Untitled Document
May 2, 2025 [GMT]
பாதுகாப்பு அதிகாரி இடமாற்றம் - ரணில் விளக்கம்!
[Friday 2025-05-02 05:00]

பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ள ஒருவரிடம் தொலைபேசியில் பேச வேண்டுமெனில் அதற்கான அனுமதியைப் பெற வேண்டியது அவசியமாகும். அந்த அடிப்படையிலேயே முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பாதுகாப்பு பிரிவினரால் குற்றப்புலனாய்வுப்பிரிவின் ஊடாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவனேசதுரை சந்திரகாந்தனை தொடர்பு கொள்ள முயற்சிக்கப்பட்டது.

பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ள ஒருவரிடம் தொலைபேசியில் பேச வேண்டுமெனில் அதற்கான அனுமதியைப் பெற வேண்டியது அவசியமாகும். அந்த அடிப்படையிலேயே முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பாதுகாப்பு பிரிவினரால் குற்றப்புலனாய்வுப்பிரிவின் ஊடாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவனேசதுரை சந்திரகாந்தனை தொடர்பு கொள்ள முயற்சிக்கப்பட்டது.

  

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அலுவலகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரியின் இடமாற்றம் தொடர்பில் பொலிஸ் தலைமையகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவனேசதுரை சந்திரகாந்தனுக்கு தொலைபேசி அழைப்பினை மேற்கொள்வதற்கு முயற்சித்தமை தொடர்பிலேயே அவர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக சந்திரகாந்தனின் அலுவலகம் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு அறிவித்துள்ளது. எவ்வாறிருப்பினும் அவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அவர்கள் அறிந்திருக்கவில்லை. இது குறித்த தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்காக அவர்கள் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஒத்துழைப்பினைக் கோரியிருந்தனர்.

சந்திரகாந்தனின் பாதுகாப்பு பிரிவினரால் குற்றப்புலனாய்வுப்பிரிவின் சீ.ஐ.டி மாதவ ஊடாக தொடர்பினை ஏற்படுத்த முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது பாதுகாப்பு அதிகாரியிடம், சந்திரகாந்தனுடன் பேசுவதற்கு பொருத்தமான அதிகாரியிடம் ஒரு வாய்ப்பைப் பெறுமாறு தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு பொலிஸாருக்கு தொலைபேசி அழைப்பினை மேற்கொள்ள வேண்டியேற்படும் போது, அது பொலிஸ் பாதுகாப்பு தகவலின் ஊடாகவே முன்னெடுக்கப்படுவது வழக்கமாகும். கைது செய்யப்பட்டுள்ள ஒருவரிடம் பேச வேண்டிய தேவையேற்படும் போது, தொலைபேசியில் தொடர்பு கொள்வதற்கு அனுமதி கிடைக்குமா இல்லையா என்பதை உறுதிப்படுத்திக் கொள்வதும் வழக்கமாகும். அதுவே முதலில் முன்னெடுக்கப்படும்.

இந்த சந்தர்ப்பத்திலும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பாதுகாப்பு பிரிவினர் குறித்த குற்றப்புலனாய்வு பிரிவின் அதிகாரியுடன் பேசியதோடு, அவர் குற்றப்லுனாய்வு பிரிவின் பணிப்பாளரிடம் ஆலோசனையை பெற வேண்டியது அவசியமாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார். அந்த அதிகாரி மீண்டும் அழைப்பினை மேற்கொண்ட போது ரணில் விக்கிரமசிங்கவின் பாதுகாப்பு பிரிவுக்கு, விசாரணைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதால் தொலைபேசி அழைப்பிற்கு வாய்ப்பளிக்க முடியாது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் பாதுகாப்பு அதிகாரியை இடமாற்றம் செய்வதாயின் சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிக்கு அது தொடர்பில் முன்கூட்டியே தெரியப்படுத்துவது வழக்கமான நடைமுறையாகும்.

  
   Bookmark and Share Seithy.com



உள்ளூராட்சித் தேர்தலுக்கான வழிகாட்டு முறைகள் அறிவிப்பு!
[Friday 2025-05-02 17:00]

மே 06ஆம் திகதி நடைபெற உள்ள உள்ளூராட்சித் தேர்தலின் போது வாக்குச்சீட்டை பதிவு செய்வதற்கான முறையான நடைமுறை குறித்த வழிகாட்டுதல்களை தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.



தமிழ்க் கட்சிகளுக்கு வாக்களியுங்கள்!
[Friday 2025-05-02 17:00]

எமது மக்களுக்காக இதுவரை ஏதோ ஒரு வழியில் உழைத்த எமது தமிழ் தேசியப் பரப்பில் இருக்கின்ற கட்சிகளுக்கு வாக்களித்து, அவர்களின் கரங்களுக்கு கொடுப்பது அவசியம் என வடக்கு - கிழக்கு மாகாண வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.



தமிழ் மக்களின் இருப்பை இல்லாதொழிக்க முனைகின்றது அரசு!
[Friday 2025-05-02 17:00]

யாழ்ப்பாணத்தின் அடையாளத்தை மாற்ற இடமளிக்கமாட்டேன் என ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ் மாநகர வேட்பாளர்கள் ஈசன் தெரிவித்தார். யாழ் ஊடக அமையத்தில் வெள்ளிக்கிழமை (02) நடாத்திய ஊடக சந்திப்பை சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார்.



24 மணிநேர கடவுச்சீட்டு சேவை 3 நாட்களுக்கு நிறுத்தம்!
[Friday 2025-05-02 17:00]

ஒருநாள் சேவையில் கடவுச்சீட்டு பெற்றுக் கொள்வதற்காக 24 மணி நேரம் செயற்படும் சேவை எதிர்வரும் 05, 06 மற்றும் 07 ஆம் திகதிகளில் நிறுத்தப்படும் என பதில் குடிவரவு குடியகல்வு ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.



பாதுகாப்புக் கோருகிறார் தேசபந்து!
[Friday 2025-05-02 17:00]

இடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ்மா அதிபர் (ஐ.ஜி.பி) தேசபந்து தென்னகோன், தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி, பொலிஸாரிடம் பாதுகாப்பு கோரியுள்ளதாக கூறப்படுகிறது.



வாக்காளர்களுக்கு கொடுக்கவிருந்த பாய்கள் சிக்கின!
[Friday 2025-05-02 17:00]

இந்த ஆண்டு உள்ளூராட்சித் தேர்தலுக்காக வாக்காளர்களுக்கு விநியோகிக்க பாய்கள் மற்றும் படுக்கை விரிப்புகள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை அடம்பன் பொலிஸார் கண்டுபிடித்தனர்.



யானை தாக்கி விவசாயி பலி!
[Friday 2025-05-02 17:00]

வவுணதீவு பாலக்காடு வயல் பிரதேசத்தில் வேளாண்மைக்கு நீர் பாய்ச்ச சென்ற விவசாயி ஒருவர் யானை தாக்குதலில் உயிரிழந்த சம்பவம் வியாழக்கிழமை (01) திகதி இடம்பெற்றுள்ளதாக வவுணதீவு பொலிஸார் தெரிவித்தனர்



தங்கம், வெள்ளியை ஒப்படைத்தது இராணுவம்!
[Friday 2025-05-02 17:00]

யுத்த காலப்பகுதியில் விடுதலை புலிகள் அமைப்பிடமிருந்து இராணுவம் கைப்பற்றிய பொது மக்களின் தங்கம் மற்றும் வெள்ளி பதில் பொலிஸ்மா அதிபரிடம் உத்தியோகப்பூர்வமாக கையளிக்கப்பட்டது.



மின்சாரம் தாக்கி இருவர் பலி!
[Friday 2025-05-02 17:00]

ஈச்சலம்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சூர்நகர் பகுதியில் வியாழக்கிழமை நெல் வயலில் மின்சாரம் தாக்கி இரண்டு பேர் உயிரிழந்ததாகவும், ஈச்சலம்பற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாகவும் கிடைத்த தகவலைத் தொடர்ந்து ஈச்சலம்பற்று பொலிஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். சூர்நகரைச் சேர்ந்த 29 மற்றும் 47 வயதுடையவர்களே இறந்துள்ளனர்.



ஏற்றுமதி வருமானம் அதிகரிப்பு!
[Friday 2025-05-02 17:00]

இந்த வருடம் மார்ச் மாதத்தில் ஏற்றுமதி வருமானம் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அறிக்கை ஒன்றை வௌியிட்டு இலங்கை மத்திய வங்கி இதனைத் தெரிவித்துள்ளது.



தந்தை செல்வாவின் கொள்கையுடன் தமிழரசுடன் இணைந்து பயணிக்கத் தயார்!
[Friday 2025-05-02 05:00]

தமிழ் அரசுக் கட்சி தலைமைத்துவம் தந்தை செல்வா அவர்களது கொள்கையுடன் பயணிக்கத் தயாராக இருந்தால் அவர்களுடன் பேசுவதற்கும் இணைந்து செயலாற்றவும் நாம் தயார் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.



காணி சுவீகரிப்பை நிறுத்தாவிடின் யாழ்ப்பாணத்தில் அனுர கால் வைக்க முடியாது!
[Friday 2025-05-02 05:00]

மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிக்கு மாறாக காணிகளை சுவீகரிப்பதை அனுர அரசாங்கம் உடனடியாக நிறுத்திக் கொள்ளவேண்டும். குறிப்பாக காணி சுவீகரிக்கும் வர்த்தமானியை உடனடியாக மீளப்பெற வேண்டும். இல்லாவிட்டால் ஜனாதிபதி அனுரவை யாழ் மண்ணிற்குள் கால் வைக்க முடியாமல் செய்வோம் என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.



பஸ்கள் நேருக்கு நேர் மோதல் - 2 பேர் பலி!
[Friday 2025-05-02 05:00]

மின்னேரியா - ஹபரணை வீதியில், இராணுவ முகாமுக்கு முன்னால் இரண்டு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. குறித்த விபத்தில் 2 பேர் உயிரிழந்ததுடன் 40 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.



நெல்லியடியில் தமிழ் தேசிய பேரவையின் மேதின கூட்டம்!
[Friday 2025-05-02 05:00]

தமிழ் தேசிய பேரவையின் மே தின எழுச்சி கூட்டம் நேற்று மாலை 6.30 மணியளவில் நெல்லியடி மாலி சந்தியில் அமைந்துள்ள மைதானத்தில் இடம்பெற்றது.



திருமலையில் பிக்குவின் பொய் முறைப்பாட்டில் தமிழ் உணர்வாளர் கைது!
[Friday 2025-05-02 05:00]

திருகோணமலையில் தமிழ் உணர்வாளர் கைதுக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது.



நல்லை ஆதீனம் காலமானார்!
[Friday 2025-05-02 05:00]

நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் நேற்று வியாழக்கிழமை இரவு இறையடி சேர்ந்தார். கொழும்பில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த நிலையிலேயே சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது இறுதிக்கிரியைகள் இன்று (02) மாலையே நடைபெறவுள்ளன



வேறு ஜனாதிபதிகளுக்கு வாய்ப்பே இல்லை!
[Friday 2025-05-02 05:00]

ஓகஸ்ட் அல்லது டிசம்பரில் ஜனாதிபதியாக வேண்டும் என்று கனவு காண்பவர்களுக்கு தங்கள் திட்டங்களை மறுபரிசீலனை செய்யுமாறு தெளிவான செய்தியை அனுப்பி ஆயிரக்கணக்கான மக்கள் காலி முகத்திடலில் கூடியுள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.



யாழ்ப்பாணத்தில் கூட்டு மேதினப் பேரணி! Top News
[Thursday 2025-05-01 18:00]

தொழிற்சங்கங்கள், வெகுஜன மற்றும் சிவில் அமைப்புகளுடன் இலங்கை ஆசிரியர் சங்கம் இணைந்து நடாத்திய கூட்டு மே தினம் பேரணி இன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.



ரணிலின் பிரதான பாதுகாப்பு அதிகாரி காங்கேசன்துறைக்கு மாற்றம்!
[Thursday 2025-05-01 18:00]

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பிரதான பாதுகாப்பு அதிகாரியான பொலிஸ் பரிசோதகர் அசோக்க ஆரியவன்ச உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் யாழ்ப்பாணம் காங்கேசன்துறைக்கு பணி இடமாற்றம் செய்ய பொலிஸ் தலைமையகம் நடவடிக்கை எடுத்துள்ளது.



அதிகரித்துவரும் வாகனத் திருட்டுக்கு எதிராக ஒன்ராறியோ அரசு துணிச்சலான நடவடிக்கை!
[Thursday 2025-05-01 18:00]

திறப்பு இல்லாத உள்நுழைவுத் தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் குற்றவாளிகளை இலக்காகக் கொண்டு அதிகரித்து வரும் வாகனத் திருட்டுகளுக்கு எதிரான போராட்டத்தை ஒன்ராறியோ ஒரு புதிய சட்டமன்றத் திட்டத்துடன் முடுக்கிவிடுகிறது.


Latika-Gold-House-2025
Airlinktravel-2020-01-01
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
Asayan-Salon-2022-seithy
 gloriousprinters.com 2021
Karan Remax-2010
Rajeef sebarasha 2023/04/19
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா