Untitled Document
May 3, 2025 [GMT]
பாகிஸ்தான் தூதரகம் முன் நேற்றும் ஆர்ப்பாட்டம்!
[Saturday 2025-05-03 07:00]


கொழும்பில் அமைந்துள்ள பாகிஸ்தானிய உயர்ஸ்தானிகராலயத்துக்கு முன்பாக  வெள்ளிக்கிழமை (2) ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
காஷ்மீர், பஹல்காமில் நடாத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு எதிர்ப்பையும் கண்டனத்தையும் வெளிப்படுத்தும் வகையில் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

கொழும்பில் அமைந்துள்ள பாகிஸ்தானிய உயர்ஸ்தானிகராலயத்துக்கு முன்பாக வெள்ளிக்கிழமை (2) ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. காஷ்மீர், பஹல்காமில் நடாத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு எதிர்ப்பையும் கண்டனத்தையும் வெளிப்படுத்தும் வகையில் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

  

முன்னாள் பிரதி அமைச்சர் பிரபா கணேசன் தலைமையிலான ஜனநாயக தேசிய கூட்டணியின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் இணைந்து “தீவிரவாதத்துக்கு எதிரான ஒரு அமைதி” என்ற தொனிப்பொருளில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்பொது அப்பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்துவதற்காக பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டிருந்தனர்.

  
   Bookmark and Share Seithy.com



காஷ்மீர் தாக்குதலாளிகள் வந்ததாக கட்டுநாயக்கவில் சிறிலங்கன் விமானத்தில் சோதனை!
[Saturday 2025-05-03 18:00]

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.



படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி யாழ்ப்பாணத்தில் போராட்டம்!
[Saturday 2025-05-03 18:00]

சர்வதேச ஊடக சுதந்திர தினத்தினை முன்னிட்டு, படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர்கள் போராட்டத்தினை முன்னெடுத்தனர். யாழ் ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் ஊடக அமையத்திற்கு முன்பாக இன்றைய தினம் மாலை 3 மணிக்கு குறித்த போராட்டம் இட்ம்பெற்றது.



டக்ளசுடன் முரண்பட்டவர் தாக்கப்பட்டு படுகாயம்!
[Saturday 2025-05-03 18:00]

யாழ். ஊர்காவற்றுறையில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீது தாக்குதல் மேற்கொள்ள முயன்றவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்ட்டுள்ளார்.



தமிழரசுக் கட்சிக்கு வாக்களிக்குமாறு ஆனந்தசங்கரி அழைப்பு!
[Saturday 2025-05-03 18:00]

உள்ளூராட்சித் தேர்தலில் தமிழரசுக் கட்சிக்கு வாக்களிக்குமாறு ஆனந்தசங்கரி அழைப்பு விடுத்துள்ளார். கிளிநொச்சியில் அமைந்துள்ள தமிழர் விடுதலைக் கூட்டணி அலுவலகத்தில் இன்று (03) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.



புலிகளின் கனவை நனவாக்குவாராம் சந்திரசேகர்!
[Saturday 2025-05-03 18:00]

புலிகளின் கனவை நாங்கள் நனவாக்குவோம் என்றும் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.



தமிழர்கள் தன்மானத்தோடு வாழ்வதற்கு தமிழ் தேசியக் கட்சிகளை ஆதரியுங்கள்!
[Saturday 2025-05-03 18:00]

தமிழர்கள் தமிழர்களாகவே தன்மானத்தோடு தலை நிமிர்ந்து தனித்துவமாக தமிழர் தாயகத்தில் வாழ்வதற்கு தமிழ் தேசியக் கட்சிகளை ஆதரியுங்கள். அதுவே எமக்கான வரலாற்றுக் கடமையும் பொறுப்பும் தார்மீக உரிமையும் ஆகும் என தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் தெரிவித்துள்ளார்.



கபிலனுக்குப் பின்னால் அரசாங்கம் இருக்கிறது - மிரட்டுகிறார் அமைச்சர் சந்திரசேகர்!
[Saturday 2025-05-03 18:00]

கொழும்பில் கோட்சூட்டுடனும், யாழ்ப்பாணத்தில் வேட்டியுடனும் வலம் வருகின்ற - ரணிலின் கோப்புகளைத் தூக்கித் திரிந்த செல்லப் பிள்ளை, அனுரவை யாழ்ப்பாணத்தில் கால் வைக்க விடமாட்டோம் எனக் கூறுகின்றது. முதலில் தனக்கு கால் வைக்க முடியுமா என்பதை யாழ்ப்பாணத்து மக்களால் நிராகரிக்கப்பட்ட அந்நபர் தேடி பார்க்க வேண்டும் என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் தெரிவித்தார்.



நாட்டை விட்டு புறப்பட்டார் அனுர!
[Saturday 2025-05-03 18:00]

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, வியட்நாமிற்கு மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளார். நாளை ஞாயிற்றுக்கிழமை முதல் 06 ஆம் திகதி வரை ஜனாதிபதி வியட்நாமில் தங்கியிருப்பார். இதற்காக, ஜனாதிபதி இன்று இரவு நாட்டிலிருந்து புறப்பட்டார்.



மன்னார் விபத்தில் 12 பேர் காயம்!
[Saturday 2025-05-03 18:00]

மன்னார் - யாழ் பிரதான வீதி, கள்ளியடி பகுதியில் இன்று காலை இடம்பெற்ற கோர விபத்தில் பலர் படுகாயமடைந்துள்ளனர்.



குளத்தில் மூழ்கி மாணவன் சாவு!
[Saturday 2025-05-03 18:00]

கிளிநொச்சியை சேர்ந்த 14 வயது மாணவன் ஒருவர் கரியாலை நாகபடுவான் குளத்தில் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் இன்றையதினம்(03.05.2025) இடம்பெற்றுள்ளது. தற்போது, உயிரிழந்த மாணவனின் சடலம், கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.



சலுகைகளுக்காக எமது இனத்தின் இருப்பை கைவிட்டு விட வேண்டாம்!
[Saturday 2025-05-03 07:00]

வடக்கு கிழக்கில் தமிழ் மக்களின் இருப்பை வலுப்படுத்தவும் தமிழ் தேசியத்தை உறுதியாக நிலைநிறுத்த வேண்டிய பொறுப்பும் தமிழ் மக்களின் கைகளில் தான் இருக்கின்றது என கிழக்கு மாகாண வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.



எமது வாக்குகளை பெற்றுக் கொண்டு எம்மீது அடக்குமுறைகளை ஏவினால் பொறுக்கமாட்டோம்!
[Saturday 2025-05-03 07:00]

இனவாதத்தை ஒழிப்போம் என்று மீண்டும் எங்கள் மீது எமது மக்களின் வாக்குகளையும் பெற்றுக்கொண்டு இந்த அரசாங்கம் எங்கள் மீது அடக்குமுறையை திணிக்கின்ற ஒரு சூழ்நிலையை உருவாக்குமாக இருந்தால் இந்த அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுக்கும் ஒரு சூழ்நிலை ஏற்படும் என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்,ரெலோ கட்சியின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.



இந்த தேர்தலை ஒட்டுமொத்த தமிழினத்தின் எதிர்காலத்துக்கான தேர்தலாக பார்க்கவேண்டும்!
[Saturday 2025-05-03 07:00]

இந்த தேர்தலை யாரும் ஒரு வட்டாரத்துக்கான தேர்தலாக பார்க்கக்கூடாது. இந்த தேர்தல் ஒட்டுமொத்த தமிழினத்தின் எதிர்காலத்துக்கான தேர்தலாக பார்க்கவேண்டும் என இலங்கை தமிழ் அரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.



இலங்கை அரசியலில் தலையிடும் தேவை இந்தியாவுக்கு இல்லை!
[Saturday 2025-05-03 07:00]

இந்தியா என்பது உலகிலுள்ள மிகப்பெரிய நாடுகளில் நான்காவது இடத்திலுள்ள நாடாகும். எனவே அந்த நாடு வளர்ச்சியடைவதற்கு இலங்கை போன்ற மிகச் சிறிய நாடுகளின் அரசியலில் தலையிட வேண்டியேற்படும் என்று நான் எண்ணவில்லை. இந்தியாவுக்கு அதற்கான தேவைப்பாடும் இல்லை என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொனசேக்கா தெரிவித்தார்.



அற்ப கோரிக்கைகளுக்காக வீதியில் இறங்கி போராட வேண்டாம்!
[Saturday 2025-05-03 07:00]

சிறிய கோரிக்கைகளுக்காக வீதிகளில் இறங்கிப் போராட வேண்டாம் என்று தொழிற்சங்கங்களை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க வலியுறுத்தியுள்ளார், மேலும் அவர்கள் தங்கள் பழைய அணுகுமுறைகளை மாற்றிக்கொள்ள வேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளார்.



சந்நிதியில் இருந்து கதிர்காமம் பாதயாத்திரை ஆரம்பம்!
[Saturday 2025-05-03 07:00]

கதிர்காமத்திற்கான பாதயாத்திரை செல்வச்சந்நிதி ஆலயத்தில் விசேட பூசை வழிபாடுகளுடன் ஆரம்பமாகியுள்ளது. சந்நிதியான் ஆச்சிரமத்தில் விசேட பூசை வழிபாடுகளுடனும், காலை ஆகாரமும் ஒரு தொகை பணமும் வழங்கப்பட்டு ஆச்சிரம சுவாமிகளது ஆசீர்வாதத்துடன் சிறப்பாக ஆரம்பமானது.



வடக்கில் 6 ஆயிரம் ஏக்கர் காணிகளை அபகரிக்கும் திட்டத்தை தடுப்பதற்கான சட்ட ஆலோசனை முகாம்!
[Saturday 2025-05-03 07:00]

வடபகுதியில் ஐயாயிரத்து தொள்ளாயிரத்து நாற்பது ஏக்கர் காணியினை கபளீகரம் செய்யப்படுவதை தடுத்து நிறுத்தும் முகமாக இலவச சட்ட ஆலோசனை வழங்கும் நிகழ்வு வெற்றிலைக்கேணியில் நேற்று ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் தலைமையில் இடம்பெற்றது.



என்பிபியின் யாழ். மேயர் வேட்பாளர் உறுப்பினராக கூட பதவி வகிக்க விடமாட்டோம்! - சுமந்திரன் சூளுரை
[Saturday 2025-05-03 07:00]

தேசிய மக்கள் சக்தியின் யாழ் மாநகர சபை மேயர் வேட்பாளர் மாநகர சபை மேயராக அல்ல, யாழ். மாநகர சபையின் உறுப்பினராகக் கூடப் பதவி வகிக்க முடியாது என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.



உள்ளூராட்சித் தேர்தலுக்கான வழிகாட்டு முறைகள் அறிவிப்பு!
[Friday 2025-05-02 17:00]

மே 06ஆம் திகதி நடைபெற உள்ள உள்ளூராட்சித் தேர்தலின் போது வாக்குச்சீட்டை பதிவு செய்வதற்கான முறையான நடைமுறை குறித்த வழிகாட்டுதல்களை தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.



தமிழ்க் கட்சிகளுக்கு வாக்களியுங்கள்!
[Friday 2025-05-02 17:00]

எமது மக்களுக்காக இதுவரை ஏதோ ஒரு வழியில் உழைத்த எமது தமிழ் தேசியப் பரப்பில் இருக்கின்ற கட்சிகளுக்கு வாக்களித்து, அவர்களின் கரங்களுக்கு கொடுப்பது அவசியம் என வடக்கு - கிழக்கு மாகாண வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.


Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Airlinktravel-2020-01-01
 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
Latika-Gold-House-2025
Rajeef sebarasha 2023/04/19
Karan Remax-2010
Vaheesan-Remax-2016
Asayan-Salon-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா