Untitled Document
April 28, 2025 [GMT]
டிசம்பரில் மின்கட்டணம் மும்மடங்கு உயரும்!
[Sunday 2025-04-27 17:00]


இந்த வருடம் டிசம்பர் மாதத்தில் மின்சாரக் கட்டணம் மூன்று மடங்கு அதிகரிக்கும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரும் முன்னாள் அமைச்சருமான வஜிர அபேவர்தன எச்சரித்துள்ளார்.

இந்த வருடம் டிசம்பர் மாதத்தில் மின்சாரக் கட்டணம் மூன்று மடங்கு அதிகரிக்கும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரும் முன்னாள் அமைச்சருமான வஜிர அபேவர்தன எச்சரித்துள்ளார்.

  

காலியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

பொருளாதாரம் குறித்த தனது புரிதலுக்கு அமைவாக, நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்திற்குள் நாடு வீழ்ச்சியடையும் என்றும் அவர் இதன்போது தெரிவித்தார்.

இலங்கையின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தால், பாராளுமன்ற உறுப்பினர் பதவி இருந்தாலும் இல்லாவிட்டாலும் இலங்கையை மீட்டெடுக்க தயாராக இருப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

  
   Bookmark and Share Seithy.com



பிரதேச சபையின் ஆட்சி அதிகாரம் பறிபோனால் இனப்பரம்பல் மாற்றியமைக்கப்படும்!
[Monday 2025-04-28 06:00]

மத்தியிலே ஆளும் தரப்பிற்கு வவுனியா வடக்கு பிரதேச சபையின் ஆட்சி அதிகாரம் போகுமாக இருந்தால் இனப்பரம்பலை மாற்றியமைக்கும் வேலையை இலகுவாக நடைமுறைப்படுத்துவார்கள் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.



யாழ்ப்பாணத் தமிழ் மக்களுக்கு இது மானப் பிரச்சினை!
[Monday 2025-04-28 06:00]

தமிழனத்திற்கு முக்கியமான தேர்தலாக இந்தத் தேர்தல் இருக்கின்றது எனவும் யாழ்ப்பாணத் தமிழ் மக்களுக்கு மானப் பிரச்சினையாக இந்தத் தேர்தலை பார்க்கின்றேன் என்றும் பாராமன்ற உறுப்பினர் இ.சாணக்கியன் தெரிவித்தார்.



அலிபாபாவும் 19 திருடர்களும் விலக வேண்டும்!
[Monday 2025-04-28 06:00]

தமிழரசுக் கட்சி முன்னோக்கி செல்ல வேண்டுமாக இருந்தால் அலிபாபாவும் 19 திருடர்களும் விலக வேண்டும் என தமிழரசுக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்துள்ளார்.



நாட்டின் இறையாண்மை காட்டிக் கொடுக்கப்பட்டுள்ளதா?
[Monday 2025-04-28 06:00]

இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையில் நட்பு ரீதியான ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது எனில், அதனை வெளிப்படுத்துவற்கு எதற்காக அனுமதிக்காக காத்திருக்க வேண்டும். அவ்வாறானதொரு நிபந்தனையுடன் ஏன் அரசாங்கம் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது? மே 6க்கு முன்னர் இந்தியாவுடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் அரசாங்கம் தாய் நாட்டின் இறையாண்மையை காட்டிக் கொடுத்துள்ளதாகவே கருதப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்தார்.



நாடாளுமன்றம் வழி செய்தால் மட்டுமே மாகாண சபைத் தேர்தல்!
[Monday 2025-04-28 06:00]

மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்துவதற்கு தேவையான சட்ட ஏற்பாடுகளை பாராளுமன்றம் செய்து தரவேண்டும். நாம் இதற்காக தொடர்ந்து காத்துக் கொண்டிருக்கிறோம் என்று மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் சிவசுப்பிரமணியம் அச்சுதன் தெரிவித்தார்.



பெரும்பாலான பிரதேசங்களில் இன்றும் இடியுடன் மழை!
[Monday 2025-04-28 06:00]

அயனமண்டலங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு வலயம் (வட அரைக் கோளத்திலிருந்தும் தென் அரைக்கோளத்திலிருந்தும் வீசும் காற்று ஒடுங்கும் இடம்) தீவின் வானிலையை பாதித்துக் கொண்டு இருக்கின்றது. நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மாலை அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடியசாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.



யாழ். மாநகர சபையின் சுகாதார பிரிவினர் பணி பகிஷ்கரிப்பு!
[Monday 2025-04-28 06:00]

யாழ். மாநகர சபையின் சுகாதார பிரிவினர் திங்கட்கிழமை (28) பணி பகிஷ்கரிப்பில் ஈடுப்படவுள்ளதாக அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளனர்.



புன்னாலைக்கட்டுவனில் மின்னல் தாக்கி வீடு சேதம்!
[Monday 2025-04-28 06:00]

யாழ். புன்னாலைக்கட்டுவன், திணைப்புலம் பகுதியில் மின்னல் தாக்கத்துக்கு இலக்காகி வீடு ஒன்று பகுதி அளவில் சேதம் அடைந்துள்ளது. இந்தச் சம்பவம் சனிக்கிழமை (26) இடம்பெற்றுள்ளது. வீட்டின் உரிமையாளர் நோய்வாய்ப்பட்டு வீட்டில் இருந்துள்ளார். எனினும், மின்னல் தாக்கத்தால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. வீட்டின் ஒரு பகுதி சேதமடைந்துள்ளதுடன், பயன் தரு மரங்களும் முறிந்து விழுந்துள்ளன.



யாழ்ப்பாணத்தில் காய்ச்சலினால் பெண் மரணம்!
[Monday 2025-04-28 06:00]

யாழ்ப்பாணத்தில் காய்ச்சல் காரணமாக பெண் ஒருவர் இன்றையதினம் உயிரிழந்துள்ளார். 2ஆம் குறுக்குத் தெரு, கொழும்புத்துறை பகுதியைச் சேர்ந்த கமலநாதன் ராஜபத்மினி (வயது 56) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.



என்பிபியின் வன்னி எம்.பி ஊழல் பேர்வழி! - நடவடிக்கை எடுப்பாரா ஜனாதிபதி?
[Sunday 2025-04-27 17:00]

வன்னி மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தியின் ஒரு பாராளுமன்ற உறுப்பினருக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டுக்கள் இருக்கிறது. இவை தொடர்பாக ஜனாதிபதி பொறுப்புக்கூறுவாரா என்று பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கேள்வி எழுப்பியுள்ளார்.



9,457 மாணவர்கள் மூன்று பாடங்களிலும் 'ஏ' சித்தி!
[Sunday 2025-04-27 17:00]

இந்த ஆண்டு நடைபெற்ற (2024) க.பொ.த உயர்தரப் பரீட்சையில் 9,457 மாணவர்கள் மூன்று பாடங்களிலும் 'ஏ' சித்தியைப் பெற்றதாக பரீட்சைகள் ஆணையர் ஜெனரல் அமித் ஜெயசுந்தர தெரிவித்தார்.



2026 இல் கல்வி முறையில் மாற்றம்!
[Sunday 2025-04-27 17:00]

குழந்தைகள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோருக்கு தொந்தரவு இல்லாத கல்வி முறை 2026 முதல் ஒன்று மற்றும் ஆறாம் வகுப்புகளுக்கு அறிமுகப்படுத்தப்படும் என்றும், இது புகழ் அல்லது வாக்குகளுக்கான திட்டம் அல்ல, மாறாக நாட்டில் கல்வியை மேம்படுத்துவதற்கான ஒரு உண்மையான நடவடிக்கை என்றும் பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.



வடக்கில் தேசியக் கட்சியில் 7 எம்.பிக்கள் வருவதற்கு தமிழரசு கட்சியே காரணம்!
[Sunday 2025-04-27 17:00]

வடக்கில் ஏழு பாராளுமன்ற உறுப்பினர்கள் தேசியக் கட்சியில் வருவதற்கு தமிழரசு கட்சியே காரணம் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார். ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் வேட்பாளரை ஆதரித்து பூந்தோட்டத்தில் பிரச்சார கூட்டம் இன்று இடம்பெற்ற போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.



பாதாள உலக நடவடிக்கைகளை தடுக்க நடவடிக்கை!
[Sunday 2025-04-27 17:00]

உள்ளூராட்சித் தேர்தல் காலத்தில் பாதாள உலக நடவடிக்கைகளைத் தடுப்பதற்காக, பாதுகாப்புப் படையினரின் ஆதரவுடன், புதிய, விரிவான பாதுகாப்புத் திட்டத்தை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர். இந்தப் பாதுகாப்புத் திட்டத்தில், பொலிஸ் சிறப்புப் படையைச் சேர்ந்த பொலிஸ் அதிகாரிகள், அரச புலனாய்வு அமைப்புகள் மற்றும் சாதாரண உடையில் பொலிஸ் அதிகாரிகள் ஈடுபடுத்தப்படுவார்கள்.



கிளிநொச்சியில் ஒரு மணிநேரம் கொட்டிய மழை- வீடுகளுக்குள் வெள்ளம்! Top News
[Sunday 2025-04-27 17:00]

கிளிநொச்சியில் இன்று பகல் சுமார் ஒரு மணி நேரம் பெய்த கடும் மழை காரணமாக வெள்ளம் ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான வீதிகளில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக பொது மக்களின்போக்குவரத்து சில மணிநேரம் நெருக்கடிக்குள் உள்ளானது. அத்தோடு பொது மக்களின் வீடுகளுக்குள் வெள்ள நீர் சென்றமையால் அவர்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிப்படைந்துள்ளது.



14 வயதுச் சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்- 3 பேர் கைது!
[Sunday 2025-04-27 17:00]

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த சிறுமி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டமை தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆனணக்குழுவின் யாழ்ப்பாண அலுவலுகத்தின் நடவடிக்கையின் மூலமே வெளிகொணரப்பட்டுள்ளது.



புதிய வாகனத்துடன் கதிர்காமம் சென்றவர் மாணிக்க கங்கையில் மூழ்கி மரணம்!
[Sunday 2025-04-27 17:00]

புத்தள, வேரகல நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் முன்அறிவித்தலின்றி திறக்கப்பட்டமையால் கதிர்காமம் மாணிக்க கங்கையில் நீராடி கொண்டிருந்த ஒருவர் நீரில் அடித்துச் சென்று சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக கதிர்காமம் பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் சனிக்கிழமை இடம் பெற்றுள்ளது.



வயலுக்குள் இறங்கியவர் சடலமாக மீட்பு!
[Sunday 2025-04-27 17:00]

மட்டக்களப்பு , எருவில் கிராமத்தில் உள்ள மாலை வயல் பகுதியில் இருந்து சனிக்கிழமை ஆண் ஒருவர் சடலமாக மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சடலமாக மீட்கப்பட்டவர் எருவில் கிராமத்தை சேர்ந்த 44 வயதுடைய இரத்தினசிங்கம் உத்தமன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.



உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளில் சாதனை படைத்த இரட்டையர்!
[Sunday 2025-04-27 06:00]

2024ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் யாழ். இந்துக் கல்லூரியை சேர்ந்த இரண்டு மாணவர்கள் மாவட்ட மட்டத்தில் முதல் இரு இடங்களை பெற்றுள்ளனர்.



ஆட்சிக்கவிழ்ப்பு சூழ்ச்சிகளை மக்கள் அனுமதிக்கமாட்டார்கள்!
[Sunday 2025-04-27 06:00]

வாய்ப்பு கிடைத்தால் ஆட்சியைக் கவிழ்ப்பதற்கு எதிர்க்கட்சிகள் காத்திருக்கின்றன. மக்கள் எமக்கு 5 ஆண்டுகளுக்கான ஆணையை வழங்கியிருக்கின்றனர். எனவே ஆட்சி கவிழ்ப்பிற்கான சூழ்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டால் மக்கள் அதற்கு ஒருபோதும் இடமளிக்க மாட்டார்கள். ரணில், சஜித் இந்நாட்டின் ஜனாதிபதியாக வேண்டுமென நினைத்தால் அது அவர்களது நிறைவேறாத கனவாகும் என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்தார்.


 gloriousprinters.com 2021
Latika-Gold-House-2025
Kugeenthiran-200-2022-seithy
Airlinktravel-2020-01-01
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Rajeef sebarasha 2023/04/19
Asayan-Salon-2022-seithy
Karan Remax-2010
Vaheesan-Remax-2016
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா