று (4) மாலை 6 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர்.



இந்தியாவுடன் மோதினால் இலங்கையும் அழிவுப்பாதையில் செல்லும்!
[Saturday 2025-04-05 06:00]

அதானியின் ஒரு பில்லியன் முதலீட்டை இழந்தமை அரசாங்கம் இழைத்த பாரிய தவறாகும். நட்பு நாடான இந்தியாவைப் பகைத்துக் கொண்டால் உக்ரைனை விட மோசமான நிலைமையே இலங்கைக்கும் ஏற்படும் என முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.



எல்பிட்டிய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயம்!
[Saturday 2025-04-05 06:00]

எல்பிட்டிய - ஊரகஹ பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்து எல்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.



மோடி வருகை- இந்திய மீனவர்கள் விடுதலை!
[Saturday 2025-04-05 06:00]

யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த 11 இந்திய மீனவர்கள் விடுதலை செயயப்பட்டுள்ளனர். அண்மைக்காலமாக கைது செய்யப்பட்டு யாழ். சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்படிருந்தவர்களே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.



யாழ்ப்பாணத்தில் ஹெரோயினுடன் மூவர் கைது!
[Saturday 2025-04-05 06:00]

யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் போதைப்பொருடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ் மாவட்ட போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் குருநகர் பகுதியில் மூவரை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்த போது 2 கிராம் 780 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளை மீட்டுள்ளனர்.



வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதற்கு எதிரான 53 மனுக்களையும் தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்!
[Friday 2025-04-04 15:00]

உள்ளூராட்சித் தேர்தலுக்காக சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதற்கு எதிராக அரசியல் கட்சிகள் தாக்கல் செய்த 53 ரிட் மனுக்கள் மற்றும் ஆறு அடிப்படை உரிமை மனுக்களை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாமல் தள்ளுபடி செய்ய உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.



நிராகரிக்கப்பட்ட 37 வேட்புமனுக்களை ஏற்றுக் கொள்ள நீதிமன்றம் உத்தரவு!
[Friday 2025-04-04 15:00]

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக நிராகரிக்கப்பட்ட சுமார் 37 வேட்புமனுக்களை மீண்டும் ஏற்றுக்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (04) உத்தரவிட்டது.



கடவுச்சீட்டு படத்தில் பொட்டு வைக்கத் தடை - சிறீதரன் அவசர கடிதம்!
[Friday 2025-04-04 15:00]

ஈழத்தமிழர்களின் இன, மத அடையாளங்களை உறுதிசெய்யுமாறு நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான சிவஞானம் சிறீதரன் கோரிக்கை விடுத்துள்ளார்.



ஷானி அபேசேகரவை பிரதிப் பொலிஸ் மா அதிபராக பதவி உயர்த்த அனுமதி!
[Friday 2025-04-04 15:00]

சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகரவை பிரதிப் பொலிஸ் மா அதிபர் பதவிக்கு நியமிக்க தேசிய பொலிஸ் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.



புத்தாண்டு சலுகைப் பொதியை நிறுத்தியது தேர்தல் ஆணைக்குழு!
[Friday 2025-04-04 15:00]

தமிழ்- சிங்கள புத்தாண்டை முன்னிட்டு சலுகை விலையில் உணவுப் பொதிகள் வழங்கும் அரசாங்கத்தின் தீர்மானத்தினை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.



விபத்தில் சிக்கிய தாதி மரணம்!
[Friday 2025-04-04 15:00]

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் தாதிய உத்தியோகத்தராக கடமை புரியும் பெண்ணொருவர் விபத்தில் சிக்கிய நிலையில் நேற்றையதினம் உயிரிழந்துள்ளார். வட்டுத் தெற்கு, சித்தங்கேணி பகுதியை சேர்ந்த ரவீந்திரன் கிருஷ்ணவேணி என்ற 52 வயது பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.



பாடசாலை மாணவி கூட்டு பாலியல் துஷ்பிரயோகம்- 7 பேருக்கு விளக்கமறியல்!
[Friday 2025-04-04 15:00]

பாடசாலை மாணவி ஒருவரை கூட்டு பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஏழு சந்தேக நபர்களில் 6 பேரை எதிர்வரும் 11 ஆம் திகதி வரை சிறுவர் நன்னடத்தை பராமரிப்பு நிலையத்தில் வைக்குமாறு ஹோமாகம பதில் நீதவான் பத்மசிறி ஜயவர்தன இன்று உத்தரவிட்டுள்ளார்.



இன்று மாலை வருகிறார் மோடி - முன்னரே வந்த 4 ஹெலிகள்!
[Friday 2025-04-04 15:00]

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று பிற்பகல் இலங்கைக்கு வருகை தர உள்ளார். இந்தியப் பிரதமரின் இலங்கை விஜயத்தை முன்னிட்டு நாளை காலை சுதந்திர சதுக்கத்தில் சிறப்பு வரவேற்பு வழங்கப்படவுள்ளது. இதன் பின்னர், ஜனாதிபதிக்கும் இந்தியப் பிரதமருக்கும் இடையே இருதரப்பு கலந்துரையாடல் நடைபெறும்.



வவுனியாவில் 15 கிலோ கஞ்சாவுடன் மூவர் கைது!
[Friday 2025-04-04 15:00]

வவுனியாவில் 15 கிலோ கிராம் கஞ்சா விசேட அதிரடிப் படையினரால் மீட்கப்பட்டுள்ளதுடன், மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக நெளுக்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.



யோஷித, டெய்சிக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்!
[Friday 2025-04-04 15:00]

பண மோசடி குற்றச்சாட்டின் கீழ் யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டி டெய்சி பொரஸ்ட் மீது கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.



தையிட்டி விகாரை தொடர்பான கூட்டம்- இடையில் நழுவிய அமைச்சர்கள்!
[Friday 2025-04-04 06:00]

தையிட்டி திஸ்ஸ விகாரை விடுவிப்பு தொடர்பான முக்கிய கலந்துரையாடலில் அரசாங்கத்தின் சார்பாக கலந்துகொண்ட நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்கார உள்ளிட்ட அரச தரப்பு பிரதிநிதிகள் தீர்வு குறித்த காத்திரமான பேச்சுவார்த்தைகள் ஏதும் இன்றியும், ஊடங்கங்களைப் புறக்கணித்தும் மாற்றுப் பாதையூடாக வெளியேறிய விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


Latika-Gold-House-2025
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
 gloriousprinters.com 2021
Airlinktravel-2020-01-01
Vaheesan-Remax-2016
Asayan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
Rajeef sebarasha 2023/04/19
Karan Remax-2010
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா