Untitled Document
April 27, 2025 [GMT]
பயங்கரவாத தடைச்சட்டத்தை விட வேறு சட்டம் இல்லை!
[Tuesday 2025-04-08 17:00]


விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் பயங்கரவாதத் தடை சட்டத்தை பயன்படுத்த வேண்டிய நிலைமையே தற்போது காணப்படுகிறது. திட்டமிட்ட குற்றச்செயல்கள் தொடர்பான விசாரணைகளின் போது சந்தேகநபர்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட வேண்டும் என்பதே தற்போது நடைமுறையிலுள்ள சட்டமாகும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் பயங்கரவாதத் தடை சட்டத்தை பயன்படுத்த வேண்டிய நிலைமையே தற்போது காணப்படுகிறது. திட்டமிட்ட குற்றச்செயல்கள் தொடர்பான விசாரணைகளின் போது சந்தேகநபர்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட வேண்டும் என்பதே தற்போது நடைமுறையிலுள்ள சட்டமாகும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

  

செவ்வாய்கிழமை (08) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இதனைத் தெரிவித்தார்.

பயங்கரவாதத் தடை சட்டம் நீக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் நாம் ஸ்திரமாகவுள்ளோம். எவ்வாறிருப்பினும் தற்போது சில குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்காக வேறு சட்டமொன்று நாட்டில் இல்லை.

திட்டமிட்ட குற்றச்செயல்கள் தொடர்பான விசாரணைகளின் போது சந்தேகநபர்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட வேண்டும் என்பதே தற்போது நடைமுறையிலுள்ள சட்டமாகும்.

எனவே பயங்கரவாத தடைச்சட்டம் என்பது எமது விருப்பம் அல்லது விருப்பமின்மைக்கு அப்பால் குற்றங்களைத் தடுப்பதற்காக பயன்படுத்தப்படுவதாகும்.

அது நடைமுறையிலுள்ள சட்டதிட்டங்களுக்கமையவே பயன்படுத்தப்படுகிறது. அதற்காக மாத்திரமே இந்த சட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றதே அன்றி இதனை தொடர்ந்தும் நடைமுறையில் வைத்திருப்பதற்கு நாம் எதிர்பார்க்கவில்லை.

எனவே இந்த சட்டத்தை நீக்குவதற்கான முதலாவது சந்தர்ப்பம் கிடைக்கும் போது அப்போதே அதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படும். திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள், போதைப்பொருள் கடத்தல்காரர்கள், குறிப்பாக தேசிய பாதுகாப்புடன் தொடர்புடைய குற்றங்களின் போது இதனை நடைமுறைப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது என்றார்.

  
   Bookmark and Share Seithy.com



உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளில் சாதனை படைத்த இரட்டையர்!
[Sunday 2025-04-27 06:00]

2024ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் யாழ். இந்துக் கல்லூரியை சேர்ந்த இரண்டு மாணவர்கள் மாவட்ட மட்டத்தில் முதல் இரு இடங்களை பெற்றுள்ளனர்.



ஆட்சிக்கவிழ்ப்பு சூழ்ச்சிகளை மக்கள் அனுமதிக்கமாட்டார்கள்!
[Sunday 2025-04-27 06:00]

வாய்ப்பு கிடைத்தால் ஆட்சியைக் கவிழ்ப்பதற்கு எதிர்க்கட்சிகள் காத்திருக்கின்றன. மக்கள் எமக்கு 5 ஆண்டுகளுக்கான ஆணையை வழங்கியிருக்கின்றனர். எனவே ஆட்சி கவிழ்ப்பிற்கான சூழ்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டால் மக்கள் அதற்கு ஒருபோதும் இடமளிக்க மாட்டார்கள். ரணில், சஜித் இந்நாட்டின் ஜனாதிபதியாக வேண்டுமென நினைத்தால் அது அவர்களது நிறைவேறாத கனவாகும் என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்தார்.



அணிசேராக் கொள்கையில் இருந்து விலகுவது ஆபத்து!
[Sunday 2025-04-27 06:00]

அணிசேரா வெளிநாட்டு கொள்கையிலிருந்து வெளியேறி தற்போதைய அரசாங்கம் பக்கசார்பான கொள்கையையே பின்பற்றுகிறது. துரதிஷ்டவசமாக இந்தியா - பாக்கிஸ்தான் யுத்தம் அறிவிக்கப்பட்டால் இலங்கையை இந்தியாவின் ஒரு பகுதியாக எண்ணக்கூடிய நிலைமை கூட ஏற்படலாம் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிரேம்நாத் சி தொலவத்த தெரிவித்தார்.



பொதுமக்களின் காணிகள் விடுவிக்கப்படும்!
[Sunday 2025-04-27 06:00]

போரின் போது பாதுகாப்புப் படையினரால் கையகப்படுத்தப்பட்ட பொதுமக்களுக்குச் சொந்தமான அனைத்து காணிகளையும் மீண்டும் விடுவித்து மக்களிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க உறுதியளித்துள்ளார்.



இந்தியாவை நம்பியிருப்பது ஆபத்து!
[Sunday 2025-04-27 06:00]

வலுசக்தி மற்றும் மின்சக்தி துறையில் இந்தியாவை நம்பியிருப்பது தேசிய பாதுகாப்புக்கு என்றாவதொரு நாள் அச்சுறுத்தலாக அமையும் என பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.



தவறாக எழுதப்பட்ட விதியை திருத்தி எழுதுவோம்! - சங்கு கூட்டணி அழைப்பு.
[Saturday 2025-04-26 17:00]

உள்ளூராட்சித் சபைத் தேர்தலையொட்டி ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் தேர்தல் அறிக்கை வெளியாகியுள்ளது.



ஐரோப்பிய ஒன்றிய கண்காணிப்புக்குழு இலங்கை வருகிறது!
[Saturday 2025-04-26 17:00]

ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜிஎஸ்பி பிளஸ் கண்காணிப்புக் குழு எதிர்வரும் ஏப்ரல் 28 ஆம் திகதி முதல் மே 07 ஆம் திகதி வரை இலங்கைக்கு வருகை தரவுள்ளது.



யாழ்ப்பாணத்தில் தந்தை செல்வா நினைவு நாள்! Top News
[Saturday 2025-04-26 17:00]

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நிறுவனர் தந்தை சா.ஜே.வே.செல்வநாயகத்தின் 48வது நினைவு தினமும் நினைவுப் பேருரை நிகழ்வும் இன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. யாழ்ப்பாணம் தந்தை செல்வநாயகம் நினைவு சதுக்கத்தில் இந்த நிகழ்வு அனுஷ்டிக்கப்பட்டது. இதனையடுத்து, தந்தை செல்வாவின் உருவச்சிலைக்கு மலர் மாலை அணிவித்து சமாதியில் மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது.



இன்று வெளியாகிறது உயர்தர பரீட்சையின் பெறுபேறுகள்!
[Saturday 2025-04-26 17:00]

2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சையின் பெறுபேறுகள் இன்று மாலை வெளியிடப்படும் என பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது. கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சைக்கு 333,185 மாணவர்கள் தோற்றியிருந்த நிலையில் அவர்களில் 253,390 பேர் பாடசாலை விண்ணப்பதாரர்களும் 79,795 பேர் தனியார் விண்ணப்பதாரர்களும் ஆவர்.



ஐஎம்எவ் 5 ஆவது கட்ட கடன் வசதிக்கு இணக்கம்!
[Saturday 2025-04-26 17:00]

சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்கு வழங்கப்படும் நீடிக்கப்பட்ட கடன் வசதியின் 05 ஆவது தவணையை விடுவிப்பதற்கு அதிகாரிகள் மட்ட இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. இதனடிப்படையில் இலங்கைக்கு 344 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி கிடைக்கவுள்ளது.



மீண்டும் வருகிறார் பசில்!
[Saturday 2025-04-26 17:00]

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச மீண்டும் நேரடி அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளார்.எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தல் முடிந்த பின்னர் இலங்கை திரும்பவுள்ள பசில் , ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் செயற்பாடுகளை வழிநடத்துவார் என்றும் அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.



யாழ்ப்பாணத்தில் 4 பேருக்கு சிகுன்குனியா தொற்று உறுதி!
[Saturday 2025-04-26 17:00]

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நால்வருக்கு சிகுன்குனியா உறுதி செய்யப்பட்டுள்ளது என்று யாழ்ப்பாணப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் கேதீஸ்வரன் தெரிவித்தார்.



கட்டுநாயக்கவில் துப்பாக்கிச் சூடு- இளைஞன் காயம்!
[Saturday 2025-04-26 17:00]

கட்டுநாயக்க, ஹீனடியன பகுதியில் இன்று அதிகாலை ஏற்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 29 வயதான உதார சதுரங்க என்ற இளைஞர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இன்று அதிகாலை 5:35 மணியளவில், குறித்த இளைஞர் தனது வீட்டில் இருந்தபோது இவ்வாறு துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளார்.



பாப்பரசரின் நல்லடக்க ஆராதனையில் அமைச்சர் விஜித ஹேரத்!
[Saturday 2025-04-26 17:00]

நித்திய இளைப்பாறிய பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ்ஸின் நல்லடக்க ஆராதனையில் இலங்கை அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் கலந்து கொண்டுள்ளார். பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ்ஸின் நல்லடக்க ஆராதனை இத்தாலியின் வத்திக்கானில் உள்ள புனித பேதுரு பேராலயத்தில் ரோம் நேரப்படி சனிக்கிழமை காலை 10 மணிக்கு ஆரம்பமாகி இடம்பெற்றது.



மன்னார் படுகொலைகள் - சந்தேக நபர் கைது!
[Saturday 2025-04-26 17:00]

மன்னார் நீதிமன்ற வளாகத்திற்கு முன்பாக கடந்த ஜனவரி மாதம் 16 ஆம் திகதி இருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.



ஜனாதிபதிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்ய தடை உத்தரவு கோரிய பொலிஸ்! - நீதிமன்றம் நிராகரிப்பு.
[Saturday 2025-04-26 05:00]

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்காவின் வருகையை முன்னிட்டு ஆர்ப்பாட்டம் மேற்கொள்ள தடையுத்தரவு கோரிய வவுனியா பொலிசாரின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி அனுரகுமார திஸ்நாயக்கா சனிக்கிழமை (26) மாலை 4 மணிக்கு வவுனியா நகரசபை மைதானத்திற்கு வருகை தரவுள்ளார்.



கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் போராட்டம்!
[Saturday 2025-04-26 05:00]

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் ஆர்ப்பாட்டம் இன்று நேற்று கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்டது.கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டம் காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்திற்கு முன்னால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.



ஏக்கிய ராஜ்ய முறையை தமிழரசு ஏற்றுக்கொள்ளாது!
[Saturday 2025-04-26 05:00]

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி "ஏக்கிய ராஜ்ய" முறைமையை ஏற்றுக்கொள்ள மாட்டாது மட்டுமல்ல அவற்றை முழு வீச்சில் எதிர்க்கும் என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.



அமைச்சர் சந்திரசேகரின் ஆதரவாளர்கள் மீன்பிடி தொழிலாளர் சங்கத் தலைவர் மீது தாக்குதல்!
[Saturday 2025-04-26 05:00]

முல்லைத்தீவில் அமைச்சர் சந்திரசேகரனின் ஆதரவாளர்கள் மீன்பிடிதொழிலாளர் சங்கத்தின் தலைவர் மீது தாக்குதலை மேற்கொண்டுள்ளனர் என தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்



தேசபந்து மீது வழக்குத் தொடர உத்தரவு!
[Saturday 2025-04-26 05:00]

மாத்தறை வெலிகம W15 ஹோட்டலுக்கு அருகில் நடந்த துப்பாக்கிச் சூடு தொடர்பான வழக்கில், கடந்த ஏப்ரல் 10 ஆம் திகதி பிணை பெற்று சென்றபோது நீதிமன்றம் வழங்கிய உத்தரவுகளை மீறியதன் மூலம் தேசபந்து தென்னகோன் நீதிமன்றத்தை அவமதித்துள்ளதாக மாத்தறை நீதவான் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.


Kugeenthiran-200-2022-seithy
Karan Remax-2010
Vaheesan-Remax-2016
Asayan-Salon-2022-seithy
Airlinktravel-2020-01-01
 gloriousprinters.com 2021
Latika-Gold-House-2025
Rajeef sebarasha 2023/04/19
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா