Untitled Document
May 6, 2025 [GMT]
நாட்டை விட்டு புறப்பட்டார் அனுர!
[Saturday 2025-05-03 18:00]


ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, வியட்நாமிற்கு மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளார். நாளை ஞாயிற்றுக்கிழமை முதல் 06 ஆம் திகதி வரை ஜனாதிபதி வியட்நாமில் தங்கியிருப்பார். இதற்காக, ஜனாதிபதி இன்று இரவு நாட்டிலிருந்து புறப்பட்டார்.

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, வியட்நாமிற்கு மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளார். நாளை ஞாயிற்றுக்கிழமை முதல் 06 ஆம் திகதி வரை ஜனாதிபதி வியட்நாமில் தங்கியிருப்பார். இதற்காக, ஜனாதிபதி இன்று இரவு நாட்டிலிருந்து புறப்பட்டார்.

  
  
   Bookmark and Share Seithy.com



சுமந்திரனுக்கு எதிராக முறைப்பாடு - அரச அதிகாரத்தை வைத்து அச்சுறுத்தும் என்பிபி!
[Monday 2025-05-05 07:00]

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனுக்கு எதிராக தேசிய மக்கள் சக்தியினரால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மாவட்ட தேர்தல் அலுவலகத்திலும் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திலும் தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாண மாவட்ட குழு உறுப்பினர் பூலோகராசா சிறீதரன் என்பவரால் குறித்த முறைப்பாடு இன்று பதிவு செய்யப்பட்டது.



களுத்துறையில் வேட்பாளர் மீது சூடு!
[Monday 2025-05-05 07:00]

இம்முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் களுத்துறைப் பகுதியில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளார். துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த வேட்பாளர் களுத்துறை, நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். எவ்வாறாயினும், அவரது நிலைமை மோசமாக இல்லை என்று தெரிவிக்கப்படுகிறது.



வாக்களிப்பு நிலையங்களைத் தயார்படுத்தும் பணிகள் ஆரம்பம்!
[Monday 2025-05-05 07:00]

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு நிலையங்களைத் தயார்படுத்தும் பணிகள் இன்று காலை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நாளை காலை 7 மணிக்குத் ஆரம்பமாகி மாலை 4 மணி வரை நாடளாவிய ரீதியாக 13,759 வாக்களிப்பு நிலையங்களில் வாக்குப்பதிவு இடம்பெற உள்ளது.



பருத்தித்துறை கடற்கரையில் பெண்ணின் சடலம்!
[Monday 2025-05-05 07:00]

பருத்தித்துறை மூர்க்கம் கடற்கரையில் இளம் குடும்பப் பெண் ஒருவரின் சடலம் நேற்று பிற்பகல் கரையொதுங்கியுள்ளது. சடலமாக கரை ஒதுங்கியவர் தும்பளை கிழக்கை சேர்ந்த 36 வயதுடைய பெண்ணொருவர் என பொலிஸார் தெரிவித்தனர்.



ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர் பாதுகாப்பு அமைச்சுக்கு விஜயம்!
[Monday 2025-05-05 07:00]

இராஜதந்திர உறவுகள் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்புகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட உத்தியோகபூர்வ உயர் மட்ட விஜயத்தை மேற்கொண்டு ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர் நகதானி ஜென் நேற்று நாட்டுக்கு வருகை தந்தார்.



பகிடிவதையால் மாணவன் மரணம் - நான்கு மாணவர்கள் கைது!
[Monday 2025-05-05 07:00]

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவனின் மரணம் தொடர்பில் பல்கலை மாணவர்கள் நால்வர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சப்ரகமுவ பல்கலைக்கழக தொழில்நுட்ப பீடத்தின் இரண்டாம் வருட மாணவன் ஒருவர் தனது வீட்டில் உயிர் மாய்த்துக் கொண்டார்.



ஜனாதிபதி அனுர வியட்நாமில் வழிபாடு!
[Monday 2025-05-05 07:00]

வியட்நாமுக்கு அரச விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, நேற்று தென்கிழக்கு ஆசியாவின் மிகப்பெரிய பௌத்த விகாரைகளில் ஒன்றான பாய் டின் (Bai Dinh) விகாரைக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டு ஆசி பெற்றார்.



தரமற்ற டின் மீன் உற்பத்தி செய்த இடம் முற்றுகை!
[Monday 2025-05-05 07:00]

தயாரிப்பு நிறுவனமொன்றின் பெயர் மற்றும் தரநிலை சின்னத்தை போலியாக பயன்படுத்தி, டின் மீன் உற்பத்தியை முன்னெடுத்து வந்த இடமொன்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. நீர்கொழும்பு, தலாஹேன, தூங்கல்பிட்டிய பகுதியில் டின் மீன்கள் தயாரிக்கப்படுவதாக நுகர்வோர் விவகார அதிகாரசபைக்கு கிடைத்த முறைப்பாட்டைத் தொடர்ந்து, நேற்று முன்தினம் சுற்றிவளைக்கப்பட்டது.



கிணற்றில் தவறி வீழ்ந்து பெண் மரணம்!
[Monday 2025-05-05 07:00]

கிணற்றுக்குள் தவறி வீழ்ந்து குடும்பப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். காரைநகர், மருதபுரத்தைச் சேர்ந்த திருச்செந்தில் சரோஜாதேவி (வயது-58) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். நேற்று கிணற்றில் குளிக்கச் சென்றபோது, கிணற்று மேடையில் இருந்த பாசி வழுக்கி பாதுகாப்புக் கட்டில்லாத கிணற்றுக்குள் தவறி வீழ்ந்துள்ளார்.



தேர்தலுக்குப் பின் யாருடனும் கூட்டு இல்லை!
[Monday 2025-05-05 07:00]

உள்ளூராட்சி மன்ற தேர்தலின் பின் எந்தவொரு அரசியல் கட்சி அல்லது சுயேட்சைக்குழுவுடன் கூட்டணி வைத்துக் கொள்ளப் போவதில்லை என்று மொட்டுக் கட்சி அறிவித்துள்ளது.



நகைகளை அரசுடைமையாக்கி தமிழ் மக்களின் சொத்துக்களை கபளீகரம் செய்யக்கூடாது!
[Sunday 2025-05-04 19:00]

எமது மக்களின் முதலீடாகவும் அவர்களின் கலாச்சார அடையாளமாகவும் காணப்படும் தங்க நகைகளை அரசுடைமையாக்காது உரியவர்களிடமே ஒப்படைக்க தற்போதைய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வன்னி பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.



14 வயதுச் சிறுமியை அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை- கனடாவில் தமிழர் கைது!
[Sunday 2025-05-04 19:00]

கனடாவின் அஜாக்ஸ் பகுதியில் 14 வயது சிறுமி ஒருவரை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி, கட்டாயமாக தடுத்து வைக்கப்பட்டதாக ஹாமில்டன் பொலிஸாரிடமிருந்து தகவல் கிடைத்ததை அடுத்து, டர்ஹாம் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் 30 வயதான கெளரிசங்கர் கதிர்காமநாதன் கைது செய்யப்பட்டுள்ளார்



புள்ளடி மட்டும் போதும்!
[Sunday 2025-05-04 19:00]

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வாக்களிப்புக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க, தேசிய அடையாள அட்டை, வாகன அனுமதி பத்திரம் மற்றும் செல்லுபடியாகும் கடவுச்சீட்டு ஆகியவற்றை எடுத்து வரவேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.



கிளிநொச்சியின் 3 சபைகளும் தமிழரசின் வசமாகும்!
[Sunday 2025-05-04 19:00]

நடைபெறவுள்ள உள்ளூர் அதிகார சபைகள் தேர்தலில், கிளிநொச்சி மாவட்டத்தின் நாற்பது வட்டாரங்களையும் வென்று கரைச்சி, பச்சிலைப்பள்ளி, பூநகரி ஆகிய மூன்று சபைகளிலும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியே ஆட்சியமைக்கும் என நாடாளுமன்ற உறுப்பினரும் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.



வாக்கு கேட்கப் போன வீட்டில் யுவதியை வன்கொடுமை செய்த வேட்பாளர்!
[Sunday 2025-05-04 19:00]

19 வயது யுவதியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் இந்த ஆண்டு உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக லக்கல பொலிஸார் தெரிவித்தனர். வீடு வீடாகச் சென்று பிரசாரத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது, வீட்டிற்குள் சட்டவிரோதமாக நுழைந்தே இவ்வாறு வன்புணர்வில் ஈடுபட்டுள்ளார்.



உள்ளூராட்சித் தேர்தல் - பாடசாலைகளுக்கு விடுமுறை!
[Sunday 2025-05-04 19:00]

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் காரணமாக நாட்டிலுள்ள அனைத்துப் பாடசாலைகளும் நாளை மற்றும் நாளை மறுநாள் மூடப்படவுள்ளது. அதன்படி, பாடசாலைகள் புதன்கிழமை (07) மீள திறக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.



வியட்நாம் கம்யூனிஸக் கட்சியின் பொதுச்செயலாளர் டோ லாமை சந்தித்தார் ஜனாதிபதி!
[Sunday 2025-05-04 19:00]

வியட்நாமுக்கு அரச விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இன்று (04) பிற்பகல் ஹனோயில் உள்ள வியட்நாம் கம்யூனிஸக் கட்சியின் மத்திய குழு தலைமையகத்தில் கம்யூனிஸக் கட்சியின் பொதுச் செயலாளர் டோ லாமை சந்தித்து கலந்துரையாடினார்.



முப்படைகளில் இருந்து தப்பியோடிய 2325 பேர் கைது!
[Sunday 2025-05-04 19:00]

முப்படைகளில் இருந்து தப்பியோடிய அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் உள்ளிட்ட 2325 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. கடந்த பெப்ரவரி 22ம் திகதி தொடக்கம் மே மாதம் 01ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.



பிரதமர் ஹரிணியைச் சந்தித்தார் ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர்!
[Sunday 2025-05-04 19:00]

ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் நகாதானி, பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவை அலரிமாளிகையில் ஞாயிற்றுக்கிழமை (05) சந்தித்தார். நீண்டகால இருதரப்பு நட்புறவு மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டது, மேலும் ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையிலான பாதுகாப்பு மற்றும் பிராந்திய பாதுகாப்புத் துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்தப்பட்டது.



14 வயதுச் சிறுமி பாலியல் வன்கொடுமை- வேட்பாளர் கைது!
[Sunday 2025-05-04 19:00]

14 வயதும் ஆறு மாதங்களுமான சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக சந்தேகத்தின் பேரில் பசறை பிரதேச சபைக்கு போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர். பசறை பொலிஸாருக்கு கிடைத்த புகாரைத் தொடர்ந்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்


Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
Asayan-Salon-2022-seithy
Airlinktravel-2020-01-01
Rajeef sebarasha 2023/04/19
Latika-Gold-House-2025
Karan Remax-2010
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா