Untitled Document
May 21, 2025 [GMT]
நல்லை ஆதீனம் காலமானார்!
[Friday 2025-05-02 05:00]


நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் நேற்று வியாழக்கிழமை இரவு இறையடி சேர்ந்தார்.
கொழும்பில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த நிலையிலேயே சிகிச்சை பலனின்றி காலமானார்.  
அவரது இறுதிக்கிரியைகள் இன்று (02) மாலையே நடைபெறவுள்ளன

நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் நேற்று வியாழக்கிழமை இரவு இறையடி சேர்ந்தார். கொழும்பில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த நிலையிலேயே சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது இறுதிக்கிரியைகள் இன்று (02) மாலையே நடைபெறவுள்ளன

  
  
   Bookmark and Share Seithy.com



பிரம்டன் நினைவகம் குறித்து கனடாவுடன் இராஜதந்திர பேச்சு!
[Wednesday 2025-05-21 16:00]

கனடா, பிரம்டன் நகரில் நிர்மாணிக்கப்பட்டுள்ள தமிழின அழிப்பு நினைவகம் தொடர்பில் கனடாவின் மத்திய அரசுடன் இராஜதந்திர மட்டத்தில் பேச்சுவார்த்தையில் ஈடுபடத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான நிலை இனிவரும் காலங்களில் ஏற்படாமல் இருப்பதை தடுக்கும் பாரிய பொறுப்பு அரசாங்கத்துக்கு உண்டு’’ என பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்தார்.



கருநாட்டுக்கேணியில் மீன் ஏற்றும் வாகனம் மோதி 8 வயது சிறுமி பலி!
[Wednesday 2025-05-21 16:00]

முல்லைத்தீவு கொக்கிளாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கருநாட்டுக்கேணி பகுதியில், பாடசாலைக்கு அருகில், இன்று இடம்பெற்ற விபத்தில் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார். கருநாட்டுக்கேணி அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் தரம் -03இல் கல்வி கற்கும் மாதீஸ்வரன் நர்மதா என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.



ரணில் அலுவலகத்தில் இரகசிய கலந்துரையாடல்!
[Wednesday 2025-05-21 16:00]

உள்ளுராட்சி மன்றங்களில் ஆட்சி அமைத்தல் உள்ளிட்ட எதிர்கால அரசியல் நகர்வுகள் குறித்து கொழும்பு - பிளவர் வீதியில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அரசியல் அலுவலகத்தில் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.



சிறுமியின் சாவுக்கு கொக்கிளாய் பொலிஸாரின் அசமந்தப்போக்கே காரணம்!
[Wednesday 2025-05-21 16:00]

முல்லைத்தீவு - கொக்கிளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கருநாட்டுக்கேணி பகுதியில் இன்று (21) பாடசாலைக்கு அண்மையில் இடம்பெற்ற விபத்தில் மாணவியொருவர் உயிரிழந்துள்ள நிலையில், இந்த விபத்து இடம்பெறுவதற்கு கொக்கிளாய் பொலிஸாரின் அசமந்தப்போக்கே காரணமென வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கடுமையாகச் சாடியுள்ளதுடன், உயிரிழந்த மாணவிக்கு நீதி கிடைக்கவேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.



கெஹெலியவின் மகன் ரமித் ரம்புக்வெல்லவுக்கும் விளக்கமறியல்!
[Wednesday 2025-05-21 16:00]

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகன் ரமித் ரம்புக்வெல்ல, இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் அதிகாரிகளால் செய்யப்பட்டுள்ளார்.



இன்றிரவு இந்தியாவில் இருந்து வருகிறது உப்பு!
[Wednesday 2025-05-21 16:00]

தற்போதைய உப்பு பற்றாக்குறைக்கு தீர்வாக இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உப்பு தொகை இன்றிரவு இலங்கைக்கு வரவுள்ளதாக வர்த்தக, வணிக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.



யாழ்ப்பாணத்தில் இரத்த வாந்தி எடுத்த குடும்பஸ்தர் மரணம்!
[Wednesday 2025-05-21 16:00]

யாழ்ப்பாணத்தில் குடும்பஸ்தர் ஒருவர் செவ்வாய்க்கிழமைஅன்று இரத்த வாந்தி எடுத்து உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் - கொழும்புத்துறை பகுதியைச் சேர்ந்த தங்கவேலு கலைச்செல்வன் (வயது 42) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.



மீன்பிடித்தவரை இழுத்துச் சென்ற முதலை!
[Wednesday 2025-05-21 16:00]

இளம் குடும்பஸ்தர் ஒருவரை முதலை இழுத்துச் சென்ற சம்பவம் செவ்வாய்க்கிழமை மாலை வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரான் பாலம் மந்திரியாறு பகுதியில் இடம்பெற்றுள்ளது. மந்திரியாறு நீரோடை பகுதியில் மூவர் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது கிண்ணையடி பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய ஒருவரை முதலை இழுத்துச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவ்விடயம் தொடர்பாக வாழைச்சேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



தவில் வித்துவான் கிருமித் தொற்றினால் மரணம்!
[Wednesday 2025-05-21 16:00]

யாழ்ப்பாணத்தில் கிருமித் தொற்றினால் இளம் குடும்பஸ்தரான தவில் வித்துவான் ஒருவர் திங்கட்கிழமை உயிரிழந்துள்ளார். ஆனைக்கோட்டை கூழாவடியைச் சேர்ந்த நாகையா நிரோஜன் (வயது 38) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.



வர்த்தமானி அறிவித்தலை இடைநிறுத்தும் வழிமுறை காணி கட்டளைச் சட்டத்தில் கிடையாது!
[Wednesday 2025-05-21 05:00]

வடக்கு காணிகள் குறித்து பிரசுரித்த வர்த்தமானி அறிவித்தலை இடைநிறுத்தும் வழிமுறை காணி கட்டளைச் சட்டத்தில் கிடையாது. 03 மாதத்துக்குள் காணி உரித்தை உறுதிப்படுத்தாவின் தமிழர்களின் தனிப்பட்ட மற்றும் பொது காரணிகள் அரசுடமையாக்கப்படும். இனவாதி என்று குறிப்பிடப்பட்ட மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில் கூட இந்நிலை ஏற்படவில்லை. இந்த வர்த்தமானியை அரசாங்கம் உடன் வாபஸ் பெற வேண்டும்.இல்லையேல் நல்லிணக்கம் முடிவுக்கு கொண்டு வரப்படும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எச்சரித்தார்.



காணி அபகரிப்பை தடுப்பதற்கு சர்வதேச சமூகம் தலையிட வேண்டும்!
[Wednesday 2025-05-21 05:00]

வடக்கிலுள்ள காணிகள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல், குருந்தூர் மலை விவகாரம், தையிட்டியில் விகாரை நிர்மாணம் என்பன உள்ளடங்கலாக வட, கிழக்கு மாகாணங்களில் முன்னெடுக்கப்பட்டுவரும் காணி சுவீகரிப்பு முயற்சிகள் தொடர்பில் அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் சுவிட்ஸர்லாந்து நாட்டு இராஜதந்திரகளிடம் எடுத்துரைத்திருக்கும் தமிழ்த்தேசிய பேரவையின் பிரதிநிதிகள், காணி அபகரிப்பையும், தொல்பொருள் அடையாளங்கள் பௌத்தமயப்படுத்தப்படுவதையும் தடுப்பதற்கு சர்வதேச சமூகம் தலையிடவேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.



வவுனியா வைத்தியர் கொலை வழக்கு- புளொட் உறுப்பினரின் மரணதண்டனை ரத்து!
[Wednesday 2025-05-21 05:00]

வவுனியாவில் வைத்தியர் முகைதீனை சுட்டுப் படுகொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய நெடுமாறன் என்று அழைக்கப்படும் சிவநாதன் பிரேமநாத் என்பவருக்கு வவுனியா மேல் நீதிமன்றம் மரண தண்டனை வழங்கிய நிலையில் மேன்முறையீட்டு நீதிமன்றம் அந்த தண்டனையை ரத்துச் செய்து அவரை விடுதலை செய்து உத்தரவிட்டது.



தற்காலிகமாக இடைநிறுத்துவது நிரந்தர தீர்வைப் பெற்றுத்தராது!
[Wednesday 2025-05-21 05:00]

வட மாகாணத்திலுள்ள காணிகள் தொடர்பில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில் உள்ள விடயங்களை நடைமுறைப்படுத்துவதைத் தற்காலிகமாக இடைநிறுத்துவது எந்தவொரு தரப்பினருக்கும் நிரந்தர தீர்வைப் பெற்றுத்தராது எனச் சுட்டிக்காட்டியுள்ள இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பதில் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், எனவே அவ்வர்த்தமானி அறிவித்தல் முழுமையாக வாபஸ் பெறப்படவேண்டும் என மீளவலியுறுத்தியுள்ளார்.



வடக்கு மாகாண பிரதமச் செயலாளராக தனுஜா முருகேசன்!
[Wednesday 2025-05-21 05:00]

வடக்கு மாகாண பிரதமச் செயலாளராக தனுஜா முருகேசன் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார். அதற்கமைவான நியமனக் கடிதம் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால் நேற்று பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து அவருக்கு வழங்கப்பட்டது.



காணி சுவீகரிப்பு விவகாரம்- வட,கிழக்கு எம்.பிக்களை அழைக்கிறார் பிரதமர்!
[Wednesday 2025-05-21 05:00]

வடக்கு மாகாணத்திலுள்ள காணிகள் தொடர்பில் கடந்த மார்ச் மாதம் அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் குறித்து எழுந்திருக்கும் பிணக்குகள் தொடர்பில் கலந்துரையாடும் நோக்கில் பிரதமர் ஹரினி அமரசூரியவுக்கும் வடக்கு, கிழக்கு மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு எதிர்வரும் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது.



பாதுகாப்பு ஒப்பந்தத்தை வெளியிடாமல் இருப்பது ஏன்?
[Wednesday 2025-05-21 05:00]

இந்தியாவுடன் இலங்கை கைச்சாத்திட்டுள்ள பாதுகாப்பு ஒப்பந்தத்தில் ' இந்தியாவினால் இலங்கையில் ஆயுத களஞ்சியசாலையை உருவாக்க முடியும்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தங்களை பகிரங்கப்படுத்துவதில் அரசாங்கம் ஏன் பின்வாங்குகிறது. இந்த வாரத்திலாவது ஒப்பந்தங்களை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்க வேண்டும் என்று வலியுறுத்திறேன் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.



மே 19 நிகழ்வை தவிர்க்க முனைந்தாரா ஜனாதிபதி?
[Wednesday 2025-05-21 05:00]

தேசிய போர்வீரர் நினைவு தின நிகழ்வில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பங்கேற்காமல் இருப்பதற்கு திட்டமிட்டிருந்தாரா? நிகழ்வுக்கான அழைப்பிதழில் பாதுகாப்பு பிரதி அமைச்சரின் பெயர் பிரதம அதிதி எனக் குறிப்பிட்டிருந்தமைக்கான காரணம் என்ன என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன கேள்வி எழுப்பினார்.



சிப்பாய்கள் என விளித்து இராணுவ வீரர்களை ஜனாதிபதி அவமதித்து விட்டார்!
[Wednesday 2025-05-21 05:00]

இராணுத்தினர் அனைவரும் சிப்பாய் என்ற போதிலும், அனைத்து சிப்பாய்களும் இராணுவ வீரர்கள் அல்ல. யுத்த பூமியில் நேரடியாகப் போராடியவர்களே இராணுவ வீரர்களாவர். ஆனால் அனைவரையும் சிப்பாய்கள் என விளித்து ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இராணுவ வீரர்களை அவமதித்து விட்டார் என பிவிதுரு ஹெல உருமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்தார்.



நல்லூரில் அசைவ உணவகம்- கண்டித்து கவனயீர்ப்பு போராட்டம்!
[Wednesday 2025-05-21 05:00]

யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலயச் சூழலில் அமைக்கப்பட்டுள்ள அசைவ உணவகத்திற்கு எதிராக நேற்று மாலை கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.இதில் பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டனர். இதனை முன்னிட்டு குறித்த அசைவ உணவகத்துக்கு பொலிசார் பாதுகாப்பு வழங்கினர்.



அமெரிக்க, ஐரோப்பிய ஒன்றிய, சுவிஸ் தூதுவர்களுடன் தமிழ் தேசிய பேரவையினர் சந்திப்பு!
[Tuesday 2025-05-20 17:00]

நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் தமிழ் தேசிய பேரவையினர் அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், சுவிஸ் நாடுகளின் தூதுவர்களுடன் இன்று சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளனர்.


Latika-Gold-House-2025
Kugeenthiran-200-2022-seithy
Asayan-Salon-2022-seithy
Airlinktravel-2020-01-01
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
Rajeef sebarasha 2023/04/19
Karan Remax-2010
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா