Untitled Document
April 28, 2025 [GMT]
பிரசன்ன ரணவீரவின் ரிட் மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரிப்பு!
[Monday 2025-04-28 16:00]


முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீரவின் ரிட் மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளது. களனி பிரதேச செயலக அதிகார வரம்புக்கு உட்பட்ட அரச காணியை சட்டவிரோதமாக கையகப்படுத்தியதாகக் கூறப்படும் வழக்கு தொடர்பாக தன்னை கைது செய்வதைத் தடுக்க உத்தரவிடக் கோரி முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர ரிட் மனு தாக்கல் செய்துள்ளார்.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீரவின் ரிட் மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளது. களனி பிரதேச செயலக அதிகார வரம்புக்கு உட்பட்ட அரச காணியை சட்டவிரோதமாக கையகப்படுத்தியதாகக் கூறப்படும் வழக்கு தொடர்பாக தன்னை கைது செய்வதைத் தடுக்க உத்தரவிடக் கோரி முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர ரிட் மனு தாக்கல் செய்துள்ளார்.

  

இந்த நிலையில், குறித்த ரிட் மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமல் தள்ளுபடி செய்துள்ளது.

  
   Bookmark and Share Seithy.com



கனடாவில் தேர்தல் வாக்குப்பதிவு ஆரம்பம்!
[Monday 2025-04-28 16:00]

கனடிய நாடாளுமன்றத் தேர்தல் ஆரம்பமாகியுள்ளது. புதிய அரசாங்கத்தை தெரிவு செய்வதற்கான முதல் வாக்குப்பதிவு நியூஃபவுண்ட்லேண்டில் உள்ளூர் நேரப்படி காலை 8:30 மணிக்குத் தொடங்கியுள்ளது. இறுதி வாக்குப்பதிவு 15 மணி நேரம் கழித்து பிரிட்டிஷ் கொலம்பியாவில் மாலை 7 மணிக்கு முடிவடையும். இந்த தேர்தலில் 7.3 மில்லியன் கனடியர்கள் முன்கூட்டியே வாக்களித்துள்ளனர்.



3 மணிநேரம் சாட்சியம் அளித்தார் ரணில்!
[Monday 2025-04-28 16:00]

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, லஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவில் கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் வாக்குமூலம் அளித்த பின்னர் வெளியேறினார்.



யாழ்ப்பாணத்தில் சிவராம், ரஜீவர்மன் நினைவேந்தல்! Top News
[Monday 2025-04-28 16:00]

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் தராகி சிவராம் மற்றும் ரஜீவர்மன் ஆகியோரின் நினைவேந்தல் நிகழ்வும், அவர்களின் படுகொலைக்கு நீதி கோரி போராட்டமும் யாழ்ப்பாணத்தில் இன்று முன்னெடுக்கப்பட்டது.



சீன உர இறக்குமதி மோசடி - மூத்த அரச அதிகாரி கைது!
[Monday 2025-04-28 16:00]

சீன உர இறக்குமதி ஒப்பந்தம் தொடர்பில் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவினரால் கைது செய்யப்பட்ட ஊவா மாகாண சபையின் தலைமைச் செயலாளரும் இலங்கை நிர்வாக சேவைகள் சங்கத்தின் தலைவருமான மகேஷ் கம்மன்பிலவை எதிர்வரும் மே மாதம் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.



சைக்கிளுக்கு வாக்களிக்குமாறு மாவீரர் போராளிகள் குடும்ப நலன் காப்பகம் கோரிக்கை!
[Monday 2025-04-28 16:00]

அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் 'சைக்கிள்' சின்னத்தில் போட்டியிடும் தமிழ் தேசிய பேரவைக்கு வாக்களிக்குமாறு மாவீரர் போராளிகள் குடும்ப நலன் காப்பகம் அறிக்கை மூலம் கோரிக்கை விடுத்துள்ளது என மாவீரர் போராளிகள் குடும்ப நலன் காப்பகம் தெரிவித்துள்ளது.



இளைஞன் அடித்துக் கொலை- 5 பேருக்கு மரணதண்டனை!
[Monday 2025-04-28 16:00]

2012 ஆம் ஆண்டு கொழும்பின் மட்டக்குளி பகுதியில் உள்ள ஒரு கோவிலுக்கு அருகில் இளைஞன் ஒருவரை பொல்லுகளால் தாக்கி கொன்றதாக குற்றம்சாட்டப்பட்ட வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட ஐந்து பிரதிவாதிகளுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (28) மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.



நாங்கள் கேட்பது உள்ளகப்பொறிமுறை அல்ல!
[Monday 2025-04-28 16:00]

புதிய ஆட்சிவந்ததும் ஏதோ எங்களுக்கு அனைத்தும் கிடைத்துவிட்டது என்று ஒருபோதும் கனவு காணவேண்டாம். கடந்தகால ஆட்சியாளர்கள் எங்களை ஏமாற்றி எவ்வாறு எமது இனத்தினை அழித்தார்களோ அதனைவிட படுமோசமான அரசியல் வியூகத்திற்குள்ளேயே நாங்கள் தற்போது நின்றுகொண்டிருக்கின்றோம் என மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் தலைவி அமலநாயகி அமல்ராஜ் தெரிவித்தார்.



இனப்பிரச்சினையை மூடி மறைப்பதுதான் தேசிய மக்கள் சக்தியின் தந்திரோபாயம்!
[Monday 2025-04-28 16:00]

தேசிய இனப்பிரச்சினையையும் அதன் விளைவாக ஏற்பட்ட அழிப்புகளையும் சமத்துவப் பேச்சினால் மூடி மறைப்பதுதான் தேசிய மக்கள் சக்தியின் தந்திரோபாயமாக அமைந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார்.



குண்டுவெடிப்பு குறித்து மைத்திரி சாட்சியம்!
[Monday 2025-04-28 16:00]

2008 ஆம் ஆண்டில் கொழும்பு பொரலஸ்கமுவ பிரதேசத்தில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கின் முதலாவது சாட்சியாளராக பெயரிடப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கொழும்பு மேல் நீதிமன்றில் இன்று ஆஜராகி சாட்சியளித்துள்ளார்.



பிரதேச சபையின் ஆட்சி அதிகாரம் பறிபோனால் இனப்பரம்பல் மாற்றியமைக்கப்படும்!
[Monday 2025-04-28 06:00]

மத்தியிலே ஆளும் தரப்பிற்கு வவுனியா வடக்கு பிரதேச சபையின் ஆட்சி அதிகாரம் போகுமாக இருந்தால் இனப்பரம்பலை மாற்றியமைக்கும் வேலையை இலகுவாக நடைமுறைப்படுத்துவார்கள் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.



யாழ்ப்பாணத் தமிழ் மக்களுக்கு இது மானப் பிரச்சினை!
[Monday 2025-04-28 06:00]

தமிழனத்திற்கு முக்கியமான தேர்தலாக இந்தத் தேர்தல் இருக்கின்றது எனவும் யாழ்ப்பாணத் தமிழ் மக்களுக்கு மானப் பிரச்சினையாக இந்தத் தேர்தலை பார்க்கின்றேன் என்றும் பாராமன்ற உறுப்பினர் இ.சாணக்கியன் தெரிவித்தார்.



அலிபாபாவும் 19 திருடர்களும் விலக வேண்டும்!
[Monday 2025-04-28 06:00]

தமிழரசுக் கட்சி முன்னோக்கி செல்ல வேண்டுமாக இருந்தால் அலிபாபாவும் 19 திருடர்களும் விலக வேண்டும் என தமிழரசுக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்துள்ளார்.



நாட்டின் இறையாண்மை காட்டிக் கொடுக்கப்பட்டுள்ளதா?
[Monday 2025-04-28 06:00]

இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையில் நட்பு ரீதியான ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது எனில், அதனை வெளிப்படுத்துவற்கு எதற்காக அனுமதிக்காக காத்திருக்க வேண்டும். அவ்வாறானதொரு நிபந்தனையுடன் ஏன் அரசாங்கம் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது? மே 6க்கு முன்னர் இந்தியாவுடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் அரசாங்கம் தாய் நாட்டின் இறையாண்மையை காட்டிக் கொடுத்துள்ளதாகவே கருதப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்தார்.



நாடாளுமன்றம் வழி செய்தால் மட்டுமே மாகாண சபைத் தேர்தல்!
[Monday 2025-04-28 06:00]

மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்துவதற்கு தேவையான சட்ட ஏற்பாடுகளை பாராளுமன்றம் செய்து தரவேண்டும். நாம் இதற்காக தொடர்ந்து காத்துக் கொண்டிருக்கிறோம் என்று மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் சிவசுப்பிரமணியம் அச்சுதன் தெரிவித்தார்.



பெரும்பாலான பிரதேசங்களில் இன்றும் இடியுடன் மழை!
[Monday 2025-04-28 06:00]

அயனமண்டலங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு வலயம் (வட அரைக் கோளத்திலிருந்தும் தென் அரைக்கோளத்திலிருந்தும் வீசும் காற்று ஒடுங்கும் இடம்) தீவின் வானிலையை பாதித்துக் கொண்டு இருக்கின்றது. நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மாலை அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடியசாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.



யாழ். மாநகர சபையின் சுகாதார பிரிவினர் பணி பகிஷ்கரிப்பு!
[Monday 2025-04-28 06:00]

யாழ். மாநகர சபையின் சுகாதார பிரிவினர் திங்கட்கிழமை (28) பணி பகிஷ்கரிப்பில் ஈடுப்படவுள்ளதாக அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளனர்.



புன்னாலைக்கட்டுவனில் மின்னல் தாக்கி வீடு சேதம்!
[Monday 2025-04-28 06:00]

யாழ். புன்னாலைக்கட்டுவன், திணைப்புலம் பகுதியில் மின்னல் தாக்கத்துக்கு இலக்காகி வீடு ஒன்று பகுதி அளவில் சேதம் அடைந்துள்ளது. இந்தச் சம்பவம் சனிக்கிழமை (26) இடம்பெற்றுள்ளது. வீட்டின் உரிமையாளர் நோய்வாய்ப்பட்டு வீட்டில் இருந்துள்ளார். எனினும், மின்னல் தாக்கத்தால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. வீட்டின் ஒரு பகுதி சேதமடைந்துள்ளதுடன், பயன் தரு மரங்களும் முறிந்து விழுந்துள்ளன.



யாழ்ப்பாணத்தில் காய்ச்சலினால் பெண் மரணம்!
[Monday 2025-04-28 06:00]

யாழ்ப்பாணத்தில் காய்ச்சல் காரணமாக பெண் ஒருவர் இன்றையதினம் உயிரிழந்துள்ளார். 2ஆம் குறுக்குத் தெரு, கொழும்புத்துறை பகுதியைச் சேர்ந்த கமலநாதன் ராஜபத்மினி (வயது 56) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.



என்பிபியின் வன்னி எம்.பி ஊழல் பேர்வழி! - நடவடிக்கை எடுப்பாரா ஜனாதிபதி?
[Sunday 2025-04-27 17:00]

வன்னி மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தியின் ஒரு பாராளுமன்ற உறுப்பினருக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டுக்கள் இருக்கிறது. இவை தொடர்பாக ஜனாதிபதி பொறுப்புக்கூறுவாரா என்று பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கேள்வி எழுப்பியுள்ளார்.



9,457 மாணவர்கள் மூன்று பாடங்களிலும் 'ஏ' சித்தி!
[Sunday 2025-04-27 17:00]

இந்த ஆண்டு நடைபெற்ற (2024) க.பொ.த உயர்தரப் பரீட்சையில் 9,457 மாணவர்கள் மூன்று பாடங்களிலும் 'ஏ' சித்தியைப் பெற்றதாக பரீட்சைகள் ஆணையர் ஜெனரல் அமித் ஜெயசுந்தர தெரிவித்தார்.


Karan Remax-2010
Rajeef sebarasha 2023/04/19
Asayan-Salon-2022-seithy
Latika-Gold-House-2025
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
Airlinktravel-2020-01-01
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா