Untitled Document
April 6, 2025 [GMT]
கொழும்பு வந்தது இந்திய போர்க்கப்பல்!
[Saturday 2025-04-05 16:00]


இந்திய கடற்படைக் கப்பலான 'INS SAHYADRI' உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று சனிக்கிழமை (05) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.

இந்திய கடற்படைக் கப்பலான 'INS SAHYADRI' உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று சனிக்கிழமை (05) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.

  
  
   Bookmark and Share Seithy.com



ஒற்றையாட்சிக்குள் தீர்வு சரிவராது!
[Sunday 2025-04-06 17:00]

ஒற்றையாட்சிக்குள் அதிகாரப் பகிர்வோ, தீர்வோ சரிவராது என்ற நிலைப்பாட்டை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு எடுத்துரைத்தோம்." - என்று இந்தியப் பிரதமரைச் சந்தித்த பின்னர் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி. தெரிவித்தார்.



அனுராதபுரத்தில் இருந்து இந்தியா திரும்பினார் மோடி!
[Sunday 2025-04-06 17:00]

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இலங்கைக்கான தனது மூன்று நாள், அரசு முறைப் பயணத்தை முடித்துக்கொண்டு இந்தியாவுக்குப் புறப்பட்டார். அவர் அனுராதபுரத்திலிருந்து ஹெலிகொப்டரில் தென்னிந்தியாவில் உள்ள ராமேஸ்வரத்திற்குப் புறப்பட்டார், அதே நேரத்தில் அவருடன் வருகைதந்திருந்த தூதுக்குழு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்டது.



போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்தக் கோரி ஆர்ப்பாட்டம்!
[Sunday 2025-04-06 17:00]

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாணிக்கபுரம் பகுதியில் அதிகரித்துள்ள போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்தி தமது இளம் சந்ததியினரை காப்பாற்றுமாறு கோரி மக்கள் போராட்டத்தில், ஞாயிற்றுக்கிழமை (06) ஈடுபட்டனர்



முன்னாள் நாளை ஜனாதிபதிகள் சந்திக்கின்றனர்!
[Sunday 2025-04-06 17:00]

முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, மஹிந்த ராஜபக்ஷ, மைத்திரிபால சிறிசேன, கோட்டபாய ராஜபக்ஷ மற்றும் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் பங்கேற்கும் விசேட கலந்துரையாடல் ஒன்று நாளை கொழும்பில் இடம்பெறவுள்ளது.



மகன் தாக்கியதில் தாய் மரணம்!
[Sunday 2025-04-06 17:00]

தனது தாயுடன் வாழ்ந்து வந்த மனநலம் பாதிக்கப்பட்ட46 வயதுடைய மகன் தாக்கியதில், யாசகம் பெற்று வாழ்ந்து வரும் 65 வயது மதிக்கத்தக்க தாய் மரணமடைந்துள்ளார். இந்த சம்பவம், வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவலடி - கேணி நகர் பகுதியில் இன்று இடம்பெற்றுள்ளது. மகனை சந்தேகத்தில் கைது செய்த வாழைச்சேனை பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



வடக்கு ரயில் பாதை சமிக்ஞை கட்டமைப்பை திறந்து வைத்தார் மோடி!
[Sunday 2025-04-06 17:00]

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, அநுராதபுரம் ரயில் நிலையத்தில் ரயில் சமிக்ஞை அமைப்பை திறந்து வைத்தார். இதனுடன், நவீனமயமாக்கப்பட்ட மஹா - ஓமந்தை ரயில் பாதையும் இந்தியப் பிரதமரால் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வுகளில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க உள்ளிட்ட குழுவினர் கலந்து கொண்டனர்.



தேங்காய் உற்பத்தி கடும் வீழ்ச்சி!
[Sunday 2025-04-06 17:00]

இலங்கையில் இந்த ஆண்டின் ஜனவரி மாதத்தில் தேங்காய் உற்பத்தி 32.3 சதவீதத்தால் குறைவடைந்துள்ளது. எதிர்வரும் மாதங்களில் மேலும் குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேங்காய் உற்பத்தியில் பெரும் சரிவை ஏற்படுத்தி வரும் பிரதான காரணிகளில் தென்னை மரங்களில் பரவி வருகின்ற வெள்ளை ஈக்களின் தாக்கமும் ஒன்றாக உள்ளது. ஆனால், வெள்ளை ஈக்களின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த இதுவரையில் அரசாங்கம் போதிய நடவடிக்கைகளை எடுக்காமல் அசமந்தமாக உள்ளது என்று தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் சுட்டிக்காட்டியுள்ளார்.



862 கிலோ போதைப்பொருளுடன் சிக்கிய படகு!
[Sunday 2025-04-06 17:00]

இலங்கை கடற்படையினரால் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது, மீன்பிடி கப்பலில் இருந்து 671 கிலோ 452 கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 191 கிலோ 752 கிராம் ஹெரோயினுடன் 07 சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.



வவுனியா சிறைக்கு பற்பசைக்குள் போதைப்பொருள் எடுத்துச் சென்ற இருவர் கைது!
[Sunday 2025-04-06 17:00]

வவுனியா சிறைச்சாலைக்குள் பற்பசையினுள் போதைப் பொருளை மறைத்து எடுத்துச் சென்ற ஆண் ஒருவரும், பெண் ஒருவரும் சிறைச்சாலை உத்தியோகத்தர்களால் கைது செய்யப்பட்டு, தம்மிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர். சிறைச்சாலையில் இருந்த நபர் ஒருவரை பார்வையிட வந்த மன்னார் பகுதியைச் சேர்ந்த இருவரே இவ்வாறு சூட்சுமமாக போதைப் பொருளை மறைத்து எடுத்து வந்த நிலையில் கைது செய்யப்பட்டனர்.



இலங்கை கடற்பரப்பை இந்தியாவுக்கு எதிராக பயன்படுத்த அனுமதிப்பதில்லை என இணக்கம்!
[Sunday 2025-04-06 05:00]

இலங்கையின் நிலப்பரப்பை இந்தியாவுக்கு எதிராக பயன்படுத்த அனுமதிக்க போவதில்லை என்ற உத்திரவாதத்தை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வழங்கியுள்ள விடயம் இருநாட்டு தலைவர்களுக்கு இடையிலான கலந்துரையாடலின் போது முக்கியத்துவம் பெற்றிருந்தது. இலங்கையின் நிலப்பரப்பு மாத்திரமல்ல கடல் பரப்பையும் இந்தியாவுக்கு எதிராக பயன்படுத்த இடமளிக்கப்பட மாட்டாது என்ற அடிப்படையில் இருதரப்பு பேச்சுக்கள் இடம்பெற்றிருந்தாக இந்திய வெளியுறவு செயலர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்தார்.



புதிய பாதுகாப்பு ஒப்பந்தம் இறையாண்மைக்கு பாதிப்பு ஏற்படுத்தாது!
[Sunday 2025-04-06 05:00]

இலங்கை - இந்தியாவுக்கு இடையிலான புதிய பாதுகாப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் முன்னெடுக்கப்படுகின்ற நடவடிக்கைகளால் இரு நாடுகளின் இறையாண்மைக்கு பாதிப்பு ஏற்படுத்தாது என்று பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொந்த தெரிவித்தார்.



வாக்குறுதியை மீறி பயங்கரவாத தடைச்சட்டத்தைப் பயன்படுத்தும் ஜனாதிபதி!
[Sunday 2025-04-06 05:00]

ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்க பாதுகாப்பு அமைச்சர் என்ற அடிப்படையில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை பயன்படுத்தி கொழும்பு இளைஞன் முகமட் ருஸ்டியை 90 நாட்கள் தடுப்புக்காவலில்வைப்பதற்கு உத்தரவிட்டுள்ள ஆவணத்தை பார்வையிட்டுள்ளதாக சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.



வட்டுக்கோட்டை பொலிஸ் குறித்து ஜனாதிபதி, பிரதமருக்கு பறந்த கடிதம்!
[Sunday 2025-04-06 05:00]

வட்டுக்கோட்டை பொலிஸாரிடம் இருந்து பொது மக்களைப் பாதுகாக்குமாறு சமூக செயற்பாட்டாளரான ந.பொன்ராசா ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிடமும் அவர் முறைப்பாடு செய்துள்ளார்.



மலையகத் தலைவர்களுடன் மோடி சந்திப்பு!
[Sunday 2025-04-06 05:00]

இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் மலையக அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு இடையிலும் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இது குறித்து தமது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள இந்திய பிரதமர், இந்தியாவை பூர்வீகமாக கொண்ட தமிழ் மக்களுடன் சுமூகமான சந்திப்பு இடம்பெற்றிருந்ததாக குறிப்பிட்டார்.



இந்திய அமைதிப்படையினருக்கு மோடி அஞ்சலி!
[Sunday 2025-04-06 05:00]

பத்தரமுல்லையில் உள்ள இந்திய அமைதிப்படையினரின் நினைவிடத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.



மோடியின் வருகை இருநாடுகளுக்கு இடையிலான உறவில் புதிய அத்தியாயம்!
[Sunday 2025-04-06 05:00]

இந்தியப்பிரதமர் நரேந்திர மோடியின் வருகையானது இருநாடுகளுக்கு இடையிலான உறவில் புதியதொரு அத்தியாயத்தின் தொடக்கத்தைக் காண்பிக்கிறது. நீண்ட காலமாக உள்நாட்டு அரசியல் நோக்கங்களுக்காக இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாடுகள் ஓர் ஆயுதமாகப் பயன்படுத்தப்பட்டுவந்திருக்கின்றன. இந்நிலையில் நாம் முன்நோக்கிப் பயணிப்பதற்கு அத்தகைய அநாவசியமான அச்சங்கள் களையப்படவேண்டும் என முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி வலியுறுத்தியுள்ளார்.



அமெரிக்க வரி குறித்து ஜனாதிபதி அவசர ஆலோசனை!
[Sunday 2025-04-06 05:00]

அமெரிக்காவின் புதிய வரி விதிப்பு தொடர்பாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராய்ந்து அரசாங்கத்திற்கு பரிந்துரைகளை சமர்ப்பிப்பதற்காக நியமிக்கப்பட்ட குழுவிற்கும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் இடையே ஜனாதிபதி அலுவலகத்தில் கலந்துரையாடல் நடைபெற்றது.



தமிழ்த் தலைவர்களிடம் பிரதமர் மோடி வாக்குறுதி! Top News
[Saturday 2025-04-05 16:00]

ஐக்கிய இலங்கைக்குள் தமிழ் சமூகத்திற்கு சமத்துவம், கௌரவம் மற்றும் நீதி ஆகியவற்றுடனான வாழ்க்கைக்கான எமது அசைக்கமுடியாத அர்ப்பணிப்பை தமிழ் கட்சிகளின் தலைவர்களுடனான சந்திப்பில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.



பாதுகாப்பு உள்ளிட்ட 7 ஒப்பந்தங்கள் கைச்சாத்து!
[Saturday 2025-04-05 16:00]

இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் பாதுகாப்பு, வலுசக்தி, டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் சுகாதாரம் ஆகிய துறைகள் தொடர்பான 7 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இன்றுகாலை ஜனாதிபதி செயலகத்தில் கையெழுத்தானது.



இந்திய மீனவர்களை உடனடியாக விடுவித்து, அவர்களின் படகுகளை திருப்பி அனுப்ப வேண்டும்!
[Saturday 2025-04-05 16:00]

இந்திய மீனவர்களை உடனடியாக விடுவித்து, அவர்களின் படகுகளை திருப்பி அனுப்ப வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றோம் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.


Rajeef sebarasha 2023/04/19
Latika-Gold-House-2025
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Asayan-Salon-2022-seithy
Karan Remax-2010
 gloriousprinters.com 2021
Vaheesan-Remax-2016
Kugeenthiran-200-2022-seithy
Airlinktravel-2020-01-01
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா