Untitled Document
May 3, 2025 [GMT]
தங்கம், வெள்ளியை ஒப்படைத்தது இராணுவம்!
[Friday 2025-05-02 17:00]

யுத்த காலப்பகுதியில் விடுதலை புலிகள் அமைப்பிடமிருந்து இராணுவம் கைப்பற்றிய பொது மக்களின் தங்கம் மற்றும் வெள்ளி பதில் பொலிஸ்மா அதிபரிடம் உத்தியோகப்பூர்வமாக கையளிக்கப்பட்டது.

யுத்த காலப்பகுதியில் விடுதலை புலிகள் அமைப்பிடமிருந்து இராணுவம் கைப்பற்றிய பொது மக்களின் தங்கம் மற்றும் வெள்ளி பதில் பொலிஸ்மா அதிபரிடம் உத்தியோகப்பூர்வமாக கையளிக்கப்பட்டது.

  

பத்தரமுல்லையில் உள்ள இராணுவத்தினர் தலைமையில் இன்று வெள்ளிக்கிழமை இந்த நிகழ்வு இடம்பெற்றது.

கையளிக்கப்பட்ட தங்கம் மற்றும் வெள்ளி நீதிமன்ற உத்தரவிற்கமைய தேசிய இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரண சபையால் அதன் பெறுமதி மதிப்பிடப்பட்டதன் பின்னர் இலங்கை மத்திய வங்கிக்கு ஒப்படைக்கப்படவுள்ளது.

தங்க ஆபரணங்களின் அடையாளம் உறுதிப்படுத்தப்பட்டால் அவற்றை பொதுமக்களிடம் ஒப்படைக்க தயார் எனவும் இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது.

  
   Bookmark and Share Seithy.com



சலுகைகளுக்காக எமது இனத்தின் இருப்பை கைவிட்டு விட வேண்டாம்!
[Saturday 2025-05-03 07:00]

வடக்கு கிழக்கில் தமிழ் மக்களின் இருப்பை வலுப்படுத்தவும் தமிழ் தேசியத்தை உறுதியாக நிலைநிறுத்த வேண்டிய பொறுப்பும் தமிழ் மக்களின் கைகளில் தான் இருக்கின்றது என கிழக்கு மாகாண வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.



எமது வாக்குகளை பெற்றுக் கொண்டு எம்மீது அடக்குமுறைகளை ஏவினால் பொறுக்கமாட்டோம்!
[Saturday 2025-05-03 07:00]

இனவாதத்தை ஒழிப்போம் என்று மீண்டும் எங்கள் மீது எமது மக்களின் வாக்குகளையும் பெற்றுக்கொண்டு இந்த அரசாங்கம் எங்கள் மீது அடக்குமுறையை திணிக்கின்ற ஒரு சூழ்நிலையை உருவாக்குமாக இருந்தால் இந்த அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுக்கும் ஒரு சூழ்நிலை ஏற்படும் என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்,ரெலோ கட்சியின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.



இந்த தேர்தலை ஒட்டுமொத்த தமிழினத்தின் எதிர்காலத்துக்கான தேர்தலாக பார்க்கவேண்டும்!
[Saturday 2025-05-03 07:00]

இந்த தேர்தலை யாரும் ஒரு வட்டாரத்துக்கான தேர்தலாக பார்க்கக்கூடாது. இந்த தேர்தல் ஒட்டுமொத்த தமிழினத்தின் எதிர்காலத்துக்கான தேர்தலாக பார்க்கவேண்டும் என இலங்கை தமிழ் அரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.



இலங்கை அரசியலில் தலையிடும் தேவை இந்தியாவுக்கு இல்லை!
[Saturday 2025-05-03 07:00]

இந்தியா என்பது உலகிலுள்ள மிகப்பெரிய நாடுகளில் நான்காவது இடத்திலுள்ள நாடாகும். எனவே அந்த நாடு வளர்ச்சியடைவதற்கு இலங்கை போன்ற மிகச் சிறிய நாடுகளின் அரசியலில் தலையிட வேண்டியேற்படும் என்று நான் எண்ணவில்லை. இந்தியாவுக்கு அதற்கான தேவைப்பாடும் இல்லை என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொனசேக்கா தெரிவித்தார்.



அற்ப கோரிக்கைகளுக்காக வீதியில் இறங்கி போராட வேண்டாம்!
[Saturday 2025-05-03 07:00]

சிறிய கோரிக்கைகளுக்காக வீதிகளில் இறங்கிப் போராட வேண்டாம் என்று தொழிற்சங்கங்களை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க வலியுறுத்தியுள்ளார், மேலும் அவர்கள் தங்கள் பழைய அணுகுமுறைகளை மாற்றிக்கொள்ள வேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளார்.



பாகிஸ்தான் தூதரகம் முன் நேற்றும் ஆர்ப்பாட்டம்!
[Saturday 2025-05-03 07:00]

கொழும்பில் அமைந்துள்ள பாகிஸ்தானிய உயர்ஸ்தானிகராலயத்துக்கு முன்பாக வெள்ளிக்கிழமை (2) ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. காஷ்மீர், பஹல்காமில் நடாத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு எதிர்ப்பையும் கண்டனத்தையும் வெளிப்படுத்தும் வகையில் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.



சந்நிதியில் இருந்து கதிர்காமம் பாதயாத்திரை ஆரம்பம்!
[Saturday 2025-05-03 07:00]

கதிர்காமத்திற்கான பாதயாத்திரை செல்வச்சந்நிதி ஆலயத்தில் விசேட பூசை வழிபாடுகளுடன் ஆரம்பமாகியுள்ளது. சந்நிதியான் ஆச்சிரமத்தில் விசேட பூசை வழிபாடுகளுடனும், காலை ஆகாரமும் ஒரு தொகை பணமும் வழங்கப்பட்டு ஆச்சிரம சுவாமிகளது ஆசீர்வாதத்துடன் சிறப்பாக ஆரம்பமானது.



வடக்கில் 6 ஆயிரம் ஏக்கர் காணிகளை அபகரிக்கும் திட்டத்தை தடுப்பதற்கான சட்ட ஆலோசனை முகாம்!
[Saturday 2025-05-03 07:00]

வடபகுதியில் ஐயாயிரத்து தொள்ளாயிரத்து நாற்பது ஏக்கர் காணியினை கபளீகரம் செய்யப்படுவதை தடுத்து நிறுத்தும் முகமாக இலவச சட்ட ஆலோசனை வழங்கும் நிகழ்வு வெற்றிலைக்கேணியில் நேற்று ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் தலைமையில் இடம்பெற்றது.



என்பிபியின் யாழ். மேயர் வேட்பாளர் உறுப்பினராக கூட பதவி வகிக்க விடமாட்டோம்! - சுமந்திரன் சூளுரை
[Saturday 2025-05-03 07:00]

தேசிய மக்கள் சக்தியின் யாழ் மாநகர சபை மேயர் வேட்பாளர் மாநகர சபை மேயராக அல்ல, யாழ். மாநகர சபையின் உறுப்பினராகக் கூடப் பதவி வகிக்க முடியாது என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.



உள்ளூராட்சித் தேர்தலுக்கான வழிகாட்டு முறைகள் அறிவிப்பு!
[Friday 2025-05-02 17:00]

மே 06ஆம் திகதி நடைபெற உள்ள உள்ளூராட்சித் தேர்தலின் போது வாக்குச்சீட்டை பதிவு செய்வதற்கான முறையான நடைமுறை குறித்த வழிகாட்டுதல்களை தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.



தமிழ்க் கட்சிகளுக்கு வாக்களியுங்கள்!
[Friday 2025-05-02 17:00]

எமது மக்களுக்காக இதுவரை ஏதோ ஒரு வழியில் உழைத்த எமது தமிழ் தேசியப் பரப்பில் இருக்கின்ற கட்சிகளுக்கு வாக்களித்து, அவர்களின் கரங்களுக்கு கொடுப்பது அவசியம் என வடக்கு - கிழக்கு மாகாண வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.



தமிழ் மக்களின் இருப்பை இல்லாதொழிக்க முனைகின்றது அரசு!
[Friday 2025-05-02 17:00]

யாழ்ப்பாணத்தின் அடையாளத்தை மாற்ற இடமளிக்கமாட்டேன் என ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ் மாநகர வேட்பாளர்கள் ஈசன் தெரிவித்தார். யாழ் ஊடக அமையத்தில் வெள்ளிக்கிழமை (02) நடாத்திய ஊடக சந்திப்பை சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார்.



24 மணிநேர கடவுச்சீட்டு சேவை 3 நாட்களுக்கு நிறுத்தம்!
[Friday 2025-05-02 17:00]

ஒருநாள் சேவையில் கடவுச்சீட்டு பெற்றுக் கொள்வதற்காக 24 மணி நேரம் செயற்படும் சேவை எதிர்வரும் 05, 06 மற்றும் 07 ஆம் திகதிகளில் நிறுத்தப்படும் என பதில் குடிவரவு குடியகல்வு ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.



பாதுகாப்புக் கோருகிறார் தேசபந்து!
[Friday 2025-05-02 17:00]

இடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ்மா அதிபர் (ஐ.ஜி.பி) தேசபந்து தென்னகோன், தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி, பொலிஸாரிடம் பாதுகாப்பு கோரியுள்ளதாக கூறப்படுகிறது.



வாக்காளர்களுக்கு கொடுக்கவிருந்த பாய்கள் சிக்கின!
[Friday 2025-05-02 17:00]

இந்த ஆண்டு உள்ளூராட்சித் தேர்தலுக்காக வாக்காளர்களுக்கு விநியோகிக்க பாய்கள் மற்றும் படுக்கை விரிப்புகள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை அடம்பன் பொலிஸார் கண்டுபிடித்தனர்.



யானை தாக்கி விவசாயி பலி!
[Friday 2025-05-02 17:00]

வவுணதீவு பாலக்காடு வயல் பிரதேசத்தில் வேளாண்மைக்கு நீர் பாய்ச்ச சென்ற விவசாயி ஒருவர் யானை தாக்குதலில் உயிரிழந்த சம்பவம் வியாழக்கிழமை (01) திகதி இடம்பெற்றுள்ளதாக வவுணதீவு பொலிஸார் தெரிவித்தனர்



மின்சாரம் தாக்கி இருவர் பலி!
[Friday 2025-05-02 17:00]

ஈச்சலம்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சூர்நகர் பகுதியில் வியாழக்கிழமை நெல் வயலில் மின்சாரம் தாக்கி இரண்டு பேர் உயிரிழந்ததாகவும், ஈச்சலம்பற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாகவும் கிடைத்த தகவலைத் தொடர்ந்து ஈச்சலம்பற்று பொலிஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். சூர்நகரைச் சேர்ந்த 29 மற்றும் 47 வயதுடையவர்களே இறந்துள்ளனர்.



ஏற்றுமதி வருமானம் அதிகரிப்பு!
[Friday 2025-05-02 17:00]

இந்த வருடம் மார்ச் மாதத்தில் ஏற்றுமதி வருமானம் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அறிக்கை ஒன்றை வௌியிட்டு இலங்கை மத்திய வங்கி இதனைத் தெரிவித்துள்ளது.



தந்தை செல்வாவின் கொள்கையுடன் தமிழரசுடன் இணைந்து பயணிக்கத் தயார்!
[Friday 2025-05-02 05:00]

தமிழ் அரசுக் கட்சி தலைமைத்துவம் தந்தை செல்வா அவர்களது கொள்கையுடன் பயணிக்கத் தயாராக இருந்தால் அவர்களுடன் பேசுவதற்கும் இணைந்து செயலாற்றவும் நாம் தயார் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.



காணி சுவீகரிப்பை நிறுத்தாவிடின் யாழ்ப்பாணத்தில் அனுர கால் வைக்க முடியாது!
[Friday 2025-05-02 05:00]

மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிக்கு மாறாக காணிகளை சுவீகரிப்பதை அனுர அரசாங்கம் உடனடியாக நிறுத்திக் கொள்ளவேண்டும். குறிப்பாக காணி சுவீகரிக்கும் வர்த்தமானியை உடனடியாக மீளப்பெற வேண்டும். இல்லாவிட்டால் ஜனாதிபதி அனுரவை யாழ் மண்ணிற்குள் கால் வைக்க முடியாமல் செய்வோம் என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.


Mahesan-Royallepage-01-01-2025-Seithy
 gloriousprinters.com 2021
Karan Remax-2010
Latika-Gold-House-2025
Kugeenthiran-200-2022-seithy
Asayan-Salon-2022-seithy
Rajeef sebarasha 2023/04/19
Vaheesan-Remax-2016
Airlinktravel-2020-01-01
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா