Untitled Document
April 7, 2025 [GMT]
நாடாளுமன்ற ஆசனம் வெற்றிடமானதாக அறிவிப்பு!
[Monday 2025-04-07 16:00]


தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கோசல நுவான் ஜயவீரவின் திடீர் மரணத்தால் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் பதவி வெற்றிடமாகியுள்ளதாக பாராளுமன்றத்தால் தேர்தல் ஆணைக்குழுவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கோசல நுவான் ஜயவீரவின் திடீர் மரணத்தால் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் பதவி வெற்றிடமாகியுள்ளதாக பாராளுமன்றத்தால் தேர்தல் ஆணைக்குழுவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

  

அதன்படி, அரசியலமைப்பின் 66(அ) பிரிவின் விதிகளின்படி, 2025 ஏப்ரல் மாதம் 06ஆம் திகதி முதல் பத்தாவது பாராளுமன்றத்தில் ஒரு இடத்திற்கு வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாக, பாராளுமன்றத்தின் பதில் பொது செயலாளர் சமிந்த குலரத்ன, தேர்தல் ஆணைக்குழுவின் தலைவருக்கு அறிவித்துள்ளார்.

கோசல நுவான் நேற்று திடீர் மாரடைப்பு காரணமாக தமது 38 வயதில் காலமானார்.

  
   Bookmark and Share Seithy.com



கொழும்பு மாநகர சபை உள்ளிட்ட பல சபைகளில் தேர்தல் செயற்பாடுகளை இடைநிறுத்த உத்தரவு!
[Monday 2025-04-07 16:00]

கொழும்பு மாநகர சபைஉட்பட பல உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்களை நடத்துவது தொடர்பாக எந்தவொரு நடவடிக்கையையும் தடுக்கும் வகையில் மேல்முறையீட்டு நீதிமன்றம் இன்று தடை உத்தரவைப் பிறப்பித்தது.



இலங்கையின் மக்கள் தொகை 21,763,170 - அதிகாரபூர்வமாக அறிவிப்பு.
[Monday 2025-04-07 16:00]

இலங்கையின் மக்கள் தொகை 21,763,170 என்று மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் கூறுகிறது.



பாதுகாப்பு ஒப்பந்தம் தொடர்பில் ஜனாதிபதி விளக்கமளிக்க வேண்டும்!
[Monday 2025-04-07 16:00]

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வருகையின் போது இந்தியாவுடன் மேற்கொண்ட பாதுகாப்பு ஒப்பந்தம் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நாட்டு மக்களுக்கு விளக்கமளிக்க வேண்டும் என்பதுடன் இந்த அரசாங்கம் இந்தியாவுக்கு மாத்திரம் ஆதரவாக ஒருதலைப்பட்சமாக செயற்படுவதை அனுமதிக்க முடியாது’’ என்றும் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.



இந்த ஆண்டு 7 இலட்சத்தை தாண்டிய சுற்றுலாப் பயணிகள்!
[Monday 2025-04-07 16:00]

கடந்த மார்ச் மாதத்தில் இலங்கை 229,298 சுற்றுலாப் பயணிகளை வரவேற்றுள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை உறுதிப்படுத்தியுள்ளது. மார்ச் மாதத்தில் அதிகபட்ச சுற்றுலாப் பயணிகள் வருகை மார்ச் 01 முதல் 07 வரை பதிவாகியுள்ளது. இதன்போது, 53,113 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.



மக்கள் தொகை கணக்கெடுப்பு அறிக்கை ஜனாதிபதியிடம் சமர்ப்பிப்பு!
[Monday 2025-04-07 16:00]

மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தால் நடத்தப்பட்ட 'மக்கள் தொகை மற்றும் வீட்டுவசதி மக்கள் தொகை கணக்கெடுப்பு 2024' தொடர்பான அறிக்கை இன்று காலை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவிடம் அதிகாரப்பூர்வமாக கையளிக்கப்பட்டது.



மூன்று கன்றுகளை ஈன்ற பசு - வடமராட்சியில் அதிசயம்!
[Monday 2025-04-07 16:00]

வடமராட்சி - உடுப்பிட்டி இலக்கணாவத்தை விவசாயி ஒருவரின் பசு மூன்று கன்றுகளை சனிக்கிழமை ஈன்றுள்ளது. ஒரே தடவையில் மூன்று கன்றுகளைப் பிரசவிப்பதென்பது மிகவும் அபூர்வமான நிகழ்வாக கருதப்படுகின்றது. இரண்டு நாம்பன், ஒரு பசுக் கன்று ஈன்றுள்ளது. மூன்று கன்றுக் குட்டிகளும் ஆரோக்கியமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



நாளை தேசபந்துவை நீக்கும் பிரேரணை!
[Monday 2025-04-07 16:00]

பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனை பொலிஸ்மா அதிபர் பதவியில் இருந்து நீக்குவது தொடர்பான பிரேரணை நாளை செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் சந்தன சூரியாரச்சி தெரிவித்தார்.



சிஐடியில் முன்னிலையானார் மைத்திரி!
[Monday 2025-04-07 16:00]

அரசியல்வாதிகள் உட்பட பல நபர்களுக்கு ஜனாதிபதி நிதியிலிருந்து நிதி வழங்குவது தொடர்பாக வாக்குமூலம் அளிக்க முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சற்று நேரத்திற்கு முன்பு குற்றப் புலனாய்வுத் துறைக்கு வந்ததாக போலிஸார் தெரிவித்தனர். இதேவேளை, உயிர்த்த ஞாயிறு தொடர்பில், வாக்குமூலம் அளிப்பதற்கே, மைத்திரிபால சிறிசேன, வந்துள்ளார் என மற்றுமொரு தகவல் தெரிவிக்கின்றது.



மஹிந்த வைத்தியசாலையிலா? - மறுக்கிறார் நாமல்!
[Monday 2025-04-07 16:00]

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நல்ல உடல் நலத்துடன் இருப்பதாக அவரது மகன், பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். வாக்குமூலம் அளிப்பதற்காக இன்று (07) காலை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையான போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.



வெளிநாட்டுக்கு அனுப்புவதாக பண மோசடி - விளக்கமறியலில் வைக்க உத்தரவு!
[Monday 2025-04-07 05:00]

யாழ்ப்பாணத்தில் ஒரு கோடி அறுபது இலட்சம் ரூபா பெறுமதியான பணமோசடி செய்த சந்தேகநபர் ஒருவர் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்தப்பட்டுள்ளார்.



பாதாள உலகக்குழுவை ஒழிக்கும் நடவடிக்கை முப்படையில் இருந்து ஆரம்பிக்கப்படும்!
[Monday 2025-04-07 05:00]

முப்படைகளில் இருந்து தப்பிச் சென்ற சுமார் 1,700 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர் என பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.



ஆளும்கட்சி எம்.பி மாரடைப்பால் மரணம்!
[Monday 2025-04-07 05:00]

தேசிய மக்கள் சக்தி யின் கேகாலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோசல நுவான் நேற்றுமாலை மாரடைப்பால் 38 வயதில் மரணமானார் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. அவரது சடலம் கரவனல்ல வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.



அமெரிக்கா கதவடைக்கும் போது ஐரோப்பாவின் கதவு திறக்குமா?
[Monday 2025-04-07 05:00]

அமெரிக்காவினால் கதவுகள் அடைக்கப்படும் போது, ஐரோப்பிய ஒன்றியத்தின் தகவுகள் திறக்கப்படும் என்று எவராவது எண்ணினால் அது முற்றிலும் தவறாகும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.



வர்த்தக இடைவெளியை குறைக்க நாளை அமெரிக்காவுடன் பேச்சு!
[Monday 2025-04-07 05:00]

அமெரிக்காவின் பரிந்துரைக்கு அமைவாக, இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக இடைவெளியைக் குறைப்பதற்கான ஒரு முன்மொழிவு செவ்வாய்க்கிழமை நடைபெறும் விசேட கலந்துரையாடலின் போது அந்த நாட்டின் அதிகாரிகளிடம் முன்வைக்கப்படும் என்று தொழில் அமைச்சரும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் அனில் ஜயந்த தெரிவித்தார்.



பிரித்தானியாவுக்கான அரசாங்கத்தின் பதில் - கம்யூனிஸ்ட் கட்சி விரக்தி!
[Monday 2025-04-07 05:00]

இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தில் மனித உரிமை மீறப்பட்டுள்ளதாக தெரிவித்து ஓய்வுபெற்ற ஜென்ரல் சவேந்திர சில்வா, அட்மிரல் வசன்த கரண்ணாகொட ஜென்ரல் ஜகத் ஜயசூரிய மற்றும் கேணல் கருணா என அழைக்கப்படும் முன்னாள் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் ஆகியோருக்கு எதிராக பிரித்தானியா விதித்திருக்கும் தடையை வன்மையாக கண்டிக்கிறோம் பிரித்தானியாவின் இந்த நடவடிக்கைக்கு இலங்கை அரசாங்கத்தின் பதில் வெட்கப்படக்கூடியதாக இருக்கிறது என ஸ்ரீலங்கா கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.



தேர்தல் முறைப்பாடுகள் 600 ஐ தாண்டியது!
[Monday 2025-04-07 05:00]

வரவிருக்கும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் தொடர்பாக 74 புதிய முறைப்பாடுகள் பெறப்பட்ட நிலையில், மொத்த முறைப்பாடுகளின் எண்ணிக்கை 600 க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.



யாழ். பல்கலைக்கழக மாணவனை சித்திரவதை செய்த இரு மாணவர்களுக்கு விளக்கமறியல்!
[Monday 2025-04-07 05:00]

யாழ்ப்பாண பல்கலைக்கழக விஞ்ஞான பீட புதுமுக மாணவன் மீது தாக்குதல் மேற்கொண்டு சித்திரவதை புரிந்த குற்றச்சாட்டில் சிரேஷ்ட மாணவர்கள் இருவர் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.



பூஸா சிறையில் தமிழ்க் கைதி கொலை- விசாரணை நடக்கிறதாம்!
[Monday 2025-04-07 05:00]

பூஸா சிறைச்சாலையில் கைதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவின் அறிவுறுத்தலின் பேரில் விரிவான விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.



யாழ். நகரில் போதை மாத்திரைகளுடன் இளைஞன் கைது!
[Monday 2025-04-07 05:00]

யாழ்ப்பாண நகரில் போதை மாத்திரைகளுடன் இளைஞர் ஒருவர் யாழ் மாவட்ட குற்றத்த தடுப்பு பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். யாழ் நகர் பகுதியில் போதை மாத்திரைகளின் பரவல் அதிகரித்திருப்பதாகவும், விற்பனை செய்யப்படுவதாகவும் கிடைத்த தகவலுக்கு அமைய கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.



ஒற்றையாட்சிக்குள் தீர்வு சரிவராது!
[Sunday 2025-04-06 17:00]

ஒற்றையாட்சிக்குள் அதிகாரப் பகிர்வோ, தீர்வோ சரிவராது என்ற நிலைப்பாட்டை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு எடுத்துரைத்தோம்." - என்று இந்தியப் பிரதமரைச் சந்தித்த பின்னர் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி. தெரிவித்தார்.


Vaheesan-Remax-2016
Asayan-Salon-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Airlinktravel-2020-01-01
 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
Rajeef sebarasha 2023/04/19
Latika-Gold-House-2025
Karan Remax-2010
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா