Untitled Document
May 7, 2025 [GMT]
அலிபாபாவும் 19 திருடர்களும் விலக வேண்டும்!
[Monday 2025-04-28 06:00]

தமிழரசுக் கட்சி முன்னோக்கி செல்ல வேண்டுமாக இருந்தால் அலிபாபாவும் 19 திருடர்களும் விலக வேண்டும் என தமிழரசுக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்துள்ளார்.

தமிழரசுக் கட்சி முன்னோக்கி செல்ல வேண்டுமாக இருந்தால் அலிபாபாவும் 19 திருடர்களும் விலக வேண்டும் என தமிழரசுக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்துள்ளார்.

  

வவுனியாவில் உள்ள அவரது அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

இன்று தமிழினம் பாரிய ஆயுதப் போராட்டத்தின் பின் யாரும் பொறுப்பெடுக்க முடியாத நிலையில் விடப்பட்டுள்ளது. உண்மையில் தமிழரசுக் கட்சி தான் ஏனைய கட்சிகளை உள்வாங்கி ஈழ விடுதலைப் போராட்டத்தை நடத்த வேண்டிய ஒரு கட்சி. ஆனால் துரதிஸ்டவசமாக அக்கட்சி இக்கட்டில் சிக்கியுள்ளது.

இன்று கட்சியின் பொதுக்குழு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டமையால் இயங்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. கட்சியானது அலிபாபாவின் கையிலும், அவருடன் சேர்ந்த 19 திருடர்களின் கையிலும் மாட்டிக் கொண்டுள்ளது. இந்த அலிபாவாவும் 19 திருடர்களும் மனம் மாற வேண்டும். தமிழரசுக் கட்சியின் பொறுப்பில் இருக்கும் அலிபாபாக்கள் அதிலிருந்து விலக வேண்டும். அப்படி இருந்தால் தான் அடுத்த கட்ட நகர்வைப் பற்றிய சிந்தனையில் நாம் செலலக் கூடியதாக இருக்கும்.

வழக்கு போட்டது யார் என்பது இருக்க, அதை எய்தவன் யார் என பார்க்க வேண்டும். அம்பையும் தெரியும். எய்த சுத்துமாத்து யார் என்பதை தேர்தலுக்கு முன் மக்கள் அடையாளம் காண வேணடும். தமிழரசுக் கட்சி தான் வெல்ல வேண்டும் என்பது உண்மை. ஆனால் அவர்கள் வென்று எதையும் சாதிக்கப் போவதில்லை. இன்றைய நிலைமையில் தமிழரசுக் கட்சி பெற்றுக் கொள்ளும் தற்காலிக வெற்றி அதனை நிரந்தர அழிவில் கொண்டு சென்று நிறுத்தும். இது தான் உண்மை நிலைப்பாடு.

தமிழரசுக் கட்சியில் புதிய சூழ்ச்சிகள் இன்று ஆயத்தப்படுத்தப்பட்டுள்ளது. அவை அரங்கேறக் காத்திருக்கின்றது. எமது கட்சியில் பொதுக் குழுவில் 326 உறுப்பினர்கள். 57 பிரதேச சபை அல்லது பிரதேச செயலகங்களுக்கு உட்பட்ட எமது தொகுதிக் குழுக்களில் இருந்து 285 பேரும், மத்திய குழுவில் 46 பேரும் என 326 பேர் உள்ளனர். அண்மையில் சிறிதரன் அவர்கள் இந்த 36 பேருடன் மீண்டும ஒரு தெரிவை செய்து உறுப்பினர்களை அதிகரிக்க வேண்டும் என்றார்.

ஆனால் இப்போது இருக்கும் சுத்துமாத்து 161 பேர் தான் பொதுக் குழுவில் இருக்கலாம் என கூறுகிறார்கள். அப்படி எனில் 165 பேர் பொதுக் குழுவில் இருந்து வெளியேற்றப்படப் போகிறார்கள். இதைக் கூட தமிழரசுக் கட்சியில் இருக்கும் ஒவ்வொருவரும் தெரியாமல் கண்மூடி மௌனியாக இருக்கிறார்கள். அவர்களுக்கே தெரியாது தாங்கள் வெளியேற்றப்பட போகின்றார்கள் என்று. முல்லைத்தீவில் 25 பேர் பொதுக் குழுவில் இருக்கிறார்கள்.

வவுனியாவில் 20 பேர் வரையில் இருக்கிறார்கள். 70 பேருக்கு மேல் பொதுக் குழுவில் வன்னிப் பிரதேசத்தில் இருக்கிறார்கள். இவர்களில் தற்போதைய நிலவரப்படி வவுனியா, மன்னார், முல்லைத்தீவு என்பவற்றுக்கு 5 பேர் வீதம் 15 பேர் தான் வரலாம் என்கிறார்கள். தங்களது சுயநலத்திற்காக இதை உருவாக்கியுள்ளார்கள். இது பற்றி கேள்வி கேட்க யாருக்காவது தகுதி இருக்கா?

இவையெல்லாம் தேர்தல் பிரச்சார மேடையில் வரும் போது கேட்கப்பட வேண்டிய கேள்விகள். பொதுகுழுவில் இருக்கும் 326 பேருடன் கட்சியை ஏற்றுக் கொளளப் போகின்றீர்களா அல்லது உங்களது எண்ணங்களின அடிப்படையில் 161 பேரை தான் ஏற்கப் போறீங்களா என தமிழரசுக் கட்சியை ஆதரிக்கும் அனைவருக்கும் கேட்கும் உரிமை உண்டு.

வன்னி மாவட்டத்தில் பொதுக் குழுவில் 70 பேருக்கு பதிலாக 15 பேரை தருகிறார்கள். அப்படியெனில் 55 பேர் இனி இல்லை. கிளிநொச்சி மாவட்டத்தில் 20 பேர் உள்ளனர். அதில் 5 பேரை எடுத்தால் 15 பேர் இல்லை. யாழ் மாவட்டத்தில் மட்டும் 55 பேர் இருக்கிறார்கள். ஏன் இந்த பாரபட்சம். அப்ப தான் சுத்துமாத்து கூட செய்யலாம். வன்னியில் சுத்துமாத்து சரிவராது. வன்னியில் தமிழரசுக் கட்சி வளர மாவை சேனாதிராஜா ஐயா, சேவியர் குலநாயகம் ஐயா, கனகசபாபதி ஆகியோரே காரணம்.

ஒரு கட்சியை வளர்ப்பதற்காக செயற்பட்ட பின்னர் தற்போது குறுக்கு தனமான செயற்படுகிறார்கள். பதில், பதில் என்று சொல்லிக் கொண்டிருப்பவர்களின் பொட்டுக்கள் வெளிப்படுத்தப்பட வேண்டும்.

இன்றைக்கு சஜித் பிரேதமாதாச அவர்களை ஆதரித்தவர்கள் தேசியவாதிகள். ஆதரிக்காதவர்கள் தேசியவாதிகள் அல்ல என்ற எண்ணத்தில் செயற்படுகிறார்கள். சஜித்துக்கு போட்டவர்கள் போடட்டும், அரியநேந்திரன் அவர்களுடன் நின்றவர்கள் நிற்கட்டும் என விட்டிருக்கலாம். ஆனால் சஜித்தை ஆதரிக்காதவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வெளிக்கின்றீர்கள் என்றால் உங்களது பின்புலம் என்ன என்ற கேள்வி கேட்டுத்தானே ஆக வேண்டும். உங்களது அடிமனதில் உள்ளது தேசிய நீக்கம். அதற்காக கொண்டு வரப்பட்ட நீங்கள் கட்சியிலும் அதனை செய்யப் பார்க்கிறீர்கள்.

பதில், பதில் என வருபவர்களிடம் இது பற்றி கேட்க வேண்டும். அதற்குள் ஒரு கருநாகம் நின்று படம் எடுத்து ஆடுது. பெட்டிப் பாம்புகள் எல்லாம் கீழே கிடந்து ஆடுது. இதுகளை கேட்க துணிவில்லாதவர்கள் கட்சியில் இருந்து கட்சி வளராது. முதலில் கருநாகங்கள் வெளியேற்றப்பட வேண்டும். பதில் தலைமையைப் பெற்றவர்கள் வெளியேற்றபட வேண்டும். அப்படி இல்லாவிட்டால் தமிழரசுக் கட்சி என்ன வெற்றியைப் பெற்றாலும் எதுவுமே நடக்கப்போவதில்லை.

யாழ் மண்ணில் ஒரு செத்த பாம்பு படமெடுத்து ஆடுது. மாவைக்கு தேசியப் பட்டியல் கொடுக்கக் கூடாது. அவருக்கு வயது கூடி விட்டது எனக் கூறி கொடுக்க முடியாது என்றார்கள். அந்த செத்த பாம்புக்கு தெரியாது தனக்கும் 80 தாண்டி விட்டது என்று. அதுவே இப்ப பதில் என்று வைத்துக் கொண்டு ஆடுது. இந்த தேர்தல் முடிய வேட்டியைக் கட்டிக் கொண்டு ஊருக்குள் போகமாட்டார்.

சுயநலத்திற்காக ஒரு தலைவரையே இறப்பு நிலைக்கு கொண்டு போய் சேர்த்த ஒரு கூட்டம. ஒரு சின்ன விட்டுக் கொடுப்பை செய்திருந்தால் இவ்வளவு பிரச்சனையும் வந்திருக்காது. தேசியம் என்றவர்களையும், கட்சியை வளர்த்தவர்களையும் வெளியேற்றிவிட்டு, அலிபாபாவும் 19 பேரும் நின்று கட்சியை நடத்த முடியும் என்றால் அது நடக்குமா? இதற்கு மக்கள் பதில் கொடுப்பார்கள்.

யாழ்பாணத்தைப் பொறுத்தவரை இவர்களுக்கு நிச்சயம் பதில் கிடைக்கும். மாவை சேனாதிராஜாவின் நிலைப்பாடு தொடர்பில் பதில் வரும். உங்களது தேவைக்காக தேசியப் பட்டியலை திருடி வைத்துக் கொண்டு கட்சி நடத்துவோம் என சொல்ல முடியாது. 400 வாக்கு எடுக்க தகுதியற்ற ஒருவர் தலைமை தாங்கி பிரேதேச சபை தேர்தலை கொண்டு சென்றால் என்ன நடக்கும். இவர்கள் ஒதுக்கப்படுவார்கள்.

முல்லைத்தீவில் போட்டியிடுபவர்கள் அங்கு கட்சி வளர்த்த மாவை ஐயா அல்லது சம்மந்தன் ஐயா, செல்வநாயகம் ஐயாவின் படத்தை போட்டிருக்கலாம். அதை விடுத்து கள்ளன் என விடுதலைப் புலிகளால் திரத்தப்பட்டவனை, சங்கத்தில் இருந்து பணத்தை கொள்ளையடித்த ஒருவருடைய படத்தை போட்டு தேர்தல் கேட்டால் எப்படி வெல்ல முடியும். ஆகவே காலம் பதில் சொல்லும் எனத் தெரிவித்தார்.

  
   Bookmark and Share Seithy.com



கூட்டமைப்பாக பெற்றதை விட பெரிய வெற்றியை பெற்றுள்ளோம்!
[Wednesday 2025-05-07 17:00]

இலங்கை தமிழரசுகட்சி பலவீனமடையவில்லை தமிழ்தேசிய கூட்டமைப்பாக சேர்ந்து இருந்ததை விட தற்போது தனியாக பலமாக வெளிவந்திருக்கின்றது என இலங்கை தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் எம் ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.



257 உள்ளூராட்சி சபைகளை கைப்பற்றியது தேசிய மக்கள் சக்தி!
[Wednesday 2025-05-07 17:00]

2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வௌியான முடிவுகளுக்கு அமைவாக, 257 உள்ளூராட்சி சபைகளை தேசிய மக்கள் சக்தி கைப்பற்றியுள்ளது.



பிற கட்சிகளுடன் இணைந்து ஆட்சியமைக்கமாட்டோம்!
[Wednesday 2025-05-07 17:00]

நிராகரிக்கப்பட்ட எதிர்க்கட்சிகளுடன் தேசிய மக்கள் சக்தி கைகோர்த்து சபைகளை நிறுவாது என்று ஜே.வி.பி. பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்தார். இருப்பினும், தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்து பணியாற்ற விரும்பும் சுயாதீன குழுக்களின் ஆதரவை பரிசீலிக்கும் என்றும் அவர் கூறினார்.



நிரந்தர அரசியல் தீர்வுக்கு தமிழ் மக்கள் மீண்டும் ஆணை தந்திருக்கிறார்கள்!
[Wednesday 2025-05-07 17:00]

நிரந்தரமான ஒரு அரசியல் தீர்வினை அடைய வேண்டுமென்ற எங்களுடைய இலக்கிற்கு வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் மீண்டும் ஆணையை தந்திருக்கிறார்கள் என இலங்கை தமிழ் அரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.



வடக்கு கட்சிகள் என்பிபியை ஆட்சியமைக்க அழைக்கின்றவாம்!
[Wednesday 2025-05-07 17:00]

வடக்கில் உள்ள அரசியல் கட்சிகள் உள்ளூராட்சி சபைகளின் ஆட்சியமைக்க, தேசிய மக்கள் சக்தியிடம் (NPP) கோரிக்கை விடுத்துள்ளன என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.



யாழ்ப்பாணத்தில் தமிழரசு 12, சைக்கிள் 3, சபைகளில் வெற்றி!
[Wednesday 2025-05-07 17:00]

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் யாழ். மாவட்டத்தில் இலங்கை தமிழரசுக் கட்சி ஆதிக்கம் செலுத்தியுள்ளது.



எழுவைதீவில் 323 கிலோ கஞ்சாவுடன் மூவர் கைது!
[Wednesday 2025-05-07 17:00]

இந்தியாவிலிருந்து கடல் மார்க்கமாக பெருமளவான கஞ்சாவினை கடத்தி வந்த மூவரை கடற்படையினர் நேற்றிரவு கைதுசெய்துள்ளனர். எழுவைதீவு கடற்பரப்பில் வைத்து 323.35 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இவர்களில் ஒருவர் பேசாலை பகுதியையும், மற்றைய இருவர் குருநகர் பகுதியையும் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.



கொழும்பு மாநகர சபையில் ஆட்சியமைப்போம்!
[Wednesday 2025-05-07 17:00]

கொழும்பு மாநகர சபையில் புதிய நிர்வாகத்தை ஐக்கிய மக்கள் சக்தி (SJB) மற்ற கட்சிகளுடன் இணைந்து அமைக்கும், அதே நேரத்தில் புதிய மேயர் எங்கள் கட்சியைச் சேர்ந்தவராக இருப்பார் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.



அமைச்சர் ஆனந்த விஜேபாலவை தகுதி நீக்கம் செய்யக் கோரும் மனு தள்ளுபடி!
[Wednesday 2025-05-07 17:00]

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவை பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்ய உத்தரவிடக் கோரி தாக்கல் செய்த ரிட் மனுவை, மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.



மீண்டும் கைது செய்யப்பட்டார் ரம்புக்வெல்ல!
[Wednesday 2025-05-07 17:00]

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மீண்டும் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார். வாக்குமூலம் அளிக்க இன்று ஆணைக்குழுவில் ஆஜரானபோது அவர் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.



தமிழர் பகுதிகளில் தமிழ் தேசிய கட்சிகள் ஆதிக்கம்- பிற பகுதிகளில் என்பிபி வெற்றி!
[Wednesday 2025-05-07 06:00]

நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு அமைய, இன்று அதிகாலை 5 மணி வரை வௌியான முடிவுகளின் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தி (NPP) தொடர்ந்தும் முன்னிலை வகிக்கிறது. தமிழர் பகுதிகளில் தமிழரசு, தமிழ்,காங்கிரஸ் கட்சிகள் ஆதிக்கம் செலுத்துகின்றன.



யாழ். மாநகரசபையைக் கைப்பற்றிய தமிழரசு- தமிழ் காங்கிரசும் பலம் காட்டியது!
[Wednesday 2025-05-07 06:00]

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2025 யாழ்ப்பாணம் மாநகர சபைக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன. யாழ்ப்பாணம் மாநகர சபையில் இலங்கை தமிழரசு கட்சி வெற்றி பெற்றுள்ளது.



கிளிநொச்சியின் 3 சபைகளும் தமிழரசின் வசமானது!
[Wednesday 2025-05-07 06:00]

உள்ளூராட்சித் தேர்தலில் கிளிநொச்சி மாவட்டத்தின் 3 உள்ளூராட்சி சபைகளையும் தமிழரசுக் கட்சி கைப்பற்றியுள்ளது. இவற்றில் இரண்டு சபைகளில் தனித்து ஆட்சியமைக்கும் அளவுக்கு பெரும்பான்மை பெற்றுள்ளது.



வலி.தென்மேற்கில் தமிழரசு வெற்றி!
[Wednesday 2025-05-07 06:00]

வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையில் இலங்கை தமிழரசுக் கட்சி வெற்றி பெற்றுள்ளது. போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு-



சாவகச்சேரி நகரசபையை கைப்பற்றியது தமிழ் காங்கிரஸ்!
[Wednesday 2025-05-07 06:00]

யாழ்ப்பாணம் மாவட்டம் சாவகச்சேரி நகர சபையில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது.



மன்னார் மாவட்டம் என்பிபி வசம்!
[Wednesday 2025-05-07 06:00]

நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மன்னார் மாவட்டத்திற்கான அனைத்து முடிவுகளும் வௌியாகியுள்ளன. இதற்கமைய மன்னார் பிரதேச சபையை ஐக்கிய மக்கள் சக்தியும், மன்னார் நகர சபையை இலங்கை தமிழ் அரசுக் கட்சியும், நானாட்டான் பிரதேச சபையை தேசிய மக்கள் சக்தியும், முசலி பிரதேச சபையை ஐக்கிய மக்கள் சக்தியும், மாந்தை மேற்கு பிரதேச சபையை இலங்கை தமிழ் அரசுக் கட்சியும் கைப்பற்றியுள்ளன.



வல்வெட்டித்துறை நகரசபையை தமிழ் காங்கிரஸ் கைப்பற்றியது!
[Wednesday 2025-05-07 06:00]

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2025 இல் யாழ்பாணம் மாவட்டம் வல்வெட்டித்துறை நகர சபைக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன. வல்வெட்டித்துறை நகர சபையில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது.



வெருகலில் வாகை சூடிய தமிழரசு!
[Wednesday 2025-05-07 06:00]

திருகோணமலை மாவட்டம் வெருகல் பிரதேச சபையில் இலங்கை தமிழரசு கட்சி வெற்றி பெற்றுள்ளது.



புதுக்குடியிருப்பிலும் தமிழரசு தனியாட்சி!
[Wednesday 2025-05-07 06:00]

முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு பிரதேச சபையில் இலங்கை தமிழரசு கட்சி வெற்றி பெற்றுள்ளது.



திருகோணமலை மாநகரம் தமிழரசின் வசம்!
[Wednesday 2025-05-07 06:00]

திருகோணமலை மாவட்டம் திருகோணமலை மாநகர சபையில் இலங்கை தமிழரசுக் கட்சி வெற்றி பெற்றுள்ளது.


Airlinktravel-2020-01-01
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Karan Remax-2010
Asayan-Salon-2022-seithy
Rajeef sebarasha 2023/04/19
Kugeenthiran-200-2022-seithy
Latika-Gold-House-2025
 gloriousprinters.com 2021
Vaheesan-Remax-2016
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா